Posts

Showing posts from November, 2021

கொட்டகலை பிரதேசத்திலும் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பதிவானது

Image
 கொட்டகலை பிரதேசத்திலும் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பதிவானது திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை – பத்தனை பெய்திலி தோட்டத்தில் தோட்ட தொழிலாளியின் வீட்டில் இன்று மாலை 6 மணியளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரில் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டர் வெடித்துள்ளதுடன் ரெகுலேட்டரின் துண்டுகளையேனும் காண முடியவில்லை. மேலும் அதற்கான இறப்பர் குழாயும் முழுமையாக எரிந்துள்ளது. தோட்ட தொழிலாளிகளான பெற்றோர்கள் தொழிலுக்கு சென்றிருந்த நிலையில் பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய பெண் பிள்ளை தண்ணீரை சூடாக்குவதற்கு சமையல் அறையில் இருந்த கேஸ் குக்கரை பற்றவைத்து விட்டு வீட்டினுல் இருந்தபோது பாரிய சத்தத்துடன் கேஸ் குக்கர் வெடித்துள்ளது. கேஸ் குக்கர் வெடிப்பு மற்றும் தீப்பற்றல் காரணமாக கேஸ் குக்கர் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் மின் கட்டமைப்பு மற்றும் பொருட்களும் சேதமடைந்துள்ளன. சமையலறையில் எவரும் இல்லாததன் காரணமாக எவருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொள்வனவு செய்யப்பட்ட கேஸ் சிலிண்டரே இவ்வாறு வெடித்துள்ளது. குறித்த நேரத்தில்...

ஒரு கிலோவிற்று சற்று குறைவான அளவிலான கேரள கஞ்சாவுடன் 42 வயதுடைய நபர் கைது

Image
 ஒரு கிலோவிற்று சற்று குறைவான அளவிலான கேரள கஞ்சாவுடன் 42 வயதுடைய நபர் கைது  ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் 42 வயதுடைய நபரொருவர் இன்று 2021-11-30ம் திகதி பகல் 12.45 மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை, ஹாஜியார் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டார்.   கைது செய்யப்பட்ட நபரையும் கேரள கஞ்சாவையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன், இவருடன் தொடர்புபட்டோர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அக்கரைப்பற்றில் கைக்குண்டு மீட்பு

Image
 அக்கரைப்பற்றில் கைக்குண்டு மீட்பு நேற்று 29.11.2021ம் திகதி திங்கட்கிழமை பகல் 1 மணியளவில் அக்கரைப்பற்றில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைவாக அக்கரைப்பற்று விஷேட அதிரடிப்படை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரோடு இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது.  கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட குறித்த கைக்குண்டு 82 ரகத்தைச் சேர்ந்தது என்பதுடன், குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்டது.

எரிவாயு கொள்கலன் வெடிப்புக்கள் தொடர்பாக பதிலளிக்க அமைச்சர்கள் பிரசன்னமாகவில்லை ”அரசாங்க அமைச்சர்கள்”

Image
 எரிவாயு கொள்கலன் வெடிப்புக்கள் தொடர்பாக பதிலளிக்க அமைச்சர்கள் பிரசன்னமாகவில்லை ”அரசாங்க அமைச்சர்கள்”   நாடாளுமன்றத்துக்கு வரும்போது மாத்திரமே முன்னிலை அமைச்சர்கள் அனைவரும் நாடாளுமன்றத்துக்கு வருவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன குற்றம் சுமத்தியுள்ளார் அப்படியெனில் நாள் தோறும் ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வரவேண்டியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எரிவாயு கொள்கலன் வெடிப்புக்கள் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்னிலை அமைச்சர்கள் எவரும் பிரசன்னமாகியிருக்கவில்லை. இதனையடுத்தே சபாநாயகர் இந்த கருத்தை வெளியிட்டார். நாட்டின் முக்கிய பிரச்சனைகளுக்கு பதில் கூறவேண்டிய பொறுப்பு முன்னிலை அமைச்சர்களுக்கு உள்ளது. இதில் இருந்து விலகியிருக்கமுடியாது.  இது கவலைக்குாிய விடயமாகும். எனவே முன்னிலை அமைச்சர்கள் நாடாளுமன்றத்துக்கு சமுகமளித்து பொறுப்புக்கூறலை நிறைவேற்றவேண்டும் என்று சபாநாயகர், அரசாங்க கட்சி பிரதம அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம் தெரிவித்தார். (அஹமட் லெப்பை ஜுனைதீன்)

எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Image
 எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீலாமுனை பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சீலாமுனை,ஆனந்தன் வீதியிலிருந்து வீட்டில் தனிமையிலிருந்த தி.சத்தியராஜன் என்னும் 69 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மண்ணெண்ணை ஊற்றப்பட்டு தீயிட்டு குறித்த நபர் எரிந்துள்ளதாக ஆரம்பக்கப்பட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபருக்கு அருகில் கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வருகைதந்த மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர். அத்துடன் களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்டதுடன், விசாரணைகளை முன்னெடுத்து, பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்தும்படி பொலிஸாரிடம் உத்தரவிட...

மாவின் விலை அதிகரிப்புக் கேற்ப பாணின் விலை மட்டுமே யாழில் அதிகரிக்கும்

Image
 மாவின் விலை அதிகரிப்புக் கேற்ப பாணின் விலை மட்டுமே யாழில் அதிகரிக்கும் யாழ். மாவட்டத்தில் பாணின் விலை மட்டுமே 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகின்றது. இதனால், 450 கிராம் எடை கொண்ட ஒரு இறாத்தால் பாணின் விலை 85 ரூபாவாக இருக்கும். ஏனைய வெதுப்பகப் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  யாழ். மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் மற்றும் யாழ். மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்கங்களுடன் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பாண் உற்பத்தி மற்றும் விலை தொடர்பான கலந்துரையா டல் மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.  இந்தக் கலந்துரையாடலில் கோதுமை மாவின் விலை அதிகரித்தமையால் ஒரு இறாத்தல் பாணின் விலையை 85 ரூபாவாக அதிகரிக்க முடிவு எட்டப்பட்டது. ஏனைய வெதுப்பக உற்பத்திப் பொருட் களின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தீர்மானிக்கப்பட்டதாக யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

குறிஞ்சாக்கேணி விபத்து; மற்றுமொரு சிறுமி மரணம்

Image
 குறிஞ்சாக்கேணி விபத்து;  மற்றுமொரு சிறுமி மரணம் கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகு (மிதப்பு பாலம்) கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படகு விபத்தில் பாதிக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த எஸ்.நிபா (06 வயது) என்பவரே இன்று காலை உயிரிழந்துள்ளார். இதற்கமைய, குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் சிக்கி உயிரிழந்தோரது எண்ணிக்கை 7ஆக உயர்வடைந்துள்ளது. இவரது சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி திருகோணமலை கிண்ணியாவில் உள்ள குறிஞ்சாக்கேணிப் பகுதியில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் பரிதாபமாக பலியானதுடன், அவ்விபத்து இலங்கை முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (அஹமட் லெப்பை ஜுனைதீன்)

இந்தியா - இலங்கை - மாலைத் தீவுகள் கூட்டு போா் பயிற்சி

Image
 இந்தியா - இலங்கை - மாலைத் தீவுகள் கூட்டு போா் பயிற்சி இந்தியா - இலங்கை - மாலைத்தீவுகள் ஆகிய 3 நாடுகளும் 2 நாள் கூட்டு கடற்படை போா் பயிற்சியை மாலைத்தீவுகள் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியதாக இந்திய தூதரகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர செயல்பாட்டுத் திறன் மேம்படுத்துவது உள்ளிட்ட நோக்கங்களின் அடிப்படையில் இந்த 15 ஆவது முத்தரப்பு போா் பயிற்சியை ‘தோஸ்தி’ என்ற பெயரில் 3 நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. இதுகுறித்து கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொழும்பு பாதுகாப்பு மாநாடு (சிஎஸ்சி) தலைமையின் கீழ் நடைபெறும் இந்த இரண்டு நாள் போா் பயிற்சி, கடல்சாா் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த முயற்சியை உறுதிப்படுத்தவும், 3 நாடுகளின் கடற்படைகளின் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் நிலையான வழிகாட்டு நடைமுறையை (எஸ்ஓபி) பின்பற்றுவதை உறுதிப்படத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இந்திய கடற்படை சாா்பில் கடலோர ரோந்து கப்பலான ஐஎன்எஸ் சுபத்ரா, கடல் பகுதியில் நீண்டதூரம் பறந்து சென்று ரோந்துப் பணியில...

நாட்டில் மேலும் 27 பேர் கொரோனா மரணங்கள்.

Image
 நாட்டில் மேலும் 27 பேர் கொரோனா மரணங்கள்.   நாட்டில் மேலும் 27 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர். 14 ஆண்களி னதும், 13 பெண்களினதும் மரணங்கள் இவ்வாறு பதிவாகியுள்ளன.  சுகாதார சேவைகள் பணிப் பாளர் நாயகத்தால் நேற்று முன்தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன என்று  அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொரோனாத் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 305 ஆக உயர்வடைந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது ஜனநாயக மாநாட்டிற்கு இலங்கையை அழைக்காதது குறித்து ஆச்சரியமடையவில்லை- ஐ.தே.க

Image
 அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது ஜனநாயக மாநாட்டிற்கு இலங்கையை அழைக்காதது குறித்து ஆச்சரியமடையவில்லை- ஐ.தே.க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது ஜனநாயக மாநாட்டிற்கு இலங்கையை அழைக்காதது குறித்து ஆச்சரியமடையவில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. சமீபத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துக்களை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஐக்கிய தேசிய கட்சி இதனை தெரிவித்துள்ளது. உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலேயோ அல்லது நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையிலேயோ உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு அவ்வேளை ஜனாதிபதியாக பதவிவகித்தவரோ பிரதமராக பதவிவகித்தவரோ அல்லது அமைச்சர்களோ காரணம் என தெரிவிக்கப்படவில்லை என  ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமற்றவர்களையே ஜனாதிபதி குற்றம்சாட்டுகின்றார், நீதித்துறை குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாதவர்களின் சிவில் உரிமையை  பறிக்கப்போவதாக தெரிவிக்கின்றார் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இது ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடுகளிற்கு முரணானது என தெரிவித்துள்ள ஐக...

கிண்ணியா உயிரிழப்பு ஏழாக உயர்வு

Image
 கிண்ணியா உயிரிழப்பு ஏழாக உயர்வு கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற படகு விபத்தில் சிக்கி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 6 வயது சிறுமியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். சிறுமி கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியைச் சேர்ந்த எஸ்.நிபா (06வயது ) என்றழைக்கப்படும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளாா். உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. (அப்துல்சலாம் யாசீம்)

வெள்ள நீரால் கிட்டங்கி வீதி மூழ்கியது - போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமம்

Image
 வெள்ள நீரால் கிட்டங்கி வீதி மூழ்கியது - போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமம்  பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්) அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்றக் கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர் பரவ ஆரம்பித்துள்ளதுடன், இவ்வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தினமும் விவசாயிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் நாளந்தம் பயணிக்கும் இவ்வீதியில் வெள்ள நீர் பரவி வருவதால் கல்லோயா குடியேற்றக் கிராமங்களிலுள்ள சவளக்கடை, அன்னமலை, சொறிக்கல்முனை, 4, 5, 6, 12ஆம் கொளனிகள், நாவிதன்வெளி போன்ற பிரதேச மக்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் தமது அன்றாடப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வீதிக்கான நிரந்தர பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கை இதுவரைக்கும் எந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே வேளை, அம்பாறை மாவட்டத்தில் சில இ...

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்காத நாடுகளே இல்லை

Image
  சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்காத நாடுகளே இல்லை லிட்ரோ எரிவாயு நிறுவனம் வருடமொன்றுக்கு 350 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை தயாரித்து, சந்தைக்கு அனுப்புகின்றது. அதில், ஐந்து அல்லது ஆறு விபத்துக்கள் பதிவாகியுள்ளன எனத் தெரிவித்த நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்காத நாடுகளே இல்லை என்றார். லாப் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர்களின் ஊடாக, 2015ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும், வீடுகளில்- 12, வியாபார நிலையங்களில்- 9, எரிவாயு சிலிண்டர் விற்பனை நிலையங்களில்- 2 என விபத்துகள் பதிவாகியுள்ளன. நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்த அவர், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு காரணமாக விபத்து சம்பவிக்காத நாடுகள் ஏதும் கிடையாது என்றார். சமையல் எரிவாயு சிலிண்டர் பாவனையில் இருந்து நுகர்வோரை பாதுகாப்பதற்காக நுகர்வோர் அதிகார சபை எரிவாயு சிலிண்டர், எரிவாயு குழாய், சிலிண்டரில் பொருத்தப்பட்டுள்ள இணைப்பு ஆகியவற்றின் தரங்கள் தொடர்பில், 2012ஆம் ஆண்டு 5 வர்த்தமா...

உரிய அதிகாரிகளின் கவணத்திற்கு !!

Image
 உரிய அதிகாரிகளின் கவணத்திற்கு !! மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான்  பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முருக்கன்தீவு கிராமத்தில் அமைந்துள்ள மட்/ககு/ முறுக்கன்தீவு சிவசக்தி வித்தியாலய மாணவர்கள்  பெரும் அசோகரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  சாராவெளி  பிரம்படிதீவு மற்றும்  முறுக்கன்தீவு ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள்  என பலரும்   வீதியில் செல்ல முடியாத நிலை  காணப்படுகின்றது. ஆற்றினை அண்டிய பகுதி என்பதால்  மழை காலங்களில் பிரதான பாதை வெள்ள நீர் நிறைந்து  காப்படுகிறது. அதுமட்டுமின்றி அங்கு கல்வி கற்கும் உயர்தர மாணவர்கள் நகரப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் சரியான நேரத்துக்கு சமூகமளிக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்குள்ள ஆசிரியர்கள் குறித்த மாணவர்களை பாதுகாப்பாக பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது குறிப்பபிடத்தக்கது.  எனவே இதை கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள் மாணவர்களின் நலன் கருதி சரியான தீர்வினைப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொ...

ஏற்றுமதித் துறையின் வல்லுனர்கள் ஜனாதிபதியிடமிருந்து விருதுகளைப் பெற்றனர்…

Image
 ஏற்றுமதித் துறையின் வல்லுனர்கள் ஜனாதிபதியிடமிருந்து விருதுகளைப் பெற்றனர்…  • விமர்சனங்களை முன்வைத்தாலும் நாட்டின் எதிர்காலத்துக்காக சில  தீர்மானங்களை எடுக்க வேண்டி இருக்கும்…                                                                   ஜனாதிபதி தெரிவிப்பு..... உலகளாவிய பொருளாதாரச் சவால்களை வெற்றிகொண்டு நாட்டை முன்னேற்றுவதற்காக, எதிர்காலங்களில் பல்வேறு தீர்மானங்களை எடுக்க வேண்டி இருக்குமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அவை விமர்சனங்களுக்கு உள்ளானாலும், எதிர்வரும் காலங்களில் அதன் பிரதிபலன்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைக்குமென்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.  குறுகியகால சிக்கல்களை வெற்றிகொண்டதன் பின்னர் பொருளாதார நிவாரணங்களை வழங்க முடிவதோடு, நாட்டைப்பற்றி சிந்தித்து புரிந்துணர்வுடன் செயற்படுமாறு தாம் அனைவரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி அவர்கள் இங்கு குறிப்பிட்டார்....

இலங்கை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுவந்த பொலிஸ் பயிற்சியை நிறுத்துவதற்கு ஸ்கொட்லாந்து தீர்மானம்!

Image
 இலங்கை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுவந்த பொலிஸ் பயிற்சியை நிறுத்துவதற்கு ஸ்கொட்லாந்து தீர்மானம்! பல வருடங்களாக இலங்கை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுவந்த பொலிஸ் பயிற்சியை நிறுத்துவதற்கு ஸ்கொட்லாந்து பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்கொட்லாந்து காவல்துறையினரால் இலங்கைக்கு வழங்கப்படும் பயிற்சி தொடர்பில் புதுப்பிக்க வேண்டிய உடன்படிக்கை கடந்த மார்ச் மாதம் காலாவதியாகியிருந்த நிலையில் அதனை தொடர்ந்தும் நீடிக்கும் எண்ணமில்லை என்றும் ஸ்கொட்லாந்து பொலிஸ் திணைக்கள பிரதானி இயன் லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் புதுப்பிக்கப்பட மாட்டாது என அறிவுறுத்துமாறு கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக ஸ்கொட்லாந்து பொலிஸ் பிரதானி மேலும் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியிலிருந்து இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை மோசமடைந்து வருவதாக ஸ்கொட்லாந்து வெளிவிவகார அலுவலகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப்...

வீடு ஒன்றில் சமையல் எரிவாயு கசிவால் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்

Image
 வீடு ஒன்றில் சமையல் எரிவாயு கசிவால் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குருநாகல் நிக்கவரெட்டிய வீடு ஒன்றில் சமையல் எரிவாயு கசிவால் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. வெடிப்பு சம்பவத்தின் போது தாயும் தந்தையும் வயல்வெளிக்கு சென்றிருந்ததாகவும், மூத்த பிள்ளை பாடசாலையிலும் இரண்டாவது பிள்ளை உறவினர் வீட்டில் இருந்ததாலும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் இம்மாதம் 4 ஆவது வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது

இப்போது நினைத்தால்கூட நெஞ்சு பதறுகிறது' - மும்பை தாக்குதலில் தப்பியவர்களின் ஆறாத வடுக்கள்

Image
 இப்போது நினைத்தால்கூட நெஞ்சு பதறுகிறது' - மும்பை தாக்குதலில் தப்பியவர்களின் ஆறாத வடுக்கள் 13 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி நடத்திய கொடூரமான தாக்குதலால் ஒட்டுமொத்த தேசமே ஸ்தம்பித்துப் போனது.   நவம்பர் 26, 2008. கடல் மார்க்கமாக இந்திய எல்லைக்குள் நுழைந்த லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள், மீனவர்களை கொலை செய்து அவர்களின் படகில் இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைக்குள் ஊடுருவினர். அவர்கள் பல குழுக்களாகப் பிரிந்து, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் ஹோட்டல், நரிமன் ஹவுஸ், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரைடெண்ட் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் தங்களது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றினர். எங்கும் போர்க்களமாக காட்சியளித்தது மும்பை.   இதையடுத்து பயங்கரவாதிகளுக்கும், இந்தியப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே 2 நாட்கள் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் பலரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்ததால், அவர்களை உயிருடன் மீட்க நமது வீரர்கள் போரா...

நடமாடும் சேவை மூலம் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றல்…

Image
நடமாடும் சேவை மூலம் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றல்… ➢ கொவிட் நோயாளிகளுக்கு மோல்னுபிரவீர் கெப்சியூல்... ➢ தொற்றா நோய்களையுடைய 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி… ➢ கிராமிய கொரோனா கட்டுப்பாட்டுக்கு அதிக அவதானம்… ஜனாதிபதியிடமிருந்து ஆலோசனை... கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இரண்டாவது டோஸ் தடுப்பூசியை ஏற்றி மூன்று மாதங்கள் கடந்த 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், நடமாடும் சேவை மூலம் மூன்றாவது டோஸ் (Booster) தடுப்பூசியை ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆலோசனை வழங்கினார். இன்று (26) முற்பகல் கூடிய கொவிட் தடுப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே, ஜனாதிபதி அவர்கள் இந்த ஆலோசனையை வழங்கினார். வைத்தியசாலைகளுக்கு க்லினிக் செல்லும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், அந்த சிகிச்சையகத்தில் வைத்தே இந்த பூஸ்டர் தடுப்பூசியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இரண்டாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்தி ஒரு மாதம் கடந்த தொற்றா நோய்களுக்கு இலக்காகியுள்ள 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், மூன்றாவது டோஸ் தடுப்பூசியைச் செல...

100 நாடுகள் பங்கேற்கும் ஜனநாயக மாநாட்டில் இலங்கைக்கு அழைப்பில்லை – புறக்கணித்தார் பைடன்

Image
 100 நாடுகள் பங்கேற்கும் ஜனநாயக மாநாட்டில் இலங்கைக்கு அழைப்பில்லை – புறக்கணித்தார் பைடன் 100 நாடுகள் பங்கேற்கும் மெய்நிகர் வழி ஜனநாயக மாநாட்டிற்கு இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு விடுக்காததன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இலங்கையை புறக்கணித்துள்ளார். ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு இந்தியா பாக்கிஸ்தான் மாலைதீவு நேபாளம் ஆகிய தென்னாசிய நாடுகளிற்கு பைடன் அழைப்பு விடுத்துள்ளார். எனினும் இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. சீனா ரஸ்யா ஆகிய நாடுகளையும் அமெரிக்க ஜனாதிபதி புறக்கணித்துள்ளார். தாய்வான் பிலிப்பைன்ஸ் மெக்சிக்கோ ஆகிய நாடுகளிற்கும் ஜோபைடன் அழைப்பு விடுத்துள்ளார். டிசம்பர் 9 – 10 திகதிகளில் 100 நாடுகள் பங்கேற்கும் மெய்நிகர் வழி ஜனநாயகமாநாடு நடைபெறவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கை பொலிஸாருக்கு தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்கப்போவதில்லை- ஸ்கொட்லாந்து பொலிஸ் அறிவிப்பு

Image
 இலங்கை பொலிஸாருக்கு தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்கப்போவதில்லை- ஸ்கொட்லாந்து பொலிஸ் அறிவிப்பு மனித உரிமை கரிசனைகள் காரணமாக இலங்கை பொலிஸாருக்கு பயி;ற்சிகளை தொடர்ந்தும் வழங்கப்போவதில்லை என ஸகொட்லாந்து பொலிஸார் அறிவித்துள்ளனர். இலங்கை பொலிஸாருக்கு பயிற்சிவழங்குவது குறித்த ஒப்பந்தம் 2022 இல் முடிவடைந்த பின்னர் அதனை புதுப்பிக்கப்போவதில்லை என ஸ்கொட்லாந்து பொலிஸ் அறிவித்துள்ளது. இடைக்கால பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளப்போவதில்லை எனவும் ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஜேந்திரன் எம்.பி.யின் பேச்சால் சர்ச்சை ; இது தமிழர் தேசம் அல்ல சிங்களவர் தேசம் என அரசு தரப்பின்

Image
 கஜேந்திரன் எம்.பி.யின் பேச்சால் சர்ச்சை ; இது தமிழர் தேசம் அல்ல சிங்களவர் தேசம் என அரசு தரப்பின்  பின் வரிசை எம்.பி.க்கள் சபையில் கூச்சல்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் பயன்படுத்திய 'தமிழர் தேசம்' ‘தேசியத் தலைவர் பிரபாகரன்' என்ற வார்த்தைகளினால் வெகுண்டெழுந்த அரச தரப்பினர் உடனடியான அந்த வார்த்தைகளை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு வலியுறுத்திய போதும் சபைக்குத் தலைமை தாங்கிய வேலுகுமார் எம்.பி. அதற்கு மறுத்து விடவே சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது. அத்துடன் இது தமிழர் தேசம் அல்ல சிங்களவர் தேசம் என அரசு தரப்பின் பின் வரிசை எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். பாராளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு,தேசிய மரபுரிமைகள்,அருங்கலைகள் மற்றும் கிராமிய கலைநுட்ப ,மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அரசாங்க சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய கஜேந்திரன் எம்.பி. தனது உரையில் 'தமிழர் தேசம்' ‘த...

அடித்தால் திருப்பித் தாக்கத் தெரியும்; 2/3 பங்கு அதிகாரம் எங்கள் கையில்: மைத்திரி

Image
 அடித்தால் திருப்பித் தாக்கத் தெரியும்; 2/3 பங்கு அதிகாரம் எங்கள் கையில்: மைத்திரி  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்று(25) பாராளுமன்றத்தில் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அரசாங்கத்தினாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினாலும் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், தம்மைத் தாக்கினால் வேறு எந்த வகையிலும் தாக்குவதற்கு தயார் எனவும் தெரிவித்தார். அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு அதிகாரம் இருப்பதாகவும் அவர் கூறினார். வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளு மன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.