Posts

Showing posts from March, 2022

"பரண் இரவு | Paran Night" பிரதேச கலாச்சார அதிகார சபையின் கலைஞர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது

Image
 "பரண் இரவு | Paran Night" பிரதேச கலாச்சார அதிகார சபையின் கலைஞர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது ________________________________________________ இறக்காமம் கலாச்சார அதிகார சபையின் கலைஞர்கள் ஒன்றுகூடல் "பரண் இரவு | Paran Night" நிகழ்வானது சிரேஷ்ட கலைஞர்களின் பங்கேற்புடன் பல்வேறுபட்ட கலைப் படைப்புக்களுடன்  2022.03.29 ஆம் திகதி செவ்வாய் கிழமை மாலை 7.00 மணி தொடக்கம் முழு இரவு நிகழ்ச்சியாக மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு விஷேட அதிதியாக கலாச்சார அதிகார சபையின் தலைவரும் பிரதேச செயலாளருமான அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் அவர்கள் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் மற்றும் முஸ்லிம் சமய கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல். இப்றாலெப்பை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்விற்கு விஷேட அதிதிகளாக இறக்காமத்தின் சிரேஷ்ட கலைஞர்களான கெபிடல் FM சிரேஷ்ட முகாமையாளர் ஏ.எல். ஜபீர்  இற-மதீனா வித்தியாலய அதிபர் எம்.ஐ.ஜௌபர், இற- GMMS  வித்தியாலய அதிபர் ஏ.ஹாறுடீன், கிராம சேவை உத்தியோகத்தர்களான பீ.எம். அஸீஸ், யூ.எல். யாசின்பாவா, யூ....

விரைவில் போர் முடிவுக்கு வரும் – இரு தரப்பு பேச்சில் முன்னேற்றம்!

Image
 விரைவில் போர் முடிவுக்கு வரும் – இரு தரப்பு பேச்சில் முன்னேற்றம்! உக்ரைன் மீதான போரில் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இரு தரப்பிலிருந்தும் பல்வேறு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யப்படையினரின் நடத்தும் போர்த் தாக்குதல்கள் இரண்டாவது மாதமாக நீடிக்கிறது. தலைநகர் கீவை கைப்பற்ற தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது ரஷ்யா. முன்னதாக போர் நிறுத்தம் குறித்து, பெலராஸில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த சூழலில் இரு நாடுகளுடனும் கருங்கடல் எல்லையை பகிர்ந்து வரும் துருக்கியில் மார்ச் 10 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது இதன் தொடர்ச்சியாக இஸ்தான்புல் நகரில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அலெக்சாண்டர் போமின் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாகக் கூறினார். மேலும், கீவ் அருகே செர்னிவ் பகுதியில் படைகளை குறைக்க உள்ளதாகவும் அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து உக்ரைன் வேறு நாடுகளுடன் சேர்ந்து ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடக்கூட...

ஏப்-02 இற்கு பின்னர் மின்வெட்டு 4 மணி நேரமாக குறைக்க நடவடிக்கை!

Image
 ஏப்-02 இற்கு பின்னர் மின்வெட்டு 4 மணி நேரமாக குறைக்க நடவடிக்கை! "ஏப்ரல் 2ஆம் திகதிக்குப் பிறகு மின்வெட்டு அமுலாகும் நேரத்தைக் குறைக்கக் கூடியதாக இருக்கும்." - இவ்வாறு இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- ”எதிர்வரும் 2ஆம் திகதி எமக்கு ஒருதொகை டீசல் வருகின்றது. அந்த டீசல் மின்சார சபைக்கு வழங்கப்படும் எனக் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது. எனவே, 2ஆம் திகதிக்குப் பிறகு தற்போதைய நிலைமை ஓரளவுக்குச் சீராகும். மின்வெட்டை 4 மணிநேரம்வரை குறைக்கக்கூடியதாக இருக்கும். எரிபொருள் மற்றும் மழைவீழ்ச்சி கிடைத்தால் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க முடியும்" - என்றார்.

அக்கரைப்பற்று - கடற்கரைப் பிரதேசத்தில் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது!

Image
  அக்கரைப்பற்று - கடற்கரைப் பிரதேசத்தில் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது! ( பாறுக் ஷிஹான் ) கடற்கரை பகுதியில் மீட்கப்பட்ட மனித உடலை இனங்காண பொதுமக்கள் உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று - கடற்கரைப் பிரதேசத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் நபரொருவரின் சடலமொன்று கடந்த செவ்வாய்க்கிழமை (29) மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்திருந்தனர். நடுத்தர வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இவ்வாறு அக்கரைப்பற்று கடற்கரையில் கரையொதுங்கி உள்ள நிலையில் இதுவரையும் இவரது பெயர், விலாசம் போன்ற எந்த வித தகவலும் எமக்கு கிடைக்கப்பெறாத நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே இவர் தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி காரியாலயத்தை 074 136 6619 எனும் தொடர்பிலக்கத்தின் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தில் வழமை போன்று கரைவலை மீன்பிடி நடவடிக்கையில் ...

புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கல்வியியற் கல்லூரிகளுக்கும் விடுமுறை

Image
  புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கல்வியியற் கல்லூரிகளுக்கும் விடுமுறை தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கல்வியியற் கல்லூரிகளுக்கு ஏப்ரல் 08 ஆம் திகதி முதல் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை அட்டாளைச்சேனை, தர்காடவுண் ஆகிய கல்வியற் கல்லூரிகளுக்கு நோன்பு கால விடுமுறை வழங்கப்படமாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 124 ஆவது ஜனன தின நிகழ்வுகள்

Image
  மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 124 ஆவது ஜனன தின நிகழ்வுகள் ( சிவம் ) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பொன் செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்னாரின் உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பூங்காவில் சிலைக்கு மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் ,பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சார்பாக அவரது உத்தியோகபூர்வச் செயலாளர் வி.மதிமேனன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், தமிழரசுக் கட்சியின் முன்னாள் செயலாளர் கி.துரைராசிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உப தலைவர் பிரசன்னா இந்திரக்குமார், மண்முனை மேற்கு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எஸ்.கேசவன் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் மலர் மாலை அணிவித்தனர். மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள பிரதேச சபைகளின் உறுப்பினர்கள்  மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ எஸ்.ராமதாஸ் குருக்கள் மற்றும் இயேசு சபைத் துறவி ஜோசப் மேரி ஆக...

எமது உள்ளுர் படைப்புகளை ஊக்கப்படுத்த விநியோகத்தர்கள் முன்வர வேண்டும்

Image
  எமது உள்ளுர் படைப்புகளை ஊக்கப்படுத்த விநியோகத்தர்கள் முன்வர வேண்டும் (சுமன்) தென்னிந்தியத் திரைப்படத்துரைக்கு விநியோகத்தர்களின் பங்கு எவ்வாறிருக்கின்றதோ அதேபோன்று எமது உள்ளுர் படைப்புகளையும் ஊக்கப்படுத்த விநியோகத்தர்கள் முன்வர வேண்டும் என ரிச்சட் திரைப்படத்தின் இயக்குனர் பிறேமலக்சன் தெரிவித்தார். கடந்த மார்ச் 24ம் திகதி வெளியாகிய ரிச்சட் திரைப்படத்திற்கு மக்கள் வழங்கிய ஆதரவிற்கு நன்றி கூறும் முகமாகவும், எதிர்வரும் 03ம் திகதி செல்லம் திரையரங்கில் திரைப்படம் மீண்டும் வெளியிடப்படவுள்ளமை தொடர்பாகவும் இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் எமது படைப்பில் உருவான ரிச்சட் திரைப்படம் சாந்தி மற்றும் செல்லம் திரையரங்குகளில் கடந்த மார்ச் 24ம் திகதி வெளியிடப்பட்டது. திரையரங்குகளுக்கு வருகை தந்து அன்றைய தினம் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள். அதேபோன்று விமர்சனங்கள் எழுதிய விமர்சகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிள்றேன். இத்திரைப்படத்தினைக் காணத் தவறியவர்களுக்...

பேருந்து மோதியதில் பிரதேச சபை ஊழியர் பலி - மூவர் வைத்தியசாலையில்

Image
  பேருந்து மோதியதில் பிரதேச சபை ஊழியர் பலி - மூவர் வைத்தியசாலையில் முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் ஏற்பட்ட விபத்து சம்பவத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கழிவகற்றும் உழவு இயந்திரத்தின் பின் பகுதியில் அதே திசையில் பயணித்த சொகுசு பேருந்து மோதியுள்ளது. குறித்த விபத்தில் உழவு இயந்திரம் பலத்த சேதங்களுக்குள்ளாகி தடம்புரண்டுள்ளது. இதன்போது உழவு இயந்திரத்தை செலுத்திய சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியைச் சேர்த்த 35 வயதுடைய ஜெயராம் பிரசாத் என்ற இளம் குடும்பத்தர் சம்பவ இடத்தில் உயிரித்துள்ளார். இவர் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் சாரதியாக பணிக்கமர்த்தப்பட்டுள்ள அதேவேளை படுகாயம் அடைந்த மற்றைய மூவரும் சுகாதார  சிற்றூழியர்களாவர். படுகாயமடைந்த மூவரும் அவசர அழைப்பு நோயாளர்காவு வண்டி மூலம...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு – பொதுப் போக்குவரத்து சேவைக்கும் பாரிய இடையூறு!

Image
  எரிபொருளுக்கு தட்டுப்பாடு – பொதுப் போக்குவரத்து சேவைக்கும் பாரிய இடையூறு! எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுப் போக்குவரத்து சேவைக்கும் பாரிய இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக 25 வீதமான தனியார் பேருந்துகள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுபடுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு நீடிப்பதால் தொலைத்தொடர்பு கோபுரங்கள் செயற்படுவதில் இடையூறு

Image
  மின்வெட்டு நீடிப்பதால் தொலைத்தொடர்பு கோபுரங்கள் செயற்படுவதில் இடையூறு மின்சாரம் துண்டிக்கப்படும் காலங்களில், தொலைத்தொடர்பு கோபுரங்களை இயங்க வைப்பதற்கு தேவையான டீசலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். குறித்த கோபுரங்களை செயற்படுத்துவதற்காக நேற்று(செவ்வாய்கிழமை) மூவாயிரம் லீட்டர் டீசல் மின்பிறப்பாக்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு நீடிப்பதால் தொலைத்தொடர்பு கோபுரங்கள் செயற்படுவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கான மின்பிறப்பாக்கிகளை இயக்குவதற்கு தேவையான எரிபொருளை அனைத்து சந்தர்ப்பங்களிலும் விநியோகிப்பதற்கு தமது அமைச்சு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது

Image
  வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பி, யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வசித்து வந்த நபரே கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது வீட்டில் பூஞ்சாடியில் கஞ்சா செடி வளர்ப்பதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த நபரின் வீட்டினை சுற்றிவளைத்த பொலிஸார் , அவரை கைது செய்ததுடன், வீட்டில் வளர்த்த கஞ்சா செடியினை சான்று பொருளாக மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்த்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

திருக்கோவில் பிரதேசத்தில் சமுர்த்தி சௌபாக்கியா திட்டத்தில் புதிய வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

Image
  திருக்கோவில் பிரதேசத்தில் சமுர்த்தி சௌபாக்கியா திட்டத்தில் புதிய வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு (அஸ்ஹர் இப்றாஹிம்) அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் திருக்கோவில் 01 கிராமத்தில் சமுர்த்தி சௌபாக்கியா வாரத்தினை முன்னிட்டு புதிய வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது இந்நிகழ்வானது திருக்கோவில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் பி.பரமானந்தம் தலைமையில் இடம்பெற்றது. இவ் வீட்டுத் திட்டமானது சமுர்த்தி திணைக்களத்தின் சமுர்த்தி சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் ஊடாக திருக்கோவில் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் வீடற்று வாழ்ந்து வந்த குடும்பம் ஒன்றுக்கு ஆறு இலட்சம் பெறுமதியான புதிய வீட்டினை நிர்மானித்துக் கொடுக்கப்படவுள்ளது. நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய வீட்டுக்கான அடிக்கல்லினை நட்டு வைத்திருந்ததுடன் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தம்பிலுவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் நிஷாந்தி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் நேசராசா மற்றும் சமுர்த்தி சங்க நிருவாகிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்

காரைதீவில் சிறப்பாக சேவையாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு !

Image
  காரைதீவில் சிறப்பாக சேவையாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு ! (நூருள் ஹுதா உமர்) இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத் திட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் சிறப்பாக சேவையாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வும், 2022 ஆம் ஆண்டுக்கான பயிற்சி கருத்தரங்கும் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனினால் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தேசிய, மாவட்ட மற்றும் பிரதேச ரீதியில் இலக்கினை அடைந்து கொண்ட உத்தியோகத்தர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வை தொடர்ந்து அம்பாறை மாவட்ட இணைப்பதிகாரியினால் கருத்தரங்கும் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ். பார்த்திபன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக கிராம நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், சமூகசேவை உத்தியோகத்தர்கள், அம்பாறை மாவட்ட இணைப்பதிகாரி, விடய பொறுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத...

வெல்லாவெளியில் புதிய பாடசாலை திறப்புவிழா

Image
  வெல்லாவெளியில் புதிய பாடசாலை திறப்புவிழா (சிஹாரா லத்தீப்) மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசமான சுரணை ஊற்று பகுதியில் நீண்டகாலமாக குறைபாடாக இருந்துவந்த ஆரம்ப பிரிவு பாடசாலை இன்மை குறைபாட்டினை நீக்கும் பொருட்டு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் புதிய ஆரம்ப பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யகம்பத்தின் அங்கீகாரத்தில் இந்த ஆரம்ப பாடசாலை நேற்று(29)ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சரவனை யூற்று விநாயகர் வித்தியாலயம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்புதிய ஆரம்ப பாடசாலையின் அதிபர் எஸ். திவாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த பாடசாலையை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். புள்ள நாயகம், கொக்கட்டிச்சோலை பிதேச சபை உறுப்பினரும் முற்போக்குதமிழர் அமைப்பின் பிரதான இணைப்பாளருமான வை,மோகன் போரதீவுப்பற்று பிரதேச சபையின் உதவி தவிசாளர் என்.தர்மலிங்கம் போரதீவு...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு!

Image
  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு! இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பதவிக்கு செந்தில் தொண்டமானை நியமிக்க, காங்கிரஸின் தேசிய சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று கூடிய போதே, செந்தில் தொண்டமான் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், நிதி செயலாளராக பதவி வகித்த மருதபாண்டி ராமேஷ்வரன், கட்சியின் தவிசாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழில் பெண்கள் உட்பட பலர் அதிரடி கைது

Image
  யாழில் பெண்கள் உட்பட பலர் அதிரடி கைது கோப்பாய் - யோகபுரம் பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யோகபுரம் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு செல்லாததால் நீதிமன்றினால் அவர்களுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடிவிறாந்தினை நடைமுறைப்படுத்தி அவர்களை கைது செய்வதற்காக 2 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நேற்றைய தினம் யோகபுரம் பகுதிக்கு சென்றனர். அதன் போது அங்கிருந்த சிலர், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், அவர்கள் மீது தாக்குதலையும் மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கையை முன்னெடுத்த பொலிஸார் , இரு பெண்கள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளனர்.

புதுவருட காலப் பகுதியில் 15 மணிநேர மின்வெட்டு?

Image
  புதுவருட காலப் பகுதியில் 15 மணிநேர மின்வெட்டு? மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் போதியளவு கிடைக்காமை மற்றும் நீர் மின் உற்பத்தியை மேற்கொள்வதற்கு போதுமானளவு நீர்த்தேக்கங்களில் நீர் இல்லாமை ஆகிய காரணங்களினால் எதிர்வரும் நாட்களில் 15 மணிநேர மின்சார வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்ஜித் இந்துவர தெரிவிக்கின்றார். எதிர்வரும் நாட்களின் மின்வெட்டை அமுல்படுத்தும் நேரம் அறிவிக்கப்படுவதை விடவும், மின்சாரம் வழங்கப்படும் நேரத்தை அறிவிப்பது மிக இலகுவாக இருக்கும் என அவர் குறிப்பிடுகின்றார். மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருளை விரைவில் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார். அவ்வாறு எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில், மின்வெட்டை குறைப்பதற்கான இயலுமை கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார். எரிபொருள் கிடைக்காத பட்சத்தில் அல்லது உரிய நீர் கிடைக்காத பட்சத்தில், தமிழ் சிங்கள புதுவருட காலப் பகுதியில் இருளிலேயே இருக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் கூறுகின்றார்

கொழும்பு கோல்ட் சென்டர் கட்டிடத்திற்கு அருகில் தீ விபத்து

Image
  கொழும்பு கோல்ட் சென்டர் கட்டிடத்திற்கு அருகில் தீ விபத்து கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள கொழும்பு கோல்ட் சென்டர் கட்டிடத்திற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு தீயணைப்பு பிரிவின் மூன்று வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தீ விபத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வௌியாகவில்லை

நாடு முழுமையாக மூடப்படும் அபாயம்

Image
  நாடு முழுமையாக மூடப்படும் அபாயம் சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. எரிபொருள் தட்டுப்பாட்டால், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. மின் வெட்டால், வர்த்தக நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாத அச்சம் ஏற்பட்டுள்ளது. பல தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகையால் சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றத்தை இலங்கை நாடியது..

Image
 பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றத்தை இலங்கை நாடியது.. பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றத்தை இலங்கை நாடியுள்ளதாக நியூஸ் ஃபர்ஸ்ட் இன்று தெரிவித்துள்ளது. நாணய மாற்றத்திற்கான கோரிக்கை தொடர்பில் பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஏ.கே. அப்துல் மொமன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஆரம்பமான பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான (BIMSTEC) வங்காள விரிகுடா முன்முயற்சியில் பங்கேற்பதற்காக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் தற்போது இலங்கை வந்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் வங்கி (BB) இலங்கைக்கு நீட்டிக்கப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டாலர் நாணய பரிமாற்றத்தின் பின்னணியில் 250 மில்லியன் அமெரிக்க டாலர் நாணய பரிமாற்றத்திற்கான கோரிக்கை வந்துள்ளது. பங்களாதேஷிடம் இருந்து இலங்கை மூன்று தவணைகளில் கடன் வசதியைப் பெற்றது. ஆகஸ்ட் 19, 2021 அன்று இலங்கையை ஆதரிப்பதற்காக நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் முதல் தவணையாக 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை bangaladesh bank வெளியிட்டது. இரண்டாவது தவணை தொகையான 100 மில்லிய...

எனது பதவிக்காலம் முடியும் வரை நான் நாட்டின் பிரதமராக நீடிப்பேன்

Image
 எனது பதவிக்காலம் முடியும் வரை நான் நாட்டின் பிரதமராக நீடிப்பேன் பதவிக்காலம் முடியும் வரை தான் நாட்டின் பிரதமராக நீடிப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் தான் உடனே ஓய்வு பெறப்போவதில்லை எனவும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தொடர்ச்சியாக தேசிய அரசாங்கம் மற்றும் பிரதமர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவது போன்ற விடயங்கள் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மகிந்த இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் பிரச்சினைகள் இருந்த போதிலும், அவற்றை விரைவில் தீர்க்க அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. எனது பதவிக்காலம் முடியும் வரை நான் நாட்டின் பிரதமராக நீடிப்பேன். அடுத்த தேர்தலுக்குப் பிறகும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

ரஷ்யா - உக்ரைன் பேச்சில் முன்னின்ற ரஷ்ய தொழிலதிபருக்கு விஷம் வைக்கப்பட்டதா

Image
 ரஷ்யா - உக்ரைன் பேச்சில் முன்னின்ற ரஷ்ய தொழிலதிபருக்கு விஷம் வைக்கப்பட்டதா? ரஷ்யா - உக்ரைன் இடையிலான பேச்சில் ஈடுபட்ட ரஷ்ய தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிச் மற்றும் உக்ரைன் குழுவை சேர்ந்த இருவர், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவா்களுக்கு விஷம் வைக்கப்பட்டதா? என்ற சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், இரு நாட்டு பிரதிநிதிகள் குழு இடையே அமைதி பேச்சு நடந்து வருகிறது. பல்வேறு சுற்றுப் பேச்சில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை. உக்ரைன் அரசின் வேண்டுகோளை ஏற்று, ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிக் இந்த அமைதிப் பேச்சில் பங்கேற்று உக்ரைனுக்கு ஆதரவாக பேசினார். இந்நிலையில், தொழிலதிபர் ரோமன் மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தைக் குழுவை சேர்ந்த இரண்டு பிரதிநிதிகளுக்கு கடந்த மாதம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அமெரிக்காவின், 'வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மூவருக்கும் கண்கள் சிவந்து, முகம் மற்றும் கைகளில் தோல் பகுதி உரிய துவங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உக்ரைன் தலைநகர் கிய்வில் நடந்த பேச்சின் போது இவர்க...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு? அதிகரிக்கப்படுகின்றது மின் வெட்டு நேரம்?

Image
  எரிபொருளுக்கு தட்டுப்பாடு? அதிகரிக்கப்படுகின்றது மின் வெட்டு நேரம்? அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தற்போதைய மின்வெட்டை மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோலியம் மற்றும் துறைமுக நல்லிணக்க தொழிற்சங்க கூட்டமைப்பின் பேச்சாளர் ஆனந்த பாலித இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் எரிபொருளின் அளவு இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போதைய எரிபொருள் விநியோகம் இன்றுடன்(செவ்வாய்கிழமை) நிறைவடையவுள்ளதாகவும் மின்வெட்டை அதிகரிப்பதன் மூலம் ஓரளவு எரிபொருளை சேமிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று வெளியக உடற்பயிற்சி மையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு

Image
  அக்கரைப்பற்று வெளியக உடற்பயிற்சி மையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு (றம்ஸீன் முஹம்மட்) அக்கரைப்பற்று மாநகர சபையினால் மாநகர பொதுப் பூங்கா(Water Park) வளாகத்தில் அமைத்துருவாக்கப்பட்டுள்ள வெளியக உடற்பயிற்சி மையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று மாநகர பிதா அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் தலைவர், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ்.ஏ. எல்.எம்.அதாஉல்லா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உடற்பயிற்சி மையத்தினை உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு திறந்து வைத்தார். இதன் போது கௌரவ மாநகர சபை உறுப்பினர்கள்,மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, பிரதேச முக்கியஸ்தர்கள், Walkers Union உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.