Posts

Showing posts from February, 2022

கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ கணவனை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கவைத்த பெண் கவுன்சிலர்..!

Image
 கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ கணவனை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கவைத்த பெண் கவுன்சிலர்..! கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக கணவனை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்க வைத்த பெண் பஞ்சாயத்து கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டன் மேடு பகுதியை சேர்ந்தவர் சுனில் வர்கீஸ்(38). இவரது மனைவி சவுமியா (33). இவர் வண்டன்மேடு பஞ்சாயத்து கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்து வரும் வினோத் (43) என்பவருடன் சவும்யாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. இதனால் வினோத் துபாயிலிருந்து அடிக்கடி ஊருக்கு வந்து சவுமியாவை சந்தித்து வந்தார்.  இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். இதற்கு சுனில் வர்கீஸ் தடையாக இருப்பார் என்பதால் அவரைக் கொல்ல முடிவு செய்தனர். ஆனால் போலீசில் சிக்கிவிடுவோம் என பயந்து அந்த திட்டத்தை பின்னர் அவர்கள் கைவிட்டனர். இதன் பிறகு சுனிலை போதைப் பொருள் வழக்கில் சிக்கவைக்கலாம் என இருவரும் தீர்மானித்தனர். இதையடுத்து வினோத் தன்னுடைய நண்பரான ஷாநவாஸ் ...

விடுதலைப் புலிகளின் கரும்புலித் தாக்குதல் படகு மீட்பு!

Image
 விடுதலைப் புலிகளின் கரும்புலித் தாக்குதல் படகு மீட்பு! மருதங்கேணிப் பிரதேச செயலகத்துக்கு ஏற்பட்ட சுண்டிக்குளம் பகுதியில் கடலில் மறைத்து வைக்கப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் கடற்புலிகளுடைய கரும்புலித் தாக்குதல் படகு ஒன்று இன்று திங்கட்கிழமை இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த படகு மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட படகு வெட்டி சோதனையிடப்பட்ட போது படகில் தற்கொலை தாக்குதலுக்கான வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நஸ்டஈட்டுக் காப்புறுதி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் வழங்கிவைப்பு!!

Image
 மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நஸ்டஈட்டுக் காப்புறுதி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் வழங்கிவைப்பு!! கடந்த 2020 மற்றும் 2021 பெரும் போக வேளாண்மைச் செய்கையின்போது வரட்சி, வெள்ளம் மற்றும் காட்டுயானைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான காப்புறுதி வழங்கிவைக்கும் ஆரம்பகட்ட நிகழ்வானது இன்று (28) திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களது தலைமையில் வவுணதீவு மண்டபத்தடி  கமநல சேவை நிலையத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களது சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு பிரகடனத்திற்கு அமைவாக நாட்டை சுபீட்சத்தின்பால் கட்டியெழுப்பும் நோக்கில் நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் பல்வேறு துறைசார் வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மக்கள் நலன்சார்  பல்வேறு வேலைத்திட்டங்கள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கு அமைவாக விவசாயிகளின் நலன் நோன்புகை தொடர்பாக அரசாங்கம் கூடுதலான கவனத்தை செலுத்தி வருகின்ற நிலையில் "விவசாயிகளுக்கு வளமான நாளை" எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக மட்டக...

ரஷ்ய படையினர் உக்ரைன் தலைநகருக்கு விமானதாக்குதல்!

Image
 ரஷ்ய படையினர்  உக்ரைன் தலைநகருக்கு  விமானதாக்குதல்!   தலைநகரிலிருந்து வடமேற்கு திசையில் 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மல்யன் நகரில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

புட்டினிற்கு இதனை காண்பியுங்கள் - ஆறு வயது சிறுமியின் மரணமும் மருத்துவரின் சீற்றத்துடனான வேதனையும்

Image
 புட்டினிற்கு இதனை காண்பியுங்கள் - ஆறு வயது சிறுமியின் மரணமும் மருத்துவரின் சீற்றத்துடனான வேதனையும் உக்ரைன் படைவீரர்கள் ரஸ்யர்களின் தாக்குதலை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மரியுபோல் நகரில் ரஸ்ய படையினரின் எறிகணை தாக்குதலில் காயமடைந்த ஆறுவயது சிறுமியுடன் அம்புலன்ஸ்  ஒன்று மருத்துவமனையின் முன்னால் வந்து நின்றது. அந்த சிறுமிவெளிறிய தோற்றத்துடன் காணப்பட்டார்,அவரது பழுப்பு நிற தலைமுடி ரப்பர் பாண்டினால் கட்டப்பட்டடிருந்தது - அவரது ஆடையிலிருந்து குருதி வழிந்தவண்ணமிருந்தது,அந்த ஆடையில் கார்ட்டுன் யுனிகோர்ன்கள் காணப்பட்டன. மருத்துவ குழுவொன்று அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது,சிறுமியை காப்பாற்றுவதற்கு அவர்கள் போராடினார்கள். தாயார் அம்புலன்சிற்கு வெளியேஅழுதபடி காணப்பட்டார். அவரை அம்புலன்சிலிருந்து வெளியே எடுங்கள் எங்களால் காப்பாற்ற முடியும் என மருத்துவ பணியாளர் ஒருவர் சத்தமிட்டவாறு அம்புலன்ஸை நோக்கி விரைந்தார். சிறுமிவேகமாக உள்ளே கொண்டு சென்றனர் மருத்துவதாதிமார்களும் மருத்துவர்களும் சிறுமியை சுற்றி காணப்பட்டனர். ஒருவர் அவருக்கு ஊசி ஏற்றினார். இன்னொருவர் அவருக்க...

நுவரெலியா எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு: சாரதிகள் பெரும் அவதி

Image
 நுவரெலியா எரிபொருள்  நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு: சாரதிகள் பெரும் அவதி நுவரெலியாவில் இன்று காலை முதல் டீசல் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.நானுஓயா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் மாத்திரம் விநியோகம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.  பெட்ரோல், டீசல் விலை உயர்வின் பின்னும் தேவைக்கேற்ற விநியோகம் இல்லை என வாகனச் சாரதிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.  ஒவ்வொரு வாகனச் சாரதியும் எரிபொருள்  நிரப்புவதற்காக முண்டியடித்துக் கொண்டு வாகனங்களைக் கொண்டு செல்ல முற்பட்டதன் காரணமாக நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் உள்ள  எரிபொருள்  நிரப்பு நிலையத்துக்கு முன்னால்  வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது . எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் நுவரெலியா - பதுளை பிரதான வீதியை ஒருவழிப்பாதையாக மாற்றியுள்ளனர். வாகனச் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தி வருகின்றனர். அத்துடன் வாகனச் சாரதிகள் நீண்ட தூரம் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும்...

ஆதரவு இல்லை என இந்தியர்களை தாக்கும் உக்ரைன் ராணுவ வீரர்கள்?

Image
 ஆதரவு இல்லை என இந்தியர்களை தாக்கும் உக்ரைன் ராணுவ வீரர்கள்? உக்ரைனை இந்தியா ஆதரிக்கவில்லை என்ற காரணத்தினால் உக்ரைன் வீரர்கள் இந்திய மாணவர்களை அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது. ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு ஏவுகணை, பீரங்கித் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப் புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர்.  உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களுக்கு தற்போது புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போலந்து எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள சில உக்ரேனிய ராணுவ வீரர்கள், இந்திய மாணவர்களின் குழுவை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தி அவர்களை அடித்து மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வகுப்புத் தோழர் ஒருவர், இவர்கள் அனைவரும் தனது பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் என தகவல் அளித்துள்ளார். இதுமட்டுமின்றி, எல்லையில் இருந்த இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவ வீரர்கள் தாக்கியதாகவும...

டொலர் வழங்காவிட்டால் மருந்து இறக்குமதி நிறுத்தப்படும் : மருந்து இறக்குமதியாளர்கள் சபை

Image
 டொலர் வழங்காவிட்டால் மருந்து இறக்குமதி நிறுத்தப்படும் : மருந்து இறக்குமதியாளர்கள் சபை இலங்கை மத்திய வங்கி மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக மாதாந்தம் 25 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்தத் தவறினால் மருந்து இறக்குமதி நிறுத்தப்படுமென மருந்து இறக்குமதியாளர்கள் சபை எச்சரித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுடன் இந்த டொலர்களை பெற்றுக் கொள்ளுமாறு பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு வாரங்களாகியும் கடன் கடிதங்களை வழங்குவதற்கு டொலர் கிடைக்கவில்லை. இதனால் மருந்தகங்களில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அது மோசமாகும் எனவும் தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக கங்கந்த தெரிவித்துள்ளார். மருந்துகளின் விலைக் கட்டுப்பாட்டை நீக்கி விலையை அதிகரிக்குமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமணவிடம் மருந்து இறக்குமதியாளர்கள் சபை கோரிக்கை விடுத்திருந்தது. இதன்படி எதிர்காலத்தில் மருந்துகளின் விலையை 5% அதிகரிக்க இராஜாங்க அமைச்சு அனுமதி வழங்கவுள்ளது. தற்போது பல அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாழைச்சேனை பகுதியில் திருட வந்தவர் வயோதிப பெண்ணை கொலை செய்ய முயற்சி!

Image
 வாழைச்சேனை பகுதியில் திருட வந்தவர் வயோதிப பெண்ணை கொலை செய்ய முயற்சி! வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இன்று திங்கட்கிழமை அதிகாலை விதவைகள், அனாதைகள் ஓய்வூதியம் பெறும் தாய் ஒருவரின் வீட்டில் அவரை கொலை செய்யும் முயற்சி இடம்பெற்றுள்ள நிலையில் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார். வாழைச்சேனை எஸ்.எல்.ஹாஜியார் வீதியில் வசித்து வந்த ஓய்வூதியம் பெறும் 70 வயதுடைய வயோதிப பெண் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த திருடன் குறித்த பெண்ணின் காதினை அறுத்ததுடன், கழுத்தினை நெருக்கியதுடன், சத்தம் போட்ட போது வாயில் அடித்து பல்லினை உடைத்துள்ளார். இச்சந்தர்பத்தில் பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த அத்தாயின் சகோதரியின் மகன் அழுகுறல் சத்தம் கேட்டு சத்தம் எழுப்பிய போது திருடன் தப்பிச்சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக திருடனின் அடையாளங்களை உறவினர்கள் தெரிவித்ததற்கமைய வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன் அப்பகுதியிலுள்ள 21 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் கா...

தந்தையை கொலை செய்த மகன்

Image
 தந்தையை கொலை செய்த மகன் கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று குருவிட்ட பிரதேசத்தில் பதிவாகி உள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 26ஆம் திகதி படதொட்ட பிரதேசத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பாதிக்கப்பட்டவரின் மனைவி குருவிட்ட பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த மரணம் சந்தேகத்திற்குரியது என குறித்த பெண் குருவிட்ட பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். குருவிட்ட பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து இந்த மரணம் கொலை என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் குருவிட்ட, படதொட்ட பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து சந்தேக நபரின் 22 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போர் விமானங்களை சுட்டு வீழ்த்த உக்ரைனுக்கு ஏவுகணைகள் – அமெரிக்கா அதிரடி

Image
 போர் விமானங்களை சுட்டு வீழ்த்த உக்ரைனுக்கு ஏவுகணைகள் – அமெரிக்கா அதிரடி ரஷியாவுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு பல்வேறு நாடுகளும் ஆயுத உதவி மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுதங்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்று ஜெர்மனி நேற்று அறிவித்திருந்தது.இந்நிலையில் முதன்முறையாக உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. உக்ரைனுக்கு உதவும் வெள்ளை மாளிகையால் அங்கீகரிக்கப்பட்ட தொகுப்பின் ஒரு பகுதியாக போர் விமானங்களை எதிர்கொள்ளும் அதிவேக ஏவுகணைகளை நேரடியாக வழங்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணைகள் ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களை வழங்குமாறு உக்ரைன் கேட்டுள்ள நிலையில் அமெரிக்கா ஏவுகணைகளை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, உக்ரைனுக்கு 3 ஆயிரம் இயந்திர துப்பாக்கிகள், மற்றும் ராணுவ டேங்கிகளை எதிர்க்கும் 200 கையெறி ஏவுகணைகளை...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வேலை நாட்கள் நான்கு தினங்களாக குறைப்படுகின்றன?

Image
  அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வேலை நாட்கள் நான்கு தினங்களாக குறைப்படுகின்றன? எரிபொருள் நெருக்கடியை கவனத்தில் கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலைசெய்வதற்கும், மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி ஆளுநரினால் அரசாங்கத்திற்கு குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலை நேரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களிலிருந்து வேலைசெய்யும் பணியாளர் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தமது பணிகளை மேற்கொண்டு நேரகாலத்தோடு வீடுகளுக்குச் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் மத்திய வங்கி குறித்த யோசனையில் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் தனியார் வாகன பாவனையினை குறைத்து பொது போக்குவரத்துக்களை முடிந்தளவு பயன்படுத்துமாறும் மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

பொரளை கைக்குண்டு சம்பவம் - சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Image
  பொரளை கைக்குண்டு சம்பவம் - சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான பிலியந்தலையை சேர்ந்த ஓய்வுபெற்ற வைத்தியர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று கொழும்ப நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சந்தேகநபர்களை மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வாழைச்சேனையில் அதிகாலையில் பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்

Image
  வாழைச்சேனையில் அதிகாலையில் பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலை விதவைகள், அனாதைகள் ஓய்வூதியம் பெறும் தாய் ஒருவரின் வீட்டில் அவரை கொலை செய்யும் முயற்சி இடம்பெற்றுள்ள நிலையில் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார். வாழைச்சேனை எஸ்.எல்.ஹாஜியார் வீதியில் வசித்து வந்த ஓய்வூதியம் பெறும் 70 வயதுடைய வயோதிப பெண் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த திருடன் அத்தாயின் காதினை அறுத்ததுடன், உன்னிடம் உள்ள மாலை தா என்று கழுத்தினை நெறுக்கியதுடன், சத்தம் போட்ட போது வாயில் அடித்து பல்லினை உடைத்துள்ளார். இச்சந்தர்பத்தில் பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த அத்தாயின் சகோதரியின் மகன் அழுகுறல் சத்தம் கேட்டு சாச்சி என்று சத்தம் எழுப்பிய போது திருடன் தப்பி சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக திருடனின் அடையாளங்களை உறவினர்கள் தெரிவித்ததற்கமைய வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன் அப்பகுதியிலுள்ள 21 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்...

எரிபொருள் பற்றாக்குறையால் பஸ் போக்குவரத்து 50% குறைந்துள்ளது -தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்

Image
 எரிபொருள் பற்றாக்குறையால் பஸ்  போக்குவரத்து  50% குறைந்துள்ளது  -தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எரிபொருள் கிடைப்பதன் அடிப்படையில் இன்று பஸ் பயணங்கள் 50 வீதத்தால் குறைக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய வழக்கமாக ஆறு பயணங்களை முன்னெடுக்கும் பஸ்கள் இன்று மூன்று பயணங்களை மாத்திரமே மேற்கொள்ளும் என சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். போதுமான எரிபொருள் இருந்தால் மாத்திரமே பஸ்களை இயக்க முடியும் எனவும்  பிற்பகலில் பஸ் பயணத்தைக் குறைக்குமாறு நடத்துநர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், அலுவலக நேரங்களிலும் மற்றும் மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குச் செல்லும் போதும் காலையிலும் மாலையிலும் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும். எரிபொருள் வழங்கும் போது பஸ்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இருப்பினும் பெரும்பாலான நிரப்பு நிலையங் களில் நேற்று டீசல் இல்லை.இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிவராத்திரி தினத்தில் சகல இந்து ஆலயங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கே அனுமதி

Image
  சிவராத்திரி தினத்தில் சகல இந்து ஆலயங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கே அனுமதி (வரதன்) சிவராத்திரியை பொறுத்தமட்டிலும் மததலைவர்கள் ஆலய நிர்வாகிகள் போன்றோர் தார்மீக பொறுப்புடன் இந் நடைமுறைகளை விளங்கி கொண்டு சிவராத்திரி தினத்தில் செயற்பட வேண்டும். அனைவரும் சகல விதமான சுகாதார நடைமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக தடுப்பூசி பெற்றவர்களையே அனுமதிப்பது சிறந்தது. பூஸ்டர் தடுப்பூசி வரை பெற்றவர்கள் இந் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் எந்தவித பிரச்சினையும் இல்லை மற்றும் சிவராத்திரி மட்டுமல்லாமல் பிறந்தநாள் நிகழ்வு மத நிகழ்வுகள் போன்ற மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கூட்டங்கள் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் அல்லது ஒழுங்கு சீர் செய்யப்படல் வேண்டும். இதன் அடிப்படையிலேயே நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய ஒரு திறந்த வெளியில் 150 பேர் மட்டுமே ஒன்றுகூடலாம் முககவசம் அணிதல் தகுந்த சமூக இடைவெளிகளை பேணல் கை சுகாதாரம் பேணல் போன்றவற்றை கடைபிடித்தல் அவசியமாகும் என இந்து மக்களினால் நாளை அனுட்டி க்கப்படவுள்ள சிவராத்திரி தினத்தில் சகல இந்து ஆலயங்களிலும் பொதுமக...

இலங்கையுடனான ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல்

Image
  இலங்கையுடனான ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் இலங்கை – இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒரு பில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடனை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நிதியமைச்சரின் இந்திய விஜயம் இருமுறை பிற்போடப்பட்டுள்ள நிலையில், இந்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெற்றோல் தட்டுப்பாடு – இலங்கையில் புகையிரத சேவை ஸ்தம்பிக்குமா?

Image
  பெற்றோல் தட்டுப்பாடு – இலங்கையில் புகையிரத சேவை ஸ்தம்பிக்குமா? புகையிரதங்களுக்கு தேவையான எரிபொருளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) வழங்கியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, எரிபொருள் நெருக்கடி காரணமாக எந்தவொரு புகையிரத சேவையும் இரத்து செய்யப்படாது என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.

பேக்கரி உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்

Image
  பேக்கரி உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள தகவல் பேக்கரி உற்பத்திக்கு தேவையான கோதுமை மா, மாஜரின், வெண்ணெய் மற்றும் பாம் ஒயில் போன்ற மூலப்பொருட்களின் தட்டுப்பாட்டினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டொலர் தட்டுப்பாடே மூலப்பொருட்களை இறக்குமதி செய்யாதமைக்கு காரணம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் இன்னும் ஒரு மாத காலத்துக்கு பேக்கரி தொழிலை முன்னெடுத்துச் செல்வது சவாலாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து வௌிநாட்டவர் பலி

Image
  நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து வௌிநாட்டவர் பலி எல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிதல் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற வௌிநாட்டவர் ஒருவர் நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று (27) மதியம் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 33 வயதுடைய ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

திருக்கோவில், பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு

Image
  திருக்கோவில், பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு (நூருள் ஹுதா உமர், எம்.என்.எம்.அப்ராஸ்) திருக்கோவில் மற்றும் பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அவசரத்தேவையாக இருந்த அம்புலன்ஸ் வண்டிகள் இன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வைத்து குறித்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்களிடம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஐ.எல்.எம். றிபாஸ் கையளித்தார். மிக நீண்டதூரம் பயணம் செய்து நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் இந்த வைத்தியசாலைகளில் நீண்ட காலமாக நிலவிவந்த இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் சுகாதார அமைச்சு இந்த அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கி வைத்துள்ளது. இந்நிகழ்வில் திருக்கோவில் வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.பி. மஸ்கூத், பொத்துவில் வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டீ. எஸ்.ஆர்.டீ. ஆர். றஜாப் ஆகியோர் கலந்து கொண்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஐ.எல்.எம். றிபாஸிடமிருந்து அம்புலன்ஸ் வண்டிகளை உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையை சேர்ந்த முக்...

சுற்றுலாச் சென்ற இருவர் விடுதியிலிருந்து சடலமாக மீட்பு

Image
  சுற்றுலாச் சென்ற இருவர் விடுதியிலிருந்து சடலமாக மீட்பு குருநாகல்- கொக்கரல்ல பகுதியிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்த இருவர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை ​தொடர்பில், நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 59 வயதான ஆணொருவரும் 57 வயதான பெண்ணொருவருமே அவர்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து நேற்று (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் குருநாகல் பகுதியில் இருந்து வருகைத் தந்து விடுதியில் தங்கியிருந்துள்ளனர். இவர்கள் இரவு தங்களுடைய உணவு தேவைக்காக பயன்படுத்திய பாபிகியுவ் என்று கூறப்படும் இயந்திரத்தை, தங்களை குளிரிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக, அறைக்குள் வைத்து நித்திரைக்கு சென்றுள்ளனர். இதன்போது, அந்த இயந்திரத்தில் இருந்து வெளியேறிய நச்சு வாயு காரணமாக இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் . உயிரிழந்தவர்களின் சடலம் இன்று (27) காலை நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைகள் இடம் பெற்றதன் பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக நுவரெலிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான மேலதிக விசார...

மக்களிற்கு ஜனநாயகத்தை உறுதி செய்யும் விதத்தில் ஆட்சிசெய்கின்றோம் - டொலர் நெருக்கடிக்கு நாங்கள் காரணமில்லை – ஜனாதிபதி

Image
 மக்களிற்கு ஜனநாயகத்தை உறுதி செய்யும் விதத்தில் ஆட்சிசெய்கின்றோம் - டொலர் நெருக்கடிக்கு நாங்கள் காரணமில்லை – ஜனாதிபதி மக்களிற்கு சுதந்திரத்தை உறுதிசெய்யும் விதத்தில் அரசாங்கம் நாட்டை ஆள்கின்ற போதிலும் அந்த சுதந்திரம் பலரால் தவறாக பயன்படுத்தப்படுகின்றது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவா இதனை தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை உறுதிசெய்யும் தானும் தனது அரசாங்கமும் ஆட்சி செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நாணயநெருக்கடிக்கு நானோ எனது அரசாங்கமோ காரணமில்லை என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் மின்சாரம் இல்லை எரிபொருள் இல்லை என பல முறைப்பாடுகள் காணப்பட்டபோதிலும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நுரைச்சோலை மின்நிலையத்தை ஏற்படுத்திய பின்னர் அதற்கு பின்னர் ஆட்சிபுரிந்தவர்கள் ஒரு மின்நிலையத்தை கூட ஆரம்பிக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தன்னால் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பசுமை விவசாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் கொள்கை உறுதிமொழியை வழங்கியதாகவும் எனினும் துரதிஸ்...

பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்

Image
  பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை (28) முதல் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியவசிய நேரங்களை முன்னுரிமைப்படுத்தி அதற்கான அட்டவணைகளை தயாரிக்குமாறு போக்குவரத்து ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். வழக்கமான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த போதிய டீசல் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிக்கமான முறையில் வேலை செய்ய வேண்டிய நேரம் இது எனவும் எனவே நாளை காலை முதல் பேருந்து பயண எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுக்ரேனிலிருந்து அவசரமாக வெளியேறும் மக்கள்

Image
  யுக்ரேனிலிருந்து அவசரமாக வெளியேறும் மக்கள் யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்க ஆரம்பித்த தருணம் முதல் இதுவரையான காலம் வரை 115,000க்கும் அதிகமான மக்கள் போலந்து எல்லை வழியாக நாடு கடந்து சென்றுள்ளார்கள் என போலந்து அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். நேற்றுடன் முடிவடைந்த கடந்த நான்கு மணித்தியாலங்களில் மட்டும் 15,000 பேர் நாட்டிற்குள் நுழைந்ததாக உள்துறை அமைச்சர் பாவெ செபர்னேக்கர் கூறியுள்ளார். யுக்ரேன் மீது, ரஷ்யா தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், யுக்ரேனிலிருந்து சுமார் 5 மில்லியன் மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Image
  பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்ககோரி திருமலையிலும் கையெழுத்து வேட்டை on  Sunday, February 27, 2022 By  Shana (ரவ்பீக் பாயிஸ்)    பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்ககோரி நேற்று (26) மாலை திருகோணமலையிலும் கையெழுத்து போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட வாலிபர் முன்னணி ஏற்பாடு செய்த கையெழுத்து போராட்டம் திருகோணமலை சிவன் கோயிலடி தந்தை செல்வா உருவ சிலைக்கு முன்பாக குறித்த கையெழுத்து போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியினரினால் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலான துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டதுடன் குறித்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது - 1979 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு சட்டமே தற்காலிக எமது சட்டப் புத்தகங்களில் காணப்படும் மிக கொடூரமான சட்டமாக காணப்படுவதாகவும். 1979ஆம் ஆண்டு தற்காலிக சட்டமாக நிறைவேற்றப்பட்ட குறித்த பயங்கரவாத சட்டம் அதன் தலைப்பில் தெரிவிப்பது போல தற்காலிக ஆறு மாத காலத்துக்கு மட்டும் செல்லுபடியாக வேண்டியது தற்போது 42 ...

சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Image
  சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இடம்பெறும் இசை கச்சேரிகள் உள்ளிட்ட சமூக ஒன்றுகூடல்களால் எதிர்காலத்தில் கொவிட் 19 வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனூடாக தடுப்பூசிக்கு பதிலளிக்காத கொவிட் வகையை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். புள்ளிவிபர ரீதியாக கொவிட் தொற்று தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்கப்படாத போதிலும், இலங்கையில் கொவிட் பரவல் மிக அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை !

Image
  ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை ! வந்தாறுமூலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பஸ் தரிப்பிடம் ஒன்றை பிரதேச சபை சட்டபூர்வமாக அகற்றியிருந்த நிலையில், அதற்கு எதிராக இன்று (27) திகதி இடம்பெறவிருந்த ஆர்ப்பாட்டமொன்று, திட்டமிட்டபடி இடம்பெறாத நிலையில் குறித்த பஸ்தரிப்பிடத்தை நிறுவிய குடும்பத்தினருக்கும் குறித்த கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுக்கும், உத்தியோகத்தர்களுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஊடகவியலாளர் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று இரவே நேரில் சென்று பார்வையிட்டதுடன், ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் நீதியான விசாரணையினை முன்னெடுக்குமாறு ஏறாவூர் பொலிசாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக குறித்த ஊடகவியலாளரை வைத்தியசாலையில் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ஊடகவியலாள...

வௌிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கான அறிவிப்பு

Image
  வௌிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கான அறிவிப்பு பூரண தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில் வௌிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் பிசிஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை செய்து கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நடைமுறை மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது.

ரஸ்யாவிற்கு எதிரான உலககிண்ண தகுதிகாண் போட்டியில் விளையாடுவதற்கு போலந்து மறுப்பு

Image
 ரஸ்யாவிற்கு எதிரான உலககிண்ண தகுதிகாண் போட்டியில் விளையாடுவதற்கு போலந்து மறுப்பு ரஸ்யாவிற்கு எதிராக விளையாடுவதற்கு போலந்து மறுத்துள்ளது. உக்ரைன் மீதான ரஸ்யாவின் நடவடிக்கைகக்கு எதிர்ப்பு தெரிவித்தே போலந்து இந்த போட்டியில் விளையாடப்போவதில்லை என தெரிவித்துள்ளது. இதற்கும்மேலும் வார்த்தைகள் இல்லை நடவடிக்கைகளிற்கான தருணம் என போலந்தின் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் செசரி குலெஸார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு காரணமாக எங்கள் அணி ரஸ்யாவிற்கு எதிரான போட்டியில் விளையாடாது என அவர் தெரிவித்துள்ளார். போலந்தின் கால்பந்தாட்ட வீரர்களும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்-இது சரியான முடிவு-உக்ரைனில் ஆயுதஆக்கிரமிப்பு தொடரும் நிலையில் ரஸ்யாவுடன் விளையாடுவதை என்னால் நினைத்துப்பார்க்க முடியாது என ரொபேர்ட் லெவன்டொவ்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஸ்ய விளையாட்டு வீரர்களும் ரசிகர்களும் இதற்கு காரணமில்லை ஆனால் ஆனால் எதுவும் நடக்கவில்லை என்பது போல இருக்கமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் உள்ள இலங்கையர்களை போலாந்து செல்லுமாறு அறிவுறுத்தல்!

Image
  உக்ரைனில் உள்ள இலங்கையர்களை போலாந்து செல்லுமாறு அறிவுறுத்தல்! இலங்கைக்கு செல்வதற்கு கோரிக்கை விடுத்துள்ள உக்ரைனில் உள்ள சில இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் போலாந்து அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உக்ரைனுடன் தொடர்புடைய வகையில் துருக்கியின் அன்காராவில் உள்ள இலங்கை தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. இவ்வாறு விருப்பம் வெளியிட்டுள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக போலாந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.