Posts

Showing posts from October, 2023

அகில இலங்கையில் முதலிடம் பெற்ற சம்மாந்துறை மாணவி அல் - ஹாபிழா ஏ. தபானி அபா

Image
அகில இலங்கையில் முதலிடம் பெற்ற சம்மாந்துறை மாணவி அல் - ஹாபிழா ஏ. தபானி அபா இவ்வருடத்துக்கான அகில இலங்கைத் தமிழ் மொழித் தினப் போட்டியில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்தாம் பிரிவு இலக்கிய விமர்சனப் போட்டியில் போட்டியிட்ட கமு/ சது /சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலய தேசிய பாடசாலை மாணவி அல் - ஹாபிழா ஏ. தபானி அபா முதலாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இச்சாதனைச் செல்வி, ஐ.எல்.அமீனுத்தீன் ஏ. எல். றாஜிதா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வி ஆவார். போட்டிக்கான நெறிப்படுத்தலை ஆசிரியர் எம்.ஐ. அச்சி முகம்மட் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்ப தகராறு, மனைவி கொலை - கணவன் தப்பியோட்டம்...! நாட்டில் கணவன் மனைவி - கொலை சம்பவங்கள் அதிகரிப்பு

Image
குடும்ப தகராறு, மனைவி கொலை - கணவன் தப்பியோட்டம்...! நாட்டில் கணவன் மனைவி - கொலை சம்பவங்கள் அதிகரிப்பு அயகம, இன்னகந்த பிரதேசத்தை சேர்ந்த கணவரால் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு மனைவி உயிரிழந்துள்ளார். 45 வயதுடைய குறித்த பெண் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு மயங்கிய நிலையில் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்ப தகறாறு காரணமாக, கணவனால் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் பிறப்புக்களை விட அதிகரித்து வரும் இறப்புகள்...!

Image
இலங்கையில் பிறப்புக்களை விட அதிகரித்து வரும் இறப்புகள்...! இந்த நாட்டில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்நிலைமை காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, 2012 ஜூலை முதல் 2013 ஜூன் வரை இலங்கையில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 125,626 ஆக பதிவாகியுள்ள போதிலும், 2022 ஜூன் முதல் 2023 ஜூன் வரை இலங்கையில் நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை 190,600 என்று தெரிவிக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் நாட்டின் சராசரி ஆண்டு மக்கள் தொகை 144,345 ஆக குறைந்துள்ளதாகவும் அறிக்கைகள் காட்டுகின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் கூற்றுப்படி, பிறப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, இறப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. எவ்வாறாயினும், இந்த மரணங்கள் படிப்படியாக அதிகரித்து வருவதற்கான காரணம் கண்டறியப்படவில்லை, மேலும் இந்த நாட்டில் கொவிட் பரவியதன் பின்னர் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...

மருந்து விநியோகத்திற்காக, 5.6 பில்லியன் ரூபா திறைசேரியில் இருந்து ஒதுக்கீடு...!

Image
மருந்து விநியோகத்திற்காக, 5.6 பில்லியன் ரூபா திறைசேரியில் இருந்து ஒதுக்கீடு...! மருந்து விநியோகத்திற்கான அத்தியாவசிய கொடுப்பனவுகளுக்காக 5.6 பில்லியன் ரூபா திறைசேரியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2 மாதங்களுக்கு மருந்து விநியோகத்திற்கான மேலதிக ஏற்பாடுகளை பெற்றுக்கொள்வதற்காக, அமைச்சரவைக்கு மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்...!

Image
புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்...! அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இன்று (26) ஆரம் பமானது. நாடளாவிய ரீதியில் 434 நிலையங்களில் இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், தென் மாகாணத்தில் தவணைப் பரீட்சைகள் நடைபெறுவதால், அந்த மாகாணத்தில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் நாளை (27) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் எதிர்வரும் 31ஆம் திகதி வரை மதிப்பீடு செய்யப்பட உள்ளன.

கப்பம் கோரி உங்களுக்கும் அழைப்புகள் வருகிறதா?

Image
கப்பம் கோரி உங்களுக்கும் அழைப்புகள் வருகிறதா? வெளிநாட்டில் உள்ள திட்டமிட்ட குற்றவாளி ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கோரிய நபரை முல்லேரிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் வர்த்தகருக்கு தனது கைத்தொலைபேசியில் அழைப்பு விடுத்து 20 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் கப்பம் கோரி கொலைமிரட்டல் விடுத்ததாக கடந்த 19ஆம் திகதி பிற்பகல் முல்லேரிய பொலிஸாருக்கு இந்த வர்த்தகரிடம் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த அழைப்பை விடுத்த நபர் நேற்று மதியம் அங்கொட – தெல்கஹவத்த பிரதேசத்தில் வைத்து முல்லேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபருடன் கப்பம் கோரிய தொலைபேசியின் சிம் அட்டையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கொட – தெல்கஹவத்த பிரதேசத்தை சேர்ந்த 51 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கும் தொலைபேசி அழைப்புகள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொ...

கட்டாரில் இருந்து நாடு திரும்பிக் கொண்டிருந்த, இலங்கை பெண் விமானத்தில் உயிரிழப்பு...!

Image
கட்டாரில் இருந்து நாடு திரும்பிக் கொண்டிருந்த, இலங்கை பெண் விமானத்தில் உயிரிழப்பு...! கட்டாருக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கைப் பெண், நாடு திரும்பும்போது விமானத்தில் உயிரிழந்துள்ளார். மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-662 மூலம் அவர் இன்று (23) அதிகாலை 1.17 மணியளவில் கட்டாரின் தோஹாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்துள்ளார். விமானம் இலங்கைக்கு வந்து கொண்டிருந்தபோது இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் போயா தினங்களில், மேலதிக வகுப்புகள் நடத்த தடை!

Image
கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் போயா தினங்களில், மேலதிக வகுப்புகள் நடத்த தடை! கிழக்கு மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புகள் நடத்த மாகாண கல்வி அமைச்சு தடை விதித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் மேலதிக வகுப்புகளுக்கு தங்களது முழுக் காலத்தையும் செலவிடுவதனால் மதம் சார்ந்த கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறைவாக உள்ள காரணத்தால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் சட்டத்தரணி எச்.இ.எம்.டபிள்யூ.ஜி.திஸாநாயக்க அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2 மணி வரையிலும் போயா தினங்களில் முழு நாளும் மேலதிக வகுப்புகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிக்க வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உதவியை நாடுமாறும் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, திருகோணமலை வடக்கு, கந்தளாய், அம்பாறை, மஹாஓயா மற்றும் தெஹியத்தகண்டி ஆகிய பிரதேச கல்விப் பணிப்பாளர்களுக்கு குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து, 17 வயது மாணவன் உயிரிழப்பு...!

Image
வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து, 17 வயது மாணவன் உயிரிழப்பு...! மாத்தறை - கொலொன்ன தடயம் கந்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயர்தர மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மண் மேடு சரிந்துள்ளமையால் அப்பகுதிக்கு தற்போது செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று (22) இரவு, வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், தொரபனே பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது மாணவரே உயிரிழந்தார். சடலம் தற்போது ஓமல்பே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது வேகமாக பரவும் தொற்று நோய்கள்...!

Image
தற்போது வேகமாக பரவும் தொற்று நோய்கள்...! நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன், தற்போது மூன்று தொற்று நோய்கள் நாட்டின் பல பகுதிகளில் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. சில பகுதிகளில் கண் நோய், வயிற்றுப்போக்கு, சுவாசக் கோளாறுகளுடன் கூடிய காய்ச்சல் போன்றவை பதிவாகி வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். இவ்வாறான நிலைமைகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் தமது சுகாதாரப் பழக்கவழக்கங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்காது...!

Image
நீர் கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்காது...! மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டாலும், நீர்க் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமில்லை, எனவே அவ்வாறான பிரேரணை முன்வைக்கப்பட்டால் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்காது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணம் தொடர்பில் மக்கள் மாத்திரமே எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனக் கோருவது நியாயமானதல்ல எனவும் மின்சார சபை அதிகாரிகளும் உறுதியளிக்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார். விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் சிறிய அளவிலான விவசாய தொழில் முயற்சியாளர் பங்கேற்பு வேலைத்திட்டத்தின் ஊடாக அனுராதபுரம், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இப்பருவத்தில் 40,000 ஏக்கர் சோளத்தை பயிரிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான சோள விதைகள் மற்றும் யூரியா உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளதுடன், இதற்காக 350 மில்லியன் ரூபா செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்போது கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் அமரவீர, இந்த நேரத்தில் மின்சாரக் கட்டண உயர்வை பொதுமக்கள் தாங்கிக் கொள்வது சிரமமாக ...

9 மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானம் 478.7 பில்லியன் ரூபா..!

Image
9 மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானம் 478.7 பில்லியன் ரூபா..! 2023 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் 478.7 பில்லியன் ரூபா என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஆண்டை விட 97.5 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில், நாட்டின் சுற்றுலா வருமானம் 242.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஆசிரியரை நம்பி மாணவியை வீட்டு வகுப்புக்கு அனுப்பிய பெற்றோர்..! உணவில் மயக்கருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூர ஆசிரியர்..!

Image
ஆசிரியரை நம்பி மாணவியை வீட்டு வகுப்புக்கு அனுப்பிய பெற்றோர்..! உணவில் மயக்கருந்து கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூர ஆசிரியர்..! மொனராகலை - தொம்பகஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியங்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 07 ஆம் தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியரை பொலிஸார் புதன்கிழமை (18) ஆம் திகதி கைது செய்துள்ளனர். துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவி கலபெத்த பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் உள்ள தாம் பாடசாலையில் கல்வி பயின்று வந்துள்ளார். அங்கு கணிதம் கற்பிக்கும் ஆசிரியரின் மேலதிக வகுப்பிலும் கலந்து கொண்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (08)ஆ ம் திகதி ஆசிரியர், மாணவியின் தாயாரை அழைத்து, கணித பாடத்திற்கு இரண்டு வினாத்தாள்கள் வழங்க வேண்டியுள்ளதால், மாணவியை தன் வீட்டு வகுப்புக்கு அனுப்புமாறு தெரிவித்தார். அதன்படி, மகளை தாயார் வகுப்புக்கு அனுப்பியுள்ளார். தற்போது யாரும் வசிக்காத தனது சகோதரியின் வீட்டிற்கு மாணவியை அழைத்துச் சென்ற ஆசிரியர் குறித்த மாணவிக்கு சாப்பிடுவதற்கு உணவுகளை கொடுத்துள்ள நிலையில், மாணவி மயக்கமடைந்ததை தொடர்ந்து ப...

நீதிமன்றத்தினுள் விசாரணைக்காக ஆஜராகியிருந்த சட்டத்தரணி ஒருவரை, கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்த கைதி...!

Image
நீதிமன்றத்தினுள் விசாரணைக்காக ஆஜராகியிருந்த சட்டத்தரணி ஒருவரை, கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்த கைதி...! கலகெதர நீதவான் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைக்காக ஆஜராகியிருந்த சட்டத்தரணி ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் நபரை, பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக கலகெதர பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், கழுத்து நெரிக்கப்பட்ட சட்டத்தரணி மருத்துவ சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் கண்டி களுவான பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 760 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கலகெதர பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டு, கலகெதர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தங்கத்தின் விலை சடுதியாக உயர்வு...!

Image
தங்கத்தின் விலை சடுதியாக உயர்வு...! நேற்றுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (18) சடுதியாக உயர்ந்துள்ளது. 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை நேற்று 160,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 2,600 ரூபா உயர்ந்து 163,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று தங்கத்தின் விலை விபரம், தங்க அவுன்ஸ் – ரூ.630,746.00 24 கரட் 1 கிராம் – ரூ.22,250.00 24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.178,000.00 22 கரட் 1 கிராம் – ரூ.20,400.00 22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.163,200.00 21 கரட் 1 கிராம் – ரூ.19,470.00 21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.155,750.00

#அரச #ஊழியர்களின் #சம்பளம் தொடர்பில்

Image
#அரச #ஊழியர்களின் #சம்பளம் தொடர்பில் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, கண்டி மாவட்ட முன்னாள் கல்வி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இந்த நாட்டுக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்க பல நாடுகள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருப்பதால், அடுத்த மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி கிடைத்தவுடன் நிறுத்தப்பட்ட அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

வீட்டில் குப்பை கொழுத்திய தீயினால் உயிரிழந்த தாய்...!

Image
வீட்டில் குப்பை கொழுத்திய தீயினால் உயிரிழந்த தாய்...! வீட்டில் குப்பை கொழுத்திய போது எதிர்பாராத வகையில் ஆடையில் பற்றி எரிந்த தீயினால் காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, சங்கத்தானையை சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 7 ஆம் திகதி பிற்பகல் 5 மணி அளவில் வீட்டில் இருந்து குப்பையினை மண்ணெண்ணெய் ஊற்றி கொழுத்திய போது அவரது ஆடையில் தீப்பற்றியுள்ளது. காற்று வீசும் திசையில் நின்று இவ்வாறு குப்பைக்கு தீ மூட்டியமையே இதற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதை அடுத்து காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் (12) பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவருக்கு 3 ஆண் பிள்ளைகள் மற்றும் 1 பெண் பிள்ளையும் உள்ளனர். கடைசி பிள்ளைக்கு 2 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் வீட்டிலிருந்தே,வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள முடியும்..!

Image
 இன்று முதல் வீட்டிலிருந்தே,வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள முடியும்..! இன்று (07) முதல் பொது மக்கள் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், மேல் மாகாண மக்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாண மக்களும் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார். எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் அனைத்து அரச நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளை, இணையவழி முறையின் ஊடாக முன்னெடுக்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அதிகரித்து வரும் மார்பகப் புற்றுநோய்..!

Image
 இலங்கையில் அதிகரித்து வரும் மார்பகப் புற்றுநோய்..! இலங்கையில் மார்பக புற்றுநோயால் வருடாந்தம் 700 – 800 பேர் உயிரிழப்பதாக மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 5,189 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் சமூக வைத்தியர் டாக்டர் சுராஜ் பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஆரம்பகால நோயறிதல் நோயைக் குணப்படுத்த வழிவகுக்கும் என்று வலியுறுத்தினார், நோய்வாய்ப்பட்ட சுமார் 10,000 பெண்களுக்கு முழுமையாக சிகிச்சையளிக்கப்பட்டதாக அவர் கூறினார். நாளொன்றுக்கு 14 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக பதிவாகின்றனர். இந்நிலையை மாற்றியமைக்க 20 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதாந்திர மார்பகப் புற்றுநோய் பரிசோதனை அவசியம் என்றார்.

3 மாத சிசுவின் புகைப்படத்துடன் தீராத நோயைக் குணப்படுத்த,சத்திரசிகிச்சைக்கு பணம் சேகரித்த தாய், தாயின் சகோதரன் கைது..!

Image
 3 மாத சிசுவின் புகைப்படத்துடன் தீராத நோயைக் குணப்படுத்த,சத்திரசிகிச்சைக்கு பணம் சேகரித்த தாய், தாயின் சகோதரன் கைது..! குறிப்பிட்ட பிள்ளைக்கு இப்போது 8 வயது - பாடசாலைக்கும் செல்கிறது..! 3 மாத சிசுவின் தீராத நோயைக் குணப்படுத்த சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி,  நிதியுதவிகளை திரட்டிக்கொண்டிருந்த பெண்ணொருவர் உட்பட மூவர் கினிகத்ஹேன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியான ஆவணங்களை தயாரித்து நிதியை திரட்டிக் கொண்டிருந்தபோதே, கினிகத்ஹேன பொலிஸாரால் இவர்கள், புதன்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.   சந்தேகநபரான பெண், பெண்ணின் சகோதரர் மற்றும் வாடகை அடிப்படையில் அழைத்து வரப்பட்ட நபர் ஆகியோர், முச்சக்கரவண்டியில் ஒலிப்பெருக்கியை பயன்படுத்தி கினிகத்ஹேன நகரத்தில் நிதி திரட்டி கொண்டிருந்தனர்.   இது தொடர்பில் சந்தேகமடைந்த கினிகத்ஹேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அவர்களை அழைத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.  சந்தேகநபரான பெண்ணின் கணவன், சட்ட ரீதியில் அப்பெண்ணிடமிருந்து விவகாரத்து பெற்றுள்ளார். அதன்பின்னரே இவ்வாறு நிதித் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...

மின் விசிறியில் மோதி 14 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு...!

Image
 மின் விசிறியில் மோதி 14 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு...! புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் மின்விசிறியில் மோதி படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவன் வகுப்பறையில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது,  நாற்காலியின் மேசை மீது ஏறிய போது, கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது தலையில் படுகாயமடைந்த மாணவன் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். புஸ்ஸல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பல்கலைக்கழக விண்ணப்பங்கள் கோரல் இன்றுடன் நிறைவு..!

Image
 பல்கலைக்கழக விண்ணப்பங்கள் கோரல் இன்றுடன் நிறைவு..! 2022/23 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் (05) முடிவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி முதல் மூன்று வாரங்களுக்கு இணையவழி ஊடாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன்படி, விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றைய தினத்தின் பின்னர் நீடிக்கப்படாது என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி வெளியிடப்பட்டன. 263,933 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர், அவர்களில் 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இதுவரை 5000திற்கும் மேற்பட்டோர் கொரியாவிற்கு...!

Image
 இதுவரை 5000திற்கும் மேற்பட்டோர் கொரியாவிற்கு...! இந்த ஆண்டு, கொரியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்று சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தாண்டியுள்ளது. இது வரையிலான காலப்பகுதியில் 5,091 பேர் தென் கொரியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்று, அங்கு சென்றுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார் தற்போது, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கொரிய மனித வளத் திணைக்களத்துடன் இணைந்து, ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட இருநூறு தொழிலாளர்களை கொரியாவுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது. உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமைச்சர் நேற்று (03) தென் கொரியாவுக்கு பயணமானார். இந்த பயணத்தின் போது இலங்கையர்களுக்கு மேலும் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக அந்நாட்டு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்பார்த்துள்ளார்.

சீரற்ற காலநிலையினால் 10 மாவட்டங்கள் பாதிப்பு..!

Image
 சீரற்ற காலநிலையினால் 10 மாவட்டங்கள் பாதிப்பு..! இந்த நாட்களில் நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 10 மாவட்டங்களில் 25,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, மாத்தறை, காலி, நுவரெலியா, புத்தளம், குருநாகல் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் 6,250 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கம்பஹா மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் (03) 24 மணித்தியாலங்களில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் இது சுமார் 72 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும் இன்று (04) நாட்டின் மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை :-மேலதிக வகுப்புகளுக்கு 11ம் திகதி நள்ளிரவு முதல் தடை!

Image
 புலமைப்பரிசில் பரீட்சை :-மேலதிக வகுப்புகளுக்கு 11ம் திகதி நள்ளிரவு முதல் தடை! ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள், எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தடையை மீறி செயற்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) 2,888 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Image
  வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு! அனைத்து வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் புதிய கட்டமைப்பு (eRL 2.0) அறிமுகப்படுத்தல், இம்மாதம் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், இந்தப் பொறிமுறையின் ஊடாக வீட்டிலிருந்தவாறே மக்களுக்கு வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் கிடைக்கும் என்றும் கூறினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ”இந்நாட்டில் அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்தவும் முறைகேடுகளைகத் தடுக்கவும் அரச சேவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். எனவே, இது தொடர்பில் அவதானம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையின்போது அனைத்த...

முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Image
  முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு! எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களை தற்போதைக்கு மாற்றியமைப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித தர்மசேகர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். குறிப்பாக மாதந்தோறும் கட்டணம் மாறும் போது முச்சக்கர வண்டி கட்டணத்தை மாற்ற முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விமான நிலையம் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்கும், வெளியேறும்,குற்றவாளிகளை பொறிவைக்கும் திட்டம் மீண்டும் அமுல்..!

Image
 விமான நிலையம் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்கும், வெளியேறும்,குற்றவாளிகளை பொறிவைக்கும் திட்டம் மீண்டும் அமுல்..! விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் குற்றவாளிகளைக் பொறிவைக்கும் வகையில் கடந்த வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு, பல மணித்தியாலங்கள் நிறுத்தப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (1) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கடந்த மாதம் 19 ஆம் திகதி முதல் குடிவரவு அதிகாரிகள் பெற்றுள்ளனர்.  தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் தளபதிகள், புலனாய்வு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விசேட வேலைத்திட்டம் கடந்த 19 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட சில மணித்தியாலங்களில் அமுல்படுத்த தீர்மானம் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

200,000 இராணுவத்தை 100,000 ஆக குறைக்க அரசாங்கம் முடிவு..!

Image
 200,000 இராணுவத்தை 100,000 ஆக குறைக்க அரசாங்கம் முடிவு..! 2030 ஆம் ஆண்டளவில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களை பாதியாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது. இராணுவத்தின் இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இராணுவத்தினரின் எண்ணிக்கையை சுமார் 100,000 ஆக குறைக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இராணுவத்தை மீளாய்வு செய்வதற்கு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் குழுவொன்றையும் ஜனாதிபதி நியமித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை சுமார் ஒரு இலட்சமாக குறைத்து இராணுவத்தை தொழில்நுட்பமயபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். அதேவேளை கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பது இலக்கு என அமைச்சர் தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

புதிய வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை...!

Image
 புதிய வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை...! 2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறைந்தபட்ச கொடுப்பனவாக ரூ.500 வழங்குவதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கப்படும் என நிதியமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுத்துறை ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ஒரே நேரத்தில் அதிகரிப்புடன், வருமான வரி கணிசமாக உயர்த்தப்பட்ட தொழில் வல்லுநர்களுக்கு நிவாரணம் வழங்குவதே வரவுசெலவுத் திட்டத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆண்டுகள் என்பதுடன், சுகாதாரத் துறையில் உள்ளவர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் பல தொழில்களில் உள்ளவர்களுக்கு, அவர்களின் சேவையை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் நீட்டிக்கும் விருப்பத்தை வழங்குவதற்கான முன்மொழிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

தெற்காசியாவிலேயே அதிக மின் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும்..!

Image
 தெற்காசியாவிலேயே அதிக மின் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும்..! உத்தேச மின்கட்டண அதிகரிப்பு இடம்பெற்றால், தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும் என எரிசக்தி நிபுணர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மின்சார உற்பத்திப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு புதிய முறையொன்று அவசரமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென எரிசக்தி நிபுணர் திலக் சியம்பலாபிட்டிய வலியுறுத்தியுள்ளார்.

தனது 19 வயது மனைவியை 19 ஆம் திகதி முதல் காணவில்லை என,28 வயது கணவன் 28 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...!

Image
 தனது 19 வயது மனைவியை 19 ஆம் திகதி முதல் காணவில்லை என,28 வயது கணவன் 28 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...! தன்னுடைய இளம் மனைவியை காணவில்லை என, அவளுடைய இளம் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவம் மொனராகலை புத்தல யுதஹாநாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தன்னுடைய 19 வயதான மனைவியே செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் காணவில்லை என அப்பெண்ணின் கணவனான 28 வயதான நபர், செப்டெம்பர் 28ஆம் திகதியன்று முறைப்பாடு செய்துள்ளார். வீட்டிலிருந்து வெளியே சென்று மாலையில் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, மனைவி வீட்டில் இருக்கவில்லை.  அக்கம் பக்கத்து வீடுகளில் தேடி பார்த்தபோதும் அங்கும் அவர் இருக்கவில்லை என்று தன்னுடைய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். தன்னுடைய மனைவி 19ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தாலும், வீட்டுக்குத் திரும்புவாள் என 28 ஆம் திகதி வரையிலும் காத்திருந்ததாக அவர், தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்சவிற்கு இன்னும் வயது உள்ளது , நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம் : மஹிந்த ராஜபக்ஷ !

Image
 நாமல் ராஜபக்சவிற்கு இன்னும் வயது உள்ளது , நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம் : மஹிந்த ராஜபக்ஷ ! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (30) காலை கொழும்பு 7 தர்மாயதன வளாகத்தை வந்தடைந்துள்ளார். மக்களுக்கு வழங்க முடியாத பொருட்களின் விலை குறித்து கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அப்போது வலியுறுத்தியுள்ளார். அங்கு வண எல்லே குணவம்ச தேரரை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி, சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். எந்த நேரத்திலும் தேர்தலுக்கு பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும், அதற்காக அச்சம் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, அவருக்கு இன்னும் வயது உள்ளது எனவும், நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் கூறினார்.