Posts

Showing posts from December, 2021

மனிதாபிமானமற்ற செயல்..' தமிழக மீனவர்கள் மீது இலங்கையில் கிருமிநாசினி தெளிப்பு.. ஐகோர்ட் அதிருப்தி

Image
 மனிதாபிமானமற்ற செயல்..' தமிழக மீனவர்கள் மீது இலங்கையில் கிருமிநாசினி தெளிப்பு.. ஐகோர்ட் அதிருப்தி இந்தியாவுக்குச் சொந்தமான கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்வது தொடர் கதையாகியுள்ளது. இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறல் நடவடிக்கையைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.   இந்நிலையில் கடந்த வாரம் முறையாக ஒப்புகை சீட்டு பெற்று ராமேஸ்வரத்திலிருந்து 570 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கடந்த டிசம்பர் 18ஆம் தேதி அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, 42 ராமேஸ்வரம் மீனவர்களைக் கைது செய்து. அவர்களது விசைப் படகுகளையும் சிறைபிடித்தது இலங்கை கடற்படை கிருமிநாசினி தெளிப்பு.  இந்தச் சம்பவம் நடந்து சில மணி நேரங்களில் மேலும் 25க்கும் மேற்பட்ட மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. வெறும் சில மணி நேரத்தில் மொத்தம் 68 மீனவர்களை இலங்கை கடற்படை கைது ச...

இவ்வாண்டு 120,000 இலங்கையர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளனர்

Image
 இவ்வாண்டு 120,000 இலங்கையர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளனர் இவ்வருடம் 120,000 இலங்கையர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் அமைச்சு தெரிவித்துள்ளது.  கொவிட் தொற்று நோய் இருந்த போதிலும் கட்டாருக்கு  30,000 பேரும், சவூதி அரேபியாவுக்கு 27,000 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு  20,000 பேரும், தென் கொரியாவுக்கு 1,400 பேரும், சிங்கப்பூரில் 1,100 பேரும், சைப்ரஸில் 1,600 பேரும், ஜப்பானில் 800 பேரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து குறித்த நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.

ஆட்டோ கட்டணத்தை செலுத்துவதற்குப் பதிலாக சாரதியின் மூக்கை அறுத்த நபர்...!

Image
 ஆட்டோ கட்டணத்தை செலுத்துவதற்குப் பதிலாக சாரதியின் மூக்கை அறுத்த நபர்...! சாய்ந்தமருது பொலிவோரியன் கிராமத்தில் சம்பவம்...! அம்பாரை நகரிலிருந்து சாய்ந்தமருது பிரதேசத்திற்கு ஆட்டோவில் வருகை தந்த பயணி ஒருவர் ஆட்டோ கட்டணத்தை செலுத்துவதற்குப் பதிலாக ஆட்டோ சாரதியின் மூக்கை அறுத்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது :- நேற்று மாலை அம்பாறை நகரில் இருந்து சாய்ந்தமருது பிரதேசத்திற்கு வருகை தருவதற்காக  போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகள் இல்லாத நிலையில் அம்பாறை நகரில் தரித்திருந்த ஆட்டோ ஒன்றில் ஏறி சாய்ந்தமருது பிரதேசத்திற்கு வருகை தந்த இளைஞன் ஒருவர் சாய்ந்தமருது வொலிவோரியன் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிற்கு முன்னால் இறங்கி  ஆட்டோக்குரிய கட்டணத்தைச் செலுத்தாமல் அங்கிருந்து தப்பிச் செல்ல முனைந்துள்ளார். இதன்போது மாற்றுமத சகோதரரான ஆட்டோ சாரதி குறித்த இளைஞன் பிடித்து ஆட்டோ கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொண்ட போது, அவ்விளைஞன் தனது பணப்பையில் இருந்த சிறிய கத்தியை எடுத்து ஆட்டோ சாரதியின் மூக்கை அறுத்து விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகி உள்ளார்....

விபச்சாரத்திற்காக இலங்கைக்கு கடத்தப்படும் உஸ்பெகிஸ்தான் பெண்கள் குறித்து வெளிவந்த தகவல்!

Image
 விபச்சாரத்திற்காக இலங்கைக்கு கடத்தப்படும் உஸ்பெகிஸ்தான் பெண்கள் குறித்து வெளிவந்த தகவல்! பராமரிப்புப் பணியாளர்களாக வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, விபச்சாரத்திற்காக உஸ்பெகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் பெண்கள் குறித்து ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு உஸ்பெகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட பல பெண்களுக்கு கடந்த சில மாதங்களாக உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையில் மனித கடத்தலை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் அந்த ஊடகத்திற்கு தெரிவித்துள்ளனர். பெயர் தெரியாத நிலையில், வெளிநாட்டவர்கள் சுற்றுலாப் பயணிகளாகவோ அல்லது வேலை விசா மூலமாகவோ இலங்கைக்கு கடத்தப்படும் பெண்கள் விபச்சாரத்திற்கு தள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சில பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையில் தீர்ப்பு வழங்கப்படும் வரை 2-3 ஆண்டுகள் தங்கியிருக்க வேண்டும் என்பதால், விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தப்பித்து ஆதரவைத் தேடும் பெண்கள் பெரும்பாலும் தங்குமிடம் அல்லது பாதுகாப்பான வீடுகளில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர...

அரச உத்தியோகத்தர்களுக்கு காப்புறுதி உதவி கொடுப்பனவு.

Image
 அரச உத்தியோகத்தர்களுக்கு காப்புறுதி உதவி கொடுப்பனவு. கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அக்ரஹார தேசிய காப்புறுதி நிதியத்தின் அங்கத்தவர்கள் 22,000 பேருக்கு காப்புறுதி உதவி கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 66 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொவிட் தொற்று ஏற்பட்ட அரச சேவையாளர்கள், பகுதியளவில் பாதிக்கப்பட்ட அரச சேவையாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரச சேவையாளர்கள் என காப்புறுதி நன்மைகளை பெறுவதற்காக 42 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுள் 22,000 பேருக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன, ஏனையோருக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொவிட் தொற்றுக்கு உள்ளாகி, வைத்தியசாலை அல்லது அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றவர்கள் மாத்திரம் அக்ரஹார காப்புறுதியை பெற தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இறக்குமதி பால்மா விலை அதிகரித்தது - புதிய விலைகள் இதோ!

Image
 இறக்குமதி பால்மா விலை அதிகரித்தது - புதிய விலைகள் இதோ! இறக்குமதி பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 400 கிராம் பால் பெக்கெட் ஒன்றின் விலை 60 ரூபாவாவலும், ஒரு கிலோ கிராம் பால் மா பெக்கெட் ஒன்றின் விலையை 150 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது 400 கிராம் பால் மா பெக்கெட் 480 ரூபாவுக்கும், 1 கிலோ கிராம் பால் மா பெக்கெட்1,195 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை அதிகரிப்பிற்கு அமைவாக இன்று நள்ளிரவு முதல் 1 கிலோ கிராம் பால் மா பெக்கெட்டின் புதிய விலை 1,345 அதிகரிக்கப்படவுள்ள நிலையில், 400 கிராம் பால் மா பெக்கெட்டின் புதிய விலை 540 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டெல்டா - ஒமைக்ரொன் திரிபுகள் சுனாமி போன்று ஆபத்தான பேரலையை உருவாக்கும் - WHO எச்சரிக்கை

Image
 டெல்டா - ஒமைக்ரொன் திரிபுகள் சுனாமி போன்று ஆபத்தான பேரலையை உருவாக்கும் - WHO எச்சரிக்கை டெல்டா மற்றும் ஒமைக்ரொன் திரிபுகளின் கலவையானது, கொவிட் எண்ணிக்கையில், ஆபத்தான பேரலையை உருவாக்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. இது, சுனாமி போன்று ஆபத்தான பேரலை என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரொஸ் அதனம் கெப்ரியேஸஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பதிவாகும் அதிகளவான புதிய நோயாளர்கள் பதிவாகின்ற நிலையில், அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பாவில் அதிகமான நாளாந்த நோயாளர் எண்ணிக்கையாக, 2 இலட்சத்து 8 ஆயிரம் பேர் ஃப்ரான்ஸில் பதிவாகியுள்ளனர். ஜோன்ஸ் ஒப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, அமெரிக்காவில் கடந்த வாரத்தில் நாளொன்றுக்கு 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். டென்மார்க், போர்த்துக்கல், ஐக்கிய இராச்சியம் மற்றும் அவுஸ்திரேலிய முதலான நாடுகளில், அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தற்போதைய நிலையில், சர்வதேச ரீதியில் நாளாந்தம் சுமார் 9 இலட்சம் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக வெளிநாட்டு ஊடகமொன்றின் தகவல்கள்...

விவசாய – உர நெருக்கடிக்கு யார் காரணம் - ஜனாதிபதி கருத்து

Image
 விவசாய – உர நெருக்கடிக்கு யார் காரணம் - ஜனாதிபதி கருத்து சேதன விவசாயத்தை சிறிதுசிறிதாக நாட்டிற்கு அறிமுகப்படுத்தும் எண்ணத்தை விவசாய அமைச்சின் அதிகாரிகள் புரிந்துகொள்ள தவறியமையினாலேயே உரம் தொடர்பான பிரச்சினைகள் உருவாகின என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கைகளிற்கும் சில ஸ்தாபனங்கள் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையில் பாரிய இடைவெளி உள்ளது என தெரிவித்துள்ள ஜனாதிபதி குறிப்பாக விவசாயம் எரிசக்தி போன்ற துறைகளில் இந்த இடைவெளி காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார். பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். சேதன விவசாயத்தை சிறிதுசிறிதாக நாட்டிற்கு அறிமுகப்படுத்தும் எண்ணத்தை விவசாய அமைச்சின் அதிகாரிகள் புரிந்துகொள்ள தவறியமையினாலேயே உரம் தொடர்பான பிரச்சினைகள் உருவாகின என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இயற்கை விவசாயத்தை 30 வீத நிலங்களில் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்துவதே எங்கள் தி;ட்;டம்,அடுத்த சில வருடங்களில் இதனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் இதனை தவறாக புரிந்துகொண்டனர்,அவர்கள் 30 வீத இயற்கை உரத்தை 70 வீத ...

பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த அரசுக்குள் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறதா என சந்தேகம் உள்ளது.

Image
 பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த அரசுக்குள் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறதா என சந்தேகம் உள்ளது. இராஜதுரை ஹஷான்) பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த அரசுக்குள் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது என அபயராம விகாரையின் விகாராதிபதி,கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். நாரஹேன்பிடிய அபயராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2022 ஆம் ஆண்டு பதவி விலகுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி அடிப்படையற்றது.  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுயமாக பதவி விலகுவதற்கு அரசுக்குள் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது. அரசாங்கத்தின் பதவி காலம் நிறைவு பெறும் வரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகமாட்டார் அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு நிலையினை சரி செய்யும் உபாயத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்கு அறிவார் என்றும் அவர் கூறினார்

அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை பலி...!

Image
 அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை பலி...! அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு வயது குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியின் அட்டாளைச்சேனை பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த குழந்தை கெப் வண்டியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தினால் படுகாயமடைந்த குழந்தை அக்கரைப்பற்றது ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தையின் சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கெப் வாகன சாரதியின் கவன்குறைவினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சாரதியை கைதுசெய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தபடியே போதைப்பொருள் விற்றதாக நம்பப்படும், முதியவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Image
 அவுஸ்திரேலியாவில் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தபடியே போதைப்பொருள் விற்றதாக நம்பப்படும், முதியவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வாகனச் சோதனை நடவடிக்கையின் பாேது, 62 வயதான அந்த முதியவரிடம் மெத்தெம்ஃபெட்டமின், கஞ்சா போன்றவை இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்திருந்தனர். அதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். சிட்னியின் டூரல் பகுதியில் இருந்த அவரது முதியோர் இல்லத்தைச் சோதனையிட்டதில் காவல் துறையினர் மேலும் அதிகமான போதைப்பொருள்களையும் தடி ஒன்றையும்  கண்டெடுத்தனர். அந்த முதியோர் இல்லத்தில் வசித்து வருவோர், சந்தேகத்துக்குரிய முதியவரின் நடத்தை குறித்தும் அவரைப் பார்க்க வரும் விருந்தினர்கள் குறித்தும் ஏற்கனவே சந்தேகம் தெரிவித்திருந்தனர். போதைப்பொருள் விசாரணை ஜூன் மாதம் தொடங்கியது என்று பொலிஸார் தெரிவித்தனர். அந்த 62 வயது முதியவர் மீது, போதைப்பொருள் வைத்திருந்தது, அதை விற்பனை செய்தது, உரிமமின்றி ஆயுதம் வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

மிக அரிதான பயணமாக இஸ்ரேல் சென்றார் பாலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ்!

Image
 மிக அரிதான பயணமாக இஸ்ரேல் சென்றார் பாலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ்! பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் நேற்று செவ்வாய்க்கிழமை இஸ்ரேலுக்கு பயணம் செய்து, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸை சந்தித்தார். பாதுகாப்பு மற்றும் சிவில் விவகாரங்கள் குறித்து இதன்போது இருவரும் பேசியதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் இஸ்ரேலுக்கான மிக அரிதான பயணங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது பொருளாதார மற்றும் சிவில் விவகாரங்களில் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இருவரும் இணங்கியதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் பிற்பகுதியில் பாலஸ்தீனத்துக்கு விஜயம் செய்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ், பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்துப் பேசினார். பல வருடங்களின் பின்னர் இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே இடம்பெற்ற முதல் உயர்மட்ட உத்தியோகபூர்வ சந்திப்பாக இது அமைந்திருந்தது. எனினும் இந்தப் பேச்சுக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட இஸ்ரேல் பிர...

உலக தரம் வாய்ந்த இரவு சண்டை வசதிகளை பெற உள்ள இந்திய வீரர்கள் !!

Image
 உலக தரம் வாய்ந்த இரவு சண்டை வசதிகளை பெற உள்ள இந்திய வீரர்கள் !! தற்போது சர்வதேச எல்லையோரம் மற்றும் எல்லை கட்டுபாட்டு கோடு ஆகிய பகுதிகளில் பணிபுரியும் இந்தியவீரர்கள் ஜெர்மன் அமெரிக்க கூட்டு தயாரிப்பான ஸிக்-716 சண்டை துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.   இந்தியாவிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட இன்சாஸ் துப்பாக்கி மற்றும் பிரபல ரஷ்ய தயாரிப்பான ஏகே-47 ஆகியவற்றை மாற்றுவதற்கு தான் இந்த அதிநவீன ஸிக்-716 துப்பாக்கிகள் வாங்கப்பட்டன. தற்போது நமது இந்தியபடையினருக்கு இரவு நேரத்தில் எதிரிகளை திறம்பட அடையாளம் கண்டு அவர்களை தாக்குவதற்கு உதவி புரியும் உலக தரம் வாய்ந்த இரவில் சண்டையிட உதவும் தொழில்நுட்பங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.   Image Intensifier எனப்படும் அதிநவீன 29,790 பார்வை கருவிகளை சுமார் 1410 கோடி ருபாய் மதிப்பில் வாங்க பாதுகாப்பு செயலர் தலைமையிலான முப்படை துணை தளபதிகளை உள்ளடக்கிய பாதுகாப்பு கொள்முதல் கமிட்டி ஒப்புதலை அளித்துள்ளது. இந்த இரவு பார்வை கருவிகள் இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட உள்ளன மேலும் அவை ஜம்மு காஷ்மீர் லடாக் பாகிஸ்தான...

பிரதமரின் நண்பர் ஒருவர் , கட்டணம் ஏதுமின்றி திருப்பதி செல்ல ஜெட் விமானத்தை வழங்கினார். அவரின் பெயர் எனக்குத் தெரியாது.

Image
 பிரதமரின் நண்பர் ஒருவர் , கட்டணம் ஏதுமின்றி திருப்பதி செல்ல ஜெட் விமானத்தை வழங்கினார். அவரின் பெயர் எனக்குத் தெரியாது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,கடந்த 23 ஆம் திகதி புனித யாத்திரைக்காக இரண்டு நாள் தனிப்பட்ட பயணமாக இந்தியாவின் திருப்பதி சர்வதேச விமான நிலையத்திற்கு நீல நிற எம்ப்ரேயர் லெகசி 600 வணிக ஜெட் விமானத்தில் இருந்து இறங்குவது போன்ற படங்கள் சமூக ஊடகங்களில் பரவத்தொடங்கி சர்ச்சையை ஏற்படுத்தியது இதனை அடுத்து குறித்த ஜெட் விமானத்தின் உரிமையாளரால் கட்டணம் ஏதுமின்றி பிரதமருக்கு ஜெட் விமானம் வழங்கப்பட்டதாகவும் இந்த ஜெட் விமானத்தை வழங்கியமை நல்லெண்ணத்தின் அடையாளமாகும் எனவும் பிரதமர் அலுவலக தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “பிரதமரின் நண்பர் ஒருவர், திருப்பதிக்குப் பயணம் செய்ய அவருக்கு அந்த விமானத்தை கட்டணம் இன்றி இலவசமாகக் கொடுத்தார். அந்த நபரின் பெயர் எனக்குத் தெரியாது, ஆனால் அவர் பிரதமரின் நண்பர், இது நல்லெண்ணத்தின் அடையாளமாகும் என்று அவர் கூறினார்.

குவைத் புதிய அமைச்சரவை பட்டியல்

Image
 குவைத் புதிய அமைச்சரவை பட்டியல்    குவைத்தில் புதிய அமைச்சரவையின் பட்டியலை  பிரதமர் ஷேக் சபா கலீத் அல்-ஹமத் அல்-சபாவை செவ்வாயன்று  அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்களிடம் வழங்கினார்.  இதனையடுத்து புதிய அமைச்சரவை பட்டியலுக்கு அமீர் ஷேக் நவாஃப் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் ஒப்புதல் அளித்தார்.  குவைத் மக்களுக்கும் குடிமக்களுக்கும் சேவை செய்வதில் பிரதம மந்திரி சிறந்தவராக இருக்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.   குவைத்தின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக புதிய நிர்வாக மற்றும் சட்டமன்ற அதிகாரங்கள் ஒத்துழைக்கும் என நம்புவதாக தெரிவித்த அவர் தெரிவித்தார்.  புதிய அமைச்சரவையின் பட்டியல் பின்வருமாறு  1 - ஹமத் ஜாபர் அல்-அலி அல்-சபா - துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர். 2 - அஹ்மத் மன்சூர் அல்-அஹ்மத் அல்-சபா - துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர்.  3 – டாக்டர். முகமது அப்துல்லதீஃப் அல்-ஃபாரீஸ் — துணைப் பிரதமர், எண்ணெய் அமைச்சர் மற்றும் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் 4 – இஸ்ஸா அ...

கல்குடாவுக்கு கொண்டு வரப்படவிருந்த ஐஸ் போதைப்பொருளுடன் நாவற்குடாவைச்சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி கைது

Image
 கல்குடாவுக்கு கொண்டு வரப்படவிருந்த ஐஸ் போதைப்பொருளுடன் நாவற்குடாவைச்சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி கைது   மட்டக்களப்பிலிருந்து கல்குடாவுக்கு கொண்டு வரப்படவிருந்த ஐஸ் போதைப்பொருளுடன் நாவற்குடாவைச்சேர்ந்த 45 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியொருவர் நேற்று 2021-12-26ம் ஞாயிற்றுக்கிழமை மாலை 07.05 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, நாவற்குடா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து 28 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.  வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய பெரிய நீலாவணை (மருதமுனை) விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியிடம் விஷேட அதிரடிப்படையினர் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நீண்டநேர விசாரணையில் பல முக்கிய தகவல்களைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைக்காக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

திருமலை எண்ணெய்க் குதங்கள் இந்தியாவுக்கு! அடுத்த வாரம் அமைச்சரவைப் பத்திரம் !

Image
 திருமலை எண்ணெய்க் குதங்கள் இந்தியாவுக்கு! அடுத்த வாரம் அமைச்சரவைப் பத்திரம் ! திருகோணமலை சீனக்குடா பகுதியிலுள்ள எண்ணெய்க்குதங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இந்தியன் ஒயில் கோர்ப்பரேஷனும் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சீனத் துறைமுகப் பகுதியில் உள்ள 98 எண்ணெய் குதங்களை, புதிய நிறுவனம் ஒன்றை அமைத்து 50 ஆண்டுகளுக்கு இந்தியன் ஒயில் கோர்ப்பரேஷனிடம் (ஐஓசி) ஒப்படைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அத்தோடு, 2022 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் போது, இதற்கான, அனுமதியைக் கோரி வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. எணணெய்த் தாங்கியின் பெரும்பகுதியை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் பொறுப்பேற்பதற்கு புதிய நிறுவனம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால், இந்த நிறுவனத்தை ஸ்தாபிப்பதை விரைவுபடுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின...

மீலாதுன் நபி போட்டிகளில் நாடளாவிய வெற்றி பெற்றவர்களுக்கு பணப்பரிசிழ்களும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வு.

Image
 மீலாதுன் நபி போட்டிகளில் நாடளாவிய வெற்றி பெற்றவர்களுக்கு பணப்பரிசிழ்களும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வு. முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் கலாச்சாரத் திணைக்களம் ஏற்பாடு செய்த    தேசிய மீலாதுன் நபி விழாவினை முன்னிட்டு நாடளாவிய  ரீதியில் பாடசாலை மற்றும்  முஸ்லிம் கலைஞா்களுக்கிடையே நடாத்திய மீலாதுன் நபி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பணப்பரிசிழ்களும்  மற்றும்  சான்றிதழ்களும்  வழங்கும் வைபவம் முஸ்லிம் சமப பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளா்  இப்ராஹிம் அன்ஸாா் தலைமையில்  கொழும்பு ஸாஹிரா கல்லுாாியின் கபூர் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை 26 நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஊவா மாகாண ஆளுணா் ஏ.ஜே.எம். முஸம்மில் , கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பிணா் காதா் மஸ்தான், மற்றும்  பிரதம மந்திரியின் இணைப்பாளா் பர்சான்,  பிரதம மந்திரியின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான இணைப்பாளா்  கலாநிதி ஹசன் மௌலானா  ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளா்  அஷ்ஷேக் அர்க்கம் நுாா் அமீத் மற்றும் அதிதிகள் பலா் கலந்து கொண்டனா...

வடமேல் பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டம் பிரதமர் தலைமையில் ஆரம்பம்!

Image
 வடமேல் பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டம் பிரதமர் தலைமையில் ஆரம்பம்! அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் அனுசரணையில் செயற்படுத்தப்படும் இலங்கை வடமேல் பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. குளியாபிட்டி வடமேல் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அலரி மாளிகையிலிருந்து இணைய தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் முகமாக நினைவு பலகையை திறந்து வைத்தார். இத்திட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட செலவு 28 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அந்நிதியை சலுகை கடன் அடிப்படையில் பெற்றுக் கொடுப்பதற்கு அபிவிருத்திக்கான சவுதி நிதியத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வடமேல் பல்கலைக்கழகத்தின் குளியாபிட்டி மற்றும்; மாகந்துர வளாகங்களை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. குளியாபிட்டி வளாகத்திற்கு 1942 மில்லியன் ரூபாயும், மாகந்துர வளாகத்திற்கு 1973 மில்லியன் ரூபாயும் செலவிடப்படவுள்ளதுடன், தற்போதுள்ள பீடங்களுக்கான கட்டிடத் தொகுதிகளுக்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு மேலும் 262 மில்லியன்...

அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு மேஜர் ஜெனரல் உதய பெரேராவிற்கு அனுமதி மறுப்பு

Image
 அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு மேஜர் ஜெனரல் உதய பெரேராவிற்கு அனுமதி மறுப்பு இலங்கையின் இன்னுமொரு இராணுவஅதிகாரிக்கும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஐலண்ட் தெரிவித்துள்ளது. 2009 முதல் 2011 வரை மலேசியாவிற்கான பிரதி உயர்ஸ்தானிகரான மேஜர் ஜெனரல் உதயபெரேராவிற்கே குடும்பத்தினருடன் அமெரி;க்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அவரை யுத்தகுற்ற சந்தேகநபர் என அமெரிக்கா அடையாளப்படுத்தியுள்ளது என ஐலண்ட் தெரிவித்துள்ளது. டிசம்பர் ஐந்தாம் திகதி உதயபெரேரா தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா செல்வதற்காக கொழும்பிலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக குடிவரவு பகுதிக்கு சென்றவேளை அவருக்கு அமெரிக்காவின் தீர்மானம் குறித்து தெரிவிக்கப்பட்டதாக ஐலண்ட் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் எயர்லைன்ஸ் பணியாளர்கள் அமெரிக்காவிலிருந்து தங்களிற்கு அது குறித்த செய்தி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து உதயபெரேரா பயணத்தை இரத்துச்செய்துள்ளாhர் ஆனால் அவரது குடும்பத்தவர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர்.

பி.பி. ஜயசுந்தர ராஜினாமா; புதிய செயலாளர் செனரத்

Image
 பி.பி. ஜயசுந்தர ராஜினாமா; புதிய செயலாளர் செனரத் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர வினால் தனது இராஜினாமா கடிதத்தை இன்று (27) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிப்பார் எனவும், ஜனாதிபதி அந்தக் கடிதத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக நம்பகரமான வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஜனாதிபதியின் புதிய செயலாளராகப் பிரதமரின் தற்போதைய செயலாளர் காமினி செனரத் நியமிக்கப்படக்கூடுமெனத் தகவல்கள் வெளியா கியுள்ளன. ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக் கப்படவுள்ள காமினி செனரத், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளராகவும், பிரதம அதிபராகவும் கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையில் அனுபவம் வாய்ந்த அதிகாரியாவார். இதேவேளை, பி.பி. ஜயசுந்தரவின் நடவடிக்கைகள் அண்மைய நாட்களில் அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்களால் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் பி.பி. ஜயசுந்தர கடுமையாக விமர்சித்திருந்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தற்போதைய கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச அப்போது பி.பி. ஜயசுந்தரவை பொருளாதார கொலைய...

கொங்கொவில் தீவிரவாதிகளின் தற்கொலை தாக்குதலில் 6 பேர் பலி!

Image
 கொங்கொவில் தீவிரவாதிகளின் தற்கொலை தாக்குதலில் 6 பேர் பலி! கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு நகரமான பெனியில் உணவகம் ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதுடன், 13 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்கொலை குண்டுதாரி உணவகக் கட்டத்துக்குள் நுழைய முயன்ற போது பொலிஸார் அவரை இனங்கண்டு தடுத்தனர். இதனால் உணவகத்தின் நுழைவாயிலிலேயே குண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. இதில் தற்கொலை குண்டுதாரியும் மேலும் ஐவரும் உயிரிழந்தனர். ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு தீவிரவாதக் குழுவான ஏ.டி.எப். இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனினும் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. வெடிகுண்டு வெடித்த போது உணவகத்தில் 30 க்கும் மேற்பட்டோர் கிறிஸ்துமஸ் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது உணவகத்தில் குழந்தைகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளும் இருந்ததாக கூறப்படுகிறது. சமீப வாரங்களாக பெனியில் இராணுவத்திற்கும் தீவிரவாதக் குழுக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வருகின்றன. ஏ.டி....

கிறிஸ்துமஸ் தினத்தில் மியன்மார் இராணுவ தாக்குதல்.. கிராமம் ஒன்றை சுற்றி வளைத்து 30 க்கும் மேற்பட்டவர்களை சுட்டுக் கொன்று உடல்களுக்கு தீ வைப்பு.

Image
 கிறிஸ்துமஸ் தினத்தில் மியன்மார் இராணுவ தாக்குதல்.. கிராமம் ஒன்றை சுற்றி வளைத்து 30 க்கும் மேற்பட்டவர்களை சுட்டுக் கொன்று உடல்களுக்கு தீ வைப்பு. கிறிஸ்துமஸ் தினமான சனியன்று மியன்மார் இராணுவத்தினர் கிராம மக்களை சுற்றிவளைத்து 30 க்கும் மேற்பட்டவர்களை சுட்டுக் கொன்றதுடன், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு தீ வைத்துள்ளனர். இவ்வாறு பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகள்/ சிறுவர்கள் ஆவர் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தினால் ஐக்கிய அரபு இராச்சியத்தை தளமாகக் கொண்ட மனிதாபிமான குழுவின் இரு உறுப்பினர்களும் காணாமல் போயுள்ளதாக ஆதாரங்களை மேற்கொள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியன்மாரின் கிழக்கு மோ சோ கிராமத்திலேயே இந்த சம்பவம் நடத்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து சனிக்கிழமை ஒரு அறிக்கையில் உறுதிபடுத்தியுள்ள சேவ் தி சில்ட்ரன் அமைப்பு, மனிதாபிமானப் பணிகளைச் செய்துவிட்டு வீடு நோக்கி பயணித்த இரண்டு ஊழியர்கள் கிழக்கு சம்பவத்தின் பின்னர் காணாமல்போயுள்ளதாகவும் கூறியுள்ளது. அதேநேரம் அவர்களின் தனிப்பட்ட வாகனம் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டதையும் அது உறுதிபடுத்தியுள்ளது. நோபல்...

பொருளாதார சிக்கலால் அடகு கடைக்கு சென்ற 600 கிலோ தங்க நகைகள்!

Image
 பொருளாதார சிக்கலால் அடகு கடைக்கு சென்ற 600 கிலோ தங்க நகைகள்! கொரோனா வைரஸ் பரவல், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக கடந்த சில மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் உள்ள மக்கள் சுமார் 600 கிலோ நகைகளை அடகு மற்றும் விற்பனை செய்துள்ளதாக நகை வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் தொழிலதிபர்கள் மற்றும் வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர். கொழும்பு செட்டியார் தெரு மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில் உள்ள பல நகைக்கடைகளின் உரிமையாளர்களிடம் இது தொடர்பில் கேட்டறிந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்த கருத்து வெளியிட்ட அவர்கள், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக புதிய நகைகளை கொள்வனவு செய்வது சுமார் 80 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தற்போது நகைகளை அடகு வைத்து விற்பனை செய்ய ஆட்கள் வருவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் தொழிலதிபர்கள், இந்நிலையால் தங்களது வருமானம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பொருளாதாரப் பிரச்சினைகளால் இன்று அதிகமானோர் தங்க முலாம் பூசப்பட்ட நகைகளைப் பயன்படுத்தத் தூண்டுவதாகவும், இதன் காரணமாக தங்களது வருமானம் குறைந்துள்ளதாகவும் அவர்கள் மேலும் சுட்ட...

பாடசாலை பொல்லடிக் இசைக் குழு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Image
 பாடசாலை பொல்லடிக் இசைக் குழு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு இறக்காமம் பிரதேச சபையின் உப  தவிசாளர் கௌரவ அஷ்-ஷெய்க் ஏ.எல். நௌபர் (ஹாமி) அவர்களினால் கிராமிய கலையான பொல்லடி கலையை பயின்று பிராந்திய நிகழ்வுகளில் அதனை அரங்கேற்றி வரும் கமு/சது/ அமீரலிபுரம் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் கற்றல் உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டன. கல்லூரி முதல்வர் எம்.எஸ்.லாஹிர் அவர்களின் பிரதம பங்கேற்புடனும், பொல்லடி குழுவிற்கு பொறுப்பான ஆசிரியர் அஷ்-ஷெய்க் எம்.கே.எம். றுவைஸ் ஆசிரியர், ஏ.எல். முக்ஸித் ஆசிரியர் ஆகியோர் இக்கற்றல் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கிவைத்தனர். அருகிவரும் கிராமிய கலை வடிவங்களில் ஒன்றாக பொல்லடிக் கலை காணப்படுகின்றது. குறிப்பாக இறக்காமம் பிரதேசத்தில் தனித்துவமான கலை வடிவங்களில் ஒன்றாக பொல்லடி கலை இருந்துவருகின்றது. இக்கலையை பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கும் பயிற்றுவிக்கும் பணியை கல்லூரி முதல்வர் எம்.எஸ்.லாஹிர் அவர்கள் செயற்படுத்தி வருகின்றமை பாரட்டத்தக்க விடயமாகும்.  கிராமிய கலை வடிவங்களை பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கும் கற்றுக்க...

போதைப்பொருள் மொத்த வியாபாரி பிறந்துரைச்சேனையில் கைது

Image
 போதைப்பொருள் மொத்த வியாபாரி பிறந்துரைச்சேனையில் கைது  கொழும்பிலிருந்து போதைப்பொருளைக்கடத்தி வந்து கல்குடாப் பிரதேசத்தில் விற்பனையில் செய்தி வந்த ஓட்டமாவடியைச்சேர்ந்த 40 வயதுடைய வியாபாரியொருவர் இன்று 2021-12-24ம் திகதி மாலை 06.00 மணியளவில் பிறந்துரைச்சேனை-2ம், குறுக்கு வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டார்  இவரிடமிருந்து 30 கிராம் ஐஸ் போதைப்பொருளும்  போதைப்பொருள் விற்பனைக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 540,000 ரூபா என கைது செய்யப்பட்ட போதை வியாபாரியே தெரிவித்துள்ளார்.  குறித்த போதைப்பொருள் வியாபாரியைக் கைது செய்வதற்காக மிக நீண்ட நாட்களாக இவரைப் பின்தொடர்ந்து வந்ததுடன், திட்டமிடல்களும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே இன்று வசமாக மாட்டிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.    கைது செய்யப்ப்ட்ட நபர் மேலதிக சட்...

கைது செய்யப்பட்ட நிதர்சனாவின் பெற்றோர், சகோதரி ஆகியோரை பொலிஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

Image
 கைது செய்யப்பட்ட நிதர்சனாவின் பெற்றோர், சகோதரி ஆகியோரை பொலிஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! மூங்கிலாறு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டிருந்த சிறுமி நிதர்சனாவின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கும் அவரது பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோரை 48 மணி நேரம் பொலிஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின்  மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனாவின் மரணம் தொடர்பில் விசாரணைகளின் போது சிறுமியின் தந்தையார் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் குறித்த சிறுமியின் தாய் தந்தை அவருடைய சகோதரி ஆகியோர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்கள் மூவரையும் முல்லைத்தீவு மாவட்ட  நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பொலிசார் இவர்களை 48 மணிநேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில் விடயங்களை கேட்டறிந்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா இவர்களை 48 மணிநேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளார். கடந்த வாரம...