Posts

Showing posts from February, 2021
Image
 உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்துள்ளமையில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. (எம்.மனோசித்ரா) கொவிட் -19 தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்துள்ளமையில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய இந்த விவகாரத்தில் தீர்மானத்தை எடுக்குமாறு தான் நாம் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தினோம் என்று அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார். சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் தொடர்பில் அஸ்கிரிய பீடத்தின் நிலைப்பாட்டை வினவியபோதே மெதகம தம்மானந்த தேரர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கொவிட் -19 தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன. இவ்விடயத்தில் சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய தீர்மானங்களை எடுக்குமாறு நாம் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தினோம். இது அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய விடயமல்ல. எனவே அவர்களால் இவ்விடயத்தில் தீர்மானம் எடுக்க முடியாது. எவ்வாறிருப்பினும் தற்போது இந்த பிரச்சினைக்கான த...
Image
 கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்காக வழிகாட்டி தயார் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்காக வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அடக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து விவாதிக்கச் சுகாதார அமைச்சின் விசேட குழு நேற்று பிற்பகல் கூடிய போது தயாரித்துள்ளது. தான் உட்பட நிபுணர் குழுவின் இரண்டு உறுப்பினர்கள் சேர்ந்து வழிகாட்டியைத் தயாரித்ததாகச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அடக்கம் செய்வதற்கான இடத்தை உறுதிசெய்த பின்னர், கொரோனா செயலணிக்கு  சமர்ப்பித்து, அதற்கு அனுமதி பெற்ற பின்னர் அது சுற்றறிக்கையாக வெளியிடப்படும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். குறித்த வழிகாட்டி வழங்கப்பட்ட பின்னரே கொரோனா தொற்றால் மர ணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப் படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். உடல்களை அடக்கம் செய்யும் வரை அது குளிரூட்டி பெட்டிகளில் வைக் கப்படும் என்ற...
Image
 திருகோணமலை மாவட்ட அரசியல்வாதிகளை பலப்படுத்துவதன் ஊடாகவே ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரமுடியும். ஹஸ்பர் ஏ ஹலீம்_ திருமலை மாவட்ட அரசியல்வாதிகளை பலப்படுத்துவதன் ஊடாகவே ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரமுடியும்முள்ளிப்பொத்தானையில் வைத்து முன்னால் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன. ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தி இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் முன்னால் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவான் விஜேவர்தன தெரிவித்தார். திருகோணமலை முள்ளிப்பொத்தானையில் இன்று (28) இடம் பெற்ற நிகழ்வின் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்துரைக்கையில் திருகோணமலை மாவட்டத்தில் இருக்கின்ற சில இயற்கை வளங்களையும் எமது நாட்டையும் பாதுகாக்கவும் ஒரு முன்மாதிரியான இடமாக நாங்கள் அதனை எதிர்காலத்தில் கொண்டு செல்லவுள்ளோம் டி எஸ் சேனாநாயக்க பரம்பரை போன்ற ஆட்சியை இந்த நாட்டு மக்களின் மூவினங்களை இணைத்துக் கொண்டு அதிகாரங்களை கொண்டு ஆட்சியை திட்டமிட்டுச் செய்வோம் தமிழ் சிங்கள முஸ்லிம் என இனமத பேதமற்ற முறைய...
Image
 மாந்திரிக சிகிச்சை அளிக்கபட்ட சிறுமி பரிதாபமாக பலி. மீஹாவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டுபொட பகுதியில்  மாந்திரிக சிகிச்சை அளிக்கபட்ட சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமியின் உடலில் அமானுஸ்ய ஆவியின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும், அதனால் அவருக்கு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறுமி வசித்த பகுதியில் மாந்திரிகம் செய்துவரும் பெண்ணொருவரே இந்த பூசைகளை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், பெற்றோர்கள் குறித்த சிறுமியை பூசைகளுக்கு உட்படுத்தியுள்ளதுடன், அவருக்கு ஒருவகை எண்ணை பூசப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுமி மயக்கமடைந்ததை தொடர்ந்து, அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதன்போது, 9 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த மீஹாவத்தை பொலிஸார் குறித்த பெண் மத்திரவாதியை கைது செய்துள்ளனர்.
Image
 பொலிஸ் ஜீப் - முச்சக்கரவண்டி மோதி விபத்து... இருவர் உயிரிழப்பு. வாரியபொல – கட்டுபொத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்  இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். பொலிஸ் ஜீப் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், விபத்து தொடர்◌ான மேலதிக விசாரணுகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்
Image
 சாய்ந்தமருது வைத்தியசாலை விவகாரம் : அதாஉல்லா எம்.பியை சந்தித்த வைத்தியசாலை அபிவிருத்தி குழு ! நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினருக்கும்  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவு க்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று   சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எல்.எம். அஜ்வத் தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் வைத்தியசாலையின் குறை,நிறைகள் தேவைகள் வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர்களுக்கு நடைபெறும் அநீதிகள் தொடர்பில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் எம்.ஐ.சதாத் விளக்கமளித்தார். இது தொடர்பில் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுத்து பிராந்திய மக்களின் தேவைகளை நிபர்த்தி செய்யும் வைத்தியசாலையாக இந்த வைத்தியசாலையை மாற்றியமைக்க உறுதியளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தனது உரையில் தெரிவித்தார். இந்த கலந்துரையாடலில் பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் ஏ.எல்.எம். சலீம், கல்முனை மாந...
Image
 முஸ்லீம் அரசியல் தலைவர்கள் என்பதை விட முஸ்லீம் வியாபாரிகள் என்பதே பொருத்தமாக இருக்கும். பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) ஜனாசா விடயம் உட்பட ஏனைய பிரச்சினை எழ காரணம் முஸ்லீம் தலைவர்கள். அவர்களை முஸ்லீம் அரசியல் தலைவர்கள் என்பதை விட முஸ்லீம் வியாபாரிகள் என்பதே பொருத்தமாக இருக்கும் என நாட்டை காக்கும் இளைஞர் அணியின் கிழக்கு மாகாண உப தலைவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைமை தொடர்பாக அம்பாறை ஊடக அமையத்தில் சனிக்கிழமை(27) மாலை செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் கூறியதாவது அண்மைக்காலமாக ஜனாசா விடயத்தில் முஸ்லீம்கள் மனவேதனையுடன் இருந்த செய்தி யாவரும் அறிந்த விடயம்.இதனை தொடர்ந்து கடந்த இரவு பிரதமர் மற்றும் ஜனாதிபதியினால் எட்டப்பட்ட முடிவுகளின் படி முஸ்லீம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளமை உண்மையில் இலங்கையில் வாழும் அனைத்து மனமகிழ்ச்சி அடையக்கூடிய ஒரு விடயமாகும்.இந்த விடயத்தில் ஜனாதிபதி பிரதமருடன் தோள் நின்று உதவிசெய்த சக சிறுபான்மை கட்சியில் இருந்து முதன் முதலாக வாய் திறந்து பேசிய ப...
Image
 பிரதமர் இந்துசமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் : கருணா பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) பிரதமர் இந்துசமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் எனவும்  ஆலயங்கள் தேவையற்ற செலவுகளைத்தவிர்த்து கல்விக்காக செலவிடவேண்டும் என பிரதமரின் மட்டு அம்பாரை விசேட இணைப்பு செயலாளரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இந்துசமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளின் பேரில் பிரதம மந்திரி மஹிந்தராஜபக்ச தைப்பொங்கலை முன்னிட்டு நாட்டிலுள்ள 100 ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கிவருகின்ற வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் உள்ள 06 ஆலயங்களின் நிருவாகத்தினருக்கு காசோலைகள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் அன்றுதொட்டு தமிழர்களுக்கு என அடையாளமாக இருக்கின்ற ஒரேயொரு சொத்து ஆலயம் ஆகும். அந்த ஆலயங்கள் தேவையான ஆவணங்களுடன் பதிவுசெய்யப்பட்டிருக்கவேண்டியது அவசியமாகும்.இவைகள் இல்லாதகாரணத்தினால் பல ஆலயங்கள் நீதிமன்றில் காலத்தைக்கடத்து...
Image
 தனது 180 பேர்ச் காணியை இராணுவத்திற்கு அன்பளிப்பு செய்த மூத்த பிரஜை .. நுவரெலியாவில் வசிக்கும் தோட்ட தொழில் துறையில் அனுபவம் மிக்க மூத்த பிரஜை ஒருவரின் குடும்பத்தினர் தாய்நாட்டின் பாதுகாவலராக இருந்துவரும் இராணுவத்தின் ஒப்பற்ற சேவையை பாராட்டும் வகையிலும், அந்த அர்பணிப்புக்களை அங்கீகரிக்கும் வகையில் நுவரெலியாவிலுள்ள தமக்கு சொந்தமான 180.2 பேர்ச்சஸ் காணித்துண்டை விடுமுறை நாட்களில் இராணுவத்தின் பயன்பாட்டிற்காக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவை சந்தித்து வியாழக்கிழமை (25) கையளித்தார். கந்தபொலை கோர்ட் லாட்ஜ் தோட்டத்தில் பகுதியில் வசிக்கும் திரு தொன் பேர்னார்ட் அலோசியஸ் குருகுலாதித்தியா மற்றும் திருமதி லாலனி பெட்ரியஸ் குருகுலாதித்தியா, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் காணியை நன்கொடையாக வழங்குவதற்கான ஆவணங்களில் கைசாத்திட்டனர். திரு தொன் பெர்னார்ட் அலோசியஸ் குருகுலதித்தியா தனது மூதாதையர்களிடமிருந்து சொத்துக்களைப் பெற்றுள்ளதுடன், பிரித்தானிய காலனித்துவ காலங்களில் பெறப்பட்ட காணிகள் என நன்கொடையாளர்கள் தெரிவிக்கின்றனர். இயற்கையிடமிருந்து கிடைத்த பரிசை தனது கடின உழைப்பினால் பாதுகாத...
Image
 இணைப்பு : வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட பின்னரே உடல் அடக்கம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உடல் அடக்கம் தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட  பின்னரே COVID19 இனால் இறந்தவரின் அடக்கம் செய்யப்படும் என்று இலங்கை சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தனே தெரிவித்தார். “ அடக்கம் செய்வதற்கு பொருத்தமான இடத்தை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இன்னும் மூன்று அல்லது நாட்களில் அடக்கம் செய்வதற்கான இடங்கள்  தொடர்பில் முடிவு எடுக்கப்படும். அதுவரை அடக்கம் செய்ய தேவைப்படுபவர்களின் உடல்கள் குளிர்சாதன உபகரணத்தில் வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Image
 இலங்கை போக்குவரத்து சபை பழைய பஸ்கள் 4 கடலில் இறக்கப்பட்டன. காலி கடலில் ஓட்டுமீன்கள் மற்றும் மீன்களுக்கு நீருக்கடியில் ஒரு உலோக பாறையை உருவாக்க பழைய இலங்கை போக்குவரத்து கழக பஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் 4 பஸ்கள் கடலில் நீருக்கடியில் இறக்கப்பட்டன.
Image
 வீட்டின் உரிமையாளரை பயமுறுத்த, புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் தலையை வேறாக்கி வீட்டு வளவில் வீசிய மூவர் கைது. #மட்டக்களப்பு மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடியில் வளவு ஒன்றில் மனிதத் தலையை வீசிய சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்தாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தலையானது மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்திலிருந்து எடுக்கப்பட்டடதாக பொலிஸாரின் முதலகட்ட விசாரணையின்போது கண்டறியப்பட்டுள்ளது. தலை வீசப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளரை பயமுறுத்தவே மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலத்திலிருந்து அதன் தலையை எடுத்து வீசியதாக சந்தேக நபர ஏற்றுக் கொண்டுள்ளனர் வியாழக்கிழமை(25) மாலை குறித்த வீட்டு உரிமையாளரின் முன்னால் அமைந்துள்ள வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் குறித்த வீட்டு உரிமையாளருக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்து சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளர் களுவாஞ்சிகுடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த மனிதத் ததலை களுவாஞ்சிகுடி பொது மயானத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டதாகவும் தோண்டி எடுக்கப்பட்ட தலை ...
Image
 எமது அரசு காலத்தில் மருத்துவமனையிலும் மருந்துகளுக்கு பற்றாக்குறை இருக்கவில்லை 500,000 தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கம் ஹீரோக்களாக மாற முயற்சிக்கிறது. வைத்தியர் ராஜித சேனரத்ன, எம்.பி.இன்று எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். நாட்டின் மக்கள் தொகை 21 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. 500,000 கோவிட் தடுப்பூசிகளைக் கொண்டுவருவதன் மூலம் அரசாங்கம் ஹீரோக்களாக மாற முயற்சிக்கிறது, ஆனால் அவை அனைத்தும் இலவசமாகப் பெறப்பட்டவை என்று ராஜித தெரிவித்தார்.  முந்தைய அரசாங்கத்தின் போது எந்த மருத்துவமனையிலும் மருந்துகளுக்கு பற்றாக்குறை இருக்கவில்லை.அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்து இருந்தது, அந்த நேரத்தில் அனைத்து மருத்துவமனை இயக்குநர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டால் நோயாளிகளுக்கு எந்த சிரமமும் இல்லாமல் மருந்துகள் பெற பணம் வழங்கப்பட்டது.  25 மில்லியன் தேசிய மருத்துவமனையின் இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று மருந்துகளின் பற்றாக்குறை உள்ளது. புற்றுநோய் மருந்துகள் இல்லாத விடயம் அவனதானத்துக்குரியது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது...
Image
 இறுதியில் அரசாங்கம் அதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதையிட்டு நிம்மதியடைகின்றோம். கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களையும்அதனால் மரணித்ததாக சந்தேகிக்கப்பட்டவர்களையும் அரசியலைப்பினால் பாதுகாப்பளிக்கப்பட்ட, அடிப்படை உரிமையான நல்லடக்கம் செய்யப்படுவதை நீண்டகாலமாக இழுத்தடித்துவிட்டு, இறுதியில் அரசாங்கம் அதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதையிட்டு நிம்மதியடைகின்றோம். இந்த விடயம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டிராது விட்டிருந்தால், அவ்வாறே உறுப்பு நாடுகள் சிலவற்றால் இலங்கை மீது கொண்டுவரப்பட்ட பிரேரணையில் சேர்க்கப்படாது விட்டிருந்தால் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட , மக்களின் ஒரு ஒரு சாராரை மனவேதனைக்குள்ளாக்கிய இத்தகைய எரியூட்டும் அவலத்திற்கு தீர்வு கிட்டியிருக்க மாட்டாது.  அமர்வின் ஆரம்பத்திலேயே இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் குரல் எழுப்பியதன் பயனாகவும், அநேகமான மேற்குலக நாடுகள் கருத்துப் பறிமாற்றங்கள் நடத்தி கண்டன எதிர்பலைகளைத் தோற்றுவித்ததன் விளைவாகவும் பெப்ரவரி 25 ஆந்திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவை அதன் செயல்பாட்டைத் தீவிரப்படுத்தியது. தனிப்பட்ட நாடுகள் ஒவ...
Image
 மைத்திரிபால சிறிசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோத்தாபயவுடன் பேச நாம் தயார். துண்டுப்பிரசுரம் ஒன்றில்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோத்தாபயவுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி கோத்தாபாய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் தொடர்பாக பதிலளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், குறைந்த பட்சம் கடந்த ஏழு தசாப்தங்களாக இலங்கை அரசாங்கத்துடன் பேசி ஏமாற்றமடைந்த வரலாறு எங்களுக்கு இருக்கிறது. கடைசியாக 2017 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்துடன்  அலரி மாளிகையில்  சந்தித்தோம். அப்போதும்  நாங்கள் ஏமாற்றப்பட்டோம். குறித்த நான்கு சிறுமிகளில் ஒருவர் ஜெயவனிதாவின் மகள்.ஜனாதிபதி அந்தபிள்ளைகளை காட்டினால், எங்களுடன் பேசுவதற்கான அவரத...
Image
 திருகோணமலையில் நகைக்கடையொன்றில் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது. திருகோணமலை என்.சீ. வீதியில் நகைக்கடையொன்றில் 38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டமை தொடர்பில் 7 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக திருக்கோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நகைக்கடையில் கடந்த 8ஆம் திகதி 38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது திருகோணமலை கோணேஸ்வரம் கடற்பகுதியில் படகு ஒன்றில் வந்துள்ள கொள்ளையர்கள் தங்க நகைகளை கொள்ளையிட்டு மீண்டும் படகிலேயே தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இந்தச் சம்பவம் தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது திருகேணமலை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இந்த கொள்ளையைத் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர் பல்வேறு குற்றச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் எனவும் தற்போது தலைமறைவாகியுள்ள ஐஸ் மஞ்சு எனப்படும் சந்தேக நபரின் சகோதரர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்...
Image
 விவசாய, கால்நடை பண்ணைகள் உற்பத்தி திறனை அதிகரிக்க இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த அதிகாரிகளுக்கு ஆலோசனை..... விவசாய, விதைகள்  மற்றும் கால்நடை பண்ணைகள் போன்ற உற்பத்தித் துறைகளின் செயல்திறனையும் உற்பத்தித் திறனையும் மேம்படுத்துவதற்கு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த அதிகாரிகளுக்கு ஆலோசனை..... கம்பஹா மாவட்டத்தின்  விவசாய, விதைகள் மற்றும் கால்நடை பண்ணைகள் போன்ற உற்பத்தித் துறைகளின் செயல்திறனையும் உற்பத்தித் திறனையும் மேம்படுத்துவதற்காக கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த அவர்களின் மூலம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய, வல்பிட்ட பிரதேசத்தின் விவசாயத் துறையிலுள்ள பல நிறுவனங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்ட போதே அமைச்சர் இந்த ஆலோசனைகளை வழங்கினார். அமைச்சர் இங்கு பின்வரும் நிறுவனங்களுக்கு நேரடி விஜயத்தை மேற்கொண்டார்.   1. திவுலபிட்டிய வல்பிட்டயில் அமைந்துள்ள விவசாய திணைக்களத்தின் கீழுள்ள விதை உற்பத்தி பண்ணை 2 .வல்பிட்ட விவசாய பயிற்சி நிலையம்  3 .வல்ப...
Image
 வஸீம் தாஜுதீன் கொலை வழக்கில் கைதான முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேநாநாயக்க சற்றுமுன் உயிரிழப்பு. வஸீம் தாஜுதீன் கொலை வழக்கில் கைதான முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேநாநாயக்க சற்றுமுன் உயிரிழந்தார். Former Senior Deputy Inspector General (DIG) of Police Anura Senanayake has passed away while receiving treatment at a private hospital in Colombo, his family sources confirmed.
Image
குர்ஆனை தடை செய்து விட்டு பொதுபல சேனாவை தடை செய்ய வாருங்கள்.. தௌஹீத் வாதத்தை தடை செய்ய வேண்டும் என உயிர்த்த ஞாயிரு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் அதன் மூலம் குர்ஆனை தடை செய்யவே கூறப்பட்டுள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் கூறினார். பொதுபல சேனா அமைப்பினை தடை செய்யும் முன்னர் குர்ஆனை தடை செய்து விட்டு வருமாறு அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை திரிபுபடுத்தப்பட்டுள்ளமை தெளிவாக தெரிகிறது எனவும் , இந்த அறிக்கைக்கு அமைவாக ஹிஸ்புல்லாஹ் எதுவும் செய்யவில்லை, உலமா சபை எதுவும் செய்யவில்லை,வாமி எதுவும் செய்யவில்லை, தப்லீக் ஜமாத் எதுவும் செய்யவில்லை,தௌஹீத் அமைப்புகள் எதுவும் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Image
 பெரும்பான்மை மக்களுடன் சேர்ந்து வாழும் வழிவகைகளை உருவாக்கிக்கொள்ளுங்கள் பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் இலங்கை விஜயம் செய்திருந்தபோது அவரை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் சந்திக்கும் வாய்ப்பை பல கட்ட முயற்சிகளின் பலனாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பிர்கள் பெற்றனர்.  அந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி என முக்கிய கட்சிகளின் முக்கிய முஸ்லிம் எம்.பிக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.  அந்த சந்திப்பின் போது கொரோனா காரணங்களை முன்னிறுத்தி, ஜனாஸா எரிக்கப்படும் விடயத்தை பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான்கானுக்கு அந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த முஸ்லிம் எம்.பிக்கள் எத்திவைத்து தீர்வொன்றை பெற்றுத்தருமாறு கோரிக்கையை முன்வைக்க, அந்த கோரிக்கைக்கு பதிலளித்த பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், தான் இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் கலந்துரையாடிவிட்டதாகவும் சாதகமான நல்ல முடிவு விரைவில் அ...
Image
 வாகன இறக்குமதி இடைநிறுத்தப் பட்டதால், 4 இலட்சம் பேர் பாதிப்பக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் அந்நிய செலாவணி, வெளிச்செல்லும் அளவை  குறைப்பதன் மூலம் வாகன இறக்குமதி துறையை பாராமரிப்பதற்கு திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் செயலாளர் அரோஷ் ரொத்ரிகோ நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இதனைத் தெரிவித்தார். இது சம்பந்தமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 2020 மார்ச் 19 ஆம் திகதிக்கு பின்னர் வாகன இறக்குமதி நடவடிக்கைகளை முற்றிலும் இடைநிறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இதன் விளைவாக இந்த துறையில் பணிபுரியும் ஒரு இலட்சம் பேர் நேரடியாக வேலையிழக்க நேரிடுவதோடு அவர்களை சார்ந்து வாழும் 4 இலட்சம் பேர் பாதிப்பக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். Siva Ramasamy
Image
 ஓமானில் சிக்கியிருந்த 315 இலங்கையர்கள் நாடு திரும்பினர். இலங்கைக்கு வருகை தர முடியாமல் ஓமானில் சிக்கியிருந்த 315  இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். ஓமானில் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த நபர்கள் வருகை தந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த அனைவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Siva Ramasamy
Image
 யூசுப் முப்தின் மகன், உமர் யூசுப் LLM பட்டம் பெற்றார். இங்கிலாந்தில் உள்ள ஸ்ட்ராஃபோர்டுஷைர் பல்கலைக்கழகத்தில்  சர்வதேச வணிகச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற எனது முதுகலை சட்டத்தை (LLM) முடித்ததற்காக வெற்றிகரமாக விருது பெற்றேன். இந்த பயணம் முழுவதும் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அல்லாஹ் எங்கள் முயற்சிகளை ஏற்றுக்கொண்டு, அவனது உன்னத தீனுக்கு சேவை செய்ய இந்த கருவிகளைப் பயன்படுத்த எங்களுக்கு உதவுவானாக. அமீன். உமர் யூசுப் M.Y.Irfhan Akp
Image
 ஜ‌னாஸா எரிப்ப‌தை நிறுத்திய‌மை ஹ‌க்கீமுக்கு பாரிய‌ தோல்வி : அத‌னால் மீண்டும் எரிக்கும் நிலையை கொண்டு வ‌ர ஹக்கீம் ‌ இன‌வாதிக‌ளை உசுப்பேத்துவார். நூருல் ஹுதா உமர் அட‌க்குவ‌த‌ற்கு அனும‌தி கிடைத்த‌மைக்காக‌ முத‌லில் இறைவ‌னுக்கு  ந‌ன்றி சொல்லுங்க‌ள். அத‌ன் பின் இத‌னை அர‌சிய‌லாக்கி முஸ்லிம்க‌ளை உசுப்பேற்றாம‌ல் அர‌சை அணுகிய‌ ஆளுந்த‌ர‌ப்பு அர‌சிய‌ல்வாதிக‌ளுக்கும் ந‌ன்றி சொல்லுங்க‌ள். இனியாவ‌து முர‌ண்ப‌ட்டு நிற்காம‌ல், எடுத்த‌த‌ற்கெல்லாம் பிரதமர் ம‌ஹிந்த‌, ஜனாதிபதி கோட்டாவில் ப‌ழி போடாதீர்க‌ள். ஏற்க‌ன‌வே எரித்த‌துதானே என்று வித‌ண்டாவாத‌ம் புரிய‌ வேண்டாம் என உல‌மா க‌ட்சி தலைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ முஸ்லிம்க‌ளை கொன்றொழித்த‌ பிர‌பார‌னை கூட‌ ம‌ன்னித்து அவ‌ரைக்க‌ண்டு பேசி புரியாணி சாப்பிட்ட‌ ஹ‌கீமை இந்த‌ ச‌மூக‌ம் ஏற்றிருந்த‌து. பிர‌பாக‌ர‌ன் ஏற்க‌ன‌வே கொன்ற‌வ‌ர்தானே, ஏன் பேச‌ப்போனீர்கள் என்று ஒரு முஸ்லிமாவ‌து ஹ‌க்கீமை கேட்டார்களா? ஆக‌வே இறைவ‌னை புக‌ழுங்க‌ள். விம‌ர்ச‌ன‌ங்க‌ளை நிறுத்துங்க‌ள். உங்க‌ள் எழுத்துக்க‌ள் க‌ண்க...
Image
 பத்தரமுல்ல சீலரத்னா தேரரின் வேட்புமனு நிராகரிக்கப் பட்டது. இலங்கை கிரிக்கட் சபையின் துணைத் தலைவர் பதவிக்கு  போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை பத்தரமுல்ல சீலரத்னா தேரர்  நேற்று வழங்கி இருந்த நிலையில் அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. வட மாகாணத்தின் வன்னி மாவட்டத்தில் உள்ள புனித அந்தோனி விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பு மனு ஒப்படைக்கப்பட்டது. இலங்கை கிரிக்கட் சபையின் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை சமர்ப்பித்ததாக பத்தரமுல்ல சீலரத்னா தேரா உறுதிப்படுத்தினார் . இலங்கை கிரிக்கெட் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 2021 மே 20 ஆம் தேதி புதிய பதவிகளைத் தேர்ந்தெடுக்கும். SLC தேர்தல் மே மாதம் கொழும்பு -07 விளையாட்டு அமைச்சின் டங்கன் வெள்ளை ஆடிட்டோரியத்தில் காலை 10.30 மணி முதல் நடைபெறும்.
Image
 விசேட அதிரடைப்படையினர், கார் ஒன்றை விரட்டி சென்ற போது துப்பாக்கி சூடு.. இன்று பிற்பகல் வத்தளை நகரில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடைப்படை அதிகாரிகள் வேன் வண்டி ஒன்றில் கார் ஒன்றை பின்தொடர்ந்து கொண்டிருந்தபோது இத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தின் போது 3 முறை சுடப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். பேலியகொடை ஊடாக குறித்த கார் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
Image
 பௌத்த நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்ட சட்டத்தை மாற்றுவதற்கான எந்தத் தேவையும் கிடையாது. பௌத்த விஹாரைகள் தொடர்பான சட்டத்தில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது என்று நீதி  அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 2500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பௌத்த நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த சட்டத்தை மாற்றுவதற்கான எந்தத் தேவையும் கிடையாது என அவர் வலியுறுத்தினார்.  நீதி அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார். தாம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு தவறாக விளக்கம் அளிக்க சிலர் முயன்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான அர்ஜூன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் பற்றி இலங்கையின் சட்டமா அதிபர், சிங்கப்பூர் சட்டமா அதிபரோடு கலந்துரையாடி இருப்பதாக அமைச்சர் அலி சப்ரி கூறினார்.
Image
 டைனமைட்கள் மற்றும் சேவா நூலுடன் ஆயுர்வேத வைத்தியர் உட்பட இருவர் கைது #திருகோணமலை,கிண்ணியா திருகோணமலை,கிண்ணியா பிரதேசத்தில் டைனமைட் மற்றும் சேவா நூலுடன் ஆயுர்வேத வைத்தியர் உட்பட இருவர் கைது செய்ததாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 37 டைனமைட் குச்சுகளும் டைனமைட்டை வெடிக்க வைக்கும் 372 அடி சேவா நூலும் கைப்பற்றப்பட்டதாக தலைமையகப்பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்படி கைதை தலைதலைமையகப்பொலிஸார் மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர். அண்ணல் நகர், கிண்ணியா-3 பிரதேசத்தைச்சேர்ந்த 44 வயதான ஆயுர்வேத வைத்தியரும்,  ஜாவா நகர்,கிண்ணியா-6 ஜ சேர்ந்த 41 வயதான மீனவர் ஒருவருமே டைனமைட்டுடன் கைதானதாக தலைமையகப்பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள் பயங்கரவாத செயற்பாட்டிற்காக கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த தலைமையகப் பொலிஸார் இதன் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களையும் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நட...
Image
 எங்களை தடை செய்யுங்கள்.. நாங்கள் பெரு மகிழ்ச்சியடைவோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட  ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் படி எங்களை தடை செய்யுங்கள் ஆனால் அதேவேளை ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துங்கள் என பொதுபலசேனாவின் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எங்களை தடை செய்வது குறித்து நாங்கள் பெரு மகிழ்ச்சியடைவோம் ஆனால் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரியவிதத்தில் நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை பொதுபலசேனாவை ஏன் தடைசெய்கின்றீர்கள் என்பதற்கான காரணத்தினை வெளியிடவேண்டும் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நாங்கள் எந்த குற்றங்களிலும் ஈடுபடவில்லை நாங்கள் எங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை இலங்கையில் வகாபிசத்தையும், ஐஎஸ் உட்பட பல இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யவேண்டும் என்ற ஆணைக்குழுவின் பரிந்துரையை அவர் வரவேற்றுள்ளார். எங்களிற்கு இந்த பரிந்துரைகள் ஆச்சரியமிக்கவில்லை இந்த பரிந்துரைகளை தீவிரமாக ஆராய்ந்தால் நாங்கள் பெருமகிழ்ச்சியடைவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் குரானின் போத...
Image
 அரசாங்கத்தின் உயர் மட்ட தலைவரை இரு சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் சந்திக்க தயாராகி வருவதாக தகவல்.. ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரண்டு கட்சிகளின் தலைவர்கள், அரசாங்கத்தின் உயர் மட்ட தலைவர் ஒருவரை சந்திக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://am.lk/local-news/item/56824-2021-02-25-04-56-55 இதற்காக நேரத்தை ஒதுக்கி தருமாறு அவர்கள் கேட்டுள்ளதுடன் அரசாங்கத் தரப்பில் இருந்து இதுவரை பதில் எனவும் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. அரசாங்கத்தின் உயர் மட்ட தலைவரை சந்தித்து அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தமது விருப்பத்தை தெரிவிப்பது அவர்களின் நோக்கம் எனக் கூறப்படுகிறது. தம்மை அரசாங்கம் நன்றாக கவனித்துக் கொள்வதாக 20ஆவது அரசியலமைப்புத்  திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதை அடுத்தே, இந்த கட்சித் தலைவர்கள் இப்படியான அரசியல் தீர்மானத்தை எடுத்துள்ளதாக பேசப்படுகிறது. ஜனநாயக மக்கள் முன்னணியில் தலைவர் மனோ கணேசன் மற்றும் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோரே இவ்வாறு அரசாஙகத்தின் உயர் மட்டத் தலைவரை சந்திக்க தயா...
Image
 காத்தான்குடி நகர சபை பசுமை நகரமாக தெரிவு. கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் இயலுமையை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட தெரிவு போட்டியில் காத்தான்குடி நகர சபையானது பசுமை நகர் செயற்றிட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. காத்தான்குடி நகர சபையை செயல்படுத்துவதற்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களமும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டமும் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களின் இயலுமையை கட்டியெழுப்பும் செயற்திட்டத்தின் கீழ், காத்தான்குடி நகரை பசுமை நகராக்கும் செயற்திட்டம் தொடர்பாக ஆலோசனை அபிப்பிராயங்கள் வழங்கும் கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (23) காத்தான்குடியில் நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு மாகாணத்திற்கான திட்ட இணைப்பாளர் எம் . ஷமீர் சாலிஹின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் என் . மணிவண்ணன் , காத்தான்குடி பிரதேச செயலாளர் யு . உதயசிறீதர், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ். எச் .எம் . அஸ்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Image
 வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக சமூக வலைத்தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் விளம்பரங்களை நம்பவேண்டாம். வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, சமூக வலைத்தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் விளம்பரங்களை நம்பவேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த பணியகம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பலர் நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக குற்றப்புலனாய்வுப் திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்த விளம்பரங்கள் சட்டரீதியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் மின்னணு ஊடகம் மற்றும் பத்திரிக்கைகள் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்படும். எனவே, சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை நம்ப வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களை அறிவுத்தியுள்ளது.
Image
 கண்டி எசல பெரஹெராவைத் தாக்குவதே சஹ்ரான் ஹாஷிமின் பிரதான திட்டமாகும் ; ஜனாதிபதி விசாரணை ஆணைய அறிக்கை. கண்டி எசல பெரஹெராவைத் தாக்குவதே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் பிரதான திட்டமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பு சிங்கள பத்திரிக்கை   செய்தி வெளியிட்டுள்ளது. 21 ஏப்ரல் 2019 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் அறிக்கை நேற்று நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டது. உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், மிகப் பெரிய அளவிலான வெடிபொருள் 2019 ஜனவரி 16 ஆம் திகதி புத்தளம் – வண்ணாத்திவில்லு பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 4, 2019 அன்று, சஹரான் மற்றும் பிற உறுப்பினர்களின் பெயர்கள் உள்ளிட்ட தாக்குதல் பற்றிய தகவல்களை இந்திய அதிகாரிகள் புலனாய்வு சேவைகளுக்கு வழங்கியிருந்தாலும், பாதுகாப்பு செயலாளர், தேசிய புலனாய்வுத் தலைவர், பொலிஸ்மா அதிபர், புலனாய்வு பணிப்பாளரும் தங்...
Image
 45 கிலோ கிராம் ஹெரோயினுடன் இராணுவ அதிகாரி ஒருவரும் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவரும் கைது. ஹொரண பகுதியில் வைத்து 45 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இராணுவ அதிகாரி ஒருவரும் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட நபர்கள் கடத்தலுக்கு  பாவித்த  வேனின் நம்பர் பிளேட் இராணுவ வாகனம் போல காட்சிப்படுத்தப்பட்டதாக போலீஸ் மீடியா செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹானா தெரிவித்தார். வேனின் சாரதி   இராணுவ சீருடையும் அணிந்திருந்தார். வேனில் இருந்த மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார், அவர் இராணுவத்தை விட்டு வெளியேறியவர் என்பது தெரியவந்தது.  வேன் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள இமடுவ பகுதியில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்து களனிகம பகுதியில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது. சுமார் 2 மாத காலத்திற்குள் கைப்பற்றப்பட்ட 4 வது பெரிய அளவிலான போதைப்பொருள் இது என்று போலீஸ் மீடியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்....
Image
 கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு விரைவில் அனுமதி கிடைக்கும் சாதகநிலை.. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின்  உடல்களை அடக்கம்  செய்வதற்கான அனுமதி மறுப்பு மற்றும் சமூக மட்டத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் குறித்து நடவடிக்கைகள் எடுப்பதற்காக  பிப்ரவரி 5 ஆம் திகதி அன்று பிற்பகல் 3.30 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பாராளுமன்றத்தில்,  அரசாங்கத்தின் நட்பு கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.  இதன்போது  சில கட்சித் தலைவர்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.  கூட்டத்தில் நிலைமையை விளக்கிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, சுகாதாரத் துறையின் இறுதி பரிந்துரை பெறும் வரை முடிவெடுக்க முடியாது என்று கூறியிருந்தார். இது தொடர்பாக “மகா சங்கத்திலிருந்து எதிர்ப்பு” எழுந்துள்ளது என்று கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். உடல்களை அடக்கம் செய்வது குறித்து  பேராயர்களுடன் கலந்துரையாடவும் பிரதமர்,  கட்சித் தலைவர்களுடன் ஒப்புக் கொண்டார்.  இதனை அடுத்து , பிப்ரவரி 10  மாலை 5.00 மணிக்கு அலரிமாளிகையில்   மகா சங்க...
Image
 காடழிப்பை நிறுத்த படையணி. #திருகோணமலை ஹஸ்பர் ஏ ஹலீம்_ திருகோணமலை மாவட்டத்தில் காடழிப்பைத் தடுக்க ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையினரின் தலையீட்டால் ஒரு சோதனைப் படையை நிலைநிறுத்த கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் அவர்களின் தலைமையில்  (24) திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில்  நடைபெற்ற  கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் நடந்துகொண்டிருக்கும் காடழிப்பைத் தடுக்க தேவையான முடிவுகளை எடுக்க பாதுகாப்புப் படைத் தலைவர்களின் பங்களிப்புடன் திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது சோதனைகளுக்கு மேலதிகமாக, கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பேரழிவு குறித்து பாதுகாப்பு படையினருக்கு எச்சரிக்கை செய்ய ஹாட்லைன் எண்களுடன் (070-7011117) விளம்பர பலகைகளை நிறுவவும் முடிவு செய்யப்பட்டது. ஆளுநர் அலுவலகம் அறிமுகப்படுத்திய விளம்பர பலகைகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கும் ஆளுநர் தலைமை தாங்கினார். மேலும், பிரதேச மட்டத்தில் சுற்றுச்சூழல் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோண மாவட்ட செயலாளருக்கு ஆளுநர் அறிவுறுத்தினார். எதிர்காலத்தில் காடுகள் மற்றும் தொல...
Image
 முஸ்லிம்களின் ஜனாஸா புதைக்கப்பட வேண்டும் ; மனித உரிமைகள் பேரவையில் ஒலித்தது இஸ்லாமிய ஒத்துழைப்பு ஒழுங்கமைப்பின் குரல். மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸா  புதைக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கைக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என்று, இஸ்லாமிய ஒத்துழைப்பு ஒழுங்கமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அதன் பொதுச்செயலாளர் கலாநிதி யூசுப் அல் ஒதாமீன் Yousef Al Othaimeen  மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் உரையாற்றும் போது இதனைக் கூறியுள்ளார். இலங்கையில் கொவிட்19 நோயால் மரணிக்கின்றவர்களின் சரீரங்கள் தகனம் செய்யப்படுகின்றன. முஸ்லிம்களது சரீரங்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று நம்புகின்ற நிலையில், இலங்கை அரசாங்கம் அந்த உரிமையை மதித்து செயற்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்
Image
 சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயற்றிட்டத்தில் பங்கேற்கிறது மட்டக்களப்பு DreamSpace Academy. ட்ரீம்ஸ்பேஸ் அகாடமி (DreamSpace Academy) - இலங்கையின் மட்டக்களப்பை மையமாகக் கொண்ட ஒரு சமூக புத்தாக்கம் நிலையம் (Community Innovation Center) சர்வதேச விண்வெளி நிலையத்தின் (International Space Station) ஒரு செயற்றிட்டத்தில் பங்கேற்கிறது. இந்த விண்வெளி செயற்றிட்டத்தில் இலங்கை இளைஞர்கள் 18 முதல் 23 வயதுக்குட்பட்டோர் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். ட்ரீம்ஸ்பேஸ் அகாடமி இலங்கையில் வசதி குறைந்த இளைஞர் யுவதிகளுக்கு விண்வெளி ஆய்வகம் (Space Lab) உள்ளிட்ட மேம்பட்ட ஆய்வகங்களுக்கு (Advanced Multidiciplinary Labs) நிபந்தனையற்ற அணுகலுடன் திறன் வலுவூட்டல் செய்கின்ற ஒரு ஸ்தாபனமாகும். ரெட் கிலோவ்வின் (Red Clove) விதைகள் மற்றும் நைட்ரஜன் உருவாக்கும் பாக்டீரியாக்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒரு தன்னிறைவான எக்ஸோலாப்பை (ExoLab) அனுப்புவதன் மூலம் உயிரினங்களில் மைக்ரோ கிராவிட்டி விளைவுகளை ட்ரீம்ஸ்பேஸ் அகாடமி (DreamSpace Academy) அதன் முதல் விண்வெளி திட்டத்தில் ஆராய்கிறது.  இச்செயற்றிட்டமானது Cygnus N...
Image
 இம்ரான்கான், இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை இன்று சந்திக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளாரென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Image
 அரச பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்.. மார்ச் மாதம் 15 ஆம் திகதிஇரண்டாம் தவனை ஆரம்பம். 2021 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகள் நாளை (24) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, இரண்டாம் தவணை கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Image
 அனுமதியின்றி மாட்டிறைச்சி கொண்டு சென்றவருக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் . சுகாதார பரிசோதகரின் அனுமதியின்றி மாட்டிறைச்சி கடைக்கு வழங்குவதற்காக முச்சக்கரவண்டியில் மாட்டிறைச்சியை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டி சாரதிக்கும் மாட்டிறைச்சி கடை உரிமையாளருக்கும் தலா 25 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த நீதிவான் பணம் கட்ட தவறின் இருவருக்கும் 5 மாதம் சிறைத் தண்டனையும் விதித்துள்ளார். யாழ்.குருநகரில் உள்ள மாட்டிறைச்சி கடைக்கு வழங்குவதற்காக 97 கிலோ கிராம் மாட்டிறைச்சியை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்ற சாரதியும் மாட்டிறைச்சி கடை உரிமையாளரும் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர் அ.சுரேஷ்குமாரிடம் அகப்பட்டுக் கொண்டனர். இவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருவரையும் குற்றவாளிகளாக கண்ட நீதிவான் இருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபா அபராதம் விதித்ததுடன் பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் இருவருக்கும் 5 மாதம் சிறைத் தண்டனையும் விதித்துள்ளார்.
Image
 எந்த ஒரு நபரின் பிரஜா உரிமையை பறிக்கவோ அல்லது அது தொடர்பான சட்டங்களை அமுல்படுத்துவதில் அரசாங்கமோ அமைச்சரவையோ தலையிடாது. ஷம்ஸ் பாஹிம் எந்தவொருவரினதும் பிரஜா உரிமையை பறிக்கவோ அல்லது அது தொடர்பான சட்டங்களை அமுல்படுத்துவதில் அரசாங்கமோ அமைச்சரவையோ தலையிடாது என பொறுப்புடன் கூறுவதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரண கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பரிசீலித்த பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் பிரஜா உரிமையை பறிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி பதிலளித்த அமைச்சர் இவ்வாறு கூறினார். மேலும் ஜனாதிபதி  ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் சமூகத்தில் பல்வேறு கருத்துகள் பரப்படுகின்றன. 700 பக்கங்களுக்கும் அதிகமான இந்த அறிக்கை கடந்த முதலாம் திகதி ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்து. இதன் சிங்கள ,தமிழ் மொழிபெயர்ப்புகளுக்கு 3 வாரம் செல்லும். நேற்று அமைச்சரவைக்கு இது கையளிக்கப்பட்டது. விரைவில் பாராளும்றத்திற்கு சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது. ...
Image
  ரஞ்சனின் பாதுகாப்பு இனி எனது பொறுப்பு. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பாதுகாப்பு  வழங்கும் முழு பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு விவகார இராஜாங்க அமைச்சர் லொஹான் தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க தொடர்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர் தன தெளிவான அறிவுறுத்தல்களை   வெளியிட வேண்டும் என எதிர்க் கட்சி உறுப்பினர்கள் நேற்று (செவ் வாய்க்கிழமை) பாராளுமன்றில் கேட்டுக்கொண்டனர். அத்தோடு ரஞ்சன் ராமநாயக்கவை நாளைய பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி பாராளு மன்றத்தில் போராட்டத்தையும் நடத்தினர். இந்நிலையில் இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அங்குனுகொலபெலஸ்ஸ   சிறையில் இருக்கும் ரஞ்சன் ராமநா யக்கவின் பாதுகாப்பிற்கான முழு   பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
Image
 ரிசாட் காலத்தில் சதொசவில் பாரிய ஊழல்; ரூ 28 பில்லியன் இழப்பு முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் காலத்தில் சதொச நிறுவனத்திற்கு 28 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், இங்கு பாரிய ஊழல்களும் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித் தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற் றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதால் சதொசவுக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட் சியினர் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள் ளனர். சதொசவுக்கு இழப்புகள் ஏற்படாத வகையிலேயே குறித்த 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீ னின் காலத்தில் சதொச நிறுவனத்தில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றிருந்தன. 2015ஆம் ஆண்டு மாத்திரம் 1.9 பில்லியன் இழப்பு சதொசவுக்கு ஏற்பட்டிருந் தது. 2016 இல் 5.1 பில்லியனும், 2017இல் 2.8 பில்லியனும் 2019இல் 3.2 பில்லியனும் நட்டம் ஏற்பட்டி ருந்தது. 2020இல் அதனை 1.2 பில் லியனாக நாம் குறைத்துள்ளோம். 20 பில்லியனுக்கும் அதிகமாக நிதியை நட்டம் ஏற்ப...
Image
 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை; மைத்திரிக்கு எதிரான நடவடிக்கைக்கு பரிந்துரை விபரம்.. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட  நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயுமாறு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனா திபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்ணாந்து, முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஆகியோரும் தமது பொறுப்பை நிறைவேற்ற தவ றியுள்ளதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர் பான விசாரணை அறிக்கை ஜனாதி பதி, அமைச்சரவை என்பவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபே வர்தனவிடமும் கையளிக்கப்பட் டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன பாதுகாப்பு அமைச்ச ராக செயற்பட்ட போது 2019 ஏப்ரல் 16 முதல் 21 வரை இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு விஜயம் செய்தார். அந்த சமயம் பதில் பாது காப்பு அமைச்சர் ஒருவரை நிய மிக்காததன் மூலம் அவர் தமது பொறுப்பை மீறியுள்ளதாகவும் அதற்கமைய வேண்டுமென்றே சஹ்ரான ஹாசிம் உள்ளிட்ட பயங் கரவாதிகளின் செயற்பாடுகளுக்கு ...
Image
 க‌ல்முனை கிறீன் பீல்ட் ம‌க்க‌ளின் அவ‌ல‌ம் க‌வ‌லையான‌ விட‌ய‌ம்.. க‌ல்முனை கிறீன் பீல்ட் ம‌க்க‌ளின் த‌ண்ணீர் பிர‌ச்சினையை தீர்த்து வைக்க‌ அம்ம‌க்க‌ளின் ஓட்டுக்க‌ளை பெற்ற‌ ம‌க்க‌ள் பிர‌திநிதிக‌ள் உட‌ன‌டியாக‌ முன்வ‌ர‌ வேண்டும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் உல‌மா க‌ட்சி கோரிக்கை விடுத்துள்ள‌து. இது ப‌ற்றி அக்க‌ட்சி தெரிவித்துள்ள‌தாவ‌து, க‌ல்முனை கிறீன் பீல்ட் ம‌க்க‌ளின் அவ‌ல‌ம் க‌வ‌லையான‌ விட‌ய‌ம். முஸ்லிம் காங்கிர‌ஸ் கிழ‌க்கின் முக‌ வெற்றிலையான‌ க‌ல்முனையை கிழ‌க்கின் க‌க்கூசாக‌ ஆக்கிய‌த‌ன் விளைவுதான் இவ்வாறு இன்று க‌க்கூஸ் க‌ழுவ‌வும் த‌ண்ணீர் இல்லாத‌ நிலை. அம்ம‌க்க‌ளின் ஓட்டுக்க‌ளால் மாந‌க‌ர‌ உறுப்பின‌ராகி ச‌ம்ப‌ள‌ம், கிம்ப‌ள‌ம் பெறும் உறுப்பின‌ர்க‌ள் உள்ள‌ன‌ர். பாட்டுக்கும் கூத்துக்கும், கூச்ச‌லுக்கும் ம‌ய‌ங்க‌ வைத்து அம்ம‌க‌ளின் ஓட்டுக்க‌ளால் வ‌ந்த‌ எம் பிமார் உள்ள‌ன‌ர். க‌ட்சித்த‌லைவ‌ர் ஹாயாக‌ கொழும்பில் ப‌டுக்கிறார். இவ‌ர்க‌ளுக்கெதிராக‌, இவ‌ர்க‌ள் பெய‌ர்க‌ளை எழுதி ஜ‌ன‌நாய‌க‌ரீதியில் பொலிஸ் அனும‌தி பெற்று ஆர்ப்பாட்ட‌ம் செய்யும்ப‌டி அம்ம‌க்க‌ளை கேட்கின்றோம். இதுதான் உல‌மா க‌ட்சி சொல்லும் ஆ...
Image
 ஜனாஸாவை அடக்க அனுமதி கிடைக்கும்வரை எமது போராட்டங்கள் தொடரும்.. ஹஸ்பர் ஏ ஹலீம்_ ஜனாஸாவை அடக்க அனுமதி கிடைக்கும் வரை எமது  போராட்டங்கள் தொடரும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். ஜனாஸா கட்டாய தகனத்துக்கு எதிரான தேசிய இயக்கத்தால் இன்று (23)கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,  நிபுணர் குழுவும் ஜனாஸாக்களை அடக்கமுடியும் என கூறிய பின்பும் அரசு அனுமதி தராதது கண்டனத்துக்குரியது. இதற்கான அனுமதி பெற பல தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த அரசு வேண்டுமென்றே இதற்கான அனுமதியை மறுக்கிறது.அதுவும் பிரதமர் பாராளுமன்றத்தில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்க முடியும் என கூறிய பின்பும் பிரதமரின் கூற்றை கூட பொய்யாக்கும் அரசின் நிலைப்பாடு பிரதருக்கு மேலே அரசை இயக்கும் இனவாத சக்தி உள்ளது என்பதுக்கு சிறந்த உதாரணம். இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமரை முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திக்க கூடாது என்பதுக்கான சகல மு...
Image
 ஓட்டமாவடி பிரதேச கிராம சேவை அதிகாரிகள் கறுப்புப்பட்டியுடன் எதிர்ப்புப்போராட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம சேவை அதிகாரிகளை முகநூல் வாயிலாக அவதூறாக பேசியமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து கிராம சேவை அதிகாரிகள் கறுப்புப்பட்டி அணிந்து மாவட்டம் முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கையினை நேற்று திங்கட்கிழமை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை அதிகாரிகள் கறுப்புப்பட்டி அணிந்து செயலக முன்பாக தங்களது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், பின்னர் கறுப்புப்பட்டியுடன் தங்களது கடமைகளை மேற்கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் ஓந்தாச்சிமடம் பகுதி கிராம சேவை அதிகாரியை முகநூல் வாயிலாக ஒருவர் அவதூறாகப் பேசியதுடன், அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம சேவை அதிகாரிகளையும் அவதூறாகப் பேசி கிராம அதிகாரிகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளமைக்கு எதிர்ப்புத்தெரிவித்தே குறித்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது. கிராம உத்தியோகத்தர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதும், அவதூறாகப் பேச...