ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம் பெற்ற குற்றப் புலனாய்வு பிரிவினரின் நடவடிக்கை தொடர்பில் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் ; Police

ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம் பெற்ற குற்றப் புலனாய்வு பிரிவினரின் நடவடிக்கை தொடர்பில் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் ; Police சமீபத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் சிலரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினர் அழைப்பு விடுத்திருந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குற்றப் புலனாய்வு பிரிவினரின் இந்த நடைமுறையானது சாதாரண நடைமுறை அல்லவென குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸாரின் விசாரணைகளுக்கு ஊடக நிறுவனங்கள் பெரிதும் பங்களிப்பு வழங்குவதன் காரணமாக, ஊடகவியலாளர்களை பொதுவாக குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கும் நடைமுறை இல்லையெனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு பிரிவினரின் இந்த செயற்பாடு காரணமாக தற்போது மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள ஊடகவியலாளர்களிடம் வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்துடன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தொழில்முறைக்கு களங்கம் ஏற்படும் வகையில் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டுள்ள அதிகாரிகள் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் விசாரணைகள