Posts

Showing posts from May, 2021

ஜூன் 30ம் திகதி வரை பயணக்கட்டுப்பாட்டினை நீடிக்க எந்தத் தீர்மானமும் இல்லை

Image
 ஜூன் 30ம் திகதி வரை பயணக்கட்டுப்பாட்டினை நீடிக்க எந்தத் தீர்மானமும் இல்லை   எதிர்வரும் ஜூன் 07ம் திகதிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க இதுவரை எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் 30 ம் திகதி வரையில் பயணக்கட்டுப்பாட்டினை நீடிக்க அரச மேல்மட்ட வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி தனியார் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டிருந்த நிலையில் இந்த தகவலை இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு 48 பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து மடக்கிப் பிடிப்பு...

Image
 அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு 48 பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து மடக்கிப் பிடிப்பு...   நாடு முழுவதும் தற்போது பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள  நிலையில், அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் சாரதி உள்ளிட்ட 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். குறித்த பேருந்து, இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து நேற்று இரவு (30) பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய கொவிட் பரவல் காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியா C அணி கூட இலங்கை அணியை தோற்கடிக்கும் ; கம்ரான் அக்மால்

Image
 இந்தியா C அணி கூட இலங்கை அணியை தோற்கடிக்கும் ; கம்ரான் அக்மால்   இந்தியா இலங்கைக்கு தங்களது  சி அணியை அனுப்பினாலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கம்ரான் அக்மல் குறிப்பிட்டார். இந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கைக்கு இந்தியா அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலஒயில்  பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கம்ரான் அக்மல் இதனை கூறியுள்ளார்.  “இந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெறும் ஒருநாள் மற்றும் டி டுவண்டி தொடருக்காக இந்தியா இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. சுற்றுப்பயணத்தின் போது இந்தியா ஐந்து டி 20 போட்டிகளையும், மூன்று ஒருநாள் போட்டிகளையும் விளையாடும். ஆனால் இலங்கைக்கான சுற்றுப்பயண அணி வழக்கமான இந்திய அணியாக இருக்காது. இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறும் இறுதி ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா நியூசிலாந்துடன் விளையாடும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைத் தொடர்ந்து, இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. இப்த  இரண்டு இரண்டு தொடர்களுக்கு  இடையில், இந்தியாவுக...

பயணத்தடை அமுலில் உள்ள வேளையிலும் பொது மக்கள் வீதிகளில் ; பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் விசனம் ..

Image
 பயணத்தடை அமுலில் உள்ள வேளையிலும் பொது மக்கள் வீதிகளில் ; பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் விசனம் ..   போக்குவரத்து தடைகள் உள்ள இந்த காலகட்டத்தில் கூட, ஏராளமான மக்கள் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்கிறார்கள், இதுபோன்றவர்கள் அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிக்கிறார்களா என்பதை அறிய வேண்டியது அவசியம் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் மகேஷ் பாலசூரியா குறிப்பிட்டார். போக்குவரத்து தடைகள் உள்ள இந்த காலகட்டத்தில் கூட, ஏராளமான மக்கள் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்கிறார்கள், இதுபோன்றவர்கள் அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிக்கிறார்களா என்பதை அறிய வேண்டியது அவசியம் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் மகேஷ் பாலசூரியா குறிப்பிட்டார்.  இல்லையெனில், பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நோக்கம் அடையப்படாது, என்றார். “பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலம் இது. ஆனால் சில அலுவலகங்கள் அத்தியாவசிய சேவைகளை மேற்கோள் காட்டி திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, நாங்கள் முதலில் பார்த்ததை விட அதிகமான மக்கள் தெருக்களில் நடந்து வருகின்றனர். அத்தியாவசிய சேவைகள் என  பயண...

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு விசேட சட்டம் அவசியம் – ரணில் விக்கிரமசிங்க

Image
 கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு விசேட சட்டம் அவசியம் – ரணில் விக்கிரமசிங்க   கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு விசேட சட்டம் அவசியம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமும் எதிர்கட்சியினரும் இணைந்து விசேட சட்டத்தை உருவாக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். விசேட சட்டத்திற்கான யோசனைகளை தயாரித்து சமர்ப்பிப்பதன் மூலம் எதிர்கட்சிகள் இந்த விடயத்தில் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பொதுவான கொள்கைகள் குறித்த நகல்வடிவொன்றை உருவாக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இந்த நகல்வடிவு குறித்து அரசியல் கட்சிகளுடனும் எதிர்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் அரசாங்கம் அவர்களது கருத்துக்களை கோரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அனைத்து எதிர்கட்சிகளும் தங்கள் யோசனைகளை முன்வைக்கவேண்டும்,மருத்துவ நிபுணர்கள் வர்த்தக சமூகத்தினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது அவசியம் என ரணில் விக...

குருநாகல் (இப்பாகமுவ) 1050 நபர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி

Image
 குருநாகல் (இப்பாகமுவ) 1050 நபர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி   இக்பால் அலி 1050 நபர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி வழங்கி  வைக்கப்பட்டது. இப்பாகமுவ சுகாதார வைத்திய அலுவலகத்திற்கு உட்பட்ட நேபிலிகும்புர பிரதேசத்திலுள்ள 1050 நபர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. 30 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் கொரோனா தொற்று தடுப்பூசிகளைப்பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் குருநாகல் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குனபால ரட்னசேகர ,குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யூ. கே. சுமித் உடுகும்புர , குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் இப்பாகமுவ பிரதேச சபை உறுப்பினருமான எம். எஸ். எம். பாஹிம் மற்றும் வைத்தியர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பெரு எண்ணிக்கையிலான மக்கள் வரிசையில் நின்று கொரோனா தொஸ்ரீhற்று தடுப்பூசியினைப் பெற்றுக்கொண்டனர். இக்பால் அலி

சஹ்ரானுக்கு தங்குமிட வசதி செய்து கொடுத்த குற்றத்தில் திருமண பதிவாளர் ஒருவர் பயங்கரவாத விசாரணை பிரிவினைரால் கைது.

Image
 சஹ்ரானுக்கு தங்குமிட வசதி செய்து கொடுத்த குற்றத்தில் திருமண பதிவாளர் ஒருவர் பயங்கரவாத விசாரணை பிரிவினைரால் கைது.   சஹ்ரானுக்கு தங்குமிட வசதி செய்து கொடுத்த  குற்றத்தில் திருமண பதிவாளர் ஒருவர் பயங்கரவாத விசாரணை பிரிவினைரால் கைது செய்யப்பட்டுள்ளார். 55 வயதுடைய ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த குறிப்பிட்ட நபர் 2017 ஆம் ஆண்டு பல சந்தர்ப்பங்களில் சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவர் சார்ந்தவர்களுக்கு தங்குமிட வசதிகள் செய்து கொடுத்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

திருடப்பட்டிருந்த, 25 முச்சக்கரவண்டிகள், 5 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீட்கப் பட்டன.

Image
 திருடப்பட்டிருந்த, 25 முச்சக்கரவண்டிகள், 5 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீட்கப் பட்டன.   (எம்.மனோசித்ரா) இரத்தினபுரி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய 25 முச்சக்கரவண்டிகள், 5 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அண்மையில் இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது , கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐவரிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய குறித்த பிரதேசத்தில் கொள்ளையிடப்பட்ட 13 முச்சக்கரவண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று சனிக்கிழமை இவர்களிடம் மீண்டும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய மேலும் 12 முச்சக்கரவண்டிகளும் 5 மோட்டார் சைக்கிள்களும் மேலும் சில வாகனங்களும் மீட்க்கப்பட்டுள்ளன. இவை கொள்ளையிடப்பட்ட வாகனங்கள் என்று தெரியவந்துள்ளது. அதற்கமைய இதுவரையில் 25 முச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பில...

கொழும்பு துறைமுக சட்ட விவகாரத்தில் சீனா எவ்விதமான அழுத்தங்களையும் செய்யவில்லை... மேலும் நாடு பாரிய முன்னேற்றத்தினை காணவுள்ளது.

Image
 கொழும்பு துறைமுக சட்ட விவகாரத்தில் சீனா எவ்விதமான அழுத்தங்களையும் செய்யவில்லை... மேலும் நாடு பாரிய முன்னேற்றத்தினை காணவுள்ளது.   (ஆர்.ராம்) கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தினை  தயாரித்தல் உட்பட அதனை திருத்தம் செய்து நிறைவேற்றும் வரையில் சீனா எவ்விதமான அழுத்தங்களையும் செய்யவில்லை என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். அத்துடன், துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டமையானது, சீனாவுக்கு அதிருப்தியளிக்கும் வகையிலான விடயம் ஒன்று அல்ல என்றும் அவர் கூறினார். துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் சீன தரப்பில் எவ்விதமான பிரதிபலிப்புக்களும் காணப்படாமை தொடர்பாக வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமானது, வெளிநாட்டு முதலீட்டாளர்களை அச்சமின்றி முதலீடுகளை மேற்கொள்வதற்கான உறுதிப்பாடினை அளிக்கும் வகையிலானதாகும். இந்த விடயத்தில் சீனாவின் எவ்விதமான அழுத்தங்களும் காணப்படவில்லை. இலங்கையில் சட்டம...

கப்பல் தீப்பற்றிக் கொண்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம்.

Image
 கப்பல் தீப்பற்றிக் கொண்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம்.   எக்ஸ்பிரஸ் பேர்ள்´ கப்பல் தீப்பற்றிக் கொண்டதன் காரணமாக  பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தகுதியானவர்களின் பெயர் பட்டியலை வழங்குமாறு சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கடற்றொழில் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார். இதேவேளை பயணக்கட்டுப்பாட்டின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பிக்கப்படுமென்று சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார். சமுர்த்தி பயனாளிகள், அரச கொடுப்பனவு பெறுபவர்கள், கொவிட் தொற்றுக் காரணமாக தொழிலை இழந்தவர்கள், ´எக்ஸ்பிரஸ் பேர்ள்´ கப்பல் தீப்பற்றிக் கொண்டதன் காரணமாக நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கும் கடற்றொழிலாளர்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும். சுமார் 65 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்...

ஜூன் மாத இறுதிவரை பயணத்தடையை முன்னெடுப்பதற்கு அரச மேல்மட்டத்தில் ஆராய்வு...

Image
 ஜூன் மாத இறுதிவரை பயணத்தடையை முன்னெடுப்பதற்கு அரச மேல்மட்டத்தில் ஆராய்வு...   கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை ஜூன் மாத இறுதிவரை  முன்னெடுப்பதற்கு அரச மேல்மட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது.  இந்த பயணக்கட்டுப்பாடு ஜூன் 7 ஆம் திகதிவரை நீடிப்பதாக நேற்று முன்தினம் அரசு அறிவித்தபோதும் அதனையும் தாண்டி பயணத்தடை தொடரும் வாய்ப்பு இருப்பதாக அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.  பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதால், இதனை தொடர்ந்து சில வாரங்களுக்கு நீடிக்க அரசு விரும்புவதாக சொல்லப்பட்டது.  நடமாடும் வியாபாரிகளின் சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வீடுகளின் அருகே வழங்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. குறைந்த வருமானமுடைய மக்களுக்கு ஐயாயிரம் ரூபா நிவாரணம் வழங்கப்படவுள்ளது.  இதர அவசர சேவைகள் இயங்கும். அதனடிப்படையில் பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க அரசு ஆலோசிக்கிறது. அரச மற்றும் வங்கிகளின் சேவைகளை குறிப்பிட்ட மணி நேரங்களுக்கு இயங்கவைக்கவும் ஆலோசிக...

வீடுகளில் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ! 7 நாட்களில் 59 பேர் வீடுகளில் மரணம் !! Pp

Image
 வீடுகளில் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ! 7 நாட்களில் 59 பேர் வீடுகளில் மரணம் !!   கொரோனா தொற்று காரணமாக வீடுகளிலேயே மரணிப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக கொவிட் செயலணி சுட்டிக்காட்டி உள்ளது. கடந்த 20 ம் திகதி முதல் 27 ம் திகதி வரையான காலப்பகுதியில் வீடுகளில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 59 என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 20 ம் திகதி 9 பேர் கொரொனா தொற்றுடன் வீடுகளில் மரணமடைந்துள்ள அதேவேளை 27 ம் திகதி 5 பேர் கொரொனா தொற்றுடன் வீடுகளில் மரணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் அவற்றை மறைக்காமல் வைத்திய உதவியை நாடுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வியட்நாமில், 8 விதமான கொரோனா வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டன.

Image
 வியட்நாமில், 8 விதமான கொரோனா வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டன.   ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்று, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் இக் கொரோனா வைரஸ் கிருமியானது வெவ்வேறு நாடுகளில் உருமாற்றமடைந்து பரவி வருவதால், நோய் பரவும் வேகமும் அதிகரிக்கிறது. ஏற்கனவே , UK , இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸின் உருமாற்றமடைந்த வகைகள் கண்டறியப்பட்டன. அந்த வகையில் தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான வியட்நாமில், தற்போது புதிய வகை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  வியட்நாம் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் அங்கு கொரோனா வைரஸ் பரவல் நன்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இதுவரை மொத்தம் 6,856 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 47 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அங்கு உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எ...

கணவரின் செல்போனை அவருக்கு தெரியாமல் நோண்டிய மனைவிக்கு சுமார் 3 லட்சம் ரூபா அபராதம்.

Image
 கணவரின் செல்போனை அவருக்கு தெரியாமல் நோண்டிய மனைவிக்கு சுமார் 3 லட்சம் ரூபா அபராதம்.   ஐக்கிய அரபு நாட்டில் தனிமனித உரிமைக்கு முக்கியத்துவம்  கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கணவரின் செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்து அதில் என்ன வி‌ஷயங்கள் இருக்கின்றன என்று மனைவி நோண்டி பார்த்தார். அப்போது அதில் பல தகவல்கள் இருந்தன. அவற்றை தனது குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் அனுப்பி வைத்தார். இது சம்பந்தமாக கணவர் தனி மனித உரிமை மீறல் சட்டத்தின் அடிப்படையில் மனைவி மீது வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிபதி அவரது மனைவிக்கு 5400 திருஹம் ( இலங்கை ரூ.2 லட்சத்து 91 ஆயிரம்) அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். நன்றி : Malai malar

கொரோனா மரணங்கள்... இன்றுவரை 322 அடக்கம் . இன்றைய தினம் மட்டும் 21 உடல்கள் அடக்கம்.

Image
 கொரோனா மரணங்கள்... இன்றுவரை 322 அடக்கம் . இன்றைய தினம் மட்டும் 21 உடல்கள் அடக்கம்.    இலங்கையில் கொரோனாவினால் மரணமடையும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியில் இன்று (29) இருபத்தொரு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார். ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை பகுதியில் கொரோனாவால் மரணத்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனாவினால் மரணமடையும் உடல்களை  அடக்கம் செய்யும் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியில் இன்று சனிக்கிழமை வரை 322  அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் ஜனாஸாக்கள் 298, இந்து சடலம் 11, கிறிஸ்தவம் 08, பௌத்தம் 03, வெளிநாட்டவர்கள் 02 (நைஜீரியா மற்றும் இந்தியா) உட்பட 322 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. -மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்-

ஈரானின் நிலைப்பாடு இஸ்லாம் சார்ந்ததா? இருப்புச் சார்பானதா? தேர்தல் சொல்லப்போகும் பதிலெது?

Image
 ஈரானின் நிலைப்பாடு இஸ்லாம் சார்ந்ததா? இருப்புச் சார்பானதா? தேர்தல் சொல்லப்போகும் பதிலெது?   -சுஐப் எம்.காசிம்- வளைகுடா வீரன் என்றழைக்கப்படும் ஈரான் இஸ்லாமியக் குடியரசில், ஜூன் 18 இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தப் பிராந்தியத்திலுள்ள அரபு நாடுகளால், அந்நிய உறவாக நோக்கப்படும் ஈரான், பிராந்திய இணக்க அரசியலுக்குப் பொருந்தாத நாடாகவே பார்க்கப்படுகிறது. ஈரானின் 1979 ஆம் ஆண்டுக்குப் பின்னரான நிலைப்பாடுகள்தான், இந்நிலைமைகளுக்கு காரணம். வளைகுடாவிலுள்ள அத்தனை அரபு நாடுகளுக்கு மத்தியிலும் மொழியால் வேறுபட்ட நாடும் ஈரான்தான். இங்குள்ள நாடுகளில் மதத்தால் மாத்திரம் ஒன்றுபட்டுள்ள இந்நாடு, ஏனைய அனைத்திலும் வேறுபட்டுத்தான் நிற்கிறது. தொழினுட்பம், விஞ்ஞானம், வீரம் மற்றும் விவேகங்களில் வளைகுடா வீரனும் இதுதான். இதனால், ஜூன் 18இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல், பிராந்தியப் பார்வைகளை தலைநகர் தெஹ்ரானில் குவித்துள்ளது. மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நலன்களைச் சவாலுக்குள் இழுக்கும் ஈரானின் போக்கில், மாற்றம் ஏற்படாதா?1979 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இப்பிராந்திய நாடுகள் இதையே எதிர...

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களுடன் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி வழங்கப்படும்.

Image
 சதொச விற்பனை நிலையங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களுடன் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி வழங்கப்படும்.   சதொச விற்பனை நிலையங்கள் மூலம் எதிர்வரும் திங்கட்கிழமை  முதல் அத்தியாவசிய பொருட்களுடன் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர், இந்த பொதிகளில் 10 அத்தியாவசிய பொருட்கள் இருக்கும் என்றும் குறிப்பிட்டார். அதன்படி வெள்ளை நாட்டு அரிசி, சிவப்பு அரிசி, கோதுமை மா, பருப்பு, நூடில்ஸ், சீனி, 200 கிராம் கருவாடு, 100 கிராம் தேயிலை, ஒரு பக்கெட் உப்பு மற்றும் முக்கவசம் ஆகியவை அடங்கும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று..

Image
 மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று..   ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகொரல கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரான இவர் கொரோன மூன்றாம் அலையில் தொற்றுக்கு உள்ளான ஐந்தாவது பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.

பயணம் செய்யும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களை சோதனை செய்யும்போது பொதுமக்களை சங்கடப்படுத்தும்படியாக நடந்துகொள்ள வேண்டாம் என காவல்துறைக்கு உத்தரவு.

Image
 பயணம் செய்யும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களை சோதனை செய்யும்போது பொதுமக்களை சங்கடப்படுத்தும்படியாக நடந்துகொள்ள வேண்டாம் என காவல்துறைக்கு உத்தரவு.   (எம்.எப்.எம்.பஸீர்) கொவிட் 19 தொற்று கட்டுப்பாட்டு பணிகளுக்காக  பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில், வாகனங்கள் மற்றும் பொதுமக்களை சோதனை செய்யும்போதும் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை அமுல் செய்யும்போதும் பொதுமக்களை சங்கடப்படுத்தும் படியாக நடந்து கொள்வதை உடனடியாக நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு பொதுமக்கள் சங்கடப்படும்படியாக சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடந்து கொள்வது, ஊடகங்களில் வெளியாகியுள்ள பல காணொளிகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக குறித்த நபர்களின் ஆத்ம கெளரவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் சமூகத்தில் சங்கடப்படும் நிலைமை தோன்றுவதாகவும் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இவ்வாறு பொதுமக்களை சங்கடப்படுத்தும்போது அவர்களுக்கு பொலிஸார் தொடர்பில் எதிர்மறையான எண்ணங்களே ஏற்படும் என தெரிவித்துள்ள பொலிஸ் மா அதிபர், இதன் பிறகு பொது மக்களை சங்கடப்படுத்தும் நடவடிக்...

தடுப்பூசிகளை பெற முண்டியடித்து வைரஸ் பரவலை அதிகரித்துக்கொள்ள வேண்டாம்

Image
 தடுப்பூசிகளை பெற முண்டியடித்து வைரஸ் பரவலை அதிகரித்துக்கொள்ள வேண்டாம்   நாட்டில் கடந்த இரு வாரங்களுக்கும் அதிகமாக நாளாந்தம் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.  எனினும் ஜூன் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர் தொற்றாளர் எண்ணிக்கை குறைவடையக் கூடும் என தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, தடுப்பூசிகளை பெற முண்டியடித்து வைரஸ் பரவலை அதிகரித்துக்கொள்ள வேண்டாமென பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் 14 நாட்கள் நிறைவடைந்ததன் பின்னர் தொற்றுபரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் நாட்டில் தற்போது கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் போது நாட்டில் தற்போதுள்ள அபாய நிலைமையைக் கவனத்தில் கொள்ளாது மக்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள முண்டியடிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக மீண்டுமொரு அபாயத்தை எதிர்கொள்ள வேண்டும் என்பதால், மக்களை பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

கோவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக இலங்கையில் 48 சதவீதம் பேர் புகைபிடிப்பதை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியிடப்பட்டது.

Image
 கோவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக இலங்கையில் 48 சதவீதம் பேர் புகைபிடிப்பதை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியிடப்பட்டது.   கோவிட் -19 வைரஸ் பரவுவதால் இலங்கையில் 48 சதவீதம் பேர் புகைபிடிப்பதை நிறுத்திவிட்டதாக மது மற்றும் மருந்துகள் தொடர்பான  தகவல் மையம் தெரிவித்துள்ளது. இது ஒரு நல்ல போக்கு என்றும், புகைப்பழக்கத்தை கைவிட்டவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் மீண்டும் ஒருபோதும் புகைபிடிக்க மாட்டார்கள் என்றும் மையம் சுட்டிக்காட்டுகிறது. மேலும் விளக்கி, மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் மனித மேம்பாட்டு இயக்குனர் சம்பத் டி சேரம் கூறுகையில், கோவிட் தொற்றுநோய்க்கு புகைபிடிப்பது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. புகைபிடிப்பவர்கள் கோவிட் நோயால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து அதிகம் என்றும், புகைபிடிப்பவரின் ஆரோக்கியத்தில் கோவிட் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார். இலங்கையில் புகைபிடிப்பதால் தினமும் கிட்டத்தட்ட 40 பேர் இறக்கின்றனர் என்று அவர் கூறினார், புகைபிடிப்பதை விட்டுவிடுவது ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்கான ஒரு வாய்ப்பாகும். புகைபிடிப்பதைக் குறைப்பதில்...

சீன மொழித் திறமை இருந்தால் அது ஒரு வரப்பிரசாதமாக அமையும் .

Image
 சீன மொழித் திறமை இருந்தால் அது ஒரு வரப்பிரசாதமாக அமையும் .    ஏ.ஏ.எம்.பாயிஸ்-- சீனாவிலோ அல்லது சீனா சார்ந்த தொழில் துறைகளில் இணைவதாயின் சீன மொழி அத்தியாவசியமாகும் என நீர்வளத் துறைஅமைச்சரும் இரத்தினபுரி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.   சமூக வலைத்தளங்களில் சீனா, சீன மொழி மற்றும் சீனாவின் கலாசாரங்கள் குறித்து கேலிச் சித்திரங்கள் தகவல்கள் பரிமாறப்படுவது குறித்து அவர், நேற்று முன்தினம் (27) கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது சாதாரண விடயமாகும். சீன நாட்டில் அல்லது சீனா சார்ந்தஇடங்களில் தொழில் புரிவதாக  இருந்தாலும் சீன மொழித் திறமை இருந்தால் அது ஒரு வரப்பிரசாதமாக அமையும் எனத் தெரிவித்தஅவர், தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதற்கு இது ஒரு மேலதிகத் தகைமையாகவும் நன்மையாகவும் அமையும் என்றார்.

வீதியில் உலாவித் திரிந்தோருக்கு ஆன்டிஜன் பரிசோதனை : மூவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர் !

Image
 வீதியில் உலாவித் திரிந்தோருக்கு ஆன்டிஜன் பரிசோதனை : மூவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர் !   மாளிகைக்காடு நிருபர் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மாவடிப்பள்ளியில் மேற்கொண்ட 57 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் மூன்று பேர்  கொவிட் 19 தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன் ஏனைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது. மேலும் 08 பீ.சி.ஆர். மாதிரிகளும் இன்று (28) எடுக்கப்பட்டுள்ளன என்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் அவர்களின் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர், குடும்ப நல உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நுளம்பு தடுப்பு பிரிவினர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் மற்றும் கொரோனோ ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹசீப் தலைமையிலான சம்மாந்துறை பொலிஸார், பாதுகாப்பு படையினர் இணைந்து மேற்கொண்ட சுற...

அநாவசியமாக நடமாடிய 45 க்கும் அதிகமான மக்களை பொலிஸார் இராணுவத்தினர் தடுத்து வைத்த சம்பவம்.

Image
 அநாவசியமாக நடமாடிய 45 க்கும் அதிகமான மக்களை பொலிஸார் இராணுவத்தினர் தடுத்து வைத்த சம்பவம்.   பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) பயணத்தடைகளை மீறி வீதியில் அநாவசியமாக நடமாடிய 45 க்கும் அதிகமான மக்கள்  பொலிஸார் இராணுவத்தினர் தடுத்து வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்கள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அநாவசியமான வெள்ளிக்கிழமை(28) மாலை நடமாடியவர்களாவர். இவர்கள் வீதிகளில் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டமை ,முகக்கவசம் சீராக அணியாமை ,சமூக இடைவெளி பேணாமை, உரிய அனுமதி பெறாமல் நடமாடியமை, பள்ளிவாசல் பிரார்த்தனைக்காக சென்றமை(தற்போது பள்ளிவாசல் அனைத்தும் மூடப்பட்டுள்ளது) இவ்வாறான செயலுக்காக பிடிக்கபப்ட்டு  தடுத்து வைக்கப்பட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இச்சம்பவம் கல்முனை தெற்கு  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிற்குட்பட்ட  பல்வேறு பகுதிகளில்  மாலை மற்றும் இரவு    மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் சுமார் 45 க்கும் அதிகமானவர்கள் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படை...

வெள்ளிக்கிழமை) மாலை ஆறு இளைஞர்கள் பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் வைத்து கைது

Image
 ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை ஆறு இளைஞர்கள் பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை கடதாசிஆலை இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர்களுடன் வாழைச்சேனை பொலிஸாரும் இணைந்த நடாத்திய சோதனையின் போதே இந்த ஆறு சந்தேக நபர்களும் அவர்களிடம் இருந்த போதைப் பொருட்களும கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்களிடம் இருந்து 890 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 150 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டதுடன் இவர்கள் 21,25,26,28,31,35 வயதுடையவர்கள் என்றும் இவர்கள் வாழைச்சேனை , பிறைந்துரைச்சேனை, காவத்தமுனை, கேணிநகர் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

தடுப்பூசி விவகாரம்... மொரட்டுவ நகரசபை ​மேயர் கைது.

Image
 தடுப்பூசி விவகாரம்... மொரட்டுவ நகரசபை ​மேயர் கைது.   மொரட்டுவ நகரசபை ​மேயர் சமன் லால் பெர்னாண்டோ, கல்கிசை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு சரணடைந்த அவரை கல்கிஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர். மொரட்டுமுல்ல பகுதியில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது, வைத்தியர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது

கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை

Image
 கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை   அச்சமின்றி கடல் உணவுகளை உட்கொள்ள முடியும் கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். எனினும், கப்பல் விபத்திற்குள்ளான கொழும்பு, கம்பஹா மாவட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது. கொழும்பு துறைமுகதிற்கு இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றிவந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு கேடு ஏற்படுத்தக்கூடிய இரசாயனப் பதார்த்தங்கள் கடலில் கலந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகின்றது. இதனால் கடலுணவுகளை உண்பது தொடர்பாக மக்கள் மத்தியில் சந்தேகங்களும், அச்சமும் ஏற்பட்டுள்ளன. இவற்றை நீக்கும் வகையில் கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். '' கப்பல் தீ விபத்தினால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை. கப்பலில் விபத்து ஏற்பட்ட நேரத்தில் இருந்து சம்மந்தப்பட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படடுள்...

பொலிஸாரை மந்திரம் மூலம் வசியப்படுத்த முயற்சித்த குழுவினர் பொலிஸ் வலையில் சிக்கினர்..

Image
 பொலிஸாரை மந்திரம் மூலம் வசியப்படுத்த முயற்சித்த குழுவினர் பொலிஸ் வலையில் சிக்கினர்..   பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) ஹெரோயின் போதைமாத்திரை போன்ற  போதைப்பொருட்களை சூட்சுமமாக  நீண்ட காலமாக வாடகை வீடு ஒன்றினை பெற்று விற்பனை செய்து வந்த 8 பேர் கொண்ட குழு கைது செய்யப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகில் வாடகை வீடொன்றில் குறித்த குழுவினை சேர்ந்த 8 பேர்  வியாழக்கிழமை(27) மாலை   கல்முனை விசேட பிரிவிற்கு   நீண்டகாலமாக  போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக  கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் கைதாகினர். இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையினை கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்தவின் மேற்பார்வை செய்ததுடன்  போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை. அருணன்  பொலிஸ் கொஸ்தாபல்களான   அருண( 75278 ), செலர்( 40313 ), நிமால்  (81988)  , மற்றும் சிவில் பாதுகாப்புப் படை ...

பொருட் கொள்வனவிற்காக 31 ம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுமா ?

Image
 பொருட் கொள்வனவிற்காக 31 ம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுமா ?   எதிர்வரும் 31ஆம் திகதி நாட்டில் பயணக்கட்டுப்பாட்டை பொருட் கொள்வனவிற்காக தற்காலிமாக தளர்த்துவதாக இல்லையா என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானமொன்றை மேற்கொள்ளவில்லை என கொவிட் 19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார், நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டே அது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார், எவ்வாறாயினும் இது தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம் எட்டப்படலாம் என தகவல்கள் வௌியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2ஆவது கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு ஒரு வருடத்துக்குள் மூன்றாவது ‘டோஸ்'

Image
 2ஆவது கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு ஒரு வருடத்துக்குள் மூன்றாவது ‘டோஸ்'   கொவிட் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு தடுப் பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டு ஒரு வருடத்துக்குள் மூன்றாவது டோஸ் வழங்கப்படுவது அவசியமென பாராளுமன்ற உறுப்பினரும் வைராலஜி நிபுணருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பூசியிலிருந்து ஒருவரை ஒரு வருடம் மாத்திரமே பாதுகாக்க முடியுமென வைத்திய பரிசோதனைகள் தெரி விக்கின்றன. இந்நிலையில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டு ஒரு வருடம் கடப்பதற்குள் மூன்றாவது டோஸ் வழங்கப்பட வேண்டும். தடுப்பூசி பெற்றுக் கொண்ட பின்னர்காலப் போக்கில் உடலில் நோயெதிர்ப்பு சக்தியின் அளவு குறைகின்றது. மேலும் அதனை மேம்படுத்துவதற்கு மூன்றாவது டோஸ் டோஸ் வழங்கப்பட வேண்டும். இதேவேனை ஒரு வைரஸ் உடலி நுழைவதால் இந்தோய் பரவுவதில்லை. நோயை பரப்புவதற்கு கணிசமான அளவு வைரஸ் உடலில் நுழைய வேண்டும். முகக் கவசங்கள் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் கைகளை கழுவுதல் என்பவற்றின் மூலம் வைரஸ் உடலுக்குள் நுழைவதை தடுக்கலாம். வைரஸால் பாதிக்கப்பட்ட 80 சதவீத மக்களுக்கு எந்த அறிகுற...

கட்சியில் இருந்து இடை நிறுத்தப்பட்ட 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் காங்கிரஸ் இன் விளக்க அறிக்கை..

Image
கட்சியில் இருந்து இடை நிறுத்தப்பட்ட 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் காங்கிரஸ் இன் விளக்க அறிக்கை.. துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் சட்டமூலத்திற்கு ஆதரவாக  வாக்களித்த இரண்டு (2) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரால், கட்சியின் யாப்புக்கு அமைவாக, கட்சியிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளனர். கட்சி யாப்பின் பிரகாரம் அத்தகையதொரு தீர்மானம் இரண்டு (2) வாரத்துக்குள் கட்சியின் அரசியல் அதிகார பீடத்திற்கு அறிவிக்கப்பட்டு அரசியல் அதிகார சபை அதனை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு அமைவாக கடந்த 25ம் திகதி செவ்வாய்க்கிழமை கூடிய கட்சியின் அரசியல் அதிகார பீடம், கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டதற்கு ப்பூரண அங்கீகாரம் அளித்தது. மேலும் அரசியல் அதிகார சபை மேற்சொன்ன இரண்டு அங்கத்தவர்கள் சம்பந்தமாக ஒழுங்காற்றுக் குழு ஒன்றை அமைத்தது. இக்குழுவின் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி, கட்சியின் சட்டம், மற்றும் யாப்பு சம்பந்தமான பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் அவர்கள் நியமிக்கப்பட்டதோடு, அக்குழுவின் ஏனைய அங்கத்தவர்க...

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது.

Image
 அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது.   ஜனாதிபதியினால் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரசவங்கிகள், கிராமசேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகள் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட சிறுமி மர்யம், ஐக்கிய இராஜ்ஜியத்தின் "அதி சிறந்த அல் குர்ஆன் காரியாவாக " மகுடம் சூட்டினார்.

Image
 இலங்கையை பூர்வீகமாக கொண்ட சிறுமி மர்யம், ஐக்கிய இராஜ்ஜியத்தின் "அதி சிறந்த அல் குர்ஆன் காரியாவாக " மகுடம் சூட்டினார்.   ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள பழமை வாய்ந்ததும் பிரபலமானதுமான இஸ்லாமிய தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான "இஸ்லாம் சனல் டீவி" கடந்த 15 வருடங்களாக தொடராக நடாத்தி வரும் தேசிய ரீதியிலான   "அல் குர்ஆன் கிராஅத் போட்டி" நிகழ்ச்சித் தொடரில் முதல் தடவையாக கலந்து கொண்டு முதலிடத்தைப் பெற்று 2021 ஆம் ஆண்டின் ஐக்கிய இராஜ்ஜியத்தின் "அதி சிறந்த அல் குர்ஆன் காரியாவாக "இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒன்பது வயது மர்யம் ஜெஸீம் மகுடம் சூட்டப்பட்டார்.   ஐக்கிய இராஜ்ஜியத்தில் பிரபலமான இப்போட்டி நிகழ்ச்சியில் 6- தொடக்கம் 14வயதுடைய நூற்றுக் கணக்கான போட்டியாளர்கள் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பாகங்களிலிருந்தும் கலந்து கொண்டிருந்தனர் .   ஒன்பது வயதுடைய மர்யம் ஜெஸீம் இங்கிலாந்தின் இஸ்லாம் சனல் தொலைக்காட்சி வழங்கும் இச் சிறப்பு மகுடத்தை அதி குறைந்த வயதில் வென்ற, இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட முதலாவது சிறுமியாகவும் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   மர்யம் ஜெ...

பல நாட்கள் வீட்டுக்குள் அடைப்பட்டிருந்ததைப் போன்று மக்கள் நேற்று வீதிக்கு வந்தனர். சில பொறுப்பற்ற மக்கள் இவ்வாறு செயற்படுவதாலேயே கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடுகின்றது.

Image
 பல நாட்கள் வீட்டுக்குள் அடைப்பட்டிருந்ததைப் போன்று மக்கள் நேற்று வீதிக்கு வந்தனர். சில பொறுப்பற்ற மக்கள் இவ்வாறு செயற்படுவதாலேயே கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடுகின்றது.    ( இராஜதுரை ஹஷான்) கொவிட் வைரஸ் தாக்கத்தை அரசாங்கத்தால் மாத்திரம் தனியாக கட்டுப்படுத்த முடியாது . வைரஸ் பரவலை கட்டுப்படுத்த   சட்டதிட்டங்கள் விதிக்கப்பட்டாலும் அதை சரியாக பொது மக்கள் பின்பற்ற தயார் இல்லையென்றால் கொவிட் வைரஸ் தாக்கத்தை  ஒழிக்க முடியாது என சக்தி வலு அமைச்சர் உதய கம்மன்பில  தெரிவித்தார். கொஸ்கம வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்களை கையளித்த பின்னர், ஊடகங்களுக்கு  கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், 3 நாட்கள் அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்காக பயணக்கட்டுபாடுகள் தளர்த்தப்படும் என தெரிந்தும் பல நாட்கள் வீட்டுக்குள் அடைப்பட்டிருந்ததைப் போன்று  மக்கள் நேற்று வீதிக்கு வந்துள்ளார்கள். கடந்தாண்டு 2 மாதங்கள் நாடு முடக்கப்பட்டிருந்த போதும் இவ்வாறானதொரு தளர்வு ஏற்படுத்தப்படவில்லை . மக்களுக்காவே பயணக்கட்டுபாடு அமுல்படுத்தப்படும் மற்றும் தள...

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்ற அமெரிக்காவின் பயண அறிவுறுத்தல் அறிக்கையை பாதுகாப்பு செயலாளர் முற்றாக நிராகரித்தார்.

Image
 இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்ற அமெரிக்காவின் பயண அறிவுறுத்தல் அறிக்கையை பாதுகாப்பு செயலாளர் முற்றாக நிராகரித்தார்.   இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்று வெளியாக்கப்பட்ட தகவலை பாதுகாப்பு செயலாளர் ஓய்வுநிலை ஜெனரல் கமால் குணரத்ன முற்றாக நிராகரித்துள்ளார். அவர் விடுத்துள்ள அவசர ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பயண அறிவுறுத்தலில், இலங்கையை 4ஆம் அடுக்கில் வைத்த அமெரிக்கா, இலங்கைக்கு அமெரிக்கர்கள் யாரையும் பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. கொவிட் நிலைமை மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் பயண அறிவுறுத்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனினும் அவ்வாறான தாக்குதல் அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என்றும் இலங்கை மக்கள் தேவையற்ற பீதிக்கு உள்ளாக வேண்டாம் என்றும் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன அறிவுறுத்தியுள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஜூலை முதல் முகக் கவசம் அணிய தேவையில்லை: தென்கொரியா

Image
 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஜூலை முதல் முகக் கவசம் அணிய தேவையில்லை: தென்கொரியா   -ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்- கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் July மாதத்திலிருந்து முகக் கவசம் அணிய தேவையில்லை என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் ஒரு தடவை தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும் முகக் கவசம் அணிய தேவையில்லை என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.  தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் நோக்கில் இத்தகைய அறிவிப்பை தென்கொரியா வெளியிட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.  அதேபோல், June மாதத்திலிருந்து ஒரு தடவை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்  கூட்டமாக கூட அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  5 கோடியே 20 லட்சம் பேரை மக்கள் தொகையாகக் கொண்ட தென்கொரியாவில், வரும் September மாதத்திற்குள் 70% பேருக்கு தடுப்பூசி போட்டு விட வேண்டும் என தென்கொரியா திட்டம் வகுத்துள்ளது. தற்போது 7.7% பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  70 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, தனிமைப்படுத்தலுக்கான விதிகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும் தென் ...

இஸ்லாமியப்பார்வையில் இன்றைய நிலை.

Image
 இஸ்லாமியப்பார்வையில் இன்றைய நிலை. 1)தனிமைப்படுத்தல்  நபிகளாரின் ஒரு அறிவுரையாகும்     "சிங்கத்திடமிருந்து  வெருண்டோடுவது  போன்று  தொற்று  நோயாளிகளிடமிருந்தும்  விலகி  ஓடிவிடுங்கள்." (புகாரி - பாகம் 7, நூல் 71,  எண் 608) 2) சமூக விலகல்  நபிகளாரின் அறிவுரையாகும்.         "தொற்று நோயால்  பாதிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியமானவர்களிடமிருந்து  விலக்கி  வைக்கப்பட வேண்டும். (புகாரி 6771,  முஸ்லிம் 2221) 3) பயணத்தடை  நபிகளாரின் அறிவுரையாகும்.     தொற்று நோய்  பரவியிருக்கும் பகுதிக்குள் செல்லாதீர்கள். அவ்வாறே தொற்று நோய்  பரவியுள்ள பகுதியிலிருந்து  வெளியேறாதீர்கள். (புகாரி 5739,  முஸ்லிம் 2219) 4) பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தாதீர்கள்  உங்களிடம் அறிகுறிகள் தென்பட்டால் . நபி (ஸல்) கூறியுள்ளார்கள்..." பிறருக்கு  தீங்கு  விளைவிக்காதீர்கள்" (இப்னு மாஜா 2340) 5) வீட்டில் இருத்தல்   நபிகளாரின் அறிவுரையாகும். தங்களையும் பிறரையும் பாதுகாப்பதற்காக வ...

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் வெடிமருந்துகள் மீட்பு : இரு இளைஞர்கள் கைது

Image
 வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் வெடிமருந்துகள் மீட்பு : இரு இளைஞர்கள் கைது வாழைச்சேனை இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட விஷேட நடவடிக்கையின் போது, திருகோணமலை மாவட்டத்தின் இறக்கக்கண்டி பிரதேசத்தில் நேற்றிரவு (26) 10 மணியளவில் வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.  அத்தோடு, இவ்வெடி மருந்துகளை மறைத்து வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 39 மற்றும் 31 வயதுடைய இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  என்ன நோக்கத்துக்காக எங்கிருந்து இவ்வெடி மருந்துகள் கொண்டு வரப்பட்டன என்பன தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது திருகோணமலை மாவட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவும்  இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் வெசாக் பண்டிகை வாழ்த்து செய்தி.

Image
 அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் வெசாக் பண்டிகை வாழ்த்து செய்தி.   முழு மனித இனத்தையும் அச்சுறுத்தும் கோவிட் -19 தொற்றுநோய் காலத்தில் இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள நமது சக பெளத்த சகோதரர்கள் வெசக் பண்டிகையை முன்னோக்கி உள்ளனர். அந்தந்த மதங்களின் மீதான எமது நம்பிக்கை, இதுபோன்ற பேரழிவுகளை சமாளிக்க நமக்கு வலிமையைத் தருகிறது, மேலும் நமது மனித குணங்களில் மிகச் சிறந்ததை வெளிப்படுத்த ஊக்குவிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், நம்முடைய மனித விழுமியங்களை பலப்படுத்துவதோடு, அந்தந்த மதங்களின் போதனைகளை கடைப்பிடிப்பதன் மூலமும், கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமும் மக்களையும் தேசத்தையும் காப்பாற்றுவோம். இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள மக்களின் வழிகாட்டுதல், நல்ல ஆரோக்கியம், ஆன்மீகம் மற்றும் தார்மீக செறிவூட்டலுக்கு வழிவகுக்கும் எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதங்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம். இந்த சவாலான காலங்களில் தாராள மனப்பான்மையின் மூலம் உதவிகளை முஸ்லிம் சமூகத்தை ACJU கேட்டுக்கொள்கிறது. இலங்கை முஸ்லீம் சமூகம் சார்பாக, அகில இலங்கை ஜாமியத்துல் உலமா சபை பாதுகாப்பான வெசக்கிற்கா...

இலங்கையின் 48 ஆவது சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்னம் ஜனாதிபதியால் நியமனம்.

Image
 இலங்கையின் 48 ஆவது சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்னம் ஜனாதிபதியால் நியமனம்.   இலங்கையின் 48 ஆவது சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்னம் சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்

வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கான சலுகைளை நீடிக்குமாறு உரிமம் பெற்ற வங்கிகளுக்கு மத்திய வங்கி அறிவுறுத்தல்

Image
வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கான சலுகைளை நீடிக்குமாறு உரிமம் பெற்ற வங்கிகளுக்கு மத்திய வங்கி அறிவுறுத்தல்   கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக சவால்களை  எதிர்நோக்கியுள்ள வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கான சலுகைளை நீடிக்குமாறு உரிமம் பெற்ற வங்கிகளுக்கு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. மத்திய வங்கியினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்றறிக்கையொன்றின் மூலம் இந்த விடயம் உரிமம் பெற்ற வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, செயற்பாட்டு பிரிவு மற்றும் செயற்பாடற்ற பிரிவு ஆகியவற்றின் கீழான கடன் வசதிகளை ஒத்திவைத்தல் அல்லது மறுசீரமைத்தல் ஆகிய சலுகைகளை வழங்குமாறு குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், தொழில் இழப்பு, வருமான இழப்பு, விற்பனை இழப்பு அல்லது வணிகங்கள் மூடப்படுதல் ஆகிய நிதி ரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ள தனிநபர்கள் தொடர்பில் ஆராய்ந்து, வங்கிகள் தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. இதன்படி, அடிப்படைக் கடன் பெறுமதி, வட்டி அல்லது இவை இரண்டையும் அறவிடுவதை எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை வங்கிகள் ஒத்திவைக்க முடியு...

உலகெங்கிலுமுள்ள அனைத்து மக்களினதும் உடல், உளத் துன்பங்கள் அனைத்தும் நீங்க வேண்டுமென உளப் பூர்வமாக பிரார்த்திக்கிறேன்

Image
 உலகெங்கிலுமுள்ள அனைத்து மக்களினதும் உடல், உளத் துன்பங்கள் அனைத்தும் நீங்க வேண்டுமென உளப் பூர்வமாக பிரார்த்திக்கிறேன்   எமது நாட்டிலும் உலகெங்கிலுமுள்ள அனைத்து மக்களினதும் உடல், உளத்  துன்பங்கள் அனைத்தும் நீங்க வேண்டுமென்று இந்த உன்னதமான வெசாக் காலத்தில் நான் உளப் பூர்வமாக பிரார்த்திக்கிறேனென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது வெசாக் நோன்மதி தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். இன்றைய வெசாக் தின்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வெசாக் தினச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடைதல் ஆகிய மூன்று உன்னதமான நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் நோன்மதி தினம் பௌத்தர்களான எமது அதி உன்னத சமய பண்டிகையாகும். உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்கள் இந்த புனித நாளில், புத்த பெருமான் மீதான பக்தியுடனும் பற்றுறுதியுடனும் புண்ணிய கிரியைகளில் ஈடுபடுகின்றனர். புத்த பெருமானின் போதனைகளுக்கு ஏற்ப வாழ்க்கையை வடிவமைத்து ஈருலக முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் பிள்ளைகளுடன் சேர்ந்து வெசக் காலத்தில் சமயச் சடங்குகளை செய்வதும் பழங்காலத்திலி...

கடந்த அரசாங்கத்தின் பரிந்துரையே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

Image
 கடந்த அரசாங்கத்தின் பரிந்துரையே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது   புர்கா அணிவது அரேபியக் கலாசாரமெனத் தெரிவித்த நீதி அமைச்சர்  அலி சப்ரி, முஸ்லிம் சமூகமே இதனை சிந்தித்து புர்கா அணிவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார். கொழும்புத் துறைமுகநகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றும்போது, அரசாங்கத்துக்கு பாராளுமன்றில் மூன்றிலிரண்டுப் பெரும்பான்மை இருந்தது. எனினும் அனைவரதுக் கருத்துகளையும் கேட்டு நடுநிலைமையாகவே இதன்போது அரசாங்கம் செயற்பட்டது என்றார். மேலும் இச்சட்டமூல வாக்கெடுப்பின்போது தனது வாக்கையும், பாராளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத்தின் வாக்கும் கணக்கில் எடுக்கப்படாது தவற விடப்பட்டுள்ளது என்றார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர்,  தற்போதைய அரசாங்கம் புர்காவுக்கு தடை விதிக்கவில்லை. முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களிடமிருந்து பிரிவதற்கு புர்காவும் ஒரு காரணமென கடந்த அரசாங்கம் கூறியது. கடந்த அரசாங்கத்தின் பரிந்துரையே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றார். புர்காவை நான், எதிர்க்கிறேன். இதனைக் கடந்த பத்து வருட...

பயணத்தடை தளர்த்தப்பட்ட காலப்பகுதியில் சிலர் நடந்துக்கொண்ட விதம் வேதனையை தருகிறது.

Image
 பயணத்தடை தளர்த்தப்பட்ட காலப்பகுதியில் சிலர் நடந்துக்கொண்ட விதம் வேதனையை தருகிறது.   பயணத் தடை தளர்த்தப்பட்ட காலப்பகுதியில் சிலர் நடந்துக்கொண்ட விதம் வேதனையை ஏற்படுத்துவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று பல்வேறு சுகாதார அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும் சில தர்பபினர் இதனை கடைப்பிடித்து செயற்படவில்லை எனவும் இராணுவத்தளபதி சுட்டிக்காட்டினார். பொது மக்களின் அலட்சியம் கொரோனா வைரஸ் தொற்றை மீண்டும் பரப்பக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, எதிர்வரும் காலத்தில் பயணத்தடையை தளர்த்துவது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல் ஒன்றின் ஊடாக தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் இராணுவத்தளபதி இதன்போது தெரிவித்தார். Siva Ramasamy