Posts

Showing posts from August, 2021
Image
 ஊரடங்கு 14ஆம் திகதிவரை நீடிக்குமா? அரசாங்கம் இன்று அளித்த பதில்..! நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அரசாங்கம் தெரிவிக்கின்றது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடக சந்திப்பு கொழும்பில் இன்று காலை நடந்தது. இதில் உரையாற்றிய அமைச்சரவை இணைப் பேச்சாளரான பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரண இதனைத் தெரிவித்தார். அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை 14ஆம் திகதிவரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும் அதுபற்றி நேற்று நடந்த அமைச்சரவை சந்திப்பில் இதுபற்றி பேசப்படவே இல்லை என்றார் அமைச்சர்.

தென் ஆபிரிக்காவுடன் மோதவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு..!

Image
 தென் ஆபிரிக்காவுடன் மோதவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு..! தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது20 போட்டிகளில் விளைாடவுள்ள, தசுன் சானக்க தலைமையிலான  22 பேர் அடங்கிய இலங்கை குழாம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவினால் பெயரிடப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

ஊரடங்கு தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் பேசப்பட்டதா? அமைச்சர் ரமேஷ் பத்திரண விளக்கம்..!

Image
 ஊரடங்கு தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் பேசப்பட்டதா? அமைச்சர் ரமேஷ் பத்திரண விளக்கம்..! நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை  நீடிப்பது  அல்லது  தளர்த்துவது தொடர்பில் இவ்வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். விசேட வைத்திய நிபுணர்கள் , உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் தேசிய விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்டோரின் ஆலோசனைகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தும் என்றும் இணைபேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , விசேட வைத்திய நிபுணர்கள் , உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் தேசிய விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்டோரின் ஆலோசனைகளுக்கமையவே செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம். அதற்கமைய அரசாங்கம் என்ற ரீதியில் மருத்துவ தரப்பினரின் யோசனைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும். இதே வேளை மக்களின் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்...

ஊரடங்கு உத்தரவு நேரத்தில் திருமணம்.. மணமக்கள் உள்ளிட்ட 28 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.

Image
 ஊரடங்கு உத்தரவு நேரத்தில் திருமணம்.. மணமக்கள் உள்ளிட்ட 28 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.   தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி திருமணம் நடத்திய  மணமக்கள் உள்ளிட்ட 28 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று முந்தல் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது. இந்த ஊரடங்கு திருமணம் மதுரங்குளி பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது. ஊரடங்கு உத்தரவின் போது, மதுரங்குளிய - கனமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் “ஊரடங்கு திருமணம்” நடைபெறுவதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்த போது ஒரு குழுவினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அந்த இடத்தில் இருந்த 09 குடும்பங்களைச் சேர்ந்த 28 நபர்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் அந்த வீட்டிலேயே தனிமைப்படுத்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர.

மனநலம் குன்றிய நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்தை போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு விற்று வந்த சம்பவம்... கண்டி பிரதேசத்தில் பாமசி உரிமையாளர் கைது.

Image
 மனநலம் குன்றிய நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்தை போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு விற்று வந்த சம்பவம்... கண்டி பிரதேசத்தில் பாமசி உரிமையாளர் கைது.   மனநலம் குன்றிய நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்து, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு வழங்கப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய, கண்டி- அம்பிட்டிய பிரதேசத்திலுள்ள மருந்து களஞ்சியலையொன்ற நேற்று (30) சுற்றிவளைக்கப்பட்டது. மருத்துவர்களின் எவ்விதப் பரிந்துரையுமின்றியே இந்த மருந்து விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதுடன், குறித்த சுற்றிவளைப்பின் போது, 17,000 போதை மாத்திரைகளும் கர்ப்பத்தைக் கலைப்பதற்கான 1,000 மருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், மருந்தகம் ஒன்றையும் நடத்திச் செல்பவரென தெரிவித்துள்ள பொலிஸார், கைப்பற்றப்பட்ட மருந்துப் பொருள்கள், 1.7 மில்லியன் ரூபாய் பெறுமதியானது என்றும் தெரிவித்துள்ளனர். நாடுபூராகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் போதைப்பொருள்களைப் பெற்றுக்கொள்வதில் சிக்க...

ஊரடங்குச் சட்டத்தையும் மீறி கந்தளாயில் நடமாட்டம் அதிகரிப்பு .

Image
 ஊரடங்குச் சட்டத்தையும் மீறி கந்தளாயில் நடமாட்டம் அதிகரிப்பு .   கந்தளாய் யூசுப் ஊரடங்குச் சட்டத்தையும் மீறி கந்தளாய் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணக்கூடியதாகவுள்ளது கோவிட் தொற்று பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் கடந்த 20ஆம் திகதி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதும் கந்தளாய் நகரப்பகுதியில் அதிகளவிலான மக்கள் நடமாட்டம் காணப்படுகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் கோவிட் தொற்று மற்றும் கோவிட் இறப்பு என்பன சடுதியாக அதிகரித்துள்ள போதும் அதனைப் பொருட்படுத்தாமல் நகரப் பகுதியில் பெருமளவில் மக்கள் வந்து செல்வதை அவதானிக்க முடிவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. வங்கிகள், மருந்தகங்கள், மரக்கறி விற்பனையகங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் ஒரு கதவுடன் திறந்திருக்கும் வர்த்தக நிலையங்கள் என்பவற்றை நோக்கி மக்கள் அதிகளவில் வந்து செல்வதுடன், வங்கிகளிலும், மருந்தகங்களிலும் அதிக சன நெரிசலையும் காணக்கூடியதாகவுள்ளது இதே...

இன மதம் கடந்த அரசியலில் அஷ்ரஃபும் மங்களவும்..

Image
 இன மதம் கடந்த அரசியலில் அஷ்ரஃபும் மங்களவும்..   'அனைத்து இலங்கையருக்குமான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும்  தூரநோக்கில் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஆழமான அர்ப்பணிப்பைக் கொண்டிருந்தார். அவர் முஸ்லிம்களின் குரலாக மட்டுமன்றி, தமிழர்களின் பிரச்சினைகள் பாதிக்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் மலையகத் தமிழர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பற்றியெல்லாம் பேசினார். அனைத்து சமூகங்களினதும் மனக் கிடைக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர் கொண்டிருந்தார்' அஷ்ரஃப் ஒருமுறை பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், 'சிறுபான்மை இனங்கள் தங்களது மனக்குறைகள் இன்னும் செவிமடுக்கப்படவில்லை அவற்றுக்கு பரிகாரம் அளிக்கப்படவில்லை என்று கருதும் நிலைமைக்கு நாம் இடமளித்துக் கொண்டிருக்கும் காலம்வரைக்கும் இலங்கையராக ஒருமித்துச் சிந்திப்பதற்கும் தேசிய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கும் எங்களால் முடியாமல் போகும்' என்று குறிப்பிட்டிருந்ததை இந்த இடத்தில் நினைவுகூருகின்றேன்'... அரசியல் தலைவரான எம்.எச்.எம். அஷ்ரஃப் மரணித்து பல வருடங்களுக்குப் பிறகு அவரது மிக நெருங்கிய அரசியல் சகாவான மங்கள சமரவீர அஷ்ரஃப்பற்றி எழுதிய நினைவுக...

அசாத் சாலியை செப்டெம்பர் 14ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு.

Image
 அசாத் சாலியை செப்டெம்பர் 14ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு.   சர்ச்சைக்குாிய கருத்து ஒன்றை வெளியிட்ட குற்றத்தில்  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை செப்டெம்பர் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள 12,000 தொன் சீனி

Image
 கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள 12,000 தொன் சீனி    இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 600 சீனிக் கொள்கலன்கள் இரண்டு மாதங்களாக கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றில், 433 கொள்கலன்கள் ஒன்பது இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்டவை என்றும் சுமார் 12,000 மெற்றிக் தொன் சீனியைக் கொண்டுள்ளன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். வணிக வங்கிகள் வழங்கிய கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி அனுமதிப்பத்திரங்களின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து சீனி இறக்குமதி செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டனர். இரண்டு மாதங்களாக 433 சீனிக் கொள்கலன்கள் வெளிவிடப்படாததால், இறக்குமதியாளர்கள் ஒரு கிலோ சீனிக்கு தாமதக் கட்டணமாக ரூ. 20 முதல் 25 வரை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். இதேவேளை, மற்றொரு சீனி இறக்குமதியாளரால் அனுமதிப்பத்திரம் இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட மற்றொரு தொகுதி கொள்கலன்கள் இரண்டு மாதங்களாக கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இறக்குமதியாளரால் மியான்மாருக்கு அனுப்பப்பட்ட 130 சீனி கொள்கலன்கள் அந்த நாட்டின...

எஸ்.பி திசாநாயக்கவுக்கு மூளை இல்லை..

Image
 எஸ்.பி திசாநாயக்கவுக்கு மூளை இல்லை..   இலங்கையின் பிரபல அரசியல்வாதியாக 89ஆம் ஆண்டிலிருந்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்து வப்படுத்தும் ஆளுங்கட்சியின் உறுப்பினரான எஸ்.பி திசாநாயக்கவை உள நல மருத்துவரிடம் உடனடியாக அழைத்து செல்ல வேண்டுமென கோரிக்கைவிடுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் மக்கள் முன்னிலையில் அந்த கொடிய நோய் குறித்த நகைச்சுவையை வெளிபடுத்தியமை தொடர்பில் வெட்கமடைய வேண்டும் என்றார். அவரது இல்லத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இந்த நாட்டுக்கு தேவையான வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் என பலர் இத்தொற்றால் பலியாகி வரும் நிலையில், தொற்றிலிருந்து எவ்வாற மக்களை பாதுகாப்பது என சகலரும் சிந்தித்துகாண்டிருக்கும் போது, இந்த பாராளுமன்ற உறுப்பினரின் கருத்து கவலையடையச் செய்கின்றது. ஏன் இவ்வாறு மூளையில்லாமல் கதைக்கின்றார் என தெரியவில்லை. யாரின் தேவைக்காக இவ்வாறு கதைக்கின்றார் என்றும் தெரியவில்லை. ஒருவேளை அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் உள்ள தலைவர்...

சுமார் 20 இலட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் கணினியில் பதியப் பட்டில்லை.

Image
 சுமார் 20 இலட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் கணினியில் பதியப் பட்டில்லை.   மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால்  2009ம் ஆண்டுக்கு முன்னர் வெளியிடப்பட்ட சுமார் 20 இலட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான தகவல்கள், கணினி கட்டமைப்பில் உள்ளடக்கப்படவில்லை என திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. 1970ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான தகவல்கள், திணைக்களத்தின் கணினி கட்டமைப்பின் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், 2009ம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் வெளியிடப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான தகவல்கள் மாத்திரமே, இந்த கணினி கட்டமைப்பின் உள்ளதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. 2009ம் ஆண்டுக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்க வேண்டிய தேவை கிடையாது என்பதனால், அதன் ஆவணங்கள் இல்லாது போயுள்ளதை அடுத்தே, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹேர பகுதியிலுள்ள அலுவலகத்தில் 500ற்கும் அதிகமான சாரதி அனுமதிப் பத்திரம் ...

டோக்கியோ பாராலிம்பிக்கில் இலங்கை தனது முதலாவது தங்கப்பதக்கத்தை வென்றது.

Image
 டோக்கியோ பாராலிம்பிக்கில் இலங்கை தனது முதலாவது தங்கப்பதக்கத்தை வென்றது.   டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை தனது முதலாவது தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளது. F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத்தால் இந்த தங்கப்பதக்கம் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்து இந்த தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.

தொற்றுநோயிலிருந்து கடந்த ஒன்றரை வருடமாக மக்களைக் காப்பாற்றவும், பொருளாதாரத்தைக் காப்பாற்றவும் முடிந்துள்ளமையையிட்டு ஒட்டுமொத்த மக்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

Image
 தொற்றுநோயிலிருந்து கடந்த ஒன்றரை வருடமாக மக்களைக் காப்பாற்றவும், பொருளாதாரத்தைக் காப்பாற்றவும் முடிந்துள்ளமையையிட்டு ஒட்டுமொத்த மக்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கொவிட் தொற்றை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் இதுவரை ரூ.700 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளது. இது கடந்த ஆண்டு நாட்டின் மொத்த தேசிய வருமானமான 1380 பில்லியன் ரூபாவில் அரைவாசியாகுமென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் இவ்வளவு பணம் செலவழித்த போதிலும், அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்கவோ அல்லது அவர்களுக்கான கொடுப்பனவுகளை குறைக்கவோ அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், அரச ஊழியர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். இதற்கு அப்பால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சும் பாரியளவான நிதியை செலவிட்டுள்ளது. பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய சிகிச்சை மையங்கள் கட்டுதல், இரண்டு வாரங்களுக்குத் தேவையான 10 ஆயிரம் ரூபா நிவாரணப் பொதிகளை வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கா...

பாணந்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இரு உடல்கள் மாறுபட்டுள்ளன..!

Image
 பாணந்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இரு உடல்கள் மாறுபட்டுள்ளன..! பாணந்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இரு உடல்கள் மாறுபட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 89 மற்றும் 93 வயதுகளையுடைய இரண்டு பெண்கள் மரணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 89 வயதுடைய முஸ்லிம் பெண் ஒருவர் கடந்த 21 ஆம் திகதி உயிரிழந்தார். அவரது சரீரத்திற்கு பதிலாக பாணந்துறை பகுதியை சேர்ந்த 93 வயதுடைய பெண்ணின் சரீரம் அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, குறித்த சரீரம் அன்றைய தினம் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாணந்துறை வீரசிங்க மாவத்தை சேர்ந்த 93 வயதுடைய பெண்ணின் இறுதிக்கிரியைகளுக்காக அவரது உறவினர்கள் பாணந்துறை வைத்தியசாலைக்கு சென்று குறித்த சரீரம் தொடர்பில் வினவியிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் குறித்த சரீரம் அங்கிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமாக சீனி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 களஞ்சியசாலைகளுக்கு சீல்வைப்பு..!

Image
 சட்டவிரோதமாக சீனி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 களஞ்சியசாலைகளுக்கு சீல்வைப்பு..! சட்டவிரோதமாக சீனி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் 4 களஞ்சியசாலைகள் இன்று முத்திரையிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த களஞ்சியசாலைகளில் இருந்து 5 ஆயிரத்து 400 மெற்றிக் டன் சீனி பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

நாளை முதல் ஒரு கிலோ சிவப்பு சீனியை 130 ரூபாவுக்கு கொள்வனவு செய்யலாம் - ஜானக வக்கும்புர..!

Image
 நாளை முதல் ஒரு கிலோ சிவப்பு சீனியை 130 ரூபாவுக்கு கொள்வனவு செய்யலாம் - ஜானக வக்கும்புர..! சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக நாளை முதல் ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியை 130 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என சிறு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி மற்றும் அதுசார்ந்த கைத்தொழில்கள், ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். இந்தவிடயம் குறித்து எமது செய்தி பிரிவு வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். லங்கா சீனி நிறுவனத்தின் ஊடாக சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக சீனியை பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது சகல சதொச விற்பனை நிலையங்களுக்கும் சீனியை வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச மாத மற்றும் தின சம்பளம் அறிவிக்கப் பட்டது.

Image
 தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச மாத மற்றும் தின சம்பளம் அறிவிக்கப் பட்டது.   தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.   16,000 மற்றும் குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ. 640 தொழில் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய விதிமுறைகள் ஆகஸ்ட் 16 முதல் அமலுக்கு வரும்.

இனிமேல் இலங்கையில் ஃபைசர் தடுப்பூசியை ஒரேயொரு இடத்தில் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும்.

Image
 இனிமேல் இலங்கையில் ஃபைசர் தடுப்பூசியை ஒரேயொரு இடத்தில் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும்.   கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ்,  ஃபைசர் தடுப்பூசியை செலுத்தும் முழுமையான அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஃபைசர் மற்றும் அஸ்ட்ராசேனிகா ஆகிய தடுப்பூசிகள் இதற்கு முன்னர், முறையின்றி, வேறு நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர்களின் விபரங்கள், ஆவணங்களில் பதியாது, மறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுகாதார தரப்பினால் புத்தளம் பகுதிக்கு செலுத்தப்பட்ட ஃபைசர் தடுப்பூசி, வெளிநபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளமை அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, ஃபைசர் தடுப்பூசிகளை செலுத்தும் பொறுப்பு இராணுவத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். இனிவரும் காலங்களில் ஃபைசர் தடுப்பூசி இராணுவ தலைமையகத்தில், உரிய தரப்பிற்கு செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி செலுத்தும் நடைமுறைக்கு அப்பாற் சென்று, தகுதியற்ற எந்தவொரு நபருக்கும் ஃபைசர் தடுப்பூசி செல...

நாட்டில் 7,500 பேரின் உயிரை காப்பாற்ற ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீடிக்க வேண்டும்.

Image
 நாட்டில் 7,500 பேரின் உயிரை காப்பாற்ற ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீடிக்க வேண்டும்.   நாட்டில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீடிக்கும் பட்சத்தில் 7,500 பேரின் உயிரை காப்பாற்ற முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தால் நியமிக்கப்பட்டுள்ள சுயாதீன தொழில்நுட்ப குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதேநிலைமை எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை நீடித்தால் 10,000 பேரை பாதுகாக்க முடியும் எனவும் குறித்த குழு பரிந்துரைத்துள்ளது. நேற்றுடன் (27) நிறைவடைந்த 7 நாட்களில், ஒரு இலட்சம் சனத்தொகையில் இலங்கையில் மரண வீதம் 5.52 வீதமாக காணப்படுவதாக குறித்த குழு குறிப்பிட்டுள்ளது. டெல்டா தொற்று வேகமாக பரவியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த 10 நாட்களில், நாடு மூடப்பட்டுள்ளதால் பொருளாதாரத்திற்கு 1.12 பில்லியன் அமெரிக்க டொலர் பாதிப்பு ஏற்படுகின்றது. எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதியுடன் நிறைவடையும் வகையில் 04 வாரங்கள் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் பட்சத்தில் 1.67 பில்லியன் அமெரிக்க டொலர் பாதிப்...

கொரோனா என்கின்ற கொள்ளை நோய்...

Image
 கொரோனா என்கின்ற கொள்ளை நோய்...   வலி மிகு நெஞ்சத்தோடு இந்தப் பதிவினை இடுகின்றேன்.  பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரத்தினால் பிரிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் தாய் நாட்டுடனும் தாய் மண்ணுடனும் பிரிக்க முடியாத பந்தத்தில் இணைந்து கிடக்கின்ற மனித மனங்களுக்கு மண் என்பதும் நாடு என்பதும் வெறும் கல்லும் மண்ணும் மரமும் ஆறும் கடலும் அல்ல, அங்கே வாழுகின்ற எமது சொந்தங்களும் பந்தங்களும் தான் எமது தவிப்புக்கும் துயரத்துக்கும் ஆணிவேர். அவர்களை ஒவ்வொருவராக இழந்து கொண்டிருக்கின்றோம். ஓரிரு வார கால இடைவெளியில் ‘சென்று வருகின்றேன்’ என்று விடை பெற்று வந்த சகோதரிகள் இருவரை இழந்து நிற்கின்றேன். மீண்டும் காணலாம் என்கின்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் வெறும் கானல் நீராகிப் போன வெறுமையுடனும் கனத்த இதயத்துடனும் இந்தப் பதிவு இங்கே வருகின்றது. இப்படியான நிலைமை பல குடும்பங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது என்பதனை நான் அறிவேன். அவர்கள் எல்லோருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். யாரைக் குறை சொல்வதென்று தெரியவில்லை, ஆரம்பத்தில் எல்லோருமே பொடுபோக்காகத்தான் இருந்தார்கள் என்பது ரகசியமல்ல. மரணங்களின...

அசாதாரண விலையேற்றம், கருப்புச் சந்தை மாஃபியா ! இது விற்பதற்கான சந்தர்ப்பம் வாங்குவதற்கு அல்ல, சந்தையில் கேள்வியை அதிகரிக்காதீர்.

Image
  அசாதாரண விலையேற்றம், கருப்புச் சந்தை மாஃபியா ! இது விற்பதற்கான சந்தர்ப்பம் வாங்குவதற்கு அல்ல, சந்தையில் கேள்வியை அதிகரிக்காதீர்.   வாகனங்கள் அசாதாரண விலையேற்றம், கருப்புச் சந்தை மாஃபியா ! இது விற்பதற்கான சந்தர்ப்பம் வாங்குவதற்கு அல்ல, சந்தையில் கேள்வியை அதிகரிக்காதீர். கொவிட் 19, அசாதாரண சூழ்நிலை, அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையில் பொருட்கள் சேவைகள் வழங்குபவர்கள் சந்தர்ப்பவாத பகற் கொள்ளையில், பதுக்கலில், அசாதாரண இலாபமீட்டலில் குரூரமாக ஈடுபட்டு வருவதை நாம்  அறிகிறோம். அந்த வகையில்  இலங்கை வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடி நாணய மதிப்பிறக்கம்  கடன் நெருக்கடி  இறக்குமதி கட்டுப்பாடு என்பவற்றை தமக்குச் சாதகமாக பயன்படுத்தி முதலாளி வர்க்கம், இடைத்தரகர்கள், அரசியல் செல்வாக்கு மிக்கோர்  சந்தையில் அரிசி, சீனி, பால்மா உற்பட  அனைத்து பொருட்களின்  விலைகளையும்  பன்மடங்காக அதிகரிக்கச்  செய்யும் கருப்புச் சந்தை வர்த்தக மாஃபியாவில் பகற் கொள்ளை  காட்டு  தர்பாரில்  இருக்கிறார்கள். இன்ஷா அல்லாஹ், இந்த நிலமைகள் இவ்வாறே ...

ஷியா, சுன்னி மோதல்கள் எதுவரை எதிரொலிக்கும்? காபூல் தாக்குதல் கற்பிக்கும் பாடங்கள்!

Image
 ஷியா, சுன்னி மோதல்கள் எதுவரை எதிரொலிக்கும்? காபூல் தாக்குதல் கற்பிக்கும் பாடங்கள்!   சுஐப் எம். காசிம்- மேலைத்தேயம் விரும்பும் முஸ்லிம் நாடுகளில் அமைதி  ஏற்படுமா? என்று சந்தேகம் எழுமளவுக்கு ஷியா, சுன்னி மோதல்கள் கூர்மையடைந்து வருகின்றன. மட்டுமல்ல, விரும்பாத நாடுகளிலும் நெருக்கடிகள் நின்றபாடில்லை. முஸ்லிம் உலகில் ஏற்பட்டுள்ள இந்தக் கவலை முழு உலகையும் வியாபிக்கும் நிலையில்தான், இதன் விஸ்வரூபம் தலைவிரித்தாடுகிறது. சுமார், ஐம்பது இஸ்லாமிய நாடுகளுள்ள இந்த உலகில் முஸ்லிம்களின் சனத்தொகை இரண்டாமிடத்திலுமுள்ளது. இதற்குள்தான், இத்தனை பிளவுகளால் முஸ்லிம் உலகு திண்டாடுகிறது. இந்தத் திண்டாட்டம் சில ஏகாதிபத்தியவாதிகளுக்கு கொண்டாட்டமாகவுள்ளதையும் நாம் மறக்க முடியாது. அரபு நாடுகள், ஆபிரிக்க நாடுகள், சுன்னி நாடுகள், ஷியா நாடுகள் என விரியும் இந்தப் பிளவுகள்தான் இன்றைய விரிசலுக்கும் காரணம். முஸ்லிம்களின் இறுதிக் கடமையான "ஹஜ்" வணக்கத்திலும் இந்த விரிசலின் சாயல் இருக்கத்தான் செய்கிறது. "மினாவில்" தங்குவதற்கான கூடாரங்களில், அரபு நாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்ததை, ஆசிய நாடுகளுக்...

முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாதுனு சொல்றதுக்கு இதுதான் காரணமாம்..

Image
 முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாதுனு சொல்றதுக்கு இதுதான் காரணமாம்.. குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்படும் முட்டைகள் சாப்பிடுவதற்கு ஆரோக்கியமற்றவை என தெரியவந்துள்ளது. முட்டை புரதம் மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாகும். தினசரி நம் உணவில் முட்டைகளை எடுத்துக்கொள்வது சிறந்ததாகும். இதன் காரணமாக நம்மில் பெரும்பாலோர் குளிர்சாதன பெட்டியில் முட்டைகளை சேமித்து வருகிறோம். இதற்காக கிட்டத்தட்ட அனைத்து குளிர்சாதன பெட்டி உற்பத்தி நிறுவனங்களும் அவற்றின் வெளியீடுகளில் முட்டை வைப்பதற்காக ஒரு தனி ட்ரேவை வழங்குகின்றன. ஆனால் ஒரு ஆய்வின்படி, குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்படும் முட்டைகள் சாப்பிடுவதற்கு ஆரோக்கியமற்றவை என தெரியவந்துள்ளது. குளிர்ந்த வெப்பநிலையில் முட்டைகளை சேமித்து வைப்பதும். பின்னர் அவற்றை அறை வெப்பநிலையில் விட்டுவிடுவதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குளிர்ந்த நிலை முட்டை ஓட்டில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். பின்பு இது முட்டை கருவிலும் பரவக்கூடும் என்பதால் நுகர்வுக்கு ஆரோக்கியமற்றதாகிவிடும் என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. முட்டைக...

ஊரடங்குச் சட்டத்தை இனியும் நீடிப்பதில்லை..!

Image
 ஊரடங்குச் சட்டத்தை இனியும் நீடிப்பதில்லை..! நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டே செப்டெம்பர் 6ஆம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடித்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை அதற்குப் பின்னரும் ஊரடங்குச் சட்டத்தை நீடித்து அன்றாடம் வருமானம் பெறும் தொழில்களில் ஈடுபடும் மக்களின் வயிற்றில் அடிக்கமாட்டேன் எனவும் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கொவிட் ஒழிப்பு தொடர்பான விசேட கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சர்களான பஸில் ராஜபக்‌ஷ, கெஹலிய ரம்புக்வெல, பந்துல குணவர்தன, டலஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, சிசிர ஜயகொடி, ஷன்ன ஜயசுமன, ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, பாதுகாப்புப் பணிக் குழாம் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உள்ளிட்ட ...

ஆப்கானிஸ்தானில் இசைக்கு தடை விதிக்கப்படும், பெண்கள் மூன்று நாட்கள் தனியாக பயணம் செய்தால் மஹரம் கட்டாயம்

Image
 ஆப்கானிஸ்தானில் இசைக்கு தடை விதிக்கப்படும், பெண்கள் மூன்று நாட்கள் தனியாக பயணம் செய்தால் மஹரம் கட்டாயம்   ஆப்கானிஸ்தானில் இசை தடை செய்யப்படுவதாகவும், பெண்கள்  பல நாட்கள் நீடிக்கும் பயணங்களில் ஆண் மஹரத்துடன் பயணம் செய்ய வேண்டும் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹிட் அறிவித்துள்ளார். நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹிட்,  பெண்கள் வேலைக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள், பள்ளி மற்றும் மருத்துவமனைகளுக்குப் பயணம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் பல நாட்கள் நீடிக்கும் பயணங்களுக்கு ஒரு ஆண் மஹரம் வேண்டும் என்று கூறி உள்ளார். மேலும் நாட்டில் இசை தடை செய்யப்படும். 'இஸ்லாத்தில் இசை தடைசெய்யப்பட்டுள்ளது, ஆனால் மக்கள் அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக, இதுபோன்ற செயல்களைச் செய்ய வேண்டாம் என்று நாங்கள் நம்பலாம்' என்று முஜாஹித் கூறினார்.

அடுத்த வாரங்களில் சீனியின் விலையை 190 ரூபா, 180 ரூபா என்ற அளவுக்கு குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Image
 அடுத்த வாரங்களில் சீனியின் விலையை 190 ரூபா, 180 ரூபா என்ற அளவுக்கு குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.   அடுத்த வாரம் முதல் சீனியின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை  மேற்கொள்ள உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சீனியின் விலையை குறைக்க முடியாது என சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன நேற்று (28) தெரிவித்திருந்தார். மேலும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்க அவசியமான சீனி மாத்திரமே கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தற்போதைய நிலையில், சந்தை நடவடிக்கையின் அடிப்படையில், சீனியின் விலையை உடனடியாக குறைக்க முடியாது என நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். எனினும், அடுத்துவரும் மூன்று வாரங்களில் சீனியின் விலையை 190 ரூபா, 180 ரூபா என்ற அளவுக்கு குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு, கட்டார் அரசாங்கம் உதவத் தயாராக இருப்பதை மீண்டும் வலியுறுத்தினார் கட்டார் தூதுவர்.

Image
 இலங்கைக்கு, கட்டார் அரசாங்கம் உதவத் தயாராக இருப்பதை மீண்டும் வலியுறுத்தினார் கட்டார் தூதுவர்.   2021 ஆகஸ்ட் 25ஆந் திகதி கட்டார் தூதுவர் ஜாசிம் பின்  ஜாபிர் ஜாசிம் அல் சொரூர் புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்தார். இரு நாடுகளிலிருந்தும் உயர் மட்ட அரச விஜயங்களால் வலுவூட்டப்பட்ட கட்டார் அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நினைவு கூர்ந்த வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், பொருளாதார வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். துறைமுக நகர விஷேட பொருளாதார வலயம், சர்வதேச நிதி நிலையம், சுற்றுலாத் துறை மற்றும் எரிசக்தித் துறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழலை ஆராய்வதற்காக தூதுவர் சொரூருக்கு அமைச்சர் பீரிஸ் அழைப்பு விடுத்தார். அமைச்சர் பீரிஸின் கருத்துக்களை வரவேற்ற தூதுவர் சொரூர், தனது நேர்மையான பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் கட்டார் அரசாங்கம் உதவத் தயாராக இருப்பதை மீண்டும் வலியுறுத்தினார். சவாலான நேரத்தில் அவசர சுகாதாரத...

பராக்கிரம சமுத்திர அணைக்கட்டுக்கருகில் நடைபாதை அமைக்கும் செயற்பாட்டிற்கு எதிராக பௌத்த பிக்குகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்..

Image
 பராக்கிரம சமுத்திர அணைக்கட்டுக்கருகில் நடைபாதை அமைக்கும் செயற்பாட்டிற்கு எதிராக பௌத்த பிக்குகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்..   ஏ.பி.எம்.அஸ்ஹர் பொலன்னறுவை பராக்கிரம சமுத்திர அணைக்கட்டுக்கருகில்  நடைபாதை ஒன்றை அமைக்கும் அரசின் செயற்பாட்டிற்கு எதிராக பௌத்த பிக்குகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 34 மில்லியன் ரூபா செலவில் இந்த நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த நடைபாதை அமைப்பதானது சமுத்திரத்தின் அணைக்கட்டுக்கு பாதிப்பாக அமையும் என சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் இந்த நிலையில் மிகவும் இரகசியமாக என்ன நோக்கத்திற்காக இந்த திட்டம் செயற் படுத்தப்படுகிறது என்பது தெரியவரவில்லை என பிக்குகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாவனைக்கு இயலாது பழுதடைந்த நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் வண்டியை திருத்தி வழங்கிய ஆஷிகா மோட்டர்ஸ்" அஹமட் நஸ்ஹத் மற்றும் குழுவினர்.

Image
 பாவனைக்கு இயலாது பழுதடைந்த நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் வண்டியை திருத்தி வழங்கிய ஆஷிகா மோட்டர்ஸ்" அஹமட் நஸ்ஹத் மற்றும் குழுவினர்.   களுத்துறை, நாகொடை வைத்தியசாலையில், பாவனைக்கு இயலாது  பழுதடைந்த நிலையில் இருந்த நோயாளர் ஊர்தியை (Ambulance), பேருவளை, கங்கானங்கொடையில் இருக்கும் "ஆஷிகா மோட்டர்ஸ்" உரிமையாளர் அஹமட் நஸ்ஹத் தனது நிறுவனத்தின் முழு அனுசரணையுடன் அவற்றை இலவசமாக சரிசெய்தார். ராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க முன்நிலையில், இன்று (27.08.2021) மருத்துவமனை நிர்வாகத்திடம் அதை கையளிக்கும் போது பிடிக்கப்பட்ட சில புகைப்படங்களும், திருத்த வேலையில் பிடிக்கப்பட்ட சில புகைப்படங்களும்.

சீனி விலையை குறைக்க முடியாது..!

Image
 சீனி விலையை குறைக்க முடியாது..! சீனி விலையை குறைக்க முடியாது என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டில் தற்போது இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு தேவையான சீனி மாத்திரமே கைவசம் உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றனர். எதிர்வரும் நாட்களில் சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் சீனிக்கு பற்றாகுறை ஏற்படும் என இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த ஒருவாரக்காலப்பகுதிக்குள் சீனியின் விலை 100 ரூபாக்கும் அதிக தொகையால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்ட்டர் செலுத்தப்படுமா?

Image
 இலங்கையர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்ட்டர் செலுத்தப்படுமா?  -ஜனாதிபதி கூட்டத்தில் வெளியான புதிய தகவல் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது மருந்தளவான (DOSE) பூஸ்ட்டர் மருந்தளவை வழங்க இதுவரை உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கவில்லை என கொவிட்-19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் விசேட வைத்தியர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவிக்கின்றார். ஜனாதிபதியுடன் நேற்றைய தினம் (27) இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தற்போது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் முதலாவது மருந்தளவை பெரும்பாலும் 100 வீதமாக செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.   இரண்டாவது மருந்தளவை 56 வீதமானோருக்கு செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.   இந்த நிலையில், கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது மருந்தளவை செலுத்தி முழுமையாக நிறைவு செய்ததன் பின்னர், அடுத்தக்கட்ட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் 30 வயதுக்கு குறைவானோருக்கா முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்? அல்லது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்ட்டராக மூன்றாவது ...

10 நாள் ஊடரங்கு காரணமாக, ரயில்வே திணைக்களத்துக்கு ரூபாய் 13 கோடி 33 இலட்சத்துக்கும் அதிக இழப்பு.

Image
 10 நாள் ஊடரங்கு காரணமாக, ரயில்வே திணைக்களத்துக்கு ரூபாய் 13 கோடி 33 இலட்சத்துக்கும் அதிக இழப்பு.   நாட்டில் 10 நாள்கள் தனிமைப்படுத்தல் ஊடரங்கு  அமல் படுத்தப்பட்டுள்ளதால் ரயில்வே திணைக்களத்துக்கு ரூபாய் 13 கோடி 33 இலட்சத்துக்கும் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வேபொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். நாடு முடக்கப் பட்டுள்ளமையால் ரயில்வேதிணைக் களத்துக்கு நாளொன்றுக்கு ரூபாய் 1 கோடி 30 இலட்சத்துக்கும் அதிக இழப்பு ஏற்படுவதாக அவர் கூறிள்ளார். அத்துடன், ரயில்வே திணைக்களத்தின் மாதாந்த இழப்பு 40 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் எனவும் ரயில்வே திணைக்களத்தின் மாதாந்த வருமானம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக காணப்பட்ட நிலையில், கொரோனா தொற்று ஆரம்பித்த பின்னர் அது 10 கோடி ரூபாயாக குறைவடைந்துள்ளதாக அந்த திணைக்களத்தின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

புதிய நிதியமைச்சர் நியமிக்கப்பட்ட பிறகு, பொருட்களின் விலைகள் அதிகரித்து, பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

Image
 புதிய நிதியமைச்சர் நியமிக்கப்பட்ட பிறகு, பொருட்களின் விலைகள் அதிகரித்து, பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.   கொவிட் பேரழிவு தருணத்தில் நிவாரணத்திற்கு பதிலாக மக்கள் மீது  அசௌகரியங்களைத் திணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய நிதியமைச்சர் நியமிக்கப்பட்ட பிறகு, நாட்டிற்கு சௌபாக்கியத்தைக் கொண்டுவருவதாக பெருமை பேசினார்கள். பொருட்களின் விலைகள் முன்னெப்போதும் இல்லாதவாறு உயர்ந்துள்ளதோடு, பொருளாதாரம் இருந்ததை விட மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதியை அரசாங்கம் பறிமுதல் செய்து, பின்னர் உதவியற்ற மக்களை குறிவைத்து மற்றொரு சுமையை சுமத்தியுள்ளது. அதன் காரணமாகவே இதுவரை கொடுக்கப்பட்ட 5.000 ரூபா நிவாரண கொடுப்பனவுக்கு பதிலாக 1998 ரூபாவிற்கு கற்பனையான சலுகைப் பொதியொன்றை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரழிவு தருணத்தில் நிவாரணத்திற்கு பதிலாக மக்கள் மீது அசௌகரியங்களைத...

சதொசவில் சீனி 120 ரூபாய்க்கு விற்பனை : கொரோனாவையும், முடக்கத்தையும் மறந்து மக்கள் படையெடுப்பு.

Image
 சதொசவில் சீனி 120 ரூபாய்க்கு விற்பனை : கொரோனாவையும், முடக்கத்தையும் மறந்து மக்கள் படையெடுப்பு.   மாளிகைக்காடு நிருபர் நாட்டில் பால்மா, சீனி, எரிவாயு, உட்பட பல்வேறு அத்தியவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டும், சில அத்தியாவசிய பொருட்கள் சந்தையில் இல்லாத நிலையில் கல்முனை லங்கா சதொசவில் இன்று சீனி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இலங்கை உற்பத்தி பால்மா உட்பட சிலவகை பால்மா விற்பனையும் இடம் பெற்றதால் மக்கள் வெள்ளம் லங்கா சதொசவில் குவிந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது. அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் ஆர்வத்துடன் விற்பனை நிலையத்தை நோக்கி வந்தாலும் நாட்டின் கொரோனா சூழ்நிலை காரணமாக மக்களை கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்நிலைகள் உள்ளதாக கல்முனை லங்கா சதொச முகாமையாளர் தெரிவித்தார். நாட்டின் நடுத்தர வர்க்கம் முதல் உயர்தர வர்க்கம் வரை கொரோனா அலையில் பொருளாதார பாதிப்பை சந்தித்திருக்கும் இந்த சூழ்நிலையில் விலையேற்றம் பாரிய சங்கடத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதுடன், வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்கள் பலதும் பசியுடன் நாட்களை கடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம், உ...

மதுபான கடைகளை 10 நாட்களுக்கு மூடியதால் 500 கோடி ரூபாய் நஷ்டம்.

Image
 மதுபான கடைகளை 10 நாட்களுக்கு மூடியதால் 500 கோடி ரூபாய் நஷ்டம்.   மதுபான சாலைகளை 10 நாட்களுக்கு மூடியமை காரணமாக 500 கோடி ரூபாய் வருமானம் இழக்கபபட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. மதுபான சாலைகளை ஒரு நாள் மூடுவதால் அரசாங்கத்துக்கு 50 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுவதாக திரணக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்

சீனி மற்றும் பால்மா கொள்வனவிற்கு முண்டியடிக்கும் மக்கள்

Image
 சீனி மற்றும் பால்மா கொள்வனவிற்கு முண்டியடிக்கும் மக்கள்   நாட்டில் பால்மா, சீனி, எரிவாயு உட்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டும், சில அத்தியாவசிய பொருட்கள் சந்தையில் இல்லாத நிலையில் லங்கா சதொசவில் சீனி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.  இலங்கை உற்பத்தி பால்மா உட்பட சிலவகை பால்மா விற்பனையும், சீனியும் விற்பனை இடம் பெற்றதால் மக்கள் அதிகளவில் லங்கா சதொசவில் குவிந்திருந்தமையை காணக்கூடியதாக உள்ளது.  அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, வாழைச்சேனை, வாகரை, கல்குடா உட்பட பல்வேறு பிரதேசங்களில் சீனிக்குத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வாழைச்சேனை மாவடிச்சேனை சதொச விற்பனை நிலையத்தில் நுகர்வோரின் நலன் கருதி ஒருவருக்கு ஒரு கிலோ எனும் நிபந்தனைக்கமைய சீனி விற்பனை செய்யப்படுகிறது.  அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் ஆர்வத்துடன் விற்பனை நிலையத்தை நோக்கி வந்தாலும் நாட்டின் கொரோனா சூழ்நிலை காரணமாக மக்களை கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிக்கல் நிலைகள் உள்ளதை அவதானிக்க முடிகின்றது.  நாட்டின் நடுத்தர வர்க்கம் முதல் உயர்தர வர்க்கம் வரை கொர...

நாட்டின் பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு, ஊரடங்கு சட்டத்தை தளர்த்த அரசு ஆலோசனை.

Image
 நாட்டின் பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு, ஊரடங்கு சட்டத்தை தளர்த்த அரசு ஆலோசனை.   நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு  சட்டத்தை எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் முடிவுறுத்தாமல் மேலும் ஒருவார காலத்திற்கு நீடிக்குமாறு சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் நாட்டின் பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு ஊரடங்கு சட்டத்தை தளர்த்த அரசு ஆலோசித்து வருகின்றது.அத்துடன் அத்தியாவசிய சேவைகளை தொடந்து சில கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்கவும் அரசு ஆலோசித்து வருகிறது. தற்போது அமுலில் உள்ள பொதுமுடக்கத்துடன் கூடிய ஊரடங்கு வெறுமனே 10 நாட்களுக்கு மட்டுமே அமுலில் இருப்பதாலும் ,கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரண வீதம் தொடர்ந்தும் அதிகரிப்பதாலும் குறைந்தபட்சம் மேலும் ஒருவாரகாலத்திற்காவது முடக்கத்தை தொடரவேண்டுமென மருத்துவ நிபுணர்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் முடக்க காலப்பகுதியில் மரணங்கள் மற்றும் நோயாளர் எண்ணிக்கையில் குறைவு ஏற்படவில்லையென அரச உயர்மட்டத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நாளை வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டம...

காபூலில் அடுத்தடுத்து 4 இடங்களில் வெடித்த குண்டுகளால் பலர் பலி. காரணம் எந்த அமைப்பு?

Image
 காபூலில் அடுத்தடுத்து 4 இடங்களில் வெடித்த குண்டுகளால் பலர் பலி. காரணம் எந்த அமைப்பு?   காபூல் விமான நிலையத்திற்கு வெளியே அடுத்தடுத்து 4 இடங்களில் தற்கொலை தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றிபெற்றுள்ள நிலையில் அங்கு இருந்து லட்சக்கணக்கில் மக்கள் வெளியேறி வருகிறார்கள். இதனால் காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி உள்ளனர். இந்த நிலையில்தான் சற்று நேரத்திற்கு முன்பு காபூல் விமான நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டது. முதலில் விமான நிலையத்திற்கு வெளியே அபே கேட் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அடுத்த சில நிமிடங்களில் பரோன் ஹோட்டல் கேட் அருகே இரண்டாவது தாக்குதல் நிகழ்ந்துள்ளது. பரோன் ஹோட்டல் கேட் அருகேதான் வெளிநாட்டு மக்கள் பலர் கூடி இருந்தனர். முக்கியமாக அமெரிக்கர்கள் பலர் இங்கே விமானம் ஏறுவதற்காக காத்து இருந்தனர். அமெரிக்க படைகளும் இங்கு அதிகமாக இருந்தது. இந்த நிலையில்தான் சரியாக அந்த குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. மனித வெடிகுண்டு இதையடுத்து சில மணி நேரம் க...

நாட்டில் விற்கப்படும் ஒக்ஸிமீட்டரில் மோசடி : சந்தையில் போலி ஒக்ஸி மீட்டர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Image
 நாட்டில் விற்கப்படும் ஒக்ஸிமீட்டரில் மோசடி : சந்தையில் போலி ஒக்ஸி மீட்டர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.   ஏ.பி.எம்.அஸ்ஹர் நாட்டில் விற்கப்படும் ஒக்ஸிமீட்டரில் மோசடி இடம் பெறுவதாகவும், சந்தையில் போலி ஒக்ஸி மீட்டர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பகுதிகளில் ஒக்ஸி மீட்டர் (OXIMETER) மோசடி இடம்பெறுவதாக இலங்கைக்கு ஒக்ஸி மீற்றர் இறக்குமதி செய்யும் பிரதான இறக்குமதியாளரான ஶ்ரீமால் விஜேதுங்க குற்றம் சாட்டியுள்ளார் நேற்று அவர் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசிய ஔடதங்கள் அதிகார சபையின் அனுமதி பெற்ற தமது ஒக்ஸி மீட்டர் இயந்திரத்திரன் விலை 3,990 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தம்மிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் இதே இயந்திரம் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற பகுதிகளில் 6,500, 7,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறுகின்றார். அத்துடன், சந்தையில் பெரும்பாலும் போலியான ஒக்ஸிமீட்டர் இயந்திரங்களே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார். மனித உடலுக்கு மாத்திரம் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஒக்ஸி மீட்டர் இயந்திரங்...

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம் : சுகாதாரத்துறைக்கு பக்கபலமாக படைவீரர்களும் களத்தில்.

Image
 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம் : சுகாதாரத்துறைக்கு பக்கபலமாக படைவீரர்களும் களத்தில்.   நூருல் ஹுதா உமர் நாட்டில் வெகுவாக அதிகரித்துவரும்  கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக இதுவரை கொவிட்-19 தடுப்பூசி பெறாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கற்பிணி தாய்மார்களுக்கும் தடுப்பூசிகள் சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை, நாவிதன்வெளி போன்ற சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களின் ஏற்பாட்டில் பல்வேறு மத்திய நிலையங்களில் வருகிறது.   காலை 8.00 மணி தொடக்கம் வழங்கப்பட்டுவரும்  தடுப்பூசியினை பெற்றுக் கொள்ள பிரதேச கற்பிணித்தாய்மார்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர்கள் உற்சாகத்துடன் வருகைதருவதாகவும் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் கொவிட் தடுப்பு மருந்தேற்றல் வேலைத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்க பல்வேறு உதவிகளை செய்து வருவதாகவும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இதுவரை தடுப்பு மருந்த...

நபிக்கு களங்கம் விளைவித்த தவிசாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்ததன் பிரதிபலிப்பு..

Image
 நபிக்கு களங்கம் விளைவித்த தவிசாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்ததன் பிரதிபலிப்பு..   முஸ்லிம் உறுப்பினர்களை இலக்குவைத்து பொய்க்கு மேல்  பொய்யை கூறும் காரைதீவு தவிசாளர் - பஸ்மீர் விளக்கம் ! நூருல் ஹுதா உமர் காரைதீவு பிரதேச சபை முஸ்லிம் உறுப்பினர்களையும், சுயட்சைகுழு உறுப்பினர் குமாராசிரியையும் இலக்குவைத்து சோடிக்கப்பட்ட பொய்யான கருத்துக்களை கொண்ட காரைதீவு தவிசாளரின் அரசியல் வங்குரோத்து நிலை அண்மைய ஊடக சந்திப்பு அறிக்கைகளுக்கு ஆதாரபூர்வமாக உண்மையான விளக்கங்களை வழங்கி மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மீர் தன்னிலை விளக்கமொன்றை வழங்கியுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, கடந்த 2021.08.23ம் திகதி திங்கட்கிழமை 42வது சபை அமர்வில் இடம்பெற்றதாக என்மீது சுமத்தப்பட்ட குற்றங்களாக வழமைபோல் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டபோது வழமைக்குமாறாக கூச்சலும் குழப்பமும் தலைதூக்கியது. உறுப்பினர் பஸ்மீர் சபை ஒழுங்கு சட்டதிட்டங்களை மீறி அநாகரீகமான பேச்சுக்களை பேசி குழப்பம் விளைவித்தபோது அவரை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தேன். சபை ஊழியர் வெளியேற...