Posts

Showing posts from April, 2021

நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை பிரதமர் மஹிந்தவிடம் கையளிக்க ஜனாதிபதி கோத்தாவுக்கு அபேராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஆலோசனை.

Image
 நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை பிரதமர் மஹிந்தவிடம் கையளிக்க ஜனாதிபதி கோத்தாவுக்கு அபேராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஆலோசனை.   நூருல் ஹுதா உமர்   நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ள அரச  இயந்திரத்தையும் நாட்டையும் கட்டியெழுப்பும் பொறுப்பை பிரதமர் மஹிந்தவிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அபேராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஆலோசனை வழங்கியுள்ளார். அபேராம விகாரையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், பொறுப்பை பிரதமர் மஹிந்தவிடம் கையளித்தால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு எவ்வித பாதிப்பும் நடக்கப்போவதுமில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அரச சேவையும், அரச இயந்திரமும் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதியை கேட்கிறேன். இது தொடர்பில் ஆலோசனை கேட்க பொருத்தமான பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுமாறு கேட்கிறேன். அண்ணனும் தம்பியும் இணைந்து செயற்பட முடியும். அரச சேவையும், அரச இயந்திரமும் வீழ்...

ரிஷாட் பதியுதீனின் கைதினை எதிர்த்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்.

Image
 ரிஷாட் பதியுதீனின் கைதினை எதிர்த்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்.   மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து, அரசியல் நாடகத்தை, அரங்கேற்றிக்கொண்டிருக்காமல், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கபட்டு  கொழும்பில் இன்று (30) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பாயிஸின் ஏற்பாட்டில் கொழும்பு, தெவட்டகஹ பள்ளிக்கு அருகாமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கொழும்பின் பலபாகங்களிலும் இருந்து வருகை தந்த மக்கள் பங்கேற்றனர்.   “ரிஷாட் பதியுதீனை விடுதலை செய். அநீதியான முறையில் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருக்காதே. நள்ளிரவில் கைது செய்ததன் பின்னணி என்ன?. யாரை திருப்திப்படுத்த இந்தக் கைது?” போன்ற சுலோக அட்டைகளையும், நீளமான பதாதைகளையும் தாங்கியவாறு, சமூக இடைவேளிகளை பேணி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.   ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற வேளை பொலிசார் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தனர்.   ஐக்கிய மக்கள் சக்தியின்...

2019 இல் வாகன ஒலி எழுப்பும் போராட்டத்தை ஆதரித்த மஹிந்த ராஜபக்ச, இன்று எதிர்க்கின்றாரா? ஐ.தே.க

Image
 2019 இல் வாகன ஒலி எழுப்பும் போராட்டத்தை ஆதரித்த மஹிந்த ராஜபக்ச, இன்று எதிர்க்கின்றாரா? ஐ.தே.க   கடந்த 2019ம் ஆண்டில் வாகன ஒலி எழுப்பும் போராட்டத்தை ஆதரளித்த தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்று அவ்வாறான போராட்டங்களை ஏன் எதிர்க்கின்றார் என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.  கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் முக்கிய பிரபு ஒருவர் பயணம் செய்வதற்காக வீதி மூடப்பட்டிருந்த போது மக்கள் அதிருப்தியில் வாகன ஒலி எழுப்பி எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். இந்த சம்பவத்தின் போது தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச, மக்களின் செயற்பாடு நியாயமானது என சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அண்மையில் சீனப் பாதுகாப்பு அமைச்சர் பயணித்த போது வாகன நடமாட்டம் முடக்கப்பட்டமைக்கு அதேவிதமாக மக்கள் வாகனங்களில் ஒலி எழுப்பி எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குறித்த இளைஞரை கைது செய்தமை பிழையானது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. குறித்த நபர் ஏன் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது...

கொரோனா நிலைமை காரணமாக ஐக்கிய தேசிய கட்சியின் மே தின நிகழ்வுகளை இரத்து செய்கிறோம்.

Image
 கொரோனா நிலைமை காரணமாக ஐக்கிய தேசிய கட்சியின் மே தின நிகழ்வுகளை இரத்து செய்கிறோம்.   நாட்டில் நிலவும் கொவிட்-19 நிலைமைகள் காரணமாக, கட்சியின் மே தின நிகழ்வுகளை இரத்து செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. அதன்படி கட்சியின் அனைத்து மே தினக் கொண்டாட்டங்களும் நிறுத்தப்படும்.  முன்னதாக ஐக்கிய  தேசிய கட்சியின் தலைமையகத்தில் நாளை காலை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மே தின நிகழ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. எனினும் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து தற்போதைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புர்கா என்ற வசனத்தை பயன்படுத் நான் விரும்பவில்லை ஏனெனில் ஒரு இனத்தை மதத்தை இலக்கு வைத்து தீர்மானமில்லை.

Image
 புர்கா என்ற வசனத்தை பயன்படுத் நான் விரும்பவில்லை ஏனெனில் ஒரு இனத்தை மதத்தை இலக்கு வைத்து தீர்மானமில்லை.   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் விரிவாகவும் பல்வேறு கோணங்களிலும் நடைபெற்று வருவதுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் எந்தவிதத்திலும் தப்பிக்க முடியாதவாறு சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென்று பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரட்ண தெரிவித்தார். குற்றவாளிகள் தப்பிக்காதவாறு சரிவர விசாரணைகள் நடத்தப்பட்டு பலமான ஆதாரங்கள் தயாரித்து நீதிமன்றில் சமர்பிக்க சிறிது காலம் தேவைப்படும் என்று தெரிவித்த அவர், இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட உயிரிழந்த, அங்கவீனமுற்ற மக்களுக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றார். தேசிய பாதுகாப்பு, பொது மக்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பான நிறுவனம் பாதுகாப்பு அமைச்சு என்ற வகையில் மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்று தான் உறுதி மொழிவழங்குவதாக பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார். யுத்தத்தின் போது உயிர் நீத்த படைவீரர்களின் சம்பள முரண்பாடு தொடர...

நாடு முழுவதையும் முற்றாக முடக்கும் எந்தவொரு தேவையும் தற்போதைக்கு இல்லை.

Image
 நாடு முழுவதையும் முற்றாக முடக்கும் எந்தவொரு தேவையும் தற்போதைக்கு இல்லை.   கொவிட்19 தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பினால் வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் அவற்றுக்கு முகம் கொடுக்கும் வகையில் 2,500 படுக்கைகளை தயார் செய்யும் நடவடிக்கைகளில் முப்படையினர் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரட்ண தெரிவித்தார். இராணுவத் தளபதி, கடற்படை மற்றும் விமானப் படைத் தளபதிகளுடன் மேற்கொண்ட ஆலோசனைகளுக்கமையவே முன்னேற்பாடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய இராணுவம் 1,500 படுக்கைகளையும், கடற்படை 500 படுக்கைகளையும் விமானப் படை 500 படுக்கைகளையும் தயார் செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, நாடு முழுவதையும் முற்றாக முடக்கும் எந்தவொரு தேவையும் தற்போதைக்கு இல்லையென்றும் தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும் பிரதேசங்கள் மாத்திரமே முழுமையாக முடக்க தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றார். பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போது, கொரோனா தொற்று தொடர்பில...

முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன்.

Image
 முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன்.   முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன்.  கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு அறிவூட்டி ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார். முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்காமல், இரசாயன பசளைகளைப் பயன்படுத்துவதை, முழுமையாக இல்லாதொழித்த உலகின் முதல் நாடாக, இலங்கையை மாற்றும் சவாலை தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் என்பனவற்றை பயன்படுத்தல் மற்றும் இறக்குமதி என்பனவற்றின் மீதான தடை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எமது தலைவர் றிசாட் பதியுதீன் எப்போதும் மக்களுக்காகவே குரல்கொடுப்பவர் .

Image
 எமது தலைவர் றிசாட் பதியுதீன் எப்போதும் மக்களுக்காகவே குரல்கொடுப்பவர் .   எமது மக்களால் அனுப்பப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் காபட் வீதிகளையும் கொங்கிறீட் வீதிகளையும் பெற்றுக்கொண்டு கொந்துராத்து காரர்களாகவும் தரகர்களாகவும் மாறியுள்ளனர்..எமது தலைவர் றிசாட் பதியுதீன் அப்படிப்பட்டவர் அல்லர்.எப்போதும் மக்களுக்காகவே குரல்கொடுப்பவர் என  நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர்  தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச  சபையின் ஏப்ரல் மாதத்திற்கான 04 ஆவது சபையின்  37ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு வியாழக்கிழமை(29) மாலை நிறைவடைந்த பின்னர் இரவு    நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர்    தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது இந்த நாட்டில் தற்போது பேசுபொருளாக இருக்கின்ற விடயம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீனின் கைதாகும்.இவ்விடயத்தில் பல்வேறு விடயங்களை உற்றுநோக்க வேண்டியுள்ளது.குறிப்பாக அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.இந்த நாட்டில் பல காலமாக அம...

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதோர் மீது நடவடிக்கை ! சுகாதார தரப்பினர் அதிரடி . # மாளிகைக்காடு

Image
 சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதோர் மீது நடவடிக்கை ! சுகாதார தரப்பினர் அதிரடி . # மாளிகைக்காடு   நூருல் ஹுதா உமர் நாட்டில் பரவலாக பரவி வரும் கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் காரைதீவு மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்ஸீமா வஸீரின் ஆலோசனைக்கு இணங்க காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய  மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் டீ. வேல்முருகு, பொது சுகாதார பரிசோதகர்களான கே.ஜெமீல், எம்.எம்.எம். சப்னூஸ் ஆகியோர் இணைந்து நேற்று (29) மாலை திடீர் பரிசோதனை நடவடிக்கையில் இறங்கினர். இதன்போது காரைதீவு, மாளிகைக்காடு ஆகிய இடங்களில் சுகாதார வழிமுறைகளை பேணாதோர், முகக் கவசம் அணியாதோர் என பலரும் நிறுத்தப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கும் இதன்போது திடீர் விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு அந்த உணவகங்களில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

ரிஷாத் பதியுதீன் கைதுக்கு நிந்தவூர் பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்.

Image
 ரிஷாத் பதியுதீன் கைதுக்கு நிந்தவூர் பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்.     பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நிந்தவூர் பிரதேச  சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி  உறுப்பினர்கள்  சபை அமர்வுக்கு கருப்புச்சால்வை  அணிந்து சமூகமளித்திருந்ததுடன் தொடர்ந்து சபையில் ஏகமனதாக  கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச  சபையின் ஏப்ரல் மாதத்திற்கான 04 ஆவது சபையின்  37ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு வியாழக்கிழமை(29) மாலை   நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர்  தலைமையில் நடைபெற்றது.   இதன்போது   மத அனுஸ்டானம்  இடம்பெற்ற பின்னர்   2021 மார்ச்    மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல் , 2021  மார்ச்   மாதத்திற்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்தல்,   தவிசாளர் எம் .எ . எம் . தாஹிர்  உரை ,என்பன தொடர்ச்சியாக  இடம்ப...

மதிலுக்கு மேலால் சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதிகள் கைப்பற்றப்பட்டன.

Image
 மதிலுக்கு மேலால் சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதிகள் கைப்பற்றப்பட்டன.   களுத்துறை சிறைச்சாலைக்கு மேலாக வீசப்பட்ட இரண்டு பொதிகளில் போதைப்பொருள், அலைபேசி மற்றும் அலைபேசி உதிரிபாகங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. ஹெரோய்ன் என சந்தேகிக்கப்படும் 158 பக்கெற்றுகள், 20 கிராம் கஞ்சா, இரண்டு அலைபேசிகள் மற்றும் 30 போதை வில்லைகள் என்பன ஒரு பொதியில் இருந்துள்ளன. மற்றைய பொதியில் இருந்து மேலும் 06 அலைபேசிகள், இரண்டு அலைபேசி சாஜர்கள், புகையிலை  உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்கள், மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள றிசாத்துக்கு ஆதரவாக கல்முனை மாநகர சபையில் கருப்பு சால்வை போராட்டம்.

Image
 கைது செய்யப்பட்டுள்ள றிசாத்துக்கு ஆதரவாக கல்முனை மாநகர சபையில் கருப்பு சால்வை போராட்டம்.   நூருள் ஹுதா உமர். அண்மையில் கைதுசெய்யப்பட்டு விசாரணை காவலில்  வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் சகலரும் கருப்புச்சால்வை அணிந்து தமது எதிர்ப்பை இன்று சபை அமர்வில் வெளிக்காட்டினர். கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று (28) மாலை சபா மண்டபத்தில் கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கிப்பின் தலைமையில் கூடிய போதே இவ்வெதிர்ப்பை வெளிக்காட்டினர். கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான பீ. எம். ஷிபான், எம்.ஐ.எம்.ஏ. மனாப், எ.சீ.எம். முபீத், ஏ.ஆர். பஸீரா, ஏ.சமீனா ஆகியோர் சால்வை அணிந்து எதிர்ப்பை வெளிக்காட்டியதுடன் முதல்வர் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும், தேசிய நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினரும் கருப்பு பட்டி அணிந்து கைதுக்கு எதிரான மக்கள் காங்கி...

மட்டக்களப்பில் சுகாதார நடைமுறைகளை பேணாதவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை.

Image
 மட்டக்களப்பில் சுகாதார நடைமுறைகளை பேணாதவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை.    வா.கிருஸ்ணா, எம்.எம்.அஹமட் அனாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளைப் பேணாதவர்களை அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தும் செயற்பாடுகள், இன்று (28) முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு நகருக்குள் வருவோரும் செல்வோரும் சுகாதார நடைமுறைகளைப் பேணும் வகையில் இறுக்கமான கட்டளைகளை சுகாதாரப் பிரிவினரும் பொலிஸாரும் வழங்கிவரும் நிலையில், அவற்றை உதாசிக்கும்  செயற்பாடுகளை சிலர் மேற்கொண்டுவருகின்றனர். இதனை கருத்திக்கொண்டு, வீதி சோதனைகளை மேற்கொண்ட பொலிஸாரும் சுகாதார பிரிவினரும் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் முககவசங்களை சரியான முறையாக அணியாதவர்களை மேற்படி அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தினர். அத்துடன், மட்டக்களப்பு நகரில் உள்ள வங்கிகளில் கடமையாற்றும் வங்கி உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டனர். இந்தப் பரிசோதனைகள், மட்டக்களப்பு சுகாதார திணைக்களத்தால் மட்டக்களப்பு அரசடி சந்தியில் முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸாரும் சுகாதார பிரிவினரும்...

கிளி பிடித்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நால்வர் கைது.

Image
 கிளி பிடித்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நால்வர் கைது.    சிங்கராஜ வனத்தின் எல்லைப்பகுதியில் நாட்டிலிருந்து அழிந்து வரும் அபூர்வ கிளி இனங்களை பிடித்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நால்வரை வனப் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சிங்கராஜா வனாந்தரப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் லங்காபேரி மற்றும் அமரசேகரபுர பிரதேசத்தில் வசித்து வருபவர்கள் என சிங்கராஜ வனாந்தர பாதுகாப்பு அதிகாரி ஏ.ஆர்.பி.லியனகே தெரிவித்தார். "அலக்சாண்டரியன் பரகீட்  "எனும் கிளி இனங்கள் இலங்கையில் மிகவும் அரிதாகக் கிடைக்கும் பறவை இனங்களாகும். இப்பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் வனாந்தரத்தில் நுழைந்து இவற்றைப் பிடித்து அதிகவிலைக்கு விற்றுப் பணம் சம்பாதித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது. இதுதொடர்பில் நீண்ட நாட்களாக முறைப்பாடுகள் கிடைத்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Image
 ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்   கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை, தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருக்காது விடுதலை செய்யுமாறு கோரி, வன்னி மக்கள் வவுனியா கச்சேரிக்கு முன்னாள் இன்று (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   சுலோக அட்டைகளையும், பதாதைகளையும் தாங்கியவாறு, சமூக இடைவெளிகளை பின்பற்றி, சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாகவே, அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.   எந்தவிதமான, காரணங்களும் கூறாமல், வெறுமனே ஊகத்தின் அடிப்படையில், தமது பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டது, நீதிக்கு முரணானது எனவும், சட்டத்துக்கு விரோதமானது எனவும் அவர்கள் கோஷமிட்டனர்.   “உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ரிஷாட் பதியுதீனுக்கு எந்தவிதமான தொடர்புமில்லை என, அரச இயந்திரத்துக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் நன்கு தெரிந்திருந்த போதும், முன்னர் பல விசாரணைகளிலிருந்து அவர் நிரபராதி என வெளிப்படுத்தப்பட்டிருந்த போதும், வேண்டுமென்றே, எவரையோ திருப்திப்படுத்...

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் இலங்கை முன்னேற்றம்.

Image
 கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் இலங்கை முன்னேற்றம்.   ஏப்ரல் 26 முதல் 29 வரை நடைபெற்று வருகின்ற 77 வது அமர்வின் தொனிப்பொருள் 'ஆசிய- பசுபிக் பிராந்திய ஒத்துழைப்பு, முன்பை விட வலுவான நெருக்கடி மூலம் கட்டியெழுப்புதல்' என்பதாகும். இந்த அமர்பில் கொவிட் -19 தொற்றுநோய் பற்றி பிரதானமாக விவாதிக்கப்பட்டு வருவதுடன் காலநிலை மாற்றம், கடன் நிவாரணம், முதலீடு, சம சுகாதார அணுகல், நிலையான வளர்ச்சி மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் கலந்துரையாடப்படும். அமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது: ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவின் 77ஆவது அமர்வில் உரையாற்றக் கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். தற்போது காணப்படும் சவால்களுக்கு மத்தியில் இந்த அமர்வில் கலந்து கொள்ள கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும். தொற்று நிலைமைக்கு மத்தியில் பொருளாதார மற்றும் சமூக நிலையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் மூலோபாய தி...

இலங்கையில் தயாரிக்கபட்ட கொரோனா வைரசை அழிக்கும் முகக்கவசம் விற்பனைக்கு வந்தது.

Image
 இலங்கையில் தயாரிக்கபட்ட கொரோனா வைரசை அழிக்கும் முகக்கவசம் விற்பனைக்கு வந்தது.   பேராதனை பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்ட கொவிட் வைரஸை அழிக்கும் உலகின் முதலாவது முகக் கவசங்களை இன்று முதல் சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியுமென வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.  யுஏ99 என இந்த முகக் கவசத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த முகக்கவசம் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவையிடம் நேற்று கையளிக்கப்பட்டது. இந்த முகக் கவசத்திற்கான சர்வதேச சந்தையின் தேவைப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுமார் 2 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் கைது. #வாழைச்சேனை பொலிஸ் பிரிவு

Image
 சுமார் 2 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் கைது. #வாழைச்சேனை பொலிஸ் பிரிவு     எஸ்.எம்.எம்.முர்ஷித்   வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் வைத்து 1850 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று மாலை (26.04.2021) கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் பயணித்த பல்ஸர் மோட்டார் சைக்கிளும் வாழைச்சேனை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தார்.   கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிறைந்துரைச்சேனை தரிக்கா வீதியை சேர்ந்த 48 வயதுடைய சந்தேக நபர் என்றும் இவர் தொடர்ந்தும் இவ்வாறு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனைப் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே இச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவருடன் தொடர்புடைய வேறுநபர்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப...

இனவாதிகளை அல்லது கர்தினால் மெல்கமை திருப்திப்படுத்தவா றிசாத் கைது செய்யப்பட்டார் ??

Image
 இனவாதிகளை அல்லது கர்தினால் மெல்கமை திருப்திப்படுத்தவா றிசாத் கைது செய்யப்பட்டார் ??    இனவாதிகளை திருப்தப்படுத்தவோ அல்லது கர்தினால் மெல்கமை திருப்திப்படுத்தவா முன்னால் அமைச்சர் றிசாதை கைது செய்தார்கள் என முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கேள்வி எழுப்பியுள்ளார்.  கிண்ணியாவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் றிசாத் பற்றியோ அவரது சகோதரர் பற்றியோ அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பற்றியோ எந்தவித குற்றங்களும் முன்வைக்கப்படவில்லை ஆனால் இப்படியாக நடந்தேறியுள்ளது

ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டமைக்கும், அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

Image
 ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டமைக்கும், அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.    ரிஷாத் பதியுதீன் எம்.பி மற்றும் அவரது சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டமைக்கும், அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையும் அல்ல. சட்டம் தன் கடமையைச் செய்கிறது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும், அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.  இது தொடர் பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் அமைச் சர் ரிஷாத் பதியுதீனும், அவரது சகோ தரர் ரியாஜ் பதியுதீனும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர் புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்க ளிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவின ரும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின ரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த கைது நடவ டிக்கைக்கும் ,அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை . இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையும் அல்ல. எதிர்க்கட்சியினரும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் ரிஷாத் மற்றும் அவரது சகோதரர் கைது தொடர்பில் அரசு மீது வீண்பழி சுமத்த...

நாடு முன்னேறுவதை ஜே.வி.பியும் வேறு சில தரப்பினரும் விரும்பவில்லை.

Image
 நாடு முன்னேறுவதை ஜே.வி.பியும் வேறு சில தரப்பினரும் விரும்பவில்லை.    நாடு முன்னேறுவதை ஜே.வி.பியும் வேறு சில தரப்பினரும் விரும்பவில்லை. அதனாலே அவர்கள் சில பிரச்சினைகளில் தொங்கிக் கொண்டு அரசியல் செய்வதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நாடு முன்னேற்றமடைந்து பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் கடந்த 20 -25 வருடங்களாக அரசியல் செய்து வரும் அவர்களின் அரசியல் வாழ்வு நிறைவடைந்துவிடும் என்று அவர்களுக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தை பிசாசு போல காண்பித்து அரசியல் இலாபம் பெற எதிரணி முயற் சிக்கிறது. துறைமுக நகரத்தினூடாக வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் கிடைக்கும். பல நாடுகள் இவ்வாறு தான் முன்னேறியுள்ளன. நாட்டின் அனைத்து சட்டங்க ளுக்கும் உட்பட்டதாக இந்த நகரம் செய்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த துறைமுக நகரம் பெரும் வாய்ப்பாக இருக்கும். இந்த நிலையிலே ஜே.வி.பியும் சில தரப்பின ரும் இதனை எதிர்க்கின்றனர். சம்பிக்க ரணவக்க அமைச்சராக இருந்த போது துறைமுக நகரின் 51 வீதத்தை சீனாகம் பனிக்கும் 49 வீதத்தை அரசாங்கத்திற்கு ம் கிடைக்கும் வகையில் யோச...

#முக கவசம் #Face mask அணியாமல் பிடிபட்டால் தண்டப்பணம் அறவிடுவதோடு

Image
 முக கவசம் அணியாமல் யாரும் வெளியே செல்ல வேண்டாம்.!! முக கவசம் அணியாதவர்களை கண்காணிக்க விசேட படை அதாவது சிவில் உடையில் தரித்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களோடு போக்குவரத்து பொலிசாருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  #முக கவசம் #Face mask அணியாமல் பிடிபட்டால் தண்டப்பணம் அறவிடுவதோடு 14 நாட்கள் தனிமைப்படுத்தி  வைக்கப்படும். #கவனத்தில்_கொள்வோம்

புர்கா தடைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.

Image
 புர்கா தடைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.   சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவான முகக்கவசங்களை தவிர்ந்த புர்கா - நிக்காப்  உள்ளிட்ட முகத்தை மறைக்கும் சகல ஆடைகளையும்   தடைசெய்வது குறித்து,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ரமழான் மாதத்தில் முஸ்லிம் சிறைக்கைதிகள் தமது மதக் கடமைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு மகஜர் .

Image
 ரமழான் மாதத்தில் முஸ்லிம் சிறைக்கைதிகள் தமது மதக் கடமைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு மகஜர் .   - இக்பால் அலி- ரமழான் மாதத்தில் முஸ்லிம் சிறைக்கைதிகள் தமது மதக் கடமைகளைச் சரிவரச் செய்வதற்கான உரிய வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சர் உயர் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்து மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளதாக அகில இலங்கை வை. எம். எம். ஏ பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரிஸ்மி தெரிவித்துள்ளார் சிறையிலுள்ள முஸ்லிம் சிறைக்கைதிகளுக்கு இந்த ஆண்டு தமது  மதக் கடமைகளைச்  சரிவரச் செய்வதற்கு உரிய வசதிகள் வழங்க மறுக்கப்பட்டுள்ளன. அதற்கான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு என்று  சிறைக்கைதிகளின் பெற்றோர்கள் வை. எம். எம். ஏ பேரவைக்கு முன் வைத்த முறைப்பாட்டை அடுத்து நீதி அமைச்சர் அலி சப்ரி, சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மற்றும் உயர் அதிகாரிகளுக்கு  சுட்டிக் காட்டி  மகஜர் கடிதம் ஒன்றை அனுப்பியுளள்ளதாக அகில இலங்கை வை. எம். எம். ஏ பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரிஸ்மி இதனைத் தெரிவித்தார். அவர் அனுப்...

கைது

Image
 முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் கைது செய்யப்பட்ட அதிகமானவர்கள் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.   தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறுபவர்களைக் கைதுசெய்வது தொடர்பில், பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அமைய,  நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறிய 108 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முகக் கவசம் அணியாமை, சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமை உள்ளிட்ட குற்றங்களுக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார் இதற்கமைய, கடந்தாண்டு ஒக்டோபர் 30ஆம் திகதியிலிருந்து ​நேற்று வரை 3,755 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இதில் அதிகமானவர்கள் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரிஷாத் குற்றவாளி அல்ல! அவர் ஒரு முன்மாதிரியான அரசியல் தலைவர். சம்பிகா ரணவக தெரிவ்ப்பு.

Image
 ரிஷாத் குற்றவாளி அல்ல! அவர் ஒரு முன்மாதிரியான அரசியல் தலைவர். சம்பிகா ரணவக தெரிவ்ப்பு.    ரிஷார்ட் குற்றவாளி அல்ல! அவர் ஒரு முன்மாதிரியான அரசியல் தலைவர் என  சம்பிக ரணவக தெரிவித்துள்ளார். மேலும்  இலங்கையில் உள்ள முஸ்லிம்களைப் பற்றி நான் எழுதிய  அல் ஜிஹாத்  அல்கொய்தா போன்ற புத்தகங்களில் உள்ள உண்மைகளை தர்க்கரீதியான முறையில் விளக்க முடியுமானால் ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்  என்கிறார் படாலி சம்பிகா ரணவக்க.

ரிஷாட் பதியுதீன் மற்றும் அவர் சகோதரரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அணுமதி வழங்கப்பட்டது.

Image
 ரிஷாட் பதியுதீன் மற்றும் அவர் சகோதரரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அணுமதி வழங்கப்பட்டது.    பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகிய இருவரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குறித்த இருவரையும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

இலங்கை கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும் நிருவாகத்தின் ஊழல்வாதிகள் உள்ளதால் கிரிக்கெட் அணி பாரிய வீழ்ச்சியை கண்டு வருகின்றது.

Image
 இலங்கை கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும் நிருவாகத்தின் ஊழல்வாதிகள் உள்ளதால் கிரிக்கெட் அணி பாரிய வீழ்ச்சியை கண்டு வருகின்றது.   எஸ்.எம்.எம்.முர்ஷித் இலங்கை கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும்  நிருவாகத்தின் ஊழல்வாதிகள் உள்ளதால் கிரிக்கெட் அணி பாரிய வீழ்ச்சியை கண்டு வருகின்றது என முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். கல்குடா பாசிக்குடாவில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் - இலங்கை கிரிக்கெட் அணியில் நான் தலைமைத்துவம் வகித்த சமயத்தில் நிருவாகத்தில் சிறந்தவர்கள் இருந்தார்கள். இதன் மூலம் எங்களது திறமைகளை வெளிக் கொணர்ந்து உலக கிண்ணத்தை கைப்பற்றினோம். ஆனால் தற்போது இலங்கை கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும் கிரிக்கட் நிருவாகத்தின் ஊழல்வாதிகள் அதிகம் உள்ளதால் இலங்கை கிரிக்கட் அணி பாரிய பின்னடைவை சந்தித்து வருகின்றது. எனவே இதில் விளையாட்டு அமைச்சர் கூடிய கவனம் செலுத்தி கிரிக்கட்டை முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நான...

இலங்கை ஒரு வலுவான பொது சுகாதார திட்டத்தை கொண்டுள்ளது.

Image
 இலங்கை ஒரு வலுவான பொது சுகாதார திட்டத்தை கொண்டுள்ளது.   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (26) காணொளி தொழில்நுட்பம் ஊடாக ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவின் 77ஆவது அமர்வில் உரையாற்றினார்.  ஏப்ரல் 26 முதல் 29 வரை நடைபெறவிருக்கும் 77 வது அமர்வின் தொனிப்பொருள் ´ஆசிய-பசுபிக் பிராந்திய ஒத்துழைப்பு, முன்பை விட வலுவான நெருக்கடி மூலம் கட்டியெழுப்புதல்´ என்பதாகும்.  இந்த அமர்பில் கொவிட் -19 தொற்றுநோய் பற்றி பிரதானமாக விவாதிக்க்பபட்டு வருவதுடன், காலநிலை மாற்றம், கடன் நிவாரணம், முதலீடு, சம சுகாதார அணுகல், நிலையான வளர்ச்சி மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் கலந்துரையாடப்படும்.  அமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்துக் கொண்டு பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,  ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவின் 77ஆவது அமர்வில் உரையாற்ற கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.தற்போது காணப்படும் சவால்களுக்கு மத்தியில் இந்த அமர்வில் கலந்து கொள்ள கிடைத்தமை குற...

மேலும் 15 பாடசாலைகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பூட்டு.

Image
 மேலும் 15 பாடசாலைகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பூட்டு.   சியம்பலாண்டுவ, மொனராகலை, புத்தல ஆகிய கல்வி வலயங்களில் இயங்கி வந்த 15 பாடசாலைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மூடப்படுவதாக மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார். Siva Ramasamy

1.850 கிலோ கிராம் கேரள கஞ்சா

Image
 1.850 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் பிறைந்துரைச்சேனையில் ஒருவர் கைது வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனையில் கேரள கஞ்சாவுடன் 48 வயதுடைய ஒருவர் இன்று 26.04.2021ம் திகதி திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்டவர் காத்தான்குடியைப் பிறப்பிடமாகவும் பிறைந்துரைச்சேனையில் திருமணம் முடித்தவர் என்பதுடன், இவரிடமிருந்து சுமார் 1.850 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனைப் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், இவருடன் சம்பந்தப்பட்ட ஏனையவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் கைது செய்தவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் சேகரிக்கப்பட்டுள்ள புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட...

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கபட மாட்டது.

Image
 சமையல் எரிவாயு விலை அதிகரிக்கபட மாட்டது.   சமையல் எரிவாயு விலையினை அதிகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும்  எடுக்கப்பட மாட்டாது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார் அத்துடன், சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிறுவனங்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், நாட்டில் சமையல் எரிவாயு விலையினை அதிகரிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. இதன்படி, 12 தசம் 5 கிலோகிராம் உள்நாட்டு சமையல் எரிவாயு விலையினை குறைந்தபட்சம் 350 ரூபாவினால் அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

சுகாதார வழிமுறைகளை மீறுவோரை கைது செய்ய சிவில் உடையில் பொலிஸார்..

Image
 சுகாதார வழிமுறைகளை மீறுவோரை கைது செய்ய சிவில் உடையில் பொலிஸார்..   சுகாதார ஆலோசனை வழிகாட்டல்களை மீறும் நபர்களை கைது செய்வதற்கான  நடவடிக்கையில் சிவில் உடையில் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டில் சில பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் நிலை காணப்படுகின்றது. இதனை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொவிட் வைரஸ் பரவலை அடுத்து சிறிய அளவிலான கொவிட் கொத்தணி ஏற்படும் அபாயம் உள்ளது. புதிதாக வைரஸ் கொத்தணி உருவாவதை கவனத்தில் கொண்டு தற்பொழுது பொலிஸார் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகளை துரிதமாக விரிவுபடுத்துவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இன்றைய தினத்தில் சிவில் உடையில் பொலிஸார் இந்த கடமையில் ஈடுபட்டனர். வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். சுகாதார ஆலோசனை வழிகாட்டிகளை பொதுமக்கள் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசத்தை அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சுகாதார அதிகாரிகளின்...

பொதுபல சேனாவை ஏன் தடை செய்யவில்லை ? முஷாரப் M.P கேள்வி

Image
 பொதுபல சேனாவை ஏன் தடை செய்யவில்லை ? முஷாரப் M.P கேள்வி   (இராஜதுரை ஹஷான்) தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிபை ஏற்படுத்தும் வகையில் பொதுபல சேனா அமைப்பு செயற்படுகிறது. ஆகவே அவ்வமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போதும் இதுவரையில் பொதுபல சேனா அமைப்பு தடை செய்யப்படவில்லை . மாறாக அறிக்கையில் குறிப்பிடப்படாத பல அமைப்புக்களே தடை செய்யப்பட்டுள்ளன என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார். குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் என பெயர் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் , பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கைகளும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ...
Image
பிறந்தநாளுக்கு போதைப்பொருள் விருந்துபசாரம் நடத்திய ஆசிரியையும் 15 இளைஞர்களும் கைது.   வெள்ளவத்தை பிரதேசத்தில் மகனின் பிறந்த நாளை  முன்னிட்டு போதைப்பொருள் விருந்துபசாரம் ஒன்றை நடத்திய சர்வதேச பாடசாலையொன்றின் ஆசிரியை உட்பட 15 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யபட்டவர்களில் அவரது 02 பிள்ளைகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் கைது செய்யப்படும் போது அவர்களிடமிருந்து ஐஸ், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் போன்றன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வெள்ளவத்தை பகுதியில் வீடொன்றில் மதுபான விருந்தொன்று நடைபெறுவதாக கிடைத்த தகவலின்படி இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆசிரியை 42 வயதானவர் என்பதுடன், ஏனையவர்கள் 18-20 வயதுக்குட்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது. SIVA Ramasamy

முன்னால் அமைச்சர் றிசாதின் கைது தொடர்பில் அப்துல்லா மஹ்ரூப் சீற்றம்.

Image
 முன்னால் அமைச்சர் றிசாதின் கைது தொடர்பில் அப்துல்லா மஹ்ரூப் சீற்றம்.   முன்னால் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைது அப்பட்டமான  சட்டமீறல் என மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார். கிண்ணியாவில் இன்று (26)இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில் 24ம் திகதி அன்று நள்ளிரவு திடீர் என கைது செய்யப்பட்டது ஒரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நாடாளுமன்ற உறுப்பினராக வழி நடாத்தப்படாமல் முறையற்ற விதத்தில் சபாநாயகரின் அனுமதி பெறப்படாமலும் இந்த கைது இடம் பெற்றிருக்கிறது . கடந்த ஒன்றரை வருட காலமாக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த நிலையில் ரிசாட் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர்கள் குற்றமற்றவர்கள் என அறிக்கைகள் வெளிவந்த போதும் கட்டுக்கடங்காத நிலையை தோற்றுவித்துள்ளனர்கள் இந்த அடாவடித்தன கைதுகளுக்கு எதிராக மூன்று நாட்களுக்குள் விடுதலையாக ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பார்க்கிர் மார்க்கார்,முஜிபுர் ரஹ்மான்,இம்ரான்,கபீர் கசீம் மற்றும் ஸ்ர...

முகக்கவசம் அணியாத 177 பேர் கைது.. ஒரே நாளில் கைதான அதிக எண்ணிக்கையாக பதிவு.

Image
 முகக்கவசம் அணியாத 177 பேர் கைது.. ஒரே நாளில் கைதான அதிக எண்ணிக்கையாக பதிவு.   முகக் கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளி, சுகாதார வழிமுறைகளை மீறிய 177 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களில் பெரும்பாலானோர், 50 பேர் களுத்துறை மாவட்டத்தில் இருந்து கைது செய்யப்பட்டனர், 45 பேர் கம்பாஹாவிலிருந்து கொழும்பிலிருந்து 39 பேரும் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் திகதி இந்த நடவடிக்கை தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் கைது செய்யப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் இதுவாகும் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். முகக் கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளி பேனாமல் இருந்ததற்காக இதுவரை 3,674 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்ட COVID பரவல் அசாதாரண சூழ்நிலை

Image
 கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் விடுக்கும் எச்சரிக்கை.   எப்.முபாரக்  நாட்டில் ஏற்பட்ட COVID பரவல் அசாதாரண சூழ்நிலை  காரணமாக பின்வரும் விடயங்களில் அதிக கவனம் செலுத்தவும். 1. சமய அனுஷ்டானங்களின் போது கலாச்சார திணைக்களத்தினால் வழங்கப்பட்ட நடைமுறைகளை கட்டாயம் கடைபிடித்தல் வேண்டும். 2. மே 31 அல்லது மறு அறிவித்தல் வரை தனியார் வகுப்புகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்துவதை முற்றுமுழுதாக தவிர்த்தல் வேண்டும். 3. இப்தார் நிகழ்வுகள், பொது நிகழ்வுகள் , களியாட்டங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை முற்றுமுழுதாக தவிர்த்தல் வேண்டும். 4. வீதியோரக் கடைகள் மற்றும் பண்டிகை கால விசேட கடைகளை சனநெரிசலற்ற இடத்தில் அமைத்தல் அல்லது அவற்றில் இருந்து விலகிக் கொள்ளல் வேண்டும்.  5. தேவையற்றதும் அனாவசியமானதுமான வெளி பயணங்களை முற்றுமுழுதாக தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். 6. வர்த்தக நிலையங்கள் விசேடமாக பண்டிகைக்கால கடைகள் மற்றும் வீடுகளில் வர்த்தகம் செய்வோர் மற்றும் நுகர்வோர் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் இல்லாவிடில் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்ட...

80 ஹெக்டயரில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம். #அம்பாறை

Image
 80 ஹெக்டயரில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம். #அம்பாறை   பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) அம்பாறை மாவட்டத்தில் சுமார் 80 ஹெக்டயர் விவசாய நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை பண்ணப்படவுள்ளதாக மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தெரிவித்துள்ளார். மாவட்டத்திலுள்ள டீ.எஸ். சேனநாயக்க சமுத்திரம் மற்றும் ஏனைய நீர்தாங்கு நிலைகளின் விவசாயிகளுக்கு தேவையான நீர் காணப்படுவதுடன் மாவட்டத்திலுள்ள சகல விவசாயக் காணிகளிலும் நெற்செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று, ஒலுவில், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நிந்தவூர், நாவிதன்வெளி போன்ற பிரதேசங்களில் தற்போது விவசாயிகள் விதைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளும் விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் மே மாத இறுதிக்குள் விதைப்பு நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. -

ரிசாத் பதியுதீன், உயிர்த்தஞாயிறு தாக்குதலை மேற்கொள்வதற்கான நிதி கிடைப்பதற்கு உதவினார் ; ஆதாரங்கள் உள்ளன.

Image
 ரிசாத் பதியுதீன், உயிர்த்தஞாயிறு தாக்குதலை மேற்கொள்வதற்கான நிதி கிடைப்பதற்கு உதவினார் ; ஆதாரங்கள் உள்ளன.   நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் உயிர்த்தஞாயிறு தாக்குதலை மேற்கொள்வதற்கான நிதி கிடைப்பதற்கு உதவினார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் குறித்து சிஐடியினரும் பயங்கரவாத விசாரணை பிரிவினரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பின்னரே நாடாளுமன்ற உறுப்பினரையும் அவரது சகோதரரையும் கைதுசெய்தனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள இருவரும் தற்கொலைகுண்டுதாரிகளுடன் தொடர்புகளை பேணியமை குறித்தும் அவர்களிற்கு நிதி கிடைப்பதற்கு உதவியமை குறித்தும் ஆதாரங்கள் உள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார். பொலிஸார் இது தொடர்பான ஆவணங்களை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் கிடைக்கும்போதெல்லாம் விசாரணைகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புகளின்

Image
 தடை செய்யப்பட்ட அமைப்புகள் பல நல்ல பணிகளையே செய்துள்ளன. - இந்த இயக்கத்தவர்கள் முழுமையாக தடை செய்யப்பட்டவர்களாக கருதப்பட மாட்டார்கள் - அதன் உறுப்பினர்கள் அச்சப்படத் தேவையில்லை.   தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புகளின் உறுப்பினர்கள் தொடர்பில் எடுக்கவுள்ள அடுத்த கட்ட செயல்பாடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், புலனாய்வு தகவல்களை அடிப்படையாக வைத்தே UTJ, CTJ, ACTJ, SLTJ மற்றும் சுப்பர் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் தடை செய்தோம்.  புலனாய்வு தகவல்களை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்திலும் மேலும் சில அமைப்புகள் தடை செய்யப்படலாம்.   இந்த அமைப்புகளை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு மத்தியில் பெண்கள் அமைப்புகள் இருக்கிறது. இவர்கள் நல்ல பல பணிகளை மேற்கொள்கிறார்கள். சமூக பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். மனிதர்களுக்கு உதவிகளை வழங்கிருக்கிறார்கள். இது போன்ற பல பணிகளையும் செய்திருக்கிறார்கள். இது போன்ற இயக்கத்தவர்கள் முழுமையாக தடை செய்யப்பட்டவர்களாக கருதப்படமாட்டார்கள். அந்த அமைப்புகள் கொண்டிருந...
Image
 பாராளுமன்றை அமர்வை நடத்த ஒரு நிமிடத்திற்கு ஒரு லட்சம் செலவிடப்படுகிறது.   பாராளுமன்றை அமர்வை நடத்தும் போது  ஒரு நிமிடத்திற்கு சுமாஅர் ஒரு லட்சம் செலவிடப்படுகிறது என  சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கூறினார். ஹரீன் பெர்னாண்டோபினால் சபையில் ஏற்பட்ட அமளிதுமளியின் போது 47 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரரை விசாரிக்க 90 நாள் தடுப்பு உத்தரவை பெற வாய்ப்பு.

Image
 ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரரை விசாரிக்க 90 நாள் தடுப்பு உத்தரவை பெற வாய்ப்பு.   முன்னாள் அமைச்சர் ரிஷாத் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை விசாரணை செய்ய குற்றவியல் புலனாய்வுத் துறை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் பயங்கர பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய தற்கொலை குண்டுவீச்சாளர்களுக்கு உதவியது என்ற குற்றச்சாட்டில் அவர்கள் இருவரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர். காவல்துறை செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போதைய 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு முடிந்ததும் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரரை மேலும் விசாரிக்க 90 நாள் தடுப்பு உத்தரவை புலனாய்வாளர்கள் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் இறுதி முடிவு அவரை விசாரிக்கும் அதிகாரியால் எடுக்கப்படும் என்று அவர் கூறினார். இதற்கிடையில், ரிஷாத் பதியுதீன் எம்.பி. மற்றும் ரியாஜ் பதியுடீன் சார்பில் ஒரு சட்ட அறிக்கையை வெளியிட்டுள்ள ருஷ்டி ஹபீப், ஈஸ்டர் சண்டே தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி வ...

ரிசாத் பதியுத்தீனின் கைது கண்டிக்கத்தக்கது.

Image
 ரிசாத் பதியுத்தீனின் கைது கண்டிக்கத்தக்கது.   நாட்டில் சட்டத்தின் ஆட்சி அதல பாதாளத்திற்குச் சென்றிருப்பதையே முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுத்தீனின் கைது எடுத்துக் காட்டுவதாகவும், அந்த ஜனநாயக விரோத நடவடிக்கை வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியது எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் முன்னாள் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, புனித ரமழான் மாதத்தில் நடுநிசியில் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுத்தீன் சபாநாயகரின் அனுமதியோ, நீதிமன்ற உத்தரவோ பெறப்படாமல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்திக் கைது செய்யப்பட்டுள்ளதையிட்டுக் கவலையடைகின்றேன். இவ்வாறான முறைகேடான அரசியல் உள்நோக்கம் கொண்ட கைதுகள் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குறியாக்குகின்றன. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டு அறிக்கைகள் கையளிக்கப்பட்ட பின்னரும், பேராயர் போன்றோரும்...