Posts

Showing posts from October, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு எமது அரசில் சுயாதீன விசாரணை நடத்தப்படும்

Image
 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு எமது அரசில் சுயாதீன விசாரணை நடத்தப்படும்   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு தமது அரசில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறினார். கண்டியின் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர்  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் பல்வேறு மட்டங்களிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி  அரசில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.

ஞானசார தேரர் பதவியில் நீடித்தால் நான் பதவி விலகுவேன் ; அலி சப்ரி

Image
 ஞானசார தேரர் பதவியில் நீடித்தால் நான் பதவி விலகுவேன் ; அலி சப்ரி   ஞானசார தேரர் ஜனாதிபதி செயலணியின் தலைவர்  பதவியில் தொடர்ந்து நீடித்தால் தன்னால் நீதி அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது என  நீதி அமைச்சர் அலி சப்ரி திட்டவட்டமாக கூறி உள்ளதாக தேஷய பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது. ஞானசார தேரரை ஜனாதிபதி செயலணியின் தலைவராக  நியமித்துள்ளமை தொடர்பில் தன்னிடம் ஆலோசனை பெறவில்லை என கூறி உள்ள அவர் ஞானசார தேரரரின் நியமனம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளார். எதிர்வரும் நாட்களில் இதற்கு தீர்வு கிட்டாத பட்சத்தில் அவர் பதவி விலகுவார் என கூறப்படுகிறது.

மின் துண்டிப்பு ஏற்படும் என அச்சம் வேண்டாம் ; அமைச்சர்

Image
 மின் துண்டிப்பு ஏற்படும் என அச்சம் வேண்டாம் ; அமைச்சர்   மின் துண்டிப்பு ஏற்படும் என யாரும் அச்சப்பட  வேண்டாம் என  அமைச்சர் காமினி ளொகுகெ குறிப்பிட்டார். எதிர்வரும் 3’ம் திகதி மின்சார சபை ஊழியர் சங்கங்கள் சில நாடுதழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் 4  பிரபல தொழிற்சங்கங்கள் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் ஏதும் நடக்காது என  தம்மிடம் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் காமினி ளொகுகெ குறிப்பிட்டார்.

ஞானசார தேரரின் நியமனத்திற்கு எதிர்ப்பு வெளியிட கத்தோலிக்க பேராயர்கள் தீர்மானம் ?

Image
 ஞானசார தேரரின் நியமனத்திற்கு எதிர்ப்பு வெளியிட கத்தோலிக்க பேராயர்கள் தீர்மானம் ?   ஜனாதிபதி செயலணிக்கு ஞானசார தேரரை நியமித்தமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு கத்தோலிக்க பேராயர்கள் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைக்க உள்ளதாக நம்பகமாக அறியவருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் இந்த நியமனம் தொடர்பில் பேசப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி செயலணிக்கு ஞானசார தேரரை நியமித்தமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு கத்தோலிக்க பேராயர்கள் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைக்க உள்ளதாக நம்பகமாக அறியவருகிறது.

போலீசாரை தாக்கிய சம்பவத்தில் 10 பெண்களும், 8 ஆண்களும் கைது.

Image
 VIDEO : போலீசாரை தாக்கிய சம்பவத்தில் 10 பெண்களும், 8 ஆண்களும் கைது.   மொரட்டுவை - மாதங்கஹவத்தை பகுதியில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் 10 பெண்களும், 08 ஆண்களும் உள்ளடங்குவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் இரண்டு தரப்பினருக்கு இடையேயான மோதல் சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்றிரவு குறித்த காவல்துறை உத்தியோகத்தர்கள் அங்கு சென்றிருந்தனர். இதன்போது காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் தலையில் பலத்த காயத்திற்கு உள்ளான ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றுமொருவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

நபர் ஒருவரை கடத்தி ஒரு இலட்சம் கேட்ட மூவர்.. #கொழும்பு - கிராண்ட்பாஸ்

Image
 நபர் ஒருவரை கடத்தி ஒரு இலட்சம் கேட்ட மூவர்.. #கொழும்பு - கிராண்ட்பாஸ்   (எம்.மனோசித்ரா) கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் மோலவத்த  பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் கடந்த 21 ஆம் திகதி பொலிஸார் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட நபர்களால் வேனொன்றில் கடத்திச் செல்லப்பட்டு , மாபொல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டு ஒரு இலட்சம் ரூபா பணம் கோரிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு கடத்திச் சென்றவர்கள் குறித்த நபரின் வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு இலட்சம் ரூபா பணம் கோரியுள்ளதோடு , பொலிஸாருக்கு தகவல் வழங்க வேண்டாம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர். அதன் பின்னர் கடத்தப்பட்ட நபரின் மனைவி ஒரு இலட்சம் ரூபா பணத்தை கடத்தல்காரர்களால் வழங்கப்பட்ட தனியார் வங்கி கணக்கில் வைப்பிலிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கடத்தல்காரர்கள் குறித்த நபருக்கு 1000 ரூபாய் பணத்தை வழங்கி அவரை மாபொல பிரதேசத்தில் வீதியொன்றில் விட்டுச் சென்றுள்ளனர். பின்னர் குறித்த நபர் வீட்டுக்கு வருகை தந்துள்ளதோடு , பொலிஸாருக்கு தகவல் வழங்காமல் இருந்துள்ளார். பி...

ஒரே நாடு ஒரே சட்டம்' : மத்ரஸாக்கள், புர்கா, ஹலால் உள்ளிட்டவற்றுக்குத் தடைவிதிக்கப் படுமா ?

Image
 'ஒரே நாடு ஒரே சட்டம்' : மத்ரஸாக்கள், புர்கா, ஹலால் உள்ளிட்டவற்றுக்குத் தடைவிதிக்கப் படுமா ?  (நா.தனுஜா) 'ஒரே நாடு, ஒரே சட்டம்' கொள்கை தொடர்பான புதிய ஜனாதிபதி  செயலணியானது முஸ்லிம் விவாக, விவாகரத்துச்சட்டத்திருத்தம் தொடர்பில் மாத்திரமன்றி மத்ரஸாக்கள், புர்கா, ஹலால் உணவு, அரபுமொழி நூல்கள், மாடு அறுத்தல் ஆகியவற்றுக்குத் தடைவிதிக்கப்படக்கூடும் என்ற கரிசனைகளையும் தோற்றுவித்திருப்பதாக பெண்கள் தொடர்பான செயற்பாட்டு வலையமைப்பின் இணை ஸ்தாபகரும் பெண்கள் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஷரீன் அப்துல் ஸரூர் தெரிவித்துள்ளார்.  அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இலங்கைக்குள் 'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்ற கொள்கையை செயற்படுத்தும் வரைபைத் தயாரிப்பதற்கு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் அடங்கிய விசேட ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுவந்தவரும் அதன் காரணமா...

மக்கள் வங்கி கறுப்புப்பட்டியலுக்கு சென்றது எனக்கு தெரிவிக்கப்படவில்லை.

Image
 VIDEO : மக்கள் வங்கி கறுப்புப்பட்டியலுக்கு சென்றது எனக்கு தெரிவிக்கப்படவில்லை.   கொழும்பில் உள்ள சீன தூதரகத்தினால் மக்கள்  வங்கி மோசமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்பிப்பதற்கு முன்னர் கண்டியில் அமைந்துள்ள தளதாக மாளிகைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மக்களுக்கும் நாட்டுக்கும் நல்ல வரவு செலவு திட்டத்தை அறிவிக்கும் அதிர்ஷ்டசாலி தான் என்று நம்புவதாக அவர் கூறினார்..

கல்கிசையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 இந்தோனேசிய பெண்கள் உட்பட 6 பேர் கைது.

Image
 கல்கிசையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 இந்தோனேசிய பெண்கள் உட்பட 6 பேர் கைது.   கல்கிசை சேரம் மாவத்தை பிரதேசத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5  இந்தோனேசிய பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள், குறித்த பாலியல் தொழில் விடுதி முகாமையாளரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (29) பிற்பகல் வலான மோசடி ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 51, 35, 31 மற்றும் 28 வயதுடையவர்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். பிரதான சந்தேகநபரான விடுதி முகாமையாளர், குருநாகலை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேகநபர்கள் இந்தோனேசிய பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேரும் இன்று (30) கல்கிசை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10,11,12, 13 நவம்பர் 8ஆம் திகதி முதல் ஆரம்பம்.

Image
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10,11,12, 13 நவம்பர் 8ஆம் திகதி முதல் ஆரம்பம்.   நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10,11,12 மற்றும் 13ஆம் வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகளை நவம்பர் 8ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. முன்னதாக 200 மாணவர்களுக்கு குறைவான எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளை மாத்திரம் திறப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்திருந்த நிலையிலேயே தற்போது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் விவசாயிகளையும் அவர்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் – சஜித் பிரேமதாச

Image
 ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் விவசாயிகளையும் அவர்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் – சஜித் பிரேமதாச   எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அமையவுள்ள அரசாங்கம் விவசாயிகளையும் அவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்தும் என எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டு வரவுள்ள சட்டமூலம் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் சாசன வடிவில் இருக்கும். நாங்கள் ஒரு உழவர் சாசனத்தை அறிமுகப்படுத்துவோம், அதன் கீழ் நாங்கள் சட்டத்தை கொண்டு வருவோம், அதன் கீழ் விவசாயிகள் தங்கள் விருப்பப்படி உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கான உரிமைகள் உறுதி செய்யப்படும். அரசியலமைப்பினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் பட்டியலில் விவசாயிகளின் உரிமைகளையும் நாங்கள் உள்ளடக்குவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

அரச வங்கி உட்பட 12 துறைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் ; வர்த்தமானி வெளியீடு

Image
 அரச வங்கி உட்பட 12 துறைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் ; வர்த்தமானி வெளியீடு  நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து,  அஞ்சல், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.

சீனி தட்டுப்பாட்டுக்கு தீர்வு வழங்கி கிலோ 122 ரூபாவுக்கு வழங்குவதாக சதோச அறிவிப்பு.

Image
 சீனி தட்டுப்பாட்டுக்கு தீர்வு வழங்கி கிலோ 122 ரூபாவுக்கு வழங்குவதாக சதோச அறிவிப்பு.  துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 80 சீனி  கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதன் காரணமாக, எதிர்வரும் நாட்களில் ஒரு கிலோ சீனியை 122 ரூபாவுக்கு பொதுமக்களுக்கு வழங்க முடியுமென லங்கா சதொச தலைவர் ரியல் அத்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார். நாட்டில் தற்போது ஒரு கிலோ சீனி 145 ரூபா தொடக்கம் 160 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், விரைவில் சதொச ஊடாக பொதுமக்கள் தட்டுப்பாடின்றி சீனியை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தால் எதிர்காலம் எம்மை சபிக்கும்.

Image
 அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தால் எதிர்காலம் எம்மை சபிக்கும்.   (இராஜதுரை ஹஷான்) ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் ரணில் ஆகியோரது ஆட்சி  காலத்தை காட்டிலும் முறையற்ற வகையில் எமது அரசாங்கம் அமெரிக்க நிறுவனத்திற்கு யுகதனவி மின்நிலையத்தின் பங்குகள் விலைமனுகோரல் இல்லாமல் வழங்கியுள்ளது. என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சு பதவிகளை வகித்துக் கொண்டு அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தால் எதிர்காலம் எம்மை சபிக்கும். இதன் காரணமாகவே மக்களிடம் அனைத்தையும் பகிரங்கப்படுத்த தீர்மானித்துள்ளோம் என வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். புறக்கோட்டையில் உள்ள சொலிஸ் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற 'மக்கள் பேரவை' மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், யுகதனவி மின்நிலைய ஒப்பந்தத்தில் இரண்டு பிரதான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன . திறைச்சேரிக்கு சொந்தமான 40 சதவீத பங்குகளையும், புதிதாக நிர்மாணிக்கப்படும் மின்நிலையத்திற்கு எரிவாயு விநியோகத்தையும் அமெரிக்காவின் நியூபோர் நிறு...

ஞானசார தேரர் தலைமையிலான செயலணியை இரத்து செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

Image
 ஞானசார தேரர் தலைமையிலான செயலணியை இரத்து செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.   ஞானசார தேரர் தலைமையிலான செயலணியை இரத்து  செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஞானசார தேரர் தலைமையிலான செயலணியை இரத்து செய்யுமாறு என் ஜி ஓக்களினால் அரசுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் ஞானசார தேரர் தலைமையில் ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்ட நிலையில் பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். ஞானசார தேரர் தலைமையிலான செயலணியை இரத்து செய்யுமாறு என் ஜி ஓக்களினால் அரசுக்கு  முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டின் அனைத்து பாடசாலைகளினதும் சகல வகுப்புக்களையும் அடுத்த வாரத்தின் பின் ஆரம்பிக்க தீர்மானம்.

Image
 நாட்டின் அனைத்து பாடசாலைகளினதும் சகல வகுப்புக்களையும் அடுத்த வாரத்தின் பின் ஆரம்பிக்க தீர்மானம்.   நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் சகல வகுப்புக்களையும் அடுத்த வாரத்தின் பின்னர் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில், மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை நேற்று (29) சந்தித்ததன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மீள ஆரம்பிக்கும் தினம் தொடர்பான அறிவித்தல் அடுத்துவரும் நாட்களில் வெளியிடப்படும் எனக் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடும் மழையால், பயிர்ச்செய்கைகள் அழிவடைந்து விட்டதாக நுவரெலியா விவசாயிகள் கவலை.

Image
 கடும் மழையால், பயிர்ச்செய்கைகள் அழிவடைந்து விட்டதாக நுவரெலியா விவசாயிகள் கவலை.   நாட்டில் இரசாயன உரத் தட்டுப்பாடு , கிருமிநாசினி தட்டுப்பாடுகளால் விவசாயிகள் பெரும் இக்கட்டான நிலையில் விவசாயத்தை மேற்கொண்டு வருகையில், நுவரெலியா , பொரலாந்த , கந்தபளை போன்ற பகுதிகளில் பெய்த கடும் மழையால் அதிகமான பயிர்ச்செய்கைகள் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒன்றரை மாதங்களுக்கு முன் கம்பளை வைத்தியசாலையில் காணாமல் போன பொலிஸ் அதிகாரி, வைத்தியசாலை நீர்தாங்கியில் இருந்து சடலமாக மீட்பு.

Image
 ஒன்றரை மாதங்களுக்கு முன் கம்பளை வைத்தியசாலையில் காணாமல் போன பொலிஸ் அதிகாரி, வைத்தியசாலை நீர்தாங்கியில் இருந்து சடலமாக மீட்பு.   (எம்.எம்.எம். ரம்ஸீன்) கம்பளை போதனா வைத்தியசாலையில்  நெஞ்சு வலியினால் சிகிச்சைக்காக கடந்த மாதம் 8 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன் அன்றைய தினம் காணமல் போயிருந்த நிலையில் 29.10.2021 வைத்தியசாலை நீர்தாங்கியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பூண்டுலோய நகரத்தை வசிப்பிடமாக்க கொண்ட எஸ். இளங்கோவன் என்ற இப்பொலிஸ் சார்ஜன் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தார். கம்பளை வைத்தியசாலை ஊழியர்கள் நேற்று நீர்தாங்கியை சுத்திகரிக்கச் சென்ற சந்தர்ப்பத்தில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நீதிவானின் விசாரணையின் பின்னர் சடலம் மீட்கப்பட்டது. அந்த சடலம், காணாமல் போன பொலிஸ் அதிகாரி எஸ். இளகோவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்கொட்லாந்து புறப்பட்டார்.

Image
 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்கொட்லாந்து புறப்பட்டார்.   ஸ்கொட்லாந்து-க்லாஸ்கோவில் இடம்பெறவுள்ள பருவநிலை  மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

கடந்த 14 நாட்களில் 60 ஆயிரம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்..

Image
 கடந்த 14 நாட்களில் 60 ஆயிரம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்..   கடந்த 14 நாட்களில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்காக வருகைத் தந்தவர்களின் எண்ணிக்கை 60,000ஐ கடந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டு பெறுவதற்கு வருகைத் தருவோரின் எண்ணிக்கை அதேபோல காணப்படுவதாக அத்திணைக்களத்தின் கடவுச்சீட்டு கட்டுப்பாட்டாளர் எச்.பி.சந்ரபால தெரிவித்தார். கடந்த 5ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை 14 அலுவலக நாட்களில் கடவுச்சீட்டுக்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தற்போதைய நெரிசலைக் குறைக்கும் வகையில் அலுவலகப் பணிகள் காலை 6 மணிக்கு ஆரம்பிக்க வேண்டியுள்ளதாகவும், இம்மாதத்திற்கு பின்னர் இந்நிலைமை படிப்படியாக குறையுமெனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அடா்ந்த காட்டை சுத்தம் செய்வது போன்ற செயற்பாடாகும்"

Image
 “நாட்டில் ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அடா்ந்த காட்டை சுத்தம் செய்வது போன்ற செயற்பாடாகும்"   தனக்கு கிடைத்த பதவிக்கான கடமைகளை முறையாக முன்னெடுப்பேன்  என்றும், இது எதிர்பாா்த்த விடயமென்றும் பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளா் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளாா். ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராக ஞானசார தேரா் நியமிக்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா். “நாட்டில் ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அடா்ந்த காட்டை சுத்தம் செய்வது போன்ற செயற்பாடாகும். தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களுடன் முதலில் கலந்துரையாடியதன் பின்னா் அந்த நடவடிக்கைகள் முடிந்தளவு முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கிறேன். இந்த பதவி தொடர்பில் நான் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். நியமித்த குழுவினருடன் கலந்துரையாடியதன் பின்னா் எதிர்காலத்தில் தெளிவாக அறிவிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளாா்.

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று... ஒரே நாளில் 803 பேர் உயிரிழப்பு.

Image
 இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று... ஒரே நாளில் 803 பேர் உயிரிழப்பு.   இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  4.57 இலட்சத்தை கடந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கமைய, இன்று காலை 8 மணியுடன் நிறைவுக்கு வந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: பாதிப்பு 3.42 கோடியை தாண்டியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக 14 ஆயிரத்து 348 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,42,46,157ஆக அதிகரித்துள்ளதுடன் புதிதாக 805 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது. இதனால், நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 57 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து ஒரே நாளில் 13ஆயிரத்து 198 பேர் குணமடைந்துள்ளதுடன் இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 36 இலட்சத்து 27 ஆயிரத்து 632 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாத...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை நாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம்

Image
 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை நாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம்   உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை நாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கொட்டாஞ்சேனை புனித லுசியா பேராலயத்தில் வைத்து குறிப்பிட்டார். 2019 ஏப்ரல் 21ஆம் திகதி கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டத்தில் இணைந்து கொண்டிருந்த போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். கௌரவ பிரதமர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களினால் இதன்போது நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான குடியிருப்பில் 19 பயனாளிகளுக்கு இவ்வாறு வீடுகள் கையளிக்கப்பட்டன. வாடகை அடிப்படையிலும் குறைந்த வருமானம் பெறுவோர் என்ற அடிப்படையிலும் தெரிவுசெய்யப்பட்ட 33 பயனாளி குடும்பங்களுக்கு இவ்வாறு புதிய வீடுகள் கையளிக்கப்படவுள்ளதுடன், ஒவ்வொரு வீடுகளினதும் மதிப்பு 4 மில்லியன் ரூபா...

மக்களிற்காக எந்த சவாலையும் ஏற்க தயார் – தகம் சிறிசேன

Image
 மக்களிற்காக எந்த சவாலையும் ஏற்க தயார் – தகம் சிறிசேன   மக்கள் நாட்டின் அரசியல் அமைப்பின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கான செயற்திட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடமே உள்ளது என தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் பல விவகாரங்கள் காணப்படுகின்றன பல இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் அவர்களால் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். மக்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர் அதற்கான சரியான நீண்டகாலம் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடமும் அதன் தலைமையிடமும் அதற்கான திட்டம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மக்களின் நலன்களிற்காக எந்த சவாலையும் ஏற்க தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

பெண் சட்டத்தரணியுடன் சேட்டை செய்த நபருக்கு 1500 ரூபா அபராதம்..

Image
 பெண் சட்டத்தரணியுடன் சேட்டை செய்த நபருக்கு 1500 ரூபா அபராதம்..   பெண் சட்டத்தரணி ஒருவரிடம் கைத் தொலைபேசியில் ஆபாசமாக உரையாடி பாலியல் இம்சை செய்ததாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ள நபரொருவருக்கு 1500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண் சட்டத்தரணிக்கு 15 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பலாங்கொட மாஜிஸ்திரேட் நீதவான் ஜயருவன் திசாநாயக்க முன்னிலையில் இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குற்றவாளிக்கு 7 வருட சிறைத்தண்டனையையும் வழங்கி நீதவான் தீர்ப்பளித்துள்ளாா்.

குருணாகல் நோக்கி பயணித்த பஸ், வீதியை விட்டு விலகி வயல் நிலத்தில் கவிழ்ந்தது... பலர் காயம்.

Image
 குருணாகல் நோக்கி பயணித்த பஸ், வீதியை விட்டு விலகி வயல் நிலத்தில் கவிழ்ந்தது... பலர் காயம்.    மாத்தளையில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று களுபாலத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் 14 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த பேருந்து வீதியை விட்டு விலக வயல் நிலம் ஒன்றில் குடைசாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பேருந்தில் 35 பேர் இருந்ததாகவும் அவர்களில் 14 பேர் காயங்களுக்கு உள்ளாகி மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு காயமடைந்தவர்களுள் 3 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி ஒரு கிலோகிராம் 98 ரூபாய்க்கு இன்று முதல் விற்பனைக்கு...

Image
 இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி ஒரு கிலோகிராம் 98 ரூபாய்க்கு இன்று முதல் விற்பனைக்கு...    இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி ஒரு கிலோகிராம் 98 ரூபாய்க்கு இன்று (29) முதல் சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சதொச நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். சுங்கத்தின் சோதனை நடவடிக்கைகளின் பின்னர் இதுவரையில் நாட்டரிசி அடங்கிய 09 கொள்கலன்கள் தமது நிறுவனத்திற்கு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனூடாக நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக சதொச தலைவர் குறிப்பிட்டுள்ளார்

தமிழர்களையும், முஸ்லிம்களையும் நாட்டில் இருந்து விரட்டுவதற்கேஞானசார தேரர் தலைமையிலான செயலணி

Image
 தமிழர்களையும், முஸ்லிம்களையும் நாட்டில் இருந்து விரட்டுவதற்கேஞானசார தேரர் தலைமையிலான செயலணி   மிக மோசமான இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லச் சொன்னால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதும், அவர்களுக்கு எதுவுமே இல்லாமல் செய்வதுதான் இவர்களது நோக்கமா என ஈபிஆர்எல்எப் இன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பினார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு நாடு ஒரு சட்டம் என்பது தொடர்பாக ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை போன்ற பல மொழிகள் பல மதங்கள் பல கலாச்சாரங்கள் கொண்ட வேறுபட்ட இனங்கள் வாழக்கூடிய நாட்டிலே பல்வேறு விதமான சட்ட திட்டங்கள் இருப்பது என்பது இயல்பானது. உலகத்திலும் பல்வேறுபட்ட சட்டங்கள் இருக்கின்றது. அமெரிக்காவின் சில மாநிலங்களில் மரண தண்டனை சட்டம் இருக்கின்றது சில மாநிலங்களில் இல்லை. இலங்கையிலும் கூட யாழ்ப்பாண தேசவழமைச் சட்டம், கண்டியச் சட்டம், ஷரியாத் சட்டமென ஒ...

NDB இலங்கையில் உள்ளக மற்றும் வெளிப்புற பயன்பாட்டிற்கான டிஜிட்டல் கையொப்பங்களை அறிமுகப்படுத்துகிறது.

Image
 NDB இலங்கையில் உள்ளக மற்றும் வெளிப்புற பயன்பாட்டிற்கான டிஜிட்டல் கையொப்பங்களை அறிமுகப்படுத்துகிறது.   ஒவ்வொரு நகர்விலும் புதிய மற்றும் புதுமையான தீர்வுகளை வழங்குவதன் மூலம் தேசிய அபிவிருத்தி வங்கி PLC டிஜிட்டல் அரங்கிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது. டிஜிட்டல் ரீதியாக மேம்படுத்தப்பட்ட வங்கியை நோக்கிய இந்தப் பயணத்தில், உள்ளக மற்றும் வெளிப்புற பயன்பாட்டிற்காக டிஜிட்டல் கையொப்பத்தை செயல்படுத்திய முதல் வங்கியாக NDB விளங்குகிறது.   NDB எப்போதும் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் புரட்சியில் முன்னணியில் உள்ளதுடன் அதன் வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதை மறுவரையறை செய்ய மிகவும் முன்னேற்றகரமான தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை இணைக்கிறது.  NDB வங்கி, இலங்கையில் தற்போது டிஜிட்டல் சான்றிதழ்களை வழங்கும் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் அதிகார சபையான LankaSign உடன் கைகோர்த்துள்ளது. இதன் மூலம் ஒரு பயனர் ஆவணங்களில் உடல் கையொப்பமிடும் செயல்முறைக்கு பதிலாக வசதியாகவும், அங்கீகரிக்கப்பட்டதாகவும், பாதுகாப்பாகவும் மற்றும் பிழை இல்லாமல...

ஜனாதிபதியே எமக்கு நீதியை பெற்று தாருங்கள் - கண்ணீர் மல்கிய வெளிமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்.

Image
 ஜனாதிபதியே எமக்கு நீதியை பெற்று தாருங்கள் - கண்ணீர் மல்கிய வெளிமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்.   பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) 6 மாதங்களாக எவ்வித தீர்வுகளும் இன்றி அலைக்கழிக்கப்படும் எமக்கு ஜனாதிபதியே நீதியை பெற்று தாருங்கள் என கண்ணீர் மல்கிய  நிலையில் வெளிமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று(28)  ஒன்றுகூடிய 26 பல்நோக்கு அபிவிருத்தி செயலணித்திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு இவ்வாறு தெரிவித்தனர். இதன் போது குறித்த போராட்டத்தில் கைக்குழந்தைகளுடன் பங்கு பற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீனவிடுமுறை போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு பல்வேறு சுலோகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பியதை காண முடிந்தது. குடும்பங்களை சீர்குலைத்து பிள்ளைகளை நிர்க்கதியாக்காதே ,மனிதாபிமானம் இல்லாத செயற்பாட்டை நிறுத்து , வேண்டாம் வேண்டாம் வெளி மாகாணம் வேண்டாம். ,அதிமேதகு ஜனாதிபதியே எங்களது பிரசச்சினையை கவனத்தில் எடுங்கள், சிங்கள மொழி தெரியாத எம்மை எமது மாவட்டத்தினுள் உள்வாங்கு, மேன்முறையீட்டு ...

என்னை, என் மனைவியிடம் இருந்து காப்பாற்றி தயவு செய்து சிறையில் அடையுங்கள்..

Image
என்னை, என் மனைவியிடம் இருந்து காப்பாற்றி தயவு செய்து சிறையில் அடையுங்கள்..   நபர் ஒருவர் தன்னை மனைவியிடம் இருந்து காப்பாற்றிச் சிறையில்  அடைக்குமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ள விநோத சம்பவம் இத்தாலியில் இடம்பெற்றுள்ளது. இத்தாலியின் ரோம் நகரை ஒட்டிய கைடோனியா மாண்டெசெலியோ எனும் நகரில் வசித்துவரும் 30 வயதான நபர் ஒருவரே இவ்வாறு பொலிஸ் நிலையதில் தெரிவித்துள்ளார். விசாரணையின் போ து குறித்த நபர் போதைப் பொருள் தொடர்பான குற்றத்துக்காகப் பல மாதங்களாக வீட்டுச் சிறையில் ( House Arrest)  அடைக்கப் பட்டுள்ளார் எனத்தெரிய வந்துள்ளது. எனினும் , தண்டனைக் காலம் முடிவதற்கு மேலும் பல ஆண்டுகள் உள்ள நிலையில் வீட்டில் இருந்து திடீரென தப்பித்து பொலிஸ் நிலையத்துக்கு வந்த அவர் " இனிமேலும் என்னால் வீட்டில் இருக்க முடியாது, என்னுடைய மனைவியின் கொடுமையை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வீடு எனக்கு நரகம் போல உள்ளது. தயவு செய்து என்னைச் சிறையில் அடைத்து விடுங்கள் என்னுடைய தண்டனைக் காலத்தை நான் சிறையிலேயே கழிக்கிறேன்” எனக் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நபரின்...

குழப்படி செய்வோருக்கே வகுப்பில் பொறுப்பு ஒப்படைக்கப்படுவது போன்றே ஞானசார தேரரை புதிய செயலணிக்கு ஜனாதிபதி நியமித்திருக்கிறார்.

Image
 குழப்படி செய்வோருக்கே வகுப்பில் பொறுப்பு ஒப்படைக்கப்படுவது போன்றே ஞானசார தேரரை புதிய செயலணிக்கு ஜனாதிபதி நியமித்திருக்கிறார்.   வகுப்பில் குழப்படி செய்வோரிடமும் கெட்டிக்காரர்களிடமுமே அந்த வகுப்பின் பொறுப்பை ஒரு பாடசாலையின் அதிபரோ அல்லது ஆசிரியரோ, ஒப்படைப்பார்கள். அதேபோன்றுதான், ஞானசாரதேரரை புதிய செயலணிக்கு ஜனாதிபதி நியமித்திருக்கிறார் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். ஜனாதிபதி பௌத்த மதத்துக்கு உரியவர் என்றும், அதனால் ஏனைய மதங்களுக்கு அச்சுறுத்தலாகவும் இடையூறாகவும் இருப்பார் என்றும் சிறுபான்மையினர் மத்தியில் இருந்து வந்த தப்பான சிந்தனை தற்போது விலகி வர ஆரம்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், “வீட்டுக்கு உறுதி” என்ற தொனிப்பொருளில், கிண்ணியா பிரதேசத்தில், 89 பேருக்கு காணி உறுதிப்பத்திரம், கிண்ணியா பிரதேச செயலகத்தில் நேற்று(28) வழங்கி வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, காணி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், “வீட்டுக்கு வீடு உறுதி வழங்கும் தேசிய திட்டத்...

அரச எதிர்ப்புப் போராட்டங்களை ஆரம்பியுங்கள் - ரணில் அதிரடி உத்தரவு..

Image
 அரச எதிர்ப்புப் போராட்டங்களை ஆரம்பியுங்கள் - ரணில் அதிரடி உத்தரவு..   (எம்.மனோசித்ரா) ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட வலையமைப்புக்களை வலுப்படுத்தும் அதே வேளை, கட்சியின் தனித்துவத்தின் கீழ் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஆரம்பிப்பதற்கான புதிய வேலைத்திட்டங்களையும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துமாறு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர்புடைய சகல வலையமைப்புக்களையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ளாத, அரசாங்கத்திற்கு எதிராகவுள்ள சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய வலையமைப்புக்களை வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன, உபதலைவர் அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்டவர்களில் கண்காணிப்பின் கீழ், கொவிட் நிலைமைக்கு ஏற்றவாறு மேற்குறித்த வலையமைப்புக்களை ஆர...

பெருந்தோட்டத்துறை அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்புச் செயலாளராக கலாநிதி எம்.பி. முஸம்மில் நியமனம்.

Image
 பெருந்தோட்டத்துறை அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்புச் செயலாளராக கலாநிதி எம்.பி. முஸம்மில் நியமனம்.   எஸ்.எம்.எம்.முர்ஷித் பெருந்தோட்டத்துறை அமைச்சின் கிழக்கு  மாகாணத்திற்கான இணைப்புச் செயலாளராக ஓட்டமாவடியை சேர்ந்த கலாநிதி எம்.பி. முஸம்மில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெருந்தோட்டத்துறை இராஜங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவினால் அண்மையில் அமைச்சில் வைத்து இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத்துறை அமைச்சின் கிழக்கு மாகாணத்திற்கான இணைப்புச் செயலாளராக நியமணம் பெற்றுள்ள கலாநிதி எம்.பி. முஸம்மில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அமைப்பாளராக செயற்பட்டவர் என்பதுடன் நாட்டை காக்கும் இளைஞர் அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளராக செயற்பட்டு வருவதுடன் சிறந்த சமுக சேவையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரே நாடு , ஒரே சட்டம் செயலணியின் தலைவராக ஞானசார தேரரின் நியமனம்: நாட்டில் இனங்களுகிடையிலான முறுகலை அதிகரிக்கும்.

Image
 ஒரே நாடு , ஒரே சட்டம் செயலணியின் தலைவராக ஞானசார தேரரின் நியமனம்: நாட்டில் இனங்களுகிடையிலான முறுகலை அதிகரிக்கும்.    ஆட்சியை எப்படியாவது கைப் பற்றிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோஷத்தை நடைமுறைப் படுத்துவதற்கு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட செயலணிக்கு, நாட்டில் இனங்களுக்கிடையிலான வன்செயல்களைத் தொடர்ச்சியாகத் தூண்டி வருபவரும், நீதிமன்றத்தை அவமதித்த குற்றவாளியாக தண்டனை விதிக்கப்பட்டு, சிறைவாசம் அனுபவித்தவரும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டவருமான பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மிகவும் வன்மையாக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.  கண்டியில் மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற  அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர்,அவர் இதனைச் சில...

கண்டி ஹீரஸ்ஸகல சந்தியிலிருந்து கண்டி புகையிரத நிலையம் வரையான வீதியை நான்கு வழிப் பாதையாக விரிவுபடுத்தி அபிவிருத்தி செய்யும் பணியின் அங்குரார்ப்பண நிகழ்வு.

Image
 கண்டி ஹீரஸ்ஸகல சந்தியிலிருந்து கண்டி புகையிரத நிலையம் வரையான வீதியை நான்கு வழிப் பாதையாக விரிவுபடுத்தி அபிவிருத்தி செய்யும் பணியின் அங்குரார்ப்பண நிகழ்வு.   கண்டி ஹீரஸ்ஸகல சந்தியிலிருந்து கண்டி புகையிரத நிலையம் வரையான வீதியை நான்கு வழிப் பாதையாக விரிவுபடுத்தி அபிவிருத்தி செய்யும்  பணியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (28-10-2021)  ஆளும் தரப்பு பிரதம கொறடா  நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின்  தலைமையில் இடம்பெற்றது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் 1290.5 மில்லியன் ரூபா செலவில் இந்த  வீதி அபிவிருத்தி செய்யப்படுகிறது. இந்த  வீதியின் நீளம் 2.1 கி.மீ களாகும். விழா  நிறைவில்   ஊடகவியலாளர்கள்   எழுப்பிய கேள்விகளுக்கு  அமைச்சர் பதிலளித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர்   ஆளும்  தரப்புடன்  இணைந்து கொள்வதற்கு தயாராவதாக பரவி வரும்  செய்திகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த  அமைச்சர் , நான் பெயர் விபரங்களை கூறமாட்டேன். யாரையும்  காட்டிக...

எழுந்துள்ள சலசலப்புகளால் அரசாங்கம் கவிழ்ந்து விடும் என்று யாரும் நினைக்க வேண்டாம்.

Image
 எழுந்துள்ள சலசலப்புகளால் அரசாங்கம் கவிழ்ந்து விடும் என்று யாரும் நினைக்க வேண்டாம்.   நூருல் ஹுதா உமர் நீண்டகாலமாக இழுபறியில் இருந்துவரும் ஒலுவில் துறைமுக விவகாரம் தொடர்பில் ஆராய ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா புதன்கிழமை (27) கல்முனையில் அமைந்துள்ள மாவட்ட கடற்தொழில் காரியாலயத்தில் மீனவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஒலுவில் துறைமுக வளாகத்தையும் பார்வையிட்டார். அதன்போது துறைமுக குளிர்சாதன வசதிகள் மேம்பாடு, மீன் சந்தைப்படுத்தல் வசதிகள் தொடர்பில் ஆராய்ந்தார். இந்த விஜயத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி, பிரதமர் எள்ளென்றால் நான் எண்ணெயாக இருந்து அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன். கடந்த தேர்தல் காலங்களில் இந்த அரசின் தலைவர்களினால் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளை என்னால் முடிந்தவரை நிறைவேற்ற தயாராக உள்ளேன். இந்த ஒலுவில் துறைமுக விவகாரம் தொடர்பில் பலரும் கரிசனை கொண்டு என்னிடமும், ஜனாதிபதி கோத்தாபய, பிரதமர் மஹிந்தவுடனும் பல்வேறு கலந்துரையாடல்கள...

ஒரே நாடு ஒரே சட்டம்' விடயத்தை நான் கதைக்க விரும்பவில்லை.

Image
 ஒரே நாடு ஒரே சட்டம்' விடயத்தை நான் கதைக்க விரும்பவில்லை.   ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணிக்கு ஜனாதிபதியால் ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். அரசியல் ரீதியான கருத்துக்களை அதிகமாக கதைக்க விரும்பவில்லை இது ஜனாதிபதியின் முடிவின் பெயரிலேயே நியமிக்கப்பட்டுள்ளார். ஒரே நாடு ஒரே சட்டம் என்கின்ற உட்பொருளை நான் ஊடகங்கள் வாயிலாக விமர்சிக்க முடியாது அதனுடைய நோக்கம் என்னவென்று உங்களுக்கு தெரியும் தானே. நானும் வர்த்தமானி மூலம் ஜனாதிபதியின் முடிவினை பார்த்திருந்தேன் அவர் எந்த நோக்கத்திற்காக இவரை நியமித்தார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஜனாதிபதியின் நிலைப்பாட்டினை என்னால் விமர்சிக்க முடியாது என்னுடைய நிலைப்பாடு அரசாங்கத்துடன் சேர்ந்து மக்களுக்கான நியாயத்துடன் சேவை செய்வது. ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை பற்றி கதைப்பதாக இருந்தால் விரிவாக கதைக்க வேண்டும் இது பல விமர்சனங்களை கொண்டு வரலாம் அதனால் நான் கதைக்க விரும்பவில்லை. ஞானசார தேரர் பற்றி என்னைவிட ...

காஷ்மீர் கறுப்பு தினம் : ஐ.நா. காரியாலய முன்றலில் போராடிய முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு.

Image
 காஷ்மீர் கறுப்பு தினம் : ஐ.நா. காரியாலய முன்றலில் போராடிய முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு.   நூருள் ஹுதா உமர் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டில்  கஸ்மீர் கருப்பு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு காரியாலயத்தின் முன்னால் புதன்கிழமை (27) பதாதைகளை ஏந்திக்கொண்டு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பினர் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெறும் அட்டூழியங்களையும், ஆக்கிரமிப்புப் படைகள் அப்பாவி காஷ்மீரிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதையும் இவர்கள் தமது பதாதைகளில் சுட்டிக் காட்டியிருந்தனர். ஜக்கிய நாடுகள் சபையும் ஜ.நா. மனித உரிமை அமைப்பும் இவ்விடயத்தில் தலையிட்டு இரு நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளை தீர்த்து வைக்க வேண்டும். சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கான நியாயமான போராட்டத்திற்க்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதுடன் காஷ்மீர் மக்களின் நிரந்தர துயரங்களை நோக்கி உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், காஷ்மீர் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப காஷ்மீர் பிரச்சனைக்கு ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின் அடிப்படையில...

எரிபொருள் கொள்கலன் வாகனம் கவிழ்ந்து விபத்து... சாரதி தலைமறைவு. #திருகோணமலை

Image
 எரிபொருள் கொள்கலன் வாகனம் கவிழ்ந்து விபத்து... சாரதி தலைமறைவு. #திருகோணமலை   கந்தளாய் யூசுப் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எரிபொருள் ஏற்றுவதற்காக சென்ற கொள்கலன் வாகனமொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தின் சாரதி தலைமறைவு. திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எரிபொருள் ஏற்றுவதற்காக சென்ற கொள்கலன் வாகனமொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தின் சாரதி காயங்களுடன் தலைமறைவாக உள்ளதாவும் அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று(28) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பிலிருந்து திருகோணமலைக்குச் எரிபொருள் ஏற்றுவதற்காக சென்ற கொள்கலன் வாகனமொன்றே இவ்வாறு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சாரதி நித்திரை கலக்கத்தினால் அல்லது போதையில் இருந்திருக்காலாமெனவும் பொலிசார் திரிவிக்கின்றனர் கந்தளாய் குளத்தின் வான்பாலத்தின் அருகில்லுள்ள தொலைபேசி கம்பத்தில் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸா...

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் இலங்கையைச் சேர்ந்த 24 பேர் உள்ளடக்கம்.

Image
 உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் இலங்கையைச் சேர்ந்த 24 பேர் உள்ளடக்கம்.   உலகின் முன்னணி பல்கலைக்கழகமொன்று விடுத்த புதிய  அறிக்கையொன்றில் எமது நாட்டு நிபுணர்களின் சிறப்பு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஸ்டென்ஃபோர்ட் பல்கலைக்கழகம் விடுத்த இந்த அறிக்கைக்கு அமைய, உலகின் முக்கியமான ஆய்வுகளை மேற்கொள்ளும் 2 வீத விஞ்ஞானிகளில் இலங்கையைச் சேர்ந்த 24 பேர் அடங்குகின்றனர். இவர்களில் ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மலவிகே, பேராசிரியர் மெத்திகா வித்தானகே, கலாநிதி அனுஷ்கா யூ ராஜபக்ஸ ஆகியோரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நிதி நெருக்கடியில் உள்ள ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குங்கள்.... உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா கோரிக்கை.

Image
 நிதி நெருக்கடியில் உள்ள ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குங்கள்.... உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா கோரிக்கை.   நிதி நெருக்கடியில் உள்ள ஆப்கானிஸ்தானின் மறுகட்டமைப்புக்கான நிதியுதவியை மீண்டும் தொடங்குமாறு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி புதனன்று உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் வலியுறுத்தியுள்ளார். ஆகஸ்டில் தலிபான் கையகப்படுத்தப்பட்டதன் விளைவாக, காபூலுக்கான மத்திய வங்கியின் சொத்துக்களில் பில்லியன் கணக்கான டொலர்கள் முடக்கப்பட்டன மற்றும் சர்வதேச நிதிய நிறுவனங்கள் நிதிக்கான அணுகலை நிறுத்திவிட்டன.  இருப்பினும் மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து நடைபெறுகின்றது. இதனால் ஆப்கானிஸ்தானின் வங்கிகளில் பணம் இல்லை, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை, உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.  சர்வதேச நாணய நிதியம் செவ்வாயன்று ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் இந்த ஆண்டு 30 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் என்று கூறியுள்ளது. இது சர்வதேச நாடுகளுக்கான அகதிகள் நெருக்கடியைத் தூண்டும் அச்சத்த‍ை உருவாக்கியுள்ளது. இந் நிலையில் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளின் வெளியுறவு அமை...