Posts

Showing posts from June, 2021

பாண் ஒன்றின் விலை அடுத்த வாரம் முதல் 10 ரூபாவால் அதிகரிக்கும்

Image
  சி.எல்.சிசில் அடுத்த வாரம் முதல் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ மாவின் விலை 18 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார். எரிபொருள் விலை அதிகரித்ததன் காரணமாக, பாண் தவிர ஏனைய வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை ரூபா 5 முதல் ரூபா 10 வரை அதிகரிக்க வேண்டியிருந்தது என அவர் மேலும் கூறினார்.

இலங்கையின் கால்பந்து சம்மேளன தலைவராக அக்கரைப்பற்று ஜஸ்பர் உமர் தேர்ந்தெடுக்கப்பட்டார்

Image
  இலங்கை கால்பந்து சம்மேளன தேர்தல் இன்று (30) இடம் பெற்ற நிலையில்   அதன் செயலாளர் நாயகம் ஜஸ்பர் உமர் போட்டியிட்டு  தலைவராக   தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அடுத்த 4 ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் ஆனது இரு தடவைகள் ஒத்தி வைப்பின் பின்னர் இன்று (30) நடை பெற்றது. இவருக்கு எமது வாழ்த்துக்கள் ஜஸ்பர் உமர் அக்கரைப்பற்று முன்னால் CEO உமர்லெப்பை அவர்களின் மூத்த புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜஸ்வர் உமர் 96 வாக்குகளையும்  அவருடன் போட்டியிட்ட  மணில் பெர்னாண்டோ 90 வாக்குகளையும் பெற்றனர். M.Y.irfhan AKP

நாளை இரவு 10 மணி முதல் மருதமுனை பிரதேசம் முழுமையான Lockdown

Image
(சர்ஜுன் லாபீர் / நூருள் ஹுதா உமர்) ஜூலை ஒன்று, இரவு 10 மணி முதல் மருதமுனை முழுமையாக முடக்கப்படுகிறது.    தற்போது மருதமுனை பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மருதமுனை பிரதேசத்தை நாளை (1) முதல் முழுமையாக முடக்க இன்று (30) பகல் நடைபெற்ற உயர்மட்டக்.கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் மாநகர முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற உயர் மட்டக்கூட்டத்தில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  நாளை இரவு முதல் மருதமுனை பிரதேசத்திற்கு வெளியில் இருந்து பொதுமக்கள் உட்பிரவேசிப்பதும், மருதமுனையில் இருந்து வெளியேறுவதும் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் முழுமையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மருதமுனை பிரதேசத்தில் இருந்து கொரோனாவினை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ் உயர்மட்டக் கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்...

15 வயது சிறுமியை இன்டர்நெட் ஊடாக கொள்வனவு செய்த சம்பவத்தில் 17 பேர் கைது. #இலங்கை

Image
கல்கிசையில் 15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளமூடாக  பாலியல் செயற்பாடுகளுக்காக கொள்வனவு செய்த மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் குறித்த சிறுமியின் தாய், சிறுமியை முதன்முதலில் விற்பனை செய்தவருடன் தகாத முறையில் உறவுகளை பேணும் பெண்ணொருவர், முச்சக்கரவண்டி சாரதி, மோட்டார்சைக்கிள் ஓட்டுநர், சிறுமி தொடர்பான தகவல்களை இணையத்தளத்தில் பதிவேற்றியவர் உள்ளிட்டோர் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். பாலியல் செயற்பாடுகளுக்காக சிறுமியை பணம் கொடுத்து வாங்கிய மேலும் 20 பேரை கைது செய்வதற்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். குறித்த சிறுமியை பாலியல் நடவடிக்கைளுக்காக இணையத்தளத்தினூடாக விற்பனை செய்த பிரதான சந்தேகநபர் கடந்த 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். குறித்த பிரதான சந்தேகநபர், கல்கிசையில் வாடகை வீடொன்றில் சிறுமியை தடுத்துவைத்து இணையத்தளத்தில் சிறுமியின் நிழற்படத்தை பிரசுரித்து பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக...

தரச்சான்றிதழ் அற்ற முகக்கவசங்களை விற்பவர்களுக்கு எதிராக கடும் தண்டனை..

Image
தரச்சான்றிதழ் அற்ற முகக்கவசங்களை சந்தைகளிலிருந்து அகற்றுவதற்கு  நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சந்தைகளில் தரமற்ற முகக்கவசங்கள் இந்நாட்களில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அணியப்படும் முகக்கவசத்திற்கு தரச்சான்றிதழ் கட்டாயமாகும் என அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் ஷாந்த திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். இதனடிப்படையில், தரச்சான்றிதழ் அற்ற முகக்கவசங்களை சந்தைகளில் விற்பனை செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான முகக்கவசங்களை விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் கூறியுள்ளது.

சில மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு 2 வார பயணத் தடை விதிக்க காரணம் என்ன... விளக்குகிறது அரசு.

Image
ஜூலை 1 முதல் சில வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு  2 வார பயணத் தடை விதிக்க முக்கிய காரணம், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த அதிக எண்ணிக்கையிலான பயணிகளுக்கு PCR சோதனையில் COVID-19 கொரோனா தோற்று இருந்தது கண்டறியப் பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. திங்களன்று (28) வந்த கிட்டத்தட்ட 110 பயணிகள் சோதனையின் போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்ததாக அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லா நேற்று செவ்வாய்க்கிழமை (29) தெரிவித்தார். இது மிகவும் கவலை அளிக்கிறது. அவை பி.சி.ஆர் சோதனை முடிவுகள் கொரோனா தொற்று உள்ளதாக வருகின்றன. எனவே தேசிய வளைகுடா பணிக்குழு மற்றும் சுகாதார நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் சில வளைகுடா நாடுகளில் இருந்து வருவதை தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார். பயணத் தடையின் கீழ், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் உள்ளடங்கும். இருப்பினும், மேற்கூறிய நாடுகளில் இருந்து பயணிக்கும் பயணிகள் ( Transit ) இலங்கையில் தரையிறங்க அனுமதிக்கப்படுவார்கள்...

நாட்டு மக்கள் பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்வது அரசாங்கத்துக்கு தெரியாமல் இல்லை.

Image
தனியாக பாராளுமன்றம் வந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, அடுத்த முறை அரசாங்கத்தைக் கைப்பற்றலாமென நினைப்பதாகத் தெரிவிக்கும் அமைச்சர் காமினி லொக்குகே, நாட்டு மக்கள் பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்வது அரசாங்கத்துக்கு தெரியாமல் இல்லை எனவும் தெரிவித்தார். இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் காமினி லொக்குகே, யதார்த்த நிலைமைகளைப் புரிந்துக்கொள்ளாது, விவசாயிகள் பல்வேறு இடங்களுக்குச் சென்று உரத் தட்டுப்பாடு தொடர்பில் போராட்டங்களை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார். நாட்டு மக்கள் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்கிறார்கள் என்பது அரசாங்கத்துக்குப் புரியாமல் இல்லை. ஆனால் உலகம் முழுவதிலும் இதே பிரச்சினையே காணப்படுகிறது எனவும் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். எனினும், பலம்மிக்க அரசாங்கம் என்ற வகையில் இப்போராட்டங்களுக்கு அரசாங்கம் முகங்கொடுக்கும். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அடுத்த முறை தனக்கு வாக்குகள் கிடைக்குமென எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இதேபோல, தேசிய மக்கள் சக்தியும் தங்களுக்கு இல்லாது போயுள்ள ஆசனங்களை, அடுத்த தேர்தலில் பெற்றுக்கொள்ள ம...

மருதமுனையை முழுமையாக முடக்கும் நிலைமை தோன்றலாம் என எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ள நிலையில்...

Image
(றாசிக் நபாயிஸ்) கொவிட் தொற்று அபாய சூழ்நிலையும் அதனால் பாதிப்புறுவோரின் எண்ணிக்கையும் மருதமுனைப் பிரதேசத்தில் மிக வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில் அது குறித்த சுகாதார வழிகாட்டல்கள் தொடர்ந்தும் பின்பற்றப்படாமல் கவனயீனமாக விடப்படுமானால் மருதமுனையை முழுமையாக முடக்கும் நிலைமை தோன்றலாம் என சுகாதாரப் பிரிவினர் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள இக்கட்டான சூழ்நிலையில் மருதமுனை ஜம்இய்யத்துல் உலமா அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனம், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி, மருதமுனை வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி மற்றும் பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சென்ற 2021.06.28யில் ஒன்றுகூடி மேற்கொண்ட தீர்மானங்களுக்கமைய கீழ்வரும் வழிகாட்டும் ஆலோசனைகள் முன்வைக்கின்றன. 01.கொவிட் தொற்றுக்குள்ளாகி உரிய சிகிச்சைகளைப் பெறாமல் இறுதி நேரங்களில் வைத்திய உதவியை நாடுவோரில் அதிகமானோர் மரணிக்கும் நிலை உருவாகியுள்ளமையை கவனத்திற்கொண்டு தொற்றுக்குள்ளானவர்கள் அல்லது தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளவர்கள் ஓடி ஒளிந்துகொள்ளாமல் தாமாகவே முன்வந்து சுகாதாரப் பிரிவினருக்குத் தெரியப்...

திருமணத்தில் கலந்து கொண்ட 12 ஆண்கள் 8 பெண்களுக்கு சிக்கல்..

Image
  தனிமைப்படுத்தல் விதிகளை மீறி திருமணத்தை நடத்திய 20 பேர்  தனிமைப்படுத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். பாணந்துறை வடக்கு பல்லேமுல்ல பகுதியில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 12 ஆண்கள் 8 பெண்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சுகாதார விதிமுறைகளை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்றமை தொடர்பில் குறித்த நபர்கள் 14 நாட்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர், பொலிஸாரால் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார்.     

20 தொலைகாட்சி அலைவரிசைகளின் ஊடாக மாணவர்களுக்கு வீடுகளிலிருந்தே கல்வி கற்க நடவடிக்கை.

Image
சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில் பல்வேறு மூலோபாயங்கள் பரீட்சிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு 20 தொலைகாட்சி அலைவரிசைகளின் ஊடாக மாணவர்களுக்கு வீடுகளிலிருந்தே கல்வி கற்பதற்கான வசதிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சுனாமி கடல்பேரலை மற்றும் தற்போதைய கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தலுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் இந்த தொலைகாட்சி அலைவரிசை ஊடான மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பாடசாலைகளைப் போன்று காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை முன்னெடுக்கப்படும் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா என்றும் சுட்டிக்காட்டினார். தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைக்கு முன்னுரிமை அளித்து, பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு எதிர்கால நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்.

முன்னாள் இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர், ஐக்கிய‌ காங்கிர‌சில் இணைவு.

Image
மீராவோடை 04, பாடசாலை வீதியை சேர்ந்த‌ சேகுலெவ்வை முகம்மது றமேஸ் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியில் இணைந்து கொண்ட‌தை அடுத்து அவ‌ர் கல்குடா தொகுதியின் மீராவோடை, மாஞ்சோலை, பதுறியா ஆகிய ஒன்றிணைந்த பிரதேசங்களுக்கான ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் இணைப்பாள‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். மீராவோடையை வசிப்பிடமாகக் கொண்ட இவ‌ர் முன்னாள் இராணுவ‌ புலாய்வு உத்தியோக‌த்த‌ராக‌வும் க‌ட‌மையாற்றியுள்ளார். அத்துட‌ன் பிரதேச மக்களை ஒன்றிணைத்து பண்புடன் ப‌ழ‌கும் ஒருவ‌ராவார்.

வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு. #அட்டாளைச்சேனை

Image
  (ஏ.எல்.றியாஸ்) கொரோனா அச்சுறுத்தலினால் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட பயணத்தடை காரணமாக, அட்டாளைச்சேனை கோணாவத்தை பிரதேசத்தில் வருமானத்தினை இழந்து நிர்க்கதிக்குள்ளான 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கும் வேலைத்திட்டமொன்றை அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டுக் கழகம் முன்னெடுத்துள்ளது. மேற்படி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைக்கும் முதலாம் கட்ட நிகழ்வு கழகத்தின் தலைவர் எஸ்.எம்.இத்ரீஸ் தலைமையில் (28) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகரும், ஊடகவியலாளருமான ஏ.எல்.றியாஸ், கழகத்தின் உப தலைவர் எஸ்.எல்.எம்.முஸம்மில், முகாமையாளர் ஏ.எல்.றிம்சான் உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். தொழிலின்றி நாளாந்த வருமானத்தை இழந்த குடும்பங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் கடமை புரியும் முஅத்தின்கள் உள்ளிட்ட 50 குடும்பங்களுக்கு இந்நிகழ்வின் போது உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. கொரோனா தாக்கத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது அலையின் போதும், அட்டாளைச்சேனை பிரதேசத்தில், பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்த குடும்பங்களுக...

மொபைல் App மூலம் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர்கள் போலீசாரிடம் சிக்கினர்.

Image
  தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, மசாஜ் நிலையங்கள் எனும்  போர்வைக்குள் மறைத்து, விபசாரம் செய்த, இரண்ட மத்திய நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. ராஜகிரிய குரே மாவத்தை மற்றும் எத்துல்கோட்டை ஆகிய பிரதேசங்களிலேயே இவ்விரு நிலையங்களும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. அவ்விரு மத்திய நிலையங்களிலும் விபசாரத்தில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 20க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுகளுடைய பெண்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்விரு நிலையங்களையும் முகாமைத்துவம் செய்தவர்கள் என்றக் குற்றச்சாட்டின் கீழ் மேலும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள், சிலாபம், கெக்கிராவ, அங்குணகொலபெலஸ்ஸ, நெலுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். கொழும்பு பிரதேசத்தில், ஆடைத்தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்வதாகவே தங்களுடைய வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு, அப்பெண்கள் வீட்டிலிருந்து வந்துள்ளனர் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. இணையத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் “அப்” (செயலி) ஊடாகவே, இப்பெண்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளனர். அந்த மத்திய நிலையங்களுக்குள் 2,500 ரூபாய்க்கே பெண்ணொருவர்...

Online கல்வி முறைமைக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.

Image
அனைத்து மாணவர்களுக்கும் Online கல்வி சம அளவில் கிடைக்காமையால்  மாணவர்களின் உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (28) முறைப்பாடு செய்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ உள்ளிட்ட சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுராதபுரம் அலுவலகத்தில் இன்று இந்த முறைப்பாட்டை மேற்கொண்டனர். 02 வருடங்களாக மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கான சந்தர்ப்பம் அற்றுப்போனமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது முறைப்பாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சவுதி, கட்டார், UAE உட்பட 6 மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவது தற்காலிக தடை.

Image
  6 மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கைக்கு  வருவதை தடை செய்ய COVID-19 தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் (NOCPCO) முடிவு செய்துள்ளது. அதன்படி, கட்டார் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் கடந்த 14 நாட்களில் பயணம் மேற்கொண்டிருந்த பிரஜைகள் இலங்கையில் இறங்க அனுமதிக்கப்படமாட்டார்கள் . இதற்கான பணிப்புரை அனைத்து விமான நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. ஜூலை முதலாம் திகதி நள்ளிரவு முதல் ஜூலை 13 ஆம் தேதி நள்ளிரவுவரை இந்த கட்டுப்பாடு அமுலில் இருக்கும். ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஆறு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தடை செய்வதற்கான தீர்மானம் இன்று காலை எடுக்கப்பட்டது. இருப்பினும், மேலதிக ஆராய்வுக்காக இந்த திட்டம் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் அதன்பின்னர் தெரிவித்தனர். இந்த திட்டத்திற்கு இன்றுமாலை COVID-19 தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு நிலையம் (NOCPCO) அனுமதி அளித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதலை காரணம் காட்டி ஆட்சிக கு வந்தனர்.இது வரை புதிதாக எதுவும் இடம் பெறவில்லை

Image
  ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்றைய(28)  ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள். ஜனாதிபதி நாட்டிற்கு உரையாற்றி தேசிய பாதுகாப்பு குறித்து ஏதோ கூறினார், ஆனால் சில விஷயங்கள் தெளிவாக குறிப்பிடவில்லை. தாய்நாட்டின் பாதுகாப்பைப் பொறுத்தவரை தேசிய பாதுகாப்பு முக்கியமானது. இதுவரை எடுக்கப்பட்ட தீர்வுகள் குறித்து நான் திருப்தியடையவில்லை. தான் ஆட்சிக்கு வந்ததும் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தேடப்படும் என்று கூறானார். இங்குதான் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். ஈஸ்டர் தாக்குதலை காரணம் காட்டி ஆட்சிக கு வந்தனர்.இது வரை புதிதாக எதுவும் இடம் பெறவில்லை.நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் ஒரு சிலரே கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பின்னர் புதிய ஆட்சியில் எவரும் கைது செய்யப்படவில்லை.  ஆட்சிக்கு வந்து பாதுகாப்புத்துறையில் சில வெற்றிடங்களை நிரப்ப முயற்சிப்பதால் இது முடிந்து விடாது.செயல்முறை சரியாக நடக்கவில்லை. இராணுவம் புலனாய்வைப் பலப்படுத்தியுள்ளது என்று இந்த அரசாங்கம் கூறுகிறது. இது ஒரு பொய். இது குறித்த...

பெசில் வேண்டும் ; 113 MP க்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதம்

Image
  பெசில் ராஜபக்‌ஷ அவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு  செய்யுமாறு  அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள்  ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். இந்த கடிதத்தில் 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

விளையாட்டு வீரர்கள் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுவதை சகித்துக்கொள்ள முடியாது

Image
  விளையாட்டு வீரர்கள் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுவதை  சகித்துக்கொள்ள முடியாது என விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார். பேஸ்புக் பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் “நம் நாட்டு கிரிக்கெட்டை மீண்டும் வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் நாட்டை பிரதிநிதித்துவப்படுதுவதற்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்பையும்  நேரத்தையும் முதலீடு செய்யலாம். இருப்பினும், நாட்டிற்காக ஒரு நோக்கத்திற்காக விளையாடாது மற்றும் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுவதை சகித்துக்கொள்ள முடியாது. இந்த வரம்புகளை மீறும் கிரிக்கெட் வீரர்கள் மீது கிரிக்கெட் நிறுவனம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்”என விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

74 வருடங்களில் எதிர்கொண்டிராத மோசமான பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொண்டுள்ளது.

Image
  நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் இதுவரை எதிர்கொண்டிராத மாபெரும் பொருளாதார க்கடிக்கு முகங்கொடுத்துள்ளதுடன், அரச ஊழியர்களின் சம்பளங்களை செலுத்திய பின்னர், அரசாங்கத்திடம் மிகவும் சொற்ப அளவு வரிப் பணம் மாத்திரமே எஞ்சியிருப்பதாக வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். "2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் 1,373 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. அரச ஊழியர்களின் சம்பளத்தை செலுத்த அதில் 794 பில்லியன் ரூபாய் பயன்படுத்தப்பட்டது. ஓய்வூதியம் பெறுவோரின் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு 258 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது" என அவர் கூறியிருந்தார். சம்பளம். ஓய்வூதியம் ஆகியவற்றைச் செலுத்துவதற்கு 1,052 பில்லியன் ரூபாய் மாத்திரமே செலுத்தப்பட்டது. அரசாங்கத்தின் மொத்த வருமானம் ரூ. 1,373 பில்லியனாகும். இந்த வரிப்பணத்திலிருந்தே அரச ஊழியர்களின் சம்பளம் செலுத்தப்படுகின்றது. சுடன்கள் மீதான வட்டியை செலுத்துவதற்கு 980 பில்லியன் ரூபாய்களும், மானியங்கள் மற்றும் மாற்றங்களுக்கான 717 பில்லியன் ரூபாய்களும் செலவிடப்படுகின்றன என அவர் மேலும் கூறினார். திரட்டப்படும் 1.373 பில்லியன் ரூபாயிலிருந்து 1...

காதி நீதிமன்ற ஒழிப்பு தொடர்பான அமைச்சரவை தீர்மானம் குறித்து முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

Image
  ஹஸ்பர் ஏ ஹலீம்_ இலங்கையில் நடைமுறையில் உள்ள காதி நீதிமன்றங்களை ஒழிப்பது தொடர்பாக  அமைச்சரவை தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிகின்றது. இது குறித்து அரசுக்கு ஆதரவு வழங்கும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பியுளார்.   இது தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று(28) கருத்து தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது: இலங்கையில் சுதந்திரத்துக்கு முன்னைய காலத்திலிருந்து முஸ்லிம் சட்டம் அமுலில் இருந்து வருகின்றது. அதன்படி தோற்றுவிக்கப் பட்டது தான் காதி நீதிமன்றங்கள். இந்த காதி நீதிமன்றங்களை மூடி விட அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதிலிருந்து இந்த அரசாங்கம் முஸ்லிம் சமுகத்தை எவ்வாறு கையாள்கிறது என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.  இந்த அமைச்சரவை தீர்மானம் குறித்து அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இதுவரை எவ்வித கருத்துகளும் தெரிவிக்கவில்லை. எனவே, இந்த மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியா என்ற கேள்வி எழுக...

இங்கிலாந்தில் இரவில் சுற்றிய இலங்கை கிரிக்கெட் வீரர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Image
இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குஸல் மெண்டிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) இங்கிலாந்து டர்ஹாம் வீதிகளில் சுற்றித் திரிவதைக் காட்டும் ஒரு வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (எஸ்.எல்.சி), இலங்கை அணி முகாமையாளரிடம் இருந்து அறிக்கை கோரியுள்ளது. VIDEO : https://m.facebook.com/story.php?story_fbid=1016056594 தற்போது கொரோனா அனர்த்த நிலைமைகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளின் ஒரு பகுதியாக இலங்கை தேசிய அணி இங்கிலாந்தில் Bio Bubble பாதுகாப்பு முறையின் கீழ் அங்கு உள்ளது, மேலும் நாளை (29) டர்ஹாமில் முதல் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான அனைத்து டி 20 போட்டிகளிலும் தோல்வியுற்றிருக்கும் நேரத்தில் கிரிக்கெட் வீரர்களின் இந்த நடத்தை சமூக வலைகளில் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கபட்டு வருகிறது. இதற்கிடையில், இலங்கை கிரிக்கெட்டின் (SLC ) மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், கிரிக்கெட் வீரர்கள் Bio Bubble உயிர் குமிழி மற்றும் ஹோட்டல் ஊரடங்கு உத்தரவை மீறியிருக்கிறார்களா என்பது க...

தற்போதைய அரசாங்கத்தை நாமே உருவாக்கினோம்.. அரசாங்கத்தைவிட்டு ஒருபோதும் வெளியேறப்போவதில்லை.

Image
  தற்போதைய அரசாங்கத்தை தாமே உருவாக்கியதாகத் தெரிவிக்கும்  வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில, தாம் உருவாக்கிய அரசாங்கத்தைவிட்டு ஒருபோதும் வெளியேறப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சக்தியால் தனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையால், தனக்கு எந்தவிதமான அச்சமும் இல்லை. இது எனக்கு எதிராகக் கொண்டுவரப்படும் முதலாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை அல்ல எனவும் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்காக அரசாங்கத்திலிருக்கும் பலர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். யார் என்ன தான் கூறினாலும், அரசாங்கத்துக்குள் இருக்கும் பெரும்பாலானவர்கள் எனக்கு ஆதரவளிக்கிறார்கள் என்றார். பசில் ராஜபக்ஷ, நாட்டில் இருந்திருந்தால் எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டிருக்காது எனக் கூறும் கருத்துத் தொடர்பிலும் பதிலளித்துள்ள கம்மன்பில, எரிபொருள்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் பசில் ராஜபக்ஷவிடம் மாற்றுத் திட்டங்கள் இருந்தால், அதனை அவர் என்னிடம் கூறலாம். அதனை செயற்படுத்ததத் தயாராக இருக்கிறேன். ஆனால், அவர் இதுவரையில் எந...

பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் கைது.

Image
  பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த  நபர் ஒருவர் கைது மஹியங்கனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இவ்வாறு நேற்று (27) கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதேவேளை, முன்னதாக பொது சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய குற்றச்சாட்டில் அட்டலுகம பகுதியில் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச சபைக்குக் கூட செல்லாத ஒருவரை, நாட்டின் அதிகாரத்துக்கு வர இடமளிக்க வேண்டாம் என்று நான் அப்பவே சொன்னேன்..

Image
  "பிரதேச சபைக்குக் கூட செல்லாத ஒருவரை, நாட்டின் அதிகாரத்துக்கு  வர இடமளிக்க வேண்டாம். நாட்டின் முதற் பிரஜையாக்க வேண்டாம். அவ்வாறு ஆக்கினால் நாடு அழிவடையும் என, ஜனாதிபதித் தேர்தலின் போது முழு நாடும் கேட்பதற்குக் கூறினேன்" எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, "இராணுவத்தில் பணியாற்றிய ஒருவருக்கு கட்டளையிட முடியுமே தவிர, வேலை செய்ய முடியாது என்பதை நானே முதலில் வலியுறுத்தினேன்" என்றார். "நான் அவ்வாறு கூறும் போது அதனை ஏற்றுக்கொள்ளாமல் 69 இலட்சம் பேர் வாக்களித்தனர். இப்போது நாடு சீரழிந்து விட்டது" என்றார். இப்போது, ஜனாதிபதி நகைப்புரியவராக மாறுகிறார். செய்வதற்கு ஒன்றும் இல்லை. எவ்வாறு நாட்டுக்கு டொலர் கொண்டு வருவார். எவ்வாறு பொருளாதாரத்தை மேம்படுத்துவார். எவ்வாறு நிவாரணம் வழங்குவார். எரிபொருளை எவ்வாறு கொண்டு வரப்போகிறார் என கேள்வி எழுப்பினார். பிரச்சினைகளுக்க அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தவறான தீர்மானம் எடுக்க மாட்டோம்; அவர்கள் செய்த தவறை நாம் செய்யமாட்டோம் எனத் தெரிவித்து அதிகாரத்துக்கு வந்தவர்கள், மீண்டும் மைத்திரிபால ...

வீட்டிற்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தி வாகனத்தையும் தீ வைத்த கும்பல்.

Image
  முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளப்பாட்டில் வசித்து வரும் குடும்பம் ஒன்றின் வீட்டிற்குள் புகுந்த இனம் தெரியாத நபர்கள் வீட்டில் இருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வீட்டில் நின்ற வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளதுடன் தீவைத்துவிட்டு சென்றுள்ளார்கள். இதன் போது வாகனம் ஒன்று முற்றாக எரிந்துள்ளதுடன் ஒரு வாகனம் சேதமடைந்துள்ளது. வீட்டில் இருந்த ஒருவர் வாள்வெட்டிற்கு இலக்கான நிலையில் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். - நிருபர் தவசீலன்- Derana

மாகாணங்களுக்குள் சேவையில் ஈடுபடும் பஸ் மற்றும் ரயில் சேவைகளின் எண்ணிக்கை இன்று முதல் அதிகரிப்பு.

Image
  மாகாணங்களுக்குள் சேவையில் ஈடுபடும் பஸ் மற்றும் ரயில்  சேவைகளின் எண்ணிக்கை இன்று முதல் அதிகரிப்படவுள்ளன. இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகளுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் செயலணி இதுவரை அனுமதி வழங்கவில்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார். கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு காலையில் சென்றடையக்கூடிய ரயில்களை சேவையில் ஈடுபடுவதற்கும், மாலையில் கொழும்பு கோட்டை மற்றும் மருதானை நிலையங்களுக்கு சென்றடையக்கூடிய ரயில்களை சேவையில் ஈடுபடுவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் இன்று முதல் 70 ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ரயில்களை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தவிர்ப்பதற்காக சமூக இடைவெளியை பேணும் வகையில் பயணிகளுக்கு உதவுவது இதன் நோக்கமாகும். இந்நிலையில், அம்பேபுஸ்ஸ, மீரிகம, வேயங்கொட ஆகிய இடங...

உள்ளூராட்சி மன்றங்களுக்கு மேலதிக பட்டியலின் ஊடாக நியமிக்கப்படும் பிரதிநிதிகளுக்கு உத்தியோகபூர்வ கால எல்லை தொடர்பாக உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.

Image
  - ஹஸ்பர் ஏ ஹலீம்_ உள்ளூராட்சி மன்றங்களுக்கு மேலதிக பட்டியலின் ஊடாக நியமிக்கப்படும் பிரதிநிதிகளுக்கு உத்தியோகபூர்வ கால எல்லை தொடர்பாக உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும். உள்ளூராட்சி மன்ற புதிய தேர்தல் சட்டத்தின் மூலமாக  உள்ளூராட்சி மன்றங்களுக்கு முன்னையதை விட அதிகமான உறுப்பினர்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்கள் வட்டார ரீதியாக நேரடியாக தேர்தலில் போட்டியிட்டும் அதேநேரம் அந்தக் கட்சிகள் பெறக்கூடிய வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் மேலதிக பட்டியல் ஊடாகவும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.  இவ்வாறு மேலதிக பட்டியலின் ஊடாக உள்ளுராட்சி மன்றங்களுக்கு நியமிக்கப்பட கூடிய பிரதிநிதிகளை வருடா வருடம் கேட்டு விலக கூறி புதிய உறுப்பினர்களை நியமிக்கின்ற ஒரு செயற்பாட்டினை சில கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் பின்பற்றி வருகின்றதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இதன் காரணத்தினால் இவ்வாறு வருடா வருடம் பிரதிநிதிகள் மாற்றப்படுகின்றது குறிப்பிட்ட பிரதேசத்திற்கான அபிவிருத்திகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். அதே போ...

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021

Image
  (எம்.எஸ்.எம்.ஸாகிர்) நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 75 வருட பூர்த்தியை முன்னிட்டு, பாடசாலையின் அதிபர் ஏ.அப்துல் கபூரின் ஆலோசனையின் பிரகாரம் பழைய மாணவர்களுக்காக, பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் பவளவிழா கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளை நடாத்தவுள்ளது.   இப்போட்டிகளில் முதலிடம் பெறும் வெற்றியாளர்களுக்கு பாடசாலையின் முன்னாள் அதிபர் மர்ஹூம் சீ.ஓ. லெஸ்தகீர் ஞாபகார்த்த விருதுகள் வழங்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும். அத்தோடு, முதலிடம் பெறும் ஆக்கங்கள் பவள விழா சிறப்பு மலரிலும் இடம்பெறவுள்ளன.   அது மட்டுமல்லாமல் பாடசாலை மீளத்திறக்கப்பட்டதன் பின்னர் பாடசாலை மாணவர்களுக்கிடையேயும் பழைய மாணவர் சங்கத்தினால், பாடசாலையின் தமிழ் இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்படவுள்ளன.   திறந்த போட்டிகள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு: கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிக்கான பரிசுகளாக முதலாமிடம் - 10,000 ரூபாய், இரண்டாமிடம் - 5,000 ரூபாய், மூன்றாமிடம்- 3,000 ரூபாய், ஆக்கங்கள் தரமானதாக அமையுமிடத்து பெறுமதிமிக்க மூன்று ஆறுதல் பரிசில்கள் வழங்கப்படும். பொது நிபந்தனைகள்: போட்...

பாம்பு தொல்லையுடன், அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத (குடிநீர் மின்சார வசதி) அரபா நகர், கொக்குலான் கல் மக்களின் நிலை

Image
   பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத (குடிநீர் மின்சார வசதி)  அரபா நகர், கொக்குலான் கல் மக்களின் நிலை கமராவின் கண்ணில் தென்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம்  இறக்காமம் பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் உள்ள அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத (குடிநீர் மின்சார வசதி)  அரபா நகர் கொக்குலான் கல்   மக்கள் எதிர்நோக்கின்ற பிரச்சினைகள் சொல்லிலடங்காதவை. சுமார் 65 குடும்பங்கள் உள்ள மேற்குறித்த கிராமங்களில் குடியேறியுள்ள மக்கள் கட்டங்கட்டமாக 5 வருடங்களுக்கு முன்னர் குடியேறியவர்களாவர்.   இப்பகுதி மக்களுக்கு மலசல கூட வசதி, மின்சார வசதி,வீதி அபிவிருத்தி, தெருவிளக்கு, மாலை வேளைகளில் உள்ள பாம்பு தொல்லை, யானைகளின் அட்டகாசம் என பல்வேறு வகையான பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய அவசியமாக உள்ளதை காண முடிந்தது. எனவே பொறுப்பு வாய்ந்தவர்கள் அனைவரும் இது தொடர்பில் கரிசனை செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். -- Thanks & Best Regards,

இரட்டை குடியுரிமையினை கொண்டவர்கள் அரசியலிலும், அரச நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்துவது நாட்டுக்கு எதிரான செயற்பாடு.

Image
 இரட்டை குடியுரிமையினை கொண்டவர்கள் அரசியலிலும், அரச நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்துவது நாட்டுக்கு எதிரான செயற்பாடு.   (இராஜதுரை ஹஷான்) இரட்டை குடியுரிமையினை கொண்டவர்கள் அரசியலிலும், அரச நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்துவது நாட்டுக்கு எதிரான செயற்பாடு என்றே கருத வேண்டும். பஷில் ராஜபக்ஷ நாட்டுக்கு சேவையாற்ற நினைத்தால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை போன்று அமெரிக்க குடியுரிமையை துறக்க வேண்டும். தற்போதைய நிலையில் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என்றே தோன்றுகிறது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இரட்டை குடியுரிமையினை கொண்டவர்கள் அரச நிர்வாகத்திலும், அரசியலிலும் பங்குப்பற்றுவதும் தவறானதாகும். இரட்டை குடியுரிமையினையுடைவர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது நாட்டுக்கு எதிராக செயற்பாடாகும். முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராகி நாட்டுக்கு சேவையாற்றுவது வரவேற்கத்தக்கது. ஆனால் நாட்டின் நலனை கருத்திற் கொண்டு இரட்டை குடியுரிமையினை உடையவருக்கு அரசியலில் அனுமதியளிக்க முடியாது. மேலும், இரசா...

மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வுகளை முன்வைக்க முடியாவிட்டால் அது பதவி விலகவேண்டும் – சஜித்

Image
 மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வுகளை முன்வைக்க முடியாவிட்டால் அது பதவி விலகவேண்டும் – சஜித்   ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் நாட்டிற்கான உரை அரசாங்கத்தின் இயலாமையையும் தோல்வியையும் வெளிப்படுத்தியுள்ளது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உரைக்கு முன்னாள் நான் எழுப்பிய ஆறு கேள்விகளிற்கான பதில்களை ஜனாதிபதி வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நான் எரிபொருள் விலை அதிகரிப்பு பொதுமக்களிற்கு நிவாரணம் உட்பட ஆறு யோசனைகளை முன்வைத்தேன் ஜனாதிபதி அவற்றிற்கு பதில் அளிப்பதை தவிர்த்துக்கொண்டார் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் தீர்வுகளை முன்வைக்க முடியாவிட்டால் அது பதவி விலகி மாற்று அரசாங்கத்திடம் ஆட்சியை ஒப்படைக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாங்கள் அதிகாரத்தை பொறுப்பேற்று மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வை வழங்கி நாட்டை ஆட்சி செய்ய தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக சேவையாளரும், ஊடகவியலாளருமான அஜ்மில் தஹ்சீன் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியில் இணைவு.

Image
 சமூக சேவையாளரும், ஊடகவியலாளருமான அஜ்மில் தஹ்சீன் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியில் இணைவு.   புத்தளம் மாவ‌ட்ட‌ம் புழுதி வயலைச் சேர்ந்த அஜ்மில் தஹ்சீன் ஐக்கிய‌  காங்கிர‌ஸ் க‌ட்சியில் இணைந்து கொண்டுள்ளார். சமூக சேவையாளரும் வளர்ந்து வரும் ஊடகவியலாளரும், சமூக சிந்தனையுடன் சமூகத்தின் ஒற்றுமைக்கு பாடுபடுப‌வ‌ரான‌ இவ‌ர் ஐக்கிய‌ காங்கிர‌சில் இணைந்த‌தை தொட‌ர்ந்து புத்தளம் - புழுதிவயல் அமைப்பாளராக கட்சியின் தலைவர் முபாற‌க் அப்துல் மஜீதினால் நியமிக்கப்பட்டுள்ளார். நான்கு மொழியிலும் தேர்ச்சி பெற்ற இவர் பல இளைஞ‌ர் சார் அமைப்புகளில் உறுப்பினராவார். இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக செயற்படும் ஒருவர். நாட்டில் உள்ள கட்சிகளில் மக்களை அரசியலின் பெயரால் ஏமாற்றாமல் உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்படுவ‌தில் உறுதியுட‌ன் வ‌ழிகாட்டும் தலைமையை கொண்டிருக்கும் ஐக்கிய காங்ரஸ் (உல‌மா) கட்சியின் நீண்ட கால பல நேர்மையான செயல்பாட்டினை பார்த்த பின் அக்கட்சியில் இணைந்து செயல்படுவதன் மூலமே சமூகத்துக்கு நல்ல அரசியல் பாதையை காட்ட முடியும் என்பதை உணர்ந்து ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார் என்ப‌து குறிப்...

ஏழைகளின் பசியறிந்த ஏழை நான் : இறைவன் தந்தவற்றை இறைவனின் பொருத்தம் நாடி பகிர்ந்தளிப்பேன்.

Image
 ஏழைகளின் பசியறிந்த ஏழை நான் : இறைவன் தந்தவற்றை இறைவனின் பொருத்தம் நாடி பகிர்ந்தளிப்பேன்.   நூருள் ஹுதா உமர். இறக்காமம் பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் உள்ள  அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத கொக்குலான் கல், அரபா நகர் மக்களுக்கான முபாரக் டெக்ஸ் குழும நிவாரண பொருட்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (27) காலை முன்னெடுக்கப்பட்டது. சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.எஸ்.எம். முபாரக் தலைமையிலான குழுவினர் இந்த நிவாரண பணிகளை முன்னெடுத்த பின்னர் அப்பிரதேச மக்கள் மத்தியில் உரையாற்றிய முபாரக் டெக்ஸ் குழுமத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.எஸ்.எம். முபாரக், மலசல கூட வசதி, மின்சார வசதி, வீதி அபிவிருத்தி, தெருவிளக்கு, மாலை வேளைகளில் உள்ள பாம்பு தொல்லை, யானைகளின் அட்டகாசம் என பல்வேறு வகையான பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய அவசியம் எம் எல்லோருக்கும் உள்ளது. பிரதேச அரசியல்வாதிகள் இது தொடர்பில் கரிசனை செலுத்த வேண்டும். ஏழை வயிற்றில் பிறந்த நான் இன்று ஏழைகளின் துன்பத்தை பகிர்ந்து கொள்ள கிடைத்தமையை எண்ணி இறைவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த மக்களின் ஏழ்மை நிலையை போக்...

எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் - இராணுவ தளபதி

Image
 எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் - இராணுவ தளபதி   நாட்டில் எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என  இராணுவ தளபதி சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மைக்குப் புறம்பானது அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மற்றும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணக்கட்டுப்பாடு விதிப்பது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். இனிவரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட மாட்டாது என பரவும் செய்திகளில் உண்மை இல்லை என இராணுவதளபதி மேலும் தெரிவித்துள்ளார். சுமார் ஒரு மாத காலம் நாடு தழுவிய ரீதியில் அமுலிருந்து பயணத்தடை நேற்று அதிகாலை நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விமர்சனங்களை தவிர்த்திருக்க, துமிந்த சில்வாவையும், ரஞ்சன் ராமநாயக்கவையும் ஒன்றாக விடுவித்திருக்க வேண்டும்.

Image
 விமர்சனங்களை தவிர்த்திருக்க, துமிந்த சில்வாவையும், ரஞ்சன் ராமநாயக்கவையும் ஒன்றாக விடுவித்திருக்க வேண்டும்.   ஏ.பி.எம்.அஸ்ஹர் பொசன் தினத்தில் விடுதலை செய்யப்பட்டவர்களில் தமிழ் அரசியல் கைதிகளையும், சிங்கள கைதிகளையும் ஒன்றாக விடுதலை செய்துவிட்டு ஓரிரு மாதங்களின் பின்னர் துமிந்த சில்வாவையும், ரஞ்சன் ராமநாயக்கவையும் ஒன்றாக விடுவித்திருந்தால் அமெரிக்க தூதுவரும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும் கூறும் விமர்சனங்களை தவிர்த்திருக்கலாம் என முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலு‌ம் குறிப்பிடப்பட்டுள்ளதாவது அறிவும் புத்தியும் வெவ்வேறானவை. அபயராம விகாரையின் விகராதிபதி முருத்தேட்டுவே ஆனந்த தேரர் அவர்கள் மஹிந்த ராஜபக்சவின் உடம்பும், ரணில் விக்கிரம சிங்ஹவின் தலையும் இணைந்து செயல்பட்டால் இலங்கைக்கு நல்லது என்று கூறியுள்ளார்... ஆனால் அவ்வாறில்லாமல் மஹிந்தவின் இதயமும், ரணிலின் மூளையும் இணைந்து ஒருசேர செயல்பட்டால் நாட்டுக்கு நல்லது என்று தேரர் கூறியிருந்தால் புத்திசாலித்தனமாக இருந்திருக்கும். பொசன் தினத்தில் விடுதலை செய்யப்பட்டவர்களில் தமிழ் அரசியல் க...

வாழ்க்கையில் முதல் தடவையாக நான் மரண பயத்தை அனுபவித்தேன் , நான் மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன்.

Image
 வாழ்க்கையில் முதல் தடவையாக நான் மரண பயத்தை அனுபவித்தேன் , நான் மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன்.   வாழ்க்கையில் முதல் தடவையாக நான் மரண பயத்தை அனுபவித்தேன் , நான் மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன் என சிஐடியினரால் வீட்டிலிருந்து கைதுசெய்யப்பட்ட பின்னர் விடுதலையான சிவில் உரிமை செயற்பாட்டாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது வாழ்க்கையில் முதல்தடவையாக நான் மரண பயணத்தை அனுபவித்தேன் , நான் மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன். வீட்டிலிருந்தவேளை எனது வாயை பொத்தி இழுத்துச்சென்றார்கள் – எனது மூத்த மகன் அதனை பார்த்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் எனது அயல்வீட்டில் உள்ளன நான் வீட்டியே இருந்தேன்,நான் இந்த நாட்டின் பிரஜை. அதிகாரிகள் சீருடையின் உரிய காரணம் இன்றி என்னை இழுத்துச்சென்றனர். பத்துபேருக்கு மேல் வந்திருந்தனர், எனது கையில் ஏற்பட்ட காயங்களை பாருங்கள்,எனது விரலில் ஏற்பட்ட காயங்களை பாருங்கள், இந்த சாரத்துடன் தான் என்னை கொழும்பிற்கு அழைத்துச்சென்றார்கள். ரிசாத் பதியுதீன் எனக்கு இந்த ரீசேர்ட்டை தந்தார், பொடி லசி எனக்கு குளிப்ப...

அடுத்த வாரமும் மாகாணங்களுக்குள் மாத்திரம் பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறும்

Image
 அடுத்த வாரமும் மாகாணங்களுக்குள் மாத்திரம் பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறும்   மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட  பின்னர் அத்தியாவசிய சேவைகளுக்காக ரயில் மற்றும் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று போக்குவரத்து இராஜங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதற்கமைவாக அடுத்த வாரம் மாகாணங்களுக்குள் மாத்திரம் பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறும் என்றும் அவர் கூறினார். தற்போதைய கொவிட் 19 வைரஸ் தொற்று அனர்த நிலை இன்னும் குறைவடையவில்லை என்று இராணுவத்தளபதி எமக்கு அறிவித்துள்ளார். கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தீர்மானம் மாகாணங்களுக்கிடையில் பஸ் அல்லது ரயில் சேவைகள் இடம்பெறக்கூடாது என்பதாகும். இந்த தீர்மானத்தை மதிக்க வேண்டும் என்றும் போக்குவரத்து இராஜங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

வெள்ளிடை மலையாகி வரும் கைதிகளின் விடுதலைகள்!

Image
 வெள்ளிடை மலையாகி வரும் கைதிகளின் விடுதலைகள்!   சுஐப் எம். காசிம்- ஏதாவதொரு முக்கிய தினத்தில், எவருக்காவது விடுதலை கிடைக்கும் அரசியல் கலாசாரம் இருப்பதுதான், பயங்கரவாதத் தடைச்சட்டம் ஒழிக்கப்படும் வரைக்கும் கைதிகளுக்குள்ள ஒரேயொரு ஆறுதல். சுதந்திர தினம், பொஸன் போயா தினம் மற்றும் விஷேட தினங்களிலாவது, சிலர் பொதுமன்னிப்பில் விடுதலையாகாதிருந்தால், நாட்டில் உள்ள சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்திருக்கலாம். இவ்வாறுதான் சில நடைமுறைகளும் உள்ளன. இப்போது, இதிலொரு தினத்தில்தான் 93 கைதிகள் விடுதலையாகி உள்ளனர். இவர்களில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தால் கைது செய்யப்பட்ட 16 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் விடுதலை கிடைத்திருக்கிறது. அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து 15, யாழ்ப்பாணத்திலிருந்து ஒருவரும் வெளியாகியதால் சட்டம் வெள்ளிடைமலையாகி இருக்கிறது. வழக்குகள் இழுத்தடிக்கப்படுதல், சாட்சிகள் உயிரிழத்தல் அல்லது திட்டமிட்டுக் கொல்லப்படுதல், இன்னும் துப்புக்களைத் தேடிப்பெற்று நீதிமன்றுக்கு சமர்ப்பிக்க அதிக காலம் தேவைப்படுதல் உள்ளிட்ட காரணங்களால்தான், கைதிகளும் காலாதிகாலமாக கூட்டுக்குள் கிடக்க நேரிடுகிறது. இதனா...

கொரோனா ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்படுகின்ற மஜ்மா நகரில் நிவாரணப்பணி முன்னெடுப்பு

Image
 கொரோனா ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்படுகின்ற மஜ்மா நகரில் நிவாரணப்பணி முன்னெடுப்பு   சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தினரினால் மஜ்மா நகரில்   நிவாரணப்பணி. நூருள் ஹுதா உமர் / பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தினரினால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உலருணவுகள் பல இடங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக கொரோணா ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படும் ஓட்டமாவடி மஜ்மா நகரில் அமைந்துள்ள வீட்டுத்திட்ட மக்களுக்கு நிவாரணம் இன்று பகல் வழங்கி வைக்கப்பட்டது. சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.எஸ்.எம். முபாரக் தலைமையிலான குழுவினர் அந்த இடத்திற்கு நேரடியாக சென்று மக்களுக்கான உலருணவுகளை வழங்கி வைத்ததுடன் இனிவரும் காலங்களில் ஏனைய பிரதேசங்களுக்கும் உலருணவுகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.எஸ்.எம். முபாரக் இந்நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்தார். இந்நிகழ்வில் ஏறாவூர் நகர சபை முன்னாள் தவிசாளர் எம்.ஐ.எம். தஸ்லீம், கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான மௌலவி...

கலாநிதி ஜனகனின் ஏற்பாட்டில் சுமார் 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.

Image
 கலாநிதி ஜனகனின் ஏற்பாட்டில் சுமார் 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.   கொரோனா தொற்று காரணமாக தினசரி கூலி தொழில் புரியும் கொழும்பு உருகொடவத்தயை சேர்ந்த சுமார் 100 குடும்பங்களுக்கு நவஜீவன மகளிர் தொழில் சங்கத்தினர் கலாநிதி.வி.ஜனகன் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக ஜனனம் அறக்கட்டளையினால் இன்று(26/06/21)உலர் உணவு பொருட்களை ஜனனம் அறக்கட்டளையின் முக்கியஸ்தர்.றிஸ்கான் முகம்மட் அவர்கள் நேரில் சென்று வழங்கி வைத்தார். இன் நிகழ்வில் அறக்கட்டளையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

வௌவால்களுக்கு கொரோனா' விவகாரம்.. மக்கள் அச்சப்பட தேவையில்லை என அரச கால்நடைவைத்திய அதிகாரிகள் சங்கம் விளக்கம்.

Image
 'வௌவால்களுக்கு கொரோனா' விவகாரம்.. மக்கள் அச்சப்பட தேவையில்லை என அரச கால்நடைவைத்திய அதிகாரிகள் சங்கம் விளக்கம்.   விலங்குகளில் கொரோனா வைரஸ் இருப்பதை பற்றி மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை என அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச்செயலாளர் வைத்தியர் எஸ். சுகிர்தனால் இலங்கையில் வௌவால்களுக்கு 'கொரோனா' என்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதுமாணிக்கல்வியினை மேற்கொள்பவரால் 2017 இல் தொடங்கிய ஆய்வினை மேற்கோள்காட்டி இலங்கையில் வௌவால்களுக்கு கொரோனா' என்ற செய்தியை ஊடகங்கள் ஒளிபரப்பியிருந்தன. அந்தச் செய்தியை அறிந்து நாட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த அச்சத்தின் காரணமாக அவர்கள் வௌவால்களை வீடுகளை விட்டு வெளியேற்ற வேண்டுமா. வௌவால்களை தங்கள் பகுதிகளை விட்டு வெளியேற்ற வேண்டுமா, வௌவால்கள் பழங்களை சாப்பிடுவதால் அப்பழங்களை சாப்பிடுவது பிரச்சினைகளை ஏற்படுத்துமா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த பிரச்சனையால் இலங்கை மக்கள் பழங்களை சாப்பிடுவதை நிறுத்தினால், ...

தனது சக ஊழியரை முத்தமிட்டு, சமூக இடைவெளியை மீறிய குற்றச்சாட்டில் பிரித்தானிய சுகாதார செயலாளர் பதவி விலகினார்.

Image
 தனது சக ஊழியரை முத்தமிட்டு, சமூக இடைவெளியை மீறிய குற்றச்சாட்டில் பிரித்தானிய சுகாதார செயலாளர் பதவி விலகினார்.   தனது சக ஊழியரை முத்தமிட்டதன் ஊடாக சமூக இடைவெளியை மீறிய  காரணத்தால் பிரித்தானிய சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. கொவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பிரித்தானியாவில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ள நேரத்தில், அந்நாட்டு சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தனது சக ஊழியர்களில் ஒருவருடன் மிக நெருக்கமாக இருக்கும் காணொளி வெளியாகி இருந்தது. இந்த காணொளி வெளியானதன் பின்னர் சுகாதார செயலாளருக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அவர் இவ்வாறு பதவி விலகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தின் மூலம் நாட்டின் உயர்மட்ட சுகாதார அதிகாரி பொதுமக்களுக்கு தவறான முன்னுதாரணத்தை காட்டிநிற்பதாக பலர் குற்றம் சாட்டி இருந்தனர். சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தனது முக்கிய சகாக்களில் ஒருவரான Gina Coladangelo உடன் நெருக்கமாக இருக்கும் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த...

ஜனாதிபதியும் அமைச்சரவையும் எதற்கு?

Image
 ஜனாதிபதியும் அமைச்சரவையும் எதற்கு?   முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அவ்வாறு தனிநபர் ஒருவரிடம்( பசில் ராஜபக்ச) உள்ளது என்றால் நாட்டை ஆள்வதற்கு ஜனாதிபதியும் ஆலோசகர்களும் ஏன் தேவை என ஒமல்பே சோபித தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்ஃ பசில் ராஜபக்ச நாடு திரும்பியுள்ளதால் பொதுமக்களிற்கு சலுகைகளும் நிவாரணங்களும் கிடைக்கும் என அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தெரிவித்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனிநபர் ஒருவருக்கு தனது விருப்பத்தின் அடிப்படையில் செயற்படுவதற்கும் சலுகைகளை வழங்குவதற்கும் அதிகாரம் உள்ளது என்றால் அமைச்சரவை எதற்கு இருக்கின்றது அதற்கான தேவை என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அவ்வாறு தனிநபர் ஒருவரிடம் உள்ளது என்றால் நாட்டை ஆள்வதற்கு ஜனாதிபதியும் ஆலோசகர்களும் ஏன் தேவை ? எனவும் ஒமல்பே சோபித தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறான சிந்தனை உள்ள தனிநபர்களால் நாடு ஆபத்தை எதிர்கொள்ளும் ஜனநாயகத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார். நாட்டின் தடுப்பூசி வழங்கும் திட்டம் கரிசனை அளிக்கும் ஒன்றாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ள...

அரசாங்கம் 425.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கி, 60 சதவீதமானோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

Image
 அரசாங்கம் 425.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கி, 60 சதவீதமானோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.   நாட்டில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்திற்காக அரசாங்கம் 425.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன இதற்கான நிதியை வழங்குவதற்கு உடன்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மேலும் தெரிவித்துள்ளார். Thamilan -