Posts

Showing posts from July, 2021

பொது இடங்களுக்கு பிரவேசிக்கும்போது தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பதை கட்டாயமாக்க நடவடிக்கை.

Image
 பொது இடங்களுக்கு பிரவேசிக்கும்போது தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பதை கட்டாயமாக்க நடவடிக்கை.  நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றினை மேற்கொள்ளுமாறு,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கொவிட் ஒழிப்பு விசேட குழுவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். கொவிட் நோயாளர்கள் மற்றும் மரணமடைந்தவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கேற்ப, அவர்களில் சுமார் 95 சதவீதமானவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் எனத் தெரியவந்துள்ளது. தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டிருந்தபோதும், அவற்றைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்து விசாரணை செய்வதும், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். பிரதேச செயலக மட்டத்தில் துரித கணக்கெடுப்பினை சில தினங்களுக்குள் மேற்கொண்டு, தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் தொடர்பான அறிக்கை ஒ...

(நாளை ) 1 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை தளர்த்தப்பட வாய்ப்பு.

Image
 (நாளை ) 1 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை தளர்த்தப்பட வாய்ப்பு.   கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டு பயணத்தடை எதிர்வரும் 1ஆம் திகதி முதல் தளர்த்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் அமுலாகும் வகையில் கடந்த மே மாதம் 11ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் மே மாதம் 30ஆம் திகதி வரை இந்த பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்ததுடன், பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், பயணத்தடை தளர்த்தப்படுகின்றமை குறித்து இதுவரை உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப் படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். Siva Ramasamy

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் புகையிரத போக்குவரத்து சேவைகள் நாளை (01) முதல் இடம்பெறும்.

Image
 மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் புகையிரத போக்குவரத்து சேவைகள் நாளை (01) முதல் இடம்பெறும்.   மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் புகையிரத போக்குவரத்து சேவைகள் நாளை (01) முதல் இடம்பெறும் என வாகன ஒழுங்குறுத்துகை, பஸ் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதன்படி, ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச்செல்வது கட்டாயம் எனவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

கண்டி மாவட்ட கொரோனா மரணம் தொடர்பில் பிழையான தகவல்கள் பரப்படுகின்றன..

Image
 கண்டி மாவட்ட கொரோனா மரணம் தொடர்பில் பிழையான தகவல்கள் பரப்படுகின்றன..   கண்டி மாவட்ட கொரோனா மரணம் தொடர்பில் பிழையான தகவல்கள் பரப்படுவதாக கண்டி மாவட்ட கோவிட் 19செயலனி தலைவர்  K.R.A. சித்திக் குறிப்பிட்டார். நேற்று கண்டி மாவட்டத்தில் கொரோனாவினால் 20 முஸ்லிம் ஜனாஸாக்கள் பதிவானதாக சமூக வலைகளில் பரவிய செய்தி தொடர்பில் வினவிய போது அவர் இதனை கூறினார். நேற்று கண்டி மாவட்டத்தில் இருந்து 5 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டதாக கூறிய அவர் அதில் இரண்டு அக்குரனை பிரதேசவாசிகளின் ஜனாஸாக்கள் என அவர் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 700 குடும்பங்களுக்கு ராபிதா உலக முஸ்லிம் சம்மேளனத்தினால் ரூபா 10000 பெறுமதியான வீட்டுப் படுக்கை உபகரணங்கள் .

Image
 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 700 குடும்பங்களுக்கு ராபிதா உலக முஸ்லிம் சம்மேளனத்தினால் ரூபா 10000 பெறுமதியான வீட்டுப் படுக்கை உபகரணங்கள் .   வத்தளை பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 700 குடும்பங்களுக்கு ராபிதா உலக முஸ்லிம் சம்மேளனத்தினால்  ரூபா 10000 பெறுமதியான வீட்டுப் படுக்கை உபகரணங்கள்  இன்று வழங்கி வைக்கப்பட்டது. ராபிதா உலக முஸ்லிம் சம்மேளனத்தின் அனுசரணையுடன் வத்;தளை  பிரதேசத்தில் சமீபத்தில் கன மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிங்கள தமிழ்  முஸ்லிம் கிறிஸ்தவ ஆகிய 700 குடும்பங்களுக்கு தலா ரூபா 10000 பெறுமதியான  வீட்டுப் படுக்கை உகரணங்கள் வழங்கி வைக்கும் வைபவம் வத்தளை ஜும்ஆப் பள்ளிவாசலில் ராபிதா உலக முஸ்லிம் சம்மேளனத்தின் சமூக சேவைப் பிரிவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பணிப்பாளர் தேசபந்து  இம்ரான் ஜமால்தீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ராபிதா உலக முஸ்லிம் சம்மேளனத்தின் பிரதிநிதியாக அப்துல்லா சயித் அல் சஹ்ரானி கலந்து கொண்டார். இதன் போது ஒரு குடும்பத்திற்கு 02 இரண்டு தலையணைகள், ஒரு படுக்கை மெத்தை, 02 படுக்கை விரிப்...
Image
 எக்காரணம் கொண்டும் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிக்கபட மாட்டாது.   (இராஜதுரை ஹஷான்) தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது.  வரி குறைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் ஒருபோதும் இறக்குமதி செய்யப்பட மாட்டாது. தேசிய மட்டத்தில் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தெங்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டுக்குள் தேங்காய் எண்ணெய் மாபியாக்கல் இடம் பெறுகின்றன. எக்காரணிகளுக்காகவும் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிக்கபட மாட்டாது. என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம். தர குறைவான மற்றும் வரி குறைவான தேங்காய் எண்ணெய் ஒருபோதும் இறக்குமதி செய்யப்படமாட்டாது. தேசிய மட்டத்தில் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உரிய நடடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேங்காய் எண்ணெய் தொடர்பில் கடந்த காலங்களல் பாரிய சர்ச்சைகள் காணப்பட்டன. தேங்காய் எ...

சிறுவர்கள் தொடர்பான ஆபாச காணொளிகளை தரவிறக்கம் / தரவேற்றம் செய்த நபர் அடையாளம்.. #கண்டி

Image
 சிறுவர்கள் தொடர்பான ஆபாச காணொளிகளை தரவிறக்கம் / தரவேற்றம் செய்த நபர் அடையாளம்.. #கண்டி   கண்டியில் சிறுவர்கள் தொடர்பான ஆபாச காணொளிகளை தரவிறக்கம் / தரவேற்றம் செய்த நபர் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். காணாமல் போன மற்றும் துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுவர்களுக்கான தேசிய நிலையம் என்ற விஷேட பிரிவின் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டியைச் சேர்ந்த ஒருவர் சுமார் 100 சிறுவர் ஆபாசக் காணொளிகளையும் படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை கண்காணிக்கும் வகையில் கடந்த மாதம் கொழும்பிலுள்ள சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகத்தில் புதிய பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. இதன்மூலம் குறித்த நபர் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்டிஐஜி அஜித் ரோஹண தெரிவித்தார். இவ்வாண்டு 17ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆபாசக் காணொளிகள் மற்றும் சிறுவர் ஆபாசப் படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. விசாரணையின் பின்னர் தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக சந்தேக நபரின் ஐபி முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் அவர்களிடம் இருப்பதாக பொலி...

T-20 போட்டித் தொடரை கைப்பற்றியமைக்காக இலங்கை அணிக்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர் சன்மானம்.

Image
 T-20 போட்டித் தொடரை கைப்பற்றியமைக்காக இலங்கை அணிக்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர் சன்மானம்.   இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு 1 இலட்சம்  அமெரிக்க டொலர்களை சன்மானமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் இடம்பெற்ற T-20 போட்டித் தொடரை கைப்பற்றியமைக்காக இவ்வாறு சன்மானம் வழங்கப்படவுள்ளது.

சடலத்தை கண்டுபிடிக்க உதவுமாறு- பொலிசார் கோரிக்கை!

Image
 சடலத்தை கண்டுபிடிக்க  உதவுமாறு-  பொலிசார் கோரிக்கை! (அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை கண்டுபிடிக்க உதவுமாறு திருகோணமலை- உப்புவெளி பொலிஸார் பொதுமக்களிம் கோரியுள்ளனர். திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனுராதபுர சாந்தியில் கடந்த ஜுலை மாதம் 13 ஆம் திகதி கார் ஒன்றுடன் மோதி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் குறித்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி கடந்த 28ஆம் திகதி உயிரிழந்துள்ளதாகவும் அவரது சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். ஆனாலும் இவர் குறித்து எதுவித தகவல்களும் கிடைக்காத பட்சத்தில் இவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கோ 0262222522  அல்லது போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி  077 256 4808 ஆகியோருக்கு தெரியப்படுத்துமாறு உப்புவெளி பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கறுவாக்கேணியில் பிரபல போதை மாத்திரை வியாபாரியும் இளைஞனும் கைது

Image
 கறுவாக்கேணியில் பிரபல போதை மாத்திரை வியாபாரியும் இளைஞனும் கைது  வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கறுவாக்கேணி வீதியில் வைத்து 38 வயதுடைய பிரபல போதை மாத்திரை வியாபாரியும் 27 வயதுடைய இளைஞரொருவனும் இன்று 2021-07-30ம் திகதி வெள்ளிக்கிழமை 01.30  மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனை குற்றத்தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து விற்பனைக்கு தயார் நிலையில் 50 பெட்டிகளில் 1,500 போதை மாத்திரைகள் அடங்கிய போதை மாத்திரைகள் ஒரு தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், முதற்கட்ட விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனக்கு 49 ஏக்கர் காணியிருப்பதாகத் தெரிவித்து சீன நாட்டவர் ஒருவரும் ஆர்பாட்டம்.

Image
 தனக்கு 49 ஏக்கர் காணியிருப்பதாகத் தெரிவித்து சீன நாட்டவர் ஒருவரும் ஆர்பாட்டம்.    முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு செய்வதற்கு நேற்றும் (29) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையால் அங்கு பெரும் பதற்றமான நிலைமையொன்று இன்றுக்காலை முதல் ஏற்பட்டிருந்தமை யாவரும் அறிந்த விடயமாகும். இந்நிலையில், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் ஏனைய தரப்பினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது,    முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு தொடர்பில் கடற்படை, காணிகளுக்கு உரியவர்கள், உரிய திணைக்கள அதிகாரிகளுடன் மாவட்டசெயலகத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெறும். அந்தக் கலந்துரையாடலின் அடிப்படையிலேயே நில அளவீடு தொடர்பில் முடிவு எடுக்கப்படும்.    அதுவரை நில அளவைச் செயறபாடுகள் இடம்பெறாது என்ற இணக்கமான முடிவொன்று எடுக்கப்பட்டது. இதனையடுத்தே, ஆர்ப்பாட்டம் சற்றுமுன்னர்  கைவிடப்பட்டது. ...

40 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Image
 40 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது   பண்டாரகம பகுதியில் 40 கிலோகிராம் ஹெரோயின்  போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் மொத்த பெறுமதி 400 மில்லியன் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பெண்ணொருவருக்கு இரு கைகளிலும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளை செலுத்திய தாதிமார்.

Image
 பெண்ணொருவருக்கு இரு கைகளிலும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளை செலுத்திய தாதிமார்.   பெண்ணொருவருக்கு இரு கைகளிலும் இரண்டு கொரோனா  தடுப்பூசிகளை செலுத்திய மற்றுமொரு சம்பவம் பதிவாகி உள்ளது. யாழிழ் பெண்ணொருவருக்கு இரு கைகளிலும் கொரோன  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள சம்பவமொன்று நேற்று (29) இடம்பெற்றுள்ளது. யாழ். மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நேற்று (29) முதல் முன்னெடுக்கப் பட்டது. இந்த செயற்றிட்டத்தில் யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா தடுப்பூசி வழங்கும் மையத்தில் கொழும்புத்துறை ஜே/61 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் தடுப்பூசி ப�ோடப்பட்டது. இதே பிரிவைச் சேர்ந்த 66 வயதான பெண்ணுக்கு இரு கையிலும் தடுப்பூசிகள், ஏற்றப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது. பெண்ணின் ஒரு கையில் தாதியொருவர் ஊசியைச் செலுத்தி விட்டு அங்கிருந்து உடனடியாகச் சென்றுவிட்டார். தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பெண் அவ்விடத்திலேயே அமர்ந்திருந்துள்ளார். இந்நிலையில், தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்குத்தான் அப்பெண் அமர்ந்திருக்கின்றார் என நினைத்த மற்றுமொரு தாதி, மற்ற...

கொழும்பு போதை வியாபாரியுடன் நான்கு இளைஞர்கள் காவத்தமுனையில் கைது

Image
 கொழும்பு போதை வியாபாரியுடன் நான்கு இளைஞர்கள் காவத்தமுனையில் கைது  வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட காவத்தமுனை, பனிச்சையடி வீதியிலும் நாவலடியிலுமாக கொழும்பைச்சேர்ந்த போதைப்பொருள் வியாபாரியுடன்  நான்கு இளைஞர்கள் இன்று 2021-07-29ம் திகதி மாலை 5.00 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2 கிராம் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே கொழும்பைச் சேர்ந்த போதை வியாபாரியுடன் 24, 25, 28, 28 வயதுடைய நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குறித்த கொழும்பு நபர் கொழும்பிலிருந்து ஐஸ் போதைப்பொருட்களைக் கொண்டு வந்து இப்பிரதேசத்தில் இளைஞர்களூடாக விநியோகித்து வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.  குறித்த நபரையும் இளைஞர்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றி ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் வாழைச்சேனை பொலிஸா...

பிறைந்துரைச்சேனையின் பிரபல போதை வியாபாரி உட்பட நால்வர் கைது

Image
 பிறைந்துரைச்சேனையின் பிரபல போதை வியாபாரி உட்பட நால்வர் கைது வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனைப் பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரியும் இப்பிரதேசத்தில் போதை விற்பனையின் பிரதான சூத்திரதாரி என நம்பப்படும் நபர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இன்று 2021.07.29ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 02.30 மணியளவில் பிறைந்துரைச்சேனை, அஸ்லம் ஸ்டோர் வீதியில் வைத்தே 33 வயதுடைய குறித்த பிரதான சூத்திரதாரியும் 20, 22,2 3 வயதுடைய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.    இவர்களிடமிருந்து 2 கிராம் 350 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 3 கிராம் 20 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 16,000 ரூபா பணமும் கைப்பட்டப்பட்டுள்ளது. இவர்கள் நால்வரும் பிறைந்துரைச்சேனைப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  பிரதான சூத்திரதாரி ஏற்கனவே 16 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர் என்பதோடு, கடந்த வாரம் இவரின் மைத்துனர் 8 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட...

அணையப் போகும் தியாக விளக்கை ஏற்றிடுவேம் வாரீர்.

Image
 அணையப் போகும் தியாக விளக்கை ஏற்றிடுவேம் வாரீர்.   தற்போது சிறு நீரக நோயால் அவதிப்படும் பேருவலையை  பிறப்பிடமாகக் கொண்ட, முகம்மது பஸ்லான் ஒரு வீரத்தியாகி. தனது குடும்பத்தில் தனது மாமன் உறவு முறையில் இருந்த, மாமானார் குடும்பத்தில் நான்கு சிறு பிள்ளைகளை வைத்து விட்டு இணையடி சேர்ந்த போது, துடுப்பிழந்து, தத்தளித்த படகை, கை தாங்கி கஷ்டங்களை சுமந்து கச்சிதமாக கரை சேர்த்த ஒரு தியாகி. மேலும் காலப்போக்கில் அந்தக் குடும்பத்தின் முத்த பெண் பிள்ளையை தியாகத்துடன் மணமுடித்து, மீதி பெண் பிள்ளைகளையும் கச்சிதமாய் கரை சேரத்து, கைகொடுத்து, பாதியில் மூழ்கிப்போன கப்பலை கை தாங்கி கரை சேர்த்த ஒளி விளக்கு.  இன்று அந்த ஒளிவிளக்கு நான்கு செல்வங்களுடன் அனையும் நிலை. மாற்றானுக்காய் வீரத்துடன் எழுந்து நின்ற அந்த விருச்சம் இன்று வீழந்து போகும் நிலை. மாற்றானுக்காய் வாங்கிய மூச்சு, இன்று தனக்காய் மூச்சு வாங்க மன்றாடும் பறிதாபம். தனக்காக தன் வசதிக்கேற்ப சிறு வீட்டை அமைத்து, சிறு குசன் கடை ஒன்றை நடாத்தி, அத்தனையும் சாதிதித்த சானக்கியன், இன்று தன்னையே சாதித்துக் கொள்ள முடியாத நிலை.  நல்ல மனிதருக்க...

கலாநிதியாகவும் பேராசிரியராகவும் பதவி உயர்வு பெற்ற மடவளை மதீனாவின் பழைய மாணவன் ; முபாரக் கால்தீன்

Image
 கலாநிதியாகவும் பேராசிரியராகவும் பதவி உயர்வு பெற்ற மடவளை மதீனாவின் பழைய மாணவன் ; முபாரக் கால்தீன்   பேராசிரியர் கலாநிதி முபாரக் கால்தீன் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் மேலாண்மை மற்றும் வணிக பீடம் பேராசிரியர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். G-90-WC மதீனா தேசிய கல்லூரி குழு உறுப்பினர்கள் முபாரக் கால்தீனுக்கு அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. அவரை இந்த நிலைக்கு கொண்டு வருவதற்கு அரும்பாடுபட்ட அவர்களின் பெற்றோர்களான தந்தை குஞ்சி முகம்மது கால்தீன் மற்றும் தாயாரான பாத்திமா பீபி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது.ஒவ்வொரு வெற்றிகரமான மனிதனுக்கும் பின்னால் ஒரு பெண் நிற்கிறாள்.அவரது வெற்றிக்கான வழிமுறையாக அவரது மனைவி ஹசினா பானு இருந்தார். ஜி-90 குழு தனது மனைவியின் அனைத்து ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறது. திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட இவர் தனது கல்வியை மதீனா மத்திய கல்லூரியில் ஆறாம் ஆண்டில் இருந்து உயர்தரம் வரை படித்தார், தமது பிரதேசம் பயங்கரவாத பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்து போது பல இன்னல்களுக்கு...

சமூக வலைகளில் வீடியோ வெளியான அவமானத்தில் உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி.

Image
 சமூக வலைகளில் வீடியோ வெளியான அவமானத்தில் உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி.   யாழ்ப்பாணத்தில் அவமானம் தாங்க முடியாமல் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புறா வளர்ப்பில் இளைஞர்களிற்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, இளைஞர் ஒருவரை பெண்கள் பிடித்து தாக்கி, முகத்தில் மிளகாய்த்தூள் வீசியுள்ளனர். அத்துடன், குறித்த சம்பவத்தை காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதால் அவமானத்தால் அந்த இளைஞன் தற்கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பவத்தில் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியை சேர்ந்த புவனேந்திரராசா சுகந்தன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். இதேவேளை உயிரிழந்த இளைஞனுக்கு பிசிஆர் பரிசோதனை செய்தபோது கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த இளைஞரின் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலை ஊடாக யாழ்.போதனா வைத்திசாலையின் ஆய்வுகூடத்திற்கு கையளிக்கப்பட்டப்பட்ட நிலையில் குறித்த இளைஞருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் தற்கொலை தொடர்பிலும் உ...

இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டவர்களுக்கு ( தேவைப்படின்) மூன்றாம் தடுப்பூசி ஏற்றப்படும்.

Image
 இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டவர்களுக்கு ( தேவைப்படின்) மூன்றாம் தடுப்பூசி ஏற்றப்படும்.   கொவிட்-19 வைரஸுக்கான இரண்டு தடுப்பூசிகளை  ஏற்றிக்கொண்டவர்களுக்கு மூன்றாம் தடுப்பூசி ஏற்றப்படுவதற்கான தேவை ஏற்படின் அடுத்த ஆண்டு ஜனவரி தொடக்கம் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும், இரண்டு தடுப்பூசிகள் ஏற்றிக்கொண்டவர்களுக்கு துணை தடுப்பூசியாக மூன்றாம் தடுப்பூசி ஏற்றப்படுவது குறித்து ஆராயப்படுவதாகவும் பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் மற்றும் நாட்டின் தற்போதைய கொவிட் நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.  அவர் மேலும் கூறுகையில், நாடளாவிய ரீதியில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பை காட்டுகின்றது, இறுதியாக பதிவாகியுள்ள 48 கொவிட் மரணங்களுடன் நாட்டின் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 4,195 ஆக உயர்வடைந்துள்ளது.  அதேபோல் நாட்டில் சகல பகுதிகளிலும் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால் இது சமூக பரவல் என நாம் ஒரு நிலைப்பாட்டிருக்கு இன்னும் வரவில்லை. ...

போதைப்பொருள் வியாபாரம் செய்து 600 கோடி ரூபாவிற்கு அதிகமான பணப்பறிமாற்றம் செய்த பெண் கைது.

Image
 போதைப்பொருள் வியாபாரம் செய்து 600 கோடி ரூபாவிற்கு அதிகமான பணப்பறிமாற்றம் செய்த பெண் கைது.   5 வங்கி கணக்குகள் ஊடாக போதைப்பொருள் வியாபாரத்தை  மேற்கொண்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவலை பகுதியில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக குறித்த கணக்குகளில் 600 கோடி ரூபாவிற்கு அதிகமான பணப்பறிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் நிதி விசாரணை பிரிவு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு பணத்தை வைப்பிலிட்டவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் மன்னார் மாவட்ட இந்து விவ‌கார‌ இணைப்பாளராக கந்தசாமி விநாயகமூர்த்தி நியமனம்.

Image
 ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் மன்னார் மாவட்ட இந்து விவ‌கார‌ இணைப்பாளராக கந்தசாமி விநாயகமூர்த்தி நியமனம்.   மன்னார் உப்புக்குளம் வட்டாரத்தை சேர்ந்த‌ கந்தசாமி விநாயகமூர்த்தி அவர்கள் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் மன்னார் மாவட்ட இந்து விவ‌கார‌ இணைப்பாளராக கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் அவர்களால் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். இவ‌ர் ப‌ல‌ இந்தும‌த‌ சேவை ம‌ன்ற‌ங்க‌ளின் அங்க‌த்த‌வ‌ராக‌வும், ம‌க்க‌ள் ந‌ல‌னில் அக்க‌றை கொண்ட‌ ஒருவ‌ருமாவார். முன்ன‌ர் ப‌ல‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளில் இணைந்து செய‌ற்ப‌ட்ட‌ போதும் த‌ன‌க்குரிய‌ இட‌ம் ச‌ரியாக‌ த‌ர‌ப்ப‌ட‌வில்லை என்று த‌ன‌து ஆத‌ங்க‌த்தை தெரிவிக்கிறார். ஆனாலும் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியில் இணைந்த‌தும் இவ‌ரை ம‌ன்னார் மாவ‌ட்ட‌ இந்து ம‌த‌ விவ‌கார‌ இணைப்பாள‌ராக‌ நிய‌மித்த‌மை த‌ன‌க்கு கிடைத்த‌ முக‌ப்பெரிய‌ கௌர‌வ‌மாக‌ க‌ருதுகிறார். இன‌ம‌த‌ பேத‌ம் இன்றி, நாட்டில் உண்மையான‌ இன‌ ஒற்றுமையையும், இன‌ சௌஜ‌ன்ய‌த்தையும் ஏற்ப‌டுத்த‌ அர‌சிய‌ல் ரீதியில் பாடுப‌டும் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் தூய்மையான‌ அர‌சிய‌ல் கோட்பாட்டில் க‌வ‌ர‌ப்ப‌ட்ட...

பெண் ஒருவர் சமூகவலை மூலம் அனுப்பிய புகைப்படைங்களை வலைத்தளங்களில் வெளியிடப்போவதாக அச்சுறுத்தி கப்பம் கோரியவர் கைது.

Image
 பெண் ஒருவர் சமூகவலை மூலம் அனுப்பிய புகைப்படைங்களை வலைத்தளங்களில் வெளியிடப்போவதாக அச்சுறுத்தி கப்பம் கோரியவர் கைது.   பெண் ஒருவரின் பிரத்தியேக புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாக அச்சுறுத்தி, பிரித்தானியாவில் வசிக்கும் ஒருவரால் கப்பம் பெற்றுக்கொள்வதற்கு அனுப்பப்பட்ட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொழும்பு மகளிர் மற்றும் சிறுவர் காவல்துறை பிரிவினால் நேற்று கொழும்பு கொம்பனித் தெரு பிரதேசத்தில் வசிக்கும் இருவர் 7 இலட்சம் ரூபா கப்பம்பெற முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தில் இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார். வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய பெண் ஒருவர் இரு வருடங்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் ஊடாக பிரித்தானியாவை வதிவிடமாகவும் யாழ்ப்பாணத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட நபர் ஒருவருடன் தொடர்பை பேணி வந்துள்ளார். இதன்போது இணையத்தின் ஊடாக இருவரும் பல்வேறு விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இ...

ஹிஷாலினியின் சடலம் 30ஆம் திகதி மீள தோண்டி எடுக்கப்படும்.

Image
 ஹிஷாலினியின் சடலம் 30ஆம் திகதி மீள தோண்டி எடுக்கப்படும்.   முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இல்லத்தில்  பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் சடலம் 30ஆம் திகதி மீள தோண்டி எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மேலும், குறித்த சடலத்திற்கு இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்த விசேட மருத்துவர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே பொதுப் போக்குவரத்து பஸ்களில் பயணிக்க முடியும்

Image
 எதிர்வரும் காலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே பொதுப் போக்குவரத்து பஸ்களில் பயணிக்க முடியும்   எதிர்வரும் காலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே  பொதுப் போக்குவரத்து பஸ்களில் பயணிக்க முடியுமான நடைமுறை ஒன்றை உருவாக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனூடாக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தை முன்னெடுக்க முடியும் என குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ரிஷாத் பதியுதீனின் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து எப்போதோ விலக்கப்பட்டு விட்டனர்.

Image
 ரிஷாத் பதியுதீனின் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து எப்போதோ விலக்கப்பட்டு விட்டனர்.   எம்.மனோசித்ரா நாட்டின் ஜனநாயக ஆட்சிக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ள  20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்த போதே ரிஷாத் பதியுதீனின் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கலில் ஒரு கட்டமாகவே பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மீதான நெருக்கடிகள் அமைந்துள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த உண்மைகளைக் கண்டறியாது இவ்வாறான பழிவாங்கல்களிலேயே அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவினை இன்று புதன்கிழமை குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதன் போது அவருடன் குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவ...

4.30 மணிக்கு செம்மனோடை பாறுக் நானா வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து கேரளா கஞ்சா , ஐஸ் , ஹெரோயின் மற்றும் போதை மாத்திரையோடு 28,35,45 வயதுடைய இரு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர்

Image
 2021-07-28  4.30 மணிக்கு செம்மனோடை பாறுக் நானா வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து கேரளா கஞ்சா , ஐஸ் , ஹெரோயின் மற்றும் போதை மாத்திரையோடு 28,35,45 வயதுடைய இரு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர்  இவர்கள் செம்மனோடை , மாவடிச்சேனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது  வாழைச்சேனை காகிதஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய வாழைச்சேனை போலீசாரோடு இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டனர் மேலும் இதனுடன் தொடர்புடைய மற்றுமொருவர் தேடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி மட்டத்தில் காணப்படுவதால் அரசாங்கத்தினால் விரைவில் சம்பள அதிகரிப்பை மேற்கொள்வது முடியாத விடயமாக உள்ளது.

Image
 நாட்டின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி மட்டத்தில் காணப்படுவதால் அரசாங்கத்தினால் விரைவில் சம்பள அதிகரிப்பை மேற்கொள்வது முடியாத விடயமாக உள்ளது. அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் எதிர்வரும்  திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதி தீர்மானம் எட்டப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று (27) அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார். அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பில் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பணியாற்றுவதற்கு தயாராகுமாறு அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கத்தினரிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் இருபத்து நான்கு ஆண்டு காலமாக காணப்படுகின்ற போதிலும் இதுவரை ஒரு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை என்றும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து தெளிவான புரிந்துணர்வை கொண்டிருப்பதால் ஒரே தடவையில் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள முடியாவிடினும், சம்பள முரண்பாட்டை குறைப்பதற்க...

அடுப்படியில் பெற்றோல் போத்தலை வைத்திருந்த கணவன்... சமைக்கும் போது தீப்பிடித்து மனைவி பலி

Image
 அடுப்படியில் பெற்றோல் போத்தலை வைத்திருந்த கணவன்... சமைக்கும் போது தீப்பிடித்து மனைவி பலி   கணவன் அடுப்படியில் பெற்றோல் போத்தலை அறியாமல்  தீக்குச்சியை அணைக்காமல் போட்டதால் மனைவி எரிகாயங்களுக்கு உள்ளானார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. கட்டைக்காடு, முள்ளியானைச் சேர்ந்த யோகேஸ்வரன் பாலரஞ்சிதா (வயது- 32) என்ற 2 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தார். கடந்த 22 ஆம் திகதி மதியம் நின்று சமைக்கும் விறகு அடுப்பில் தேநீர் வைப்பதற்கு மண்ணெண்ணைய் ஊற்றி நெருப்பை வைத்துவிட்டு தீக்குச்சியை கீழே போட்டுள்ளார். அடுப்புக்கட்டுக்கு கீழே கணவர் பெற்றோல் போத்தலை வைத்திருந்தமை தெரியாமல் குடும்பப் பெண் நெருப்பு குச்சை போட்டமையால் ஏற்பட்ட தீவிபத்தில் அவர் சிக்கியுள்ளார். உடம்பில் தீப்பற்றியதால் அவர் கிணற்றுக்குள் விழ்ந்துள்ளார். எரிகாயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். 5 நாட்கள் முன்னெடுக்க சிகிச்சை பயனின்றி குடும்பப் பெண் நேற்று (27) காலை உயிரிழந்தார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் வைத்தியசாலை திடீர் இறப்பு ...

ஹெரோயினுடன் அனுராதபுர நபர் ஓட்டமாவடியில் கைது

Image
 ஹெரோயினுடன் அனுராதபுர நபர் ஓட்டமாவடியில் கைது அனுராதபுரத்தைச்சேர்ந்த 41 வயதுடைய பிரபல போதைப்பொருள் வியாபாரியொருவர் ஓட்டமாவடி, SMT ஹாஜியார் வீதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்றிரவு (2021-07-27) 08.15 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 4 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவர் அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும் ஓட்டமாவடியில் திருமணம் முடித்து வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் தொடர்பிலும் இவருடன் தொடர்பினைப் பேணியவர்கள், போதைப்பொருள் கொள்வனவில் ஈடுபட்டவர்கள் தொடர்பிலும் வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மேலதிக சட்டநடவடிக்கைக்காக நீதி மன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஹரீன் பெர்ணான்டோவுக்கு சீ.ஐ.டியில் ஆஜராகுமாறு அழைப்பு.

Image
 ஹரீன் பெர்ணான்டோவுக்கு சீ.ஐ.டியில் ஆஜராகுமாறு அழைப்பு.   ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்  ஹரீன் பெர்ணான்டோவுக்கு குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 10 மணிக்கு குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகி இருக்குமாறு அதன் வலய பொறுப்பதிகாரி ஹரீன் பெர்ணான்டோவுக்கு அறிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள் என்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

Image
 எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள் என்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் புரிந்து கொள்ள வேண்டும்.   ஏ.பி.எம்.அஸ்ஹர் எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள் என்பதை  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  போராளிகள் புரிந்து கொள்ள வேண்டும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்துள்ளார்  அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது றிசாட் பதியூதீனை முடிக்கப்போகிறார்கள் சகோதரர் றிசாட் பதியூதீனை அழித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு முசரப் எம்.பியை தலைவராக்கும் சதித்திட்டம் அரங்கேறுவதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவராகிறாரா முசாரப் என்ற தலைப்பிட்டு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி எனது முகநூலில் எழுதியிருந்தேன். ஆனால், அதனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அணியினர் நையாண்டி பண்ணினர். முசரப் எம்.பியை பத்தர மாற்று தங்கம் என அடித்துச் சொன்னார்  யாரோ ஒருவர். றிசாட் பதியூதீனோடு தடுப்புக்காவலிலிருந்து பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்படும் போது  றிசாட் பதியூதீனோடு முசரப் எம்.பி நடந்துவரும் போட்டோ ஒன்றை பதிவேற்றி தலைவ...

பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி... எமது போராட்டம் தொடரும்.

Image
 பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி... எமது போராட்டம் தொடரும்.   அதிபர்-ஆசிரியர்களின் சம்பள விடயம் தொடர்பில்  இன்று (27) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் இன்று குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு அனைத்து ஆசிரியர்களும் தற்பொழுது இணைய கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது. எவ்வாறாயினும், இணையம் மூலமான கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சனை மற்றும் கொத்தலாவல பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கக்கல் கொத்தணி இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது 💎

Image
 உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கக்கல் கொத்தணி இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது 💎   உலகில் மிகப்பெரிய நீல மாணிக்கக்கல் கொத்தணியொன்று இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபை தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்தார். இது ஏறக்குறைய 510 கிலோகிராம் நிறையுடையது என்றும், இதன் பெறுமதி சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை பெறுமதியில் சுமார் 20 பில்லியன் ரூபா) என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு பின்புறமாக கிணறு தோண்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது இந்த நீல மாணிக்கக்கல் கொத்தணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. குறித்த மாணிக்கக்கல் Serendib Sapphire வகை என கண்டறியப்பட்டுள்ளது.

குருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா... இன்றைய இந்திய - இலங்கை T20 போட்டி பிற்போடப்பட்டது.

Image
 குருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா... இன்றைய இந்திய - இலங்கை T20 போட்டி பிற்போடப்பட்டது.   இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று (27) இடம்பெறவிருந்த இரண்டாவது T20 போட்டி பிற்போடப்பட்டுள்ளது. இந்திய அணியின் சகலதுறை வீரர் க்ருணல் பாட்டியா கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதைத் தொடர்ந்து இவ்வாறு போட்டியை ஒத்திவைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்.

Image
 ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்.   ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிப்பீடமேற்றுவதற்கான வேலைத் திட்டங்களை, அக்கட்சியின் 75ஆவது ஆண்டு விழாவின்போது தான் அறிவிக்க உள்ளதாக அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். ஐ.தே.கவின் இளைஞர் செயற்பாட்டாளர்களுடன் இணைய வழியிலான கலந்துரையாடலின்போது, பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர், ஐ.தே.கவின் 75ஆவது ஆண்டு விழா செப்டெம்பர் 06ஆம் திகதி நடைபெற உள்ளதோடு, அரசியலில் வெற்றி, தோல்வி சகஜமெனவும் தெரிவித்துள்ள ரணில், 1956ஆம் ஆண்டு ஐ.தே.கவுக்கு வெறும் 8 ஆசனங்களே கிடைத்திருந்த நிலையில், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதாகவும் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்திலிருக்கும எவருக்கும், நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நிலையிலிருந்து நாட்டை மீட்க முடியாதெனவும், கட்சியை முன்நோக்கிக் கொண்டுசெல்வதற்கான வேலைத்திட்டங்களை அனைவருக்கும் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார

இலங்கை கடனாக பெற்று இருந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் மீள செலுத்தப்பட்டது.

Image
 இலங்கை கடனாக பெற்று இருந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் மீள செலுத்தப்பட்டது.   சர்வதேச அபிவிருத்தி முறிகள் ஊடாக இலங்கை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மீள செலுத்தியுள்ளது. இதனை நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். கடனை திருப்பி செலுத்திய பின்னர் நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு 3 பில்லியன் டொலராக வீழ்ச்சியடையக் கூடும். எனினும், அது ஸ்தீரமற்ற தன்மையை பிரதிபலிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்நிய செலாவணி இருப்பு நிலை அல்ல பணப்புழக்கமே முக்கியம் என அவர் அறிவுறுத்தியுள்ளார். அனுபவம் வாய்ந்த நிதி மேலாளர்கள் இருப்பு தற்காலிக ஏற்ற இறக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதை அறிவார்கள். எனினும், எதிர்கட்சி குழுக்கள் நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக காட்ட முனைவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏன் இன்னும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவில்லை?

Image
 ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏன் இன்னும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவில்லை?   (எம்.ஆர்.எம்.வசீம்) மலையத்தைச்சேர்ந்த அதிகமான சிறுவர்கள்  கொழும்பில் தனவந்தர்களின் வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர். இதுதொடர்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இந்த இடங்களில் சோதனை மேற்கொள்ளவேண்டும். அத்துடன் சிறுவயதுடைய பிள்ளையை வீட்டு வேலைக்கு அமர்த்திய ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஏன் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் எம். முஸம்மில் கேள்வி எழுப்பினார். தேசிய சுதந்திர முன்னணி கட்சி காரியாலயத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

விற்பனை நிலையமொன்றுக்குள் நிர்வாணமாக நுழைந்து பொருட்களை திருடிச் சென்ற நபர்.

Image
 விற்பனை நிலையமொன்றுக்குள் நிர்வாணமாக நுழைந்து பொருட்களை திருடிச் சென்ற நபர்.   குருணாகல், உஹுமிய பிரதேசத்தில், மூடப்பட்டிருந்த சில்லறை  விற்பனை நிலையமொன்றுக்குள் நிர்வாணமாக நுழைந்த நபரொருவர் பொருட்கள் சிலவற்றை திருடிச்செல்லும் காட்சி அங்கிருந்த சிசிரீவி கெமராவில் பதிவாகியுள்ளது. நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரிடம் நாம் வினவியபோது, சுமார் 75 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் இதன்போது திருடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் வீரம்புகெதர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். திருட்டுச் சம்பவத்தின்போது பதிவான cctv வீடியோ வருமாறு:

ரிசாத் பதியூதின் வீட்டில் எனது மகளுக்கு பல துன்பங்கள் நேர்ந்துள்ளது.

Image
 ரிசாத் பதியூதின் வீட்டில் எனது மகளுக்கு பல துன்பங்கள் நேர்ந்துள்ளது.   பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் வீட்டில் வேலை செய்த நிலையில் உயிரிழந்த தனது மகளிற்கு இஷாலினிக்கு நீதி வேண்டும் என கோரி அவரது பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். தனது மகள் ஒருபோதும் தீ வைத்து தற்கொலை செய்திருக்க மாட்டாள் என தான் நம்புவதாக டயகம சிறுமியின் தாயான ராஜமாணிக்கம் ரஞ்சனி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் வீட்டில் தனது மகளுக்கு பல துன்பங்கள் நேர்ந்ததாக அவர் கூறியுள்ளார். அத்துடன் பிரேத பரிசோதனை செய்தது இஸ்லாமியர் ஒருவர் என்பதால் அதில் தனக்கு நம்பிக்கை இல்லை எனவும் அதனால் சடலத்தின் மீது மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தாய் கேட்டுக் கொண்டுள்ளார். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

மக்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வை வழங்கிய அக்கரைப்பற்று பிரதேச சபை .

Image
 மக்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வை வழங்கிய அக்கரைப்பற்று பிரதேச சபை .   நூருல் ஹுதா உமர் மிக நீண்டநாள் தேவையாக இருந்து வந்த அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பட்டியடிப்பிட்டி ஜவாத் மரைக்கார் வீதிக்கு நீர் குழாய்கள் பொருத்தப்பட்டு இணைப்புக்கள் வழங்கப்பட்டது. பிரதேச சபையினுடைய சகல வீதிகளுக்குமான நீர்க் குழாய்களை இணைக்கும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் ஜவாத் மரைக்கார் வீதி உள்வாங்கப்பட்டு இவ்வேலைத்திட்டம் முற்றுப்பெற்றது. அக்கரைப்பற்று பிரதேச சபையும், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசீக், சபை உதவித் தவிசாளர் ஏ. எம். அஸ்ஹர் ஆகியோரின் பிரசன்னத்தோடு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த உப தவிசாளர் ஏ.எம்.அஸ்ஹர், "எதிர்காலத்தில் இன்னும் இருக்கின்ற எல்லா வீதிகளும் இந்த வேலைத்திட்டத்தில்  உள்வாங்கப்பட்டு இருப்பதனால் அவசர அவசரமாக எல்லா வீதிகளும் நீர் இணைப்பை பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருப்பது சந்தோசத்தை தருகிறது, சபையில் காணப்படும் ஐந்து வட்டாரங்களிலும் பேதங்கள் இல்...

உயர்தரப் பிரிவில் கற்கும் 651 பாடசாலை மாணவர்களுக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணினி..

Image
 உயர்தரப் பிரிவில் கற்கும் 651 பாடசாலை மாணவர்களுக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணினி..    "தெரிவு செய்யப்பட்ட 651 அரச பாடசாலைகளில் உயர்தரப் பிரிவில் கற்கும் மாணவர்களுக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் (தத்தல்) கணனிகள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் : கட்டம்-1" அதிமேதகு ஐனாதிபதி அவர்களின் மேற்குறித்த கருத்திட்டத்தில் பாடசாலை முறைமையில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்யும் தேசிய கொள்கையின் ஒரு அங்கமாக டிஜிட்டல் (இலக்க) கற்றல் ஆதாரங்களை பயன்படுத்துவதன் மூலமான கற்பித்தலுக்காக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் டெப் கணனிகள் வழங்கும் நிகழ்வு 2021.07.26 ஆம் திகதியன்று காலை 11.00 மணியளவில் தி/தி/ உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் S. ஸ்ரீதரன் அவர்களது தலைமை மற்றும் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது. குறித்த நிகழ்விற்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ. கபில நுவான் அத்துகோரல அவர்களும், கௌரவ அதிதியாக கந்தளாய் வலயக்கல்விப் பனிப்பாளர் E.G.P.I. தர்மதிலக அவர்களுக்கு...

ஏறாவூர் பெண்கள் சந்தை வீதியில் வைத்து 37 வயதுடைய பிரபல கெரோயின் போதைப்பொருள் 8 கிராம் 120 மில்லி கிராமுடன் பிரபல வியாபாரி கைது

Image
 2021-07-26 திங்கட்கிழமை  பிற்பகல் 3.30 மணிக்கு  ஏறாவூர் பெண்கள் சந்தை வீதியில் வைத்து 37 வயதுடைய பிரபல கெரோயின் போதைப்பொருள் 8 கிராம் 120 மில்லி கிராமுடன் பிரபல வியாபாரி கைது  இவருக்கு ஏற்கனவே போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்கும் உயர் நீதிமன்றில் உள்ளது குறிப்பிடத்தக்கது  வாழைச்சேனை காகிதஆலை இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ஏறாவூர் போலீசாரோடு இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டார்  இவரே ஓட்டமாவடி , வாழைச்சேனை , பிரந்துரைச்சேனை பிரதேசங்களுக்கு கெரோயின் போதைப்பொருளை விநியோகிப்பவர் என தெரிய வந்துள்ளது மேலும் அவர் போதை வியாபாரம் செய்யப்பயன்படுத்தும் முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களால் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் நிலை.

Image
 போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களால் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் நிலை.   சுகாதார வழிகாட்டுதல்களைப் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடையே புதிய கொரோனா கொத்தணி உருவாகக் கூடும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் டெல்டா மாறுபாடு பரவி வரும் நேரத்தில் இத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். ஆசிரியர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்படவில்லை, எனவே அவர்கள் மத்தியில் புதிய கொத்தணி உருவாகலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளதாகவும் சன்ன ஜெயசுமன கூறியுள்ளார். தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆச்சிரியர்களுக்கு உரிமை இருந்தாலும் இந்த போராட்டங்கள் அவர்களிடையே நோய் பரவுவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வருட GCE O/L பரீட்சையை அடுத்த வருடம் பெப்ரவரியில் நடத்த தீர்மானம்.

Image
 இவ்வருட GCE O/L பரீட்சையை அடுத்த வருடம் பெப்ரவரியில் நடத்த தீர்மானம்.   இவ்வருட GCE O/L பரீட்சையை அடுத்த வருடம்  பெப்ரவரியில் ல் நடத்த தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, குறித்த பரீட்சையை 2022 பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி முதல் மார்ச் 03ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடிகை உபேக்ஷா ஸ்வர்ணமாலி, ( paba) கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் கைது.

Image
 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடிகை உபேக்ஷா ஸ்வர்ணமாலி, ( paba) கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் கைது.   விபத்து சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடிகை உபேக்ஷா ஸ்வர்ணமாலி கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த வாகணம் கண்டி – குருநாகல் பிரதான வீதியில், நுகவெல பிரதேசம் செயலகம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 18 வயதுடைய நபர் காயமடைந்த நிலையில் பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் உபேக்ஷா ஸ்வர்ணமாலி இன்று நீதிமன்றில் முன்னைிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போலி அடையாள அட்டைகள், போலி ஆவணங்களை தயாரிக்கும் நபர் கைது.

Image
போலி அடையாள அட்டைகள், போலி ஆவணங்களை தயாரிக்கும் நபர் கைது.      கிரிபத்கொட, வேவல்தூவ பகுதியில் போலி அடையாள அட்டைகள் மற்றும் போலி ஆவணங்களை தயாரிக்கும் இடம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து போலி அடையாள அட்டைகள் 5 மற்றும் அச்சிடம் கருவி உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.