Posts

Showing posts from January, 2021
Image
 துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை ஒருபோதும் விற்க மாட்டோம் - உறுதிமொழி அளித்தார் பிரதமர் மகிந்த கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்காலையில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறித்து ஒரு பிரச்சினை எழுந்துள்ளது மற்றும் எதிர்க்கட்சி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறதே என ஊடகவியாளர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பிரதமர்,"நிச்சயமாக, எதிர்க்கட்சியை குறை கூற எதுவும் இல்லை. நாங்கள் அதை யாருக்கும் கொடுக்க மாட்டோம். இது விற்கப்படவில்லை அல்லது குத்தகைக்கு விடப்படவில்லை. அது எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. தொழிற்சங்கங்களுக்கும் அது தெரியும் என்று நினைக்கிறேன். நாங்கள் அதைப் பற்றி விவாதிக்கவில்லை என்று தெளிவாகக் கூறுகிறோம். எனவே இது ஒரு பிரச்சனையாக இருக்காது. வேலைநிறுத்தம் செய்ய எதுவும் இல்லை. நீங்கள் வந்து என்னிடம் சொன்னால் நான் உண்மையிலேயே அது தொடர்பில் விளக்குவே...
Image
 எவோட்ஸ்-2021 கலை,கலாசார போட்டித்தொடரின் கவிதை போட்டிக்கான பரிசளிப்பு விழா. புதிய அலை கலை வட்டத்தின் எவோட்ஸ்-2021 கலை,கலாசார  போட்டித்தொடரின் கவிதை போட்டிக்கான பரிசளிப்பு கடந்த சனியன்று (30.01) கொழும்பு 15 இல் அமைந்துள்ள கிளாரட் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. கலைஞர்,ஊடகவியலாளர் ராதாமேத்தா Pat Metha தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதற்பரிசை எம். நிரோஷன் இலக்கிய புரவலர் Hassim Omar இருந்து பெற்றுக் கொள்வதையும் இரண்டாம் பரிசை தியத்தலாவை H.F. Rizna சார்பாக அவரது நண்பி, சமூக சேவையாளர் Imran Nainar இருந்து பரிசைப் பெற்றுக் கொள்வதை யும், முன்றாம் பரிசை செல்வி.ஆர்.சுவஸ்திகா பெற்றுக்கொள்வதையும் படங்களில் காணலாம். (படங்கள்- Oviyan Oviyanarts Ruzaik பாரூக்
Image
 இந்தியாவில் இருந்து மேலும் மூன்றரை மில்லியன் கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி AstraZeneca Covishield  கொரோனா தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக கொரோனா தடுப்பு மற்றும் ஆரம்ப சுகாதார சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, 2 தசம் 5 மில்லியன் AstraZeneca Covishield கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அமைச்சின் செயளாலர் வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ சி சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, குறித்த தடுப்பூசிகளை எதிர்வைரும் ஒரு மாதத்திற்குள் இலங்கைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 3 தசம் 5 மில்லியன் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் அமல் ஹர்ஷ சி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட AstraZeneca Covishield கொரோனா தடுப்பூசி தற்போது சுகாதார பணியாளர்க, முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 100 வைத்தியசாலைகளில் குறித்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ...
Image
 பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி மார் தட்டி சுதந்திர தினம் கொண்டாட என்ன “அபிமானம்” உள்ளது ? இன்று(31) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக  சந்திப்பில் கலந்து கொண்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவின் தேசிய அமைப்பாளருமான ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்த கருத்துக்கள். கிழக்கு முனையம் தொடர்பாக நேற்று அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில அமைச்சர்கள் கூட்டாக தமது நிலைப்பாட்டை வெளிப்படைத்தியிருந்தனர். இவர்களின் இந்த நாடகத்தை வைத்து மக்கள் ஏமாந்து விட வேண்டாம்.இவர்களின் இரண்டாம் நாடகம் இது.இவ்வாறான ஒர் நாடகத்தை 20 ஆவது திருத்தத்தின் போதும் வெளிப்படுத்தியிருந்ததை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.இறுதியில் “சங்வேதி” ஏறபட்டு ஒரு நாளுக்குள் இவர்களின் நிலைப்பாடு மாறி 20 க்கு ஆதரவளித்தனர்.இன்று கட்சி அரசியலுக்கப்பால் சகல தொழிற்சங்கங்களும் ஒன்றினைந்து இதை எதிர்கின்றனர்.தொழிற்சங்கங்கள் விளிப்பாக இருங்கள்.அரசங்கத்தின் பலர் வந்து வித்தியாசமான நிலைப்பாட்டை முன்வைப்பார்கள். நம்பிவிட வேண்டாம்.இது அரசாங்கத்தின் நாடகம்.உங்களை சந்திக்க வரும் அமைச்சர்...
Image
 கொழும்பு - மினுவாங்கொடை பிரதான வீதி விபத்தில் 3 பேர் பலி. கொழும்பு - மினுவாங்கொடை பிரதான வீதியில் எக்கல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் பலியாகினர். வேகமாக பயணித்த வேண் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சுவர் ஒன்றில் மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 48, 49 மற்றும் 64 வயதான மூவரே உயிரிந்தனர்.
Image
 எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. எனவே,  பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படவேண்டும். இல்லையேல் இம்முறை போராட்டமானது வேறு வடிவில் அமையும் - என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை விடுத்தார். நுவரெலியாவில் இன்று (31) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “இந்த நாட்டில் மாறி, மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் எமது தொப்புள்கொடி உறவுகளை தொடர்ச்சியாக ஏமாற்றியுள்ளன. கடந்த நல்லாட்சியின் போதும் சம்பள விடயத்தில் துரோகம் இழைக்கப்பட்டது. அந்த சாபத்தால் தான் ஐக்கிய தேசியக்கட்சி இன்று அழிந்துள்ளது. தலைவர், செயலாளர் என எவரும் பாராளுமன்றத்தில் இல்லை.  பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என நாட்டில் ஜனாதிபதி அறிவி...
Image
 குச்சவெளி பிரதேசத்தில் 3000 ற்கும் மேற்ப்பட்ட ஏழைக்குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுத்த சுமார் 1800 ஏக்கர் கடலோர காணிகள் ரைகம் ஈஸ்ட்டன் சோல்ட் பிரைவட் லிமிட்டட் வசம். -எப்.முபாரக் - குச்சவெளி பிரதேசத்தில் 3000 ற்கும் மேற்ப்பட்ட ஏழைக்குடும்பங்களின்  வாழ்வாதாரத்துக்கு வழிவகுத்த சுமார் 1800 ஏக்கர் கடலோர காணிகள் ரைகம் ஈஸ்ட்டன் சோல்ட் பிரைவட் லிமிட்டட் வசப்படுத்தியுள்ளதாக தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் மொஹிதீன் முஸம்மில் தெரிவித்தார். முள்ளிப்பொத்தானையில் கட்சியின் காரியாலயத்தில் இன்று(31) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்: திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச சபைக்கு உற்பட்ட சுமார் 1800ஏக்கர் கடலோர காணிகள் 2008 ம் ஆண்டு 35 வருட குத்தகை அடிப்படையில் கைத்தொழில் அமைச்சால் வழங்கப்பட்டதன் பின்விளைவுகள் தற்சமயம் அப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மிகவும் கடினமாக தாக்கியுள்ளது என்பது பல ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது.  இந்த 1800 ஏக்கர் கடல் ஓர பிரதேசத்தில் சுமார் 3000 மேற்ப்பட்ட ஏழை குடும்பங்கள் யுத்தத்தில் வ...
Image
 ஐ. நா மனித உரிமை ஆணையாளர் விடயத்தில் இலங்கை மக்கள் அச்சப்படத் தேவையில்லை.. ஜனாதிபதி, அவர்களை பார்த்துக்கொள்வார். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கையின் இறைமைக்குள் விரல்களை நீட்டுகின்றார் என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மனித உரிமை ஆணையாளர் தன்மீதும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் என தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை முற்றிலும் பிழையான குற்றச்சாட்டுகளை கொண்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கையின் இறைமைக்குள் விரல்களை நீட்டுகின்றார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். எங்கள் ஜனாதிபதிக்கு எதிராக அவர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார் இது தவறு என குறிப்பிட்டுள்ள சரத்வீரசேகர அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஓய்வுபெற்ற இராணுவஅதிகாரிகளை முக்கிய பதவிகளிற்கு நியமித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆணையாளர் என்னை குற்றம்சாட்டியுள்ளார், நான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவன் நான் கொழும்பு மாவட்டத்தில் அதிக விருப்புவாக்குகளையும் இலங்கையில் இரண்டாவது அதிக விருப்புவாக்குகளையும் பெற்றவன் மன...
Image
 நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்வதற்கு அரச தலைமைகள், பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்வதற்கு அரச தலைமைகள், பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். கிராமத்துடனான உரையாடல் விசேட வேலைத்திட்டத்தின் 8 ஆவது திட்டம் மொனராகலை மாவட்டத்தின் தனமல்வி ல பகுதியில் இன்று இடம்பெற்றது இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். நாட்டில் நூற்றுக்கு 75 வீதமான விவசாயிகள் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். எனவே, பொதுமக்களை மையமாகக்கொண்டுள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுத் எனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
Image
 கிண்ணியா விவசாயிகள் எதிர் கொள்ளும் சோக நிலைமை தொடர்கிறது.. திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலகப்  பிரிவுக்குட்பட்ட புளியடிக் குடா, பக்கிரான் வெட்டை, வன்னியனார் மடு போன்ற விவசாயப் பகுதிகளில் இரவு பெய்த கடும் மழை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியிருக்கிறது. நீர் இல்லாதபோது இந்த ஆறுகளை குறுக்காக கட்டுவதும் மழை, வெள்ளம் வருகின்ற போது அவற்றைக் கழற்று வதும் அடிக்கடி நடைபெறுகின்ற விடயமாகும். இந்த நிலைமை விவசாயிகளுக்கு உயிர் அச்சுறுத்தலையும் கூட சில நேரம் ஏற்படுத்துகின்றது. குறித்த ஆற்று நீரில் முதலைகளின் நடமாட்டமும் அதிகரித்திருப்பது மேலும் அச்சத்தை உண்டுபண்ணுகிறது. இந்த நவீன காலங்களில் 10 அடி உயரத்திற்கு மேற்பட்ட நீரில் இவ்வாறு விவசாயிகள் கஷ்டப்படுவது நவீன காலத்தில் இப்பிரதேசத்தில் மாத்திரமே நடைபெறுகின்றது. நீர்ப்பாசனத் திணைக்களம், அரசியல் தலைமைகள், அதிகாரிகள் எல்லோரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டும் ரெகுலேட்டர் பொறிமுறை இன்னும் செய்து தரப்படாமை மிகவும் வேதனை அளிப்பதாகவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றார்கள். எனவே இனிமேலும் இவ்வாறான துர்ப்பாக்கி...
Image
 190 நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள காத்திருப்புப் பட்டியலில்... இலங்கைக்கு முன்னுரிமை வழங்கிய இந்தியா. 190 நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள  காத்திருப்புப் பட்டியலில் உள்ள போதிலும், இந்தியா இலங்கைக்கு முன்னுரிமை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி செயலணியின் தலைவரும், கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கோரிக்கைக்கு அமையவே, இந்திய அரசாங்கம் இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார் குறித்த தடுப்பூசியின் பெறுமதி 3 முதல் 4 அமெரிக்க டொலர் வரை உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதனிடையே, சீனாவினால் 3 லட்சம் தடுப்பூசிகள் விரைவில் வழங்கப்படும் எனவும் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார் எனினும், தேசிய ஓளடதங்கள் ஒழுங்கப்படுத்தல் அதிகார சபையின் அனுமதி கிடைக்கும் வரை தாம் பொறுமையாக காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனம் 20 வீதமான தடுப்பூசிகளை இலவசமாக வழங்கவ...
Image
 ஓட்டமாவடி, மீறாவோடையில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் பணி இலங்கையில் கொவிட்-19 க்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகியது. அந்த வகையில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மீறாவோடை பிரதேச வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றும் சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களுக்கு முதற்கட்டமாக கொவிட்-19 க்கான தடுப்பூசி ஏற்றப்பட்டது. ஓட்டமாவடி பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் நாற்பத்து நான்கு (44) பேருக்கு கொவிட்-19 க்கான தடுப்பூசி மீறாவோடை பிரதேச வைத்தியசாலையில் வைத்து ஏற்றப்பட்டது. ஐந்து இலட்சம் ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ட்ராசெனகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் இந்தியாவினால் இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இத்தடுப்பூசியானது, கொரோனா ஒழிப்புக்காக முன்னிலையில் செயற்படுகின்ற சுகாதார ஊழியர்கள், முப்படையினர் மற்றும் பொலிசார் உட்பட பாதுகாப்புப் பிரிவினருக்கு முதலாவதாக வழங்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத்தடுப்பதற்காக முன்னி...
 மொத்தமாக 32,539 சுகாதாரப் பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பு மருந்து ஏற்றப்பட்டது. மொத்தமாக 32,539 முன்னரங்க சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒக்ஸ்ஃபோர்ட் அஸ்ரஸெனக்கா கொவிட்-19 தடுப்பு மருந்து இன்று ஏற்றப்பட்டதாக சுகாதாரமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று முதல் மொத்தமாக 37,825 பேருக்கு தடுப்புமருந்து ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதாரமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு கூறியுள்ளது.
Image
 ஜெனீவா சுற்றி வளைப்புக்குள் இலங்கை அரசு? கடைசி யுக்தியுடன் அரசு தயார்! அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோபைடனின் நிர்வாகம் பயணிக்க உள்ள பாதை, ஆசிய நாடுகளின் இலட்சியங்களுக்கும்  சென்று சேருமா? பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை நடாத்திய பராக் ஒபாமாவின் அரசாங்கத்தில், துணை ஜனாதிபதியாக இருந்த இவருக்கு இப் போராட்டங்கள் நடாத்தப்பட்டதன் பின்னணிகள் தெரியாதிருக்காது. "promise land" என்ற தனது நூலில்  ஆசிய, ஆபிரிக்க நாடுகளில், தான் முன்னெடுத்த பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டங்களைப் பற்றி ஒபாமா குறிப்பிடத் தவறவில்லை. சிரியா, எமென், லிபியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நடாத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில், விடப்பட்ட இராஜதந்திரத் தவறுகளும் "promise land" இல் சிலேடையாகப் பேசப்பட்டுள்ளன. அல்கைதா தலைவர், ஒஸாமா பின் லேடனைக் குறிவைத்த அபடோபாத் தாக்குதல் (2010), பாகிஸ்தானின் ஆள்புல எல்லைக்குள் அமெரிக்கா நடந்துகொண்ட அத்துமீறலாகவே விமர்சிக்கப்பட்டது. அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் 2001 இல் தாக்கப்பட்டது முதல், ஒஸாமா பின் லேடன் அபடோபாத்தில் 2010 இல் கொல்லப்படும் வரை, 6.4 ட்ரில்லியன...
Image
 தனியார் காணியில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.. வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணியில் விகாரை  அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சமய வழிபாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் நிரந்தக் கட்டடம் அமைக்க இடைக்காலத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைக்க இன்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தையிட்டி பெண்கள் காவலரனுக்கு அருகாமையில் இந்த விகாரை தனியார் காணியில் அமைக்கப்படவுள்ளது.
Image
 வீடுடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்த மூன்று சந்தேக நபர்கள் கைது #சம்மாந்துறை பொலிஸார் பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) வீடுடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை(29.01.2021) அன்று நள்ளிரவு வேளை அம்பாறை சம்மாந்துறை மலையடி கிராம பிரதேசத்தில் வீடுடைத்து தங்கநகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் அவசர பிரிவான 119 இலக்கத்திற்கு முறைப்பாட்டு கிடைக்கப்பெற்றிருந்தது. குறித்த முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுடன் சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் சென்ற பொலிஸ் உத்தியொகத்தர்களான ஆரியசேன மற்றும் துரைசிங்கம் குழுவினர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அதே பிரதேசத்தை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க மூன்று சந்தேக நபர்கள் காலை கைது செய்யப்பட்டனர். இதன் போது கைதானவர்களிடம் இருந்து களவாடப்பட்ட 5 அரை பவுண் தங்க நகைகள் 19,500 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் கைதான மூவரும் இன்றைய தினம்(30) சம்மாந்துறை நீதிவான...
Image
 இலங்கை கிரிக்கட் சபையின் ஸ்கோரர்களாக (Scorers) மூதூர் யூ.டி.பி.எம் (UDPM) அங்கத்தவர்கள் மூவர் தெரிவு. இலங்கை கிரிக்கட் சபையினால் கடந்த 2020 இல் நாடளாவிய  ரீதியில் இடம்பெற்ற கிரிக்கட் புள்ளிக்கணிப்பாளர் (Scorers) தேர்வில் மூதூர் யூ.டீ.பீ.எம் (UDPM) அங்கத்தவர்களான . சிஹான் சுஹூட், . அப்துல் லத்தீப் பர்ஸாத் மற்றும் அப்துல் ஹுதா பிஸ்ருல் ஹாபி ஆகியோர் கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த பரீட்சையானது 2020 தாம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் திருகோணமலை மாவட்ட கிரிக்கட் சங்கம், குருநாகல் வெலகெதர மைதானங்களில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். மேற்படி பரீட்சையானது கிரிக்கட் புள்ளிக்கனிப்பின் மனுவல் மற்றும் ஆன்லைன் (Manual Scoring & Online Scoring) ஸ்கோரிங்க் ஆகியவற்றினை உள்ளடக்கியதாகும். திருகோணமலை கிரிக்கட் வரலாற்றில் இலங்கை கிரிக்கட் சபையின் அங்கீகாரம் பெற்ற ஸ்கோரர்ஸ் தெரிவுசெய்யப்பட்டது இதுவே முதற்தடவையாகும். மாவட்டத்தில் மொத்தம் 09 பேர் தெரிவுசெய்யப்பட்ட அதேவேளை மூதூரில் இருந்து மூவர் தெரிவாகி உள்ளமையானது மூதூர் கிரிக்கட்டின் ஒரு மைல்கல் ஆகும். இலங்கை கிரிகட்ட...
Image
நாட்டு மக்கள் அனைவரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி வரை தேசியக் கொடியை காட்சிப்படுத்துமாறு அரசாங்கம் வேண்டுகோள். பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள 73 ஆவது  சுதந்திரதின விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மற்றும் வாகனங்களில் 2021 பெப்ரவரி 01 ஆம் திகதி தொடக்கம் 07 ஆம் திகதி வரையான ஒரு வாரகாலப்பகுதியில் தேசிய கொடியை காட்சிப்படுத்துமாறு அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இவ்விசேட நிகழ்வை முன்னிட்டு அரச நிறுவனங்கள் அமைந்துள்ள அனைத்துக் கட்டிடங்களிலும் 2021 பெப்ரவரி மாதம் 03 ஆம் 04 ஆம் தினங்களில் மின்விளக்குகளால் அலங்கரிக்குமாறும், குறித்த இராஜாங்க அமைச்சு அனைத்து நிறுவனத் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது. 73 ஆவது சுதந்திர தின விழா இம்முறை "வளமான எதிர்காலமும் - சுபீட்சமான தாய்நாடும்´´ எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் நெறிப்ப...
Image
 கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை ஏற்றும் பணி ஏறாவூரில் இன்று முன்னெடுப்பு. உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொவிட் 19  தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள உலகம் போராடி வருகின்ற நிலையில் , இந்திய அரசினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 5இலட்சம் தடுப்பூசிகளை ஏற்றும் பணி நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு என வழங்கப்பட்ட  3400 கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளை ஏற்றும் பணி இன்று ஆரம்பமானது. அதன் பிரகாரம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் மருத்துவர்கள் ,  தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி இன்று சனிக்கிழமை காலை ஏறாவூர் வைத்தியசாலையின் அத்தியட்சகர் டாக்டர் மௌஜூத் தலைமையிலும்,  ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ மாதர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கான தடுப்பு மருந்து ஏற்றும் நடவடிக்கை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். சாபிரா வஸீம் தலைமையிலும் முன...
Image
 இன்று நாடளாவிய ரீதியில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெறும் இலங்கையில் கொவிட்-19 கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம்  நேற்று (29) காலை ஆரம்பமாகியது. இதன் பிரதான வைபவம் தேசிய தொற்றுநோயியல் நிறுவனமான ஐ டி எச் வைத்தியசாலையில் இடம்பெற்றது. கொவிட் தடுப்புக்கான முதலாவது தடுப்பூசி விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரமவிற்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் மக்ளே, ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க, இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோர் கலந்து கொண்டனர். covid-19 வைரஸை கட்டுப்படுத்த பங்களிக்கும் மூன்று இராணுவ வீரர்களுக்கு முதலாவதாக தடுப்பூசி வழங்கப்பட்டது. இராணுவ நோய்த்தடுப்பு வைத்தியர் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சவீன் சேமகே, விமான நிலையத்தில் கொவிட் கட்டுப்பாட்டுக்கு பொறுப்பான பிரிகேடியர் லால் விஜயதுங்க மற்றும் புனானி தனிமைப்படுத்தல் நிலையத்தின் முதல் மருத்துவ அதிகாரியான வைத்தியர் பசிந்து பெரேராவுக்கும் இந்த கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டது. நேற்றைய தினம் 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ட்ராசெனகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் இந்தியாவ...
Image
 கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு விமல் கடும் எதிர்ப்பு. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என அமைச்சர் விமல்வீரவன்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கம் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பது என தீர்மானித்தால் அது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்த பேச்சுவார்த்தைகளிற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் முன்வரவேண்டும்என அமைச்சர் வேண்டுகொள் விடுத்துள்ளார் என ஐலண்ட் தெரிவித்துள்ளது. கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்திய நிறுவனத்திடம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அடுத்தவாரம் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தால் தீர்க்ககரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார் என ஐலண்ட் தெரிவித்துள்ளது. இன்று இது தொடர்பில் அமைச்சர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் தலைவரின் கூட்டம் இடம்பெறவுள்ளது.
Image
 கொரோனாவினால் உயிரிழப்போரின் இறுதிக் கிரியைகளில் மத நம்பிக்கை மற்றும் கலாசார மரபுகளுக்கு இடமளிக்க வேண்டும் இலங்கையில் நிகழும் கொவிட் 19 மரணங்களின் போது ஒவ்வொரு  சமூகங்களினதும் மரணங்கள் தொடர்பான மத நம்பிக்கை மற்றும் கலாசார மரபுகளுக்கு இடமளிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பணியகம் டுவிட்டர் தளத்தினூடாக இலங்கை அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300 ஐக் கடந்துள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களுக்கு அமைய இந்த நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு மத நம்பிக்கைகளுக்கு இணங்க விடை கொடுக்கும் உரிமை கிட்டுவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பணியகம் குறிப்பிட்டுள்ளது இலங்கையில் கொவிட் 19 இனால் மரணிப்பவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படுவதை மறுப்பது குறித்த...
Image
 ஐக்கிய நாடுகள் சபை விவகாரங்களில் இலங்கையுடனான அரசியல் ரீதியான உறவை உயர்ந்த மட்டத்தில் பேணுவதாக ரஷ்யா அறிவிப்பு. இறையாண்மை, ஜனநாயக மற்றும் சமூக நோக்குடைய அரசாக சர்வதேச ரீதியில் இலங்கை அங்கீகாரம் பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவிக்கின்றது. ரஷ்யாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அந்த நாட்டின் வௌியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் மரியா ஜாகரோவா இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமாகவே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச ரீதியான விவகாரங்களில் இலங்கையுடனான அரசியல் உறவுகளை தாம் உயர் மட்டத்தில் பேணிவருவதாகவும் ரஷ்யா சுட்டிக்காட்டுகின்றது. அத்துடன் ரஷ்யாவின் தேயிலை இறக்குமதித் துறையில் இலங்கை பாரிய பங்காற்றி வருவதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் போது இலங்கையின் எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஷ்யா தமது வாழ்த்துக்களையும் இதன் போது வௌியிட்டுள்ளது
Image
 #ஒரு நபரின் ஆங்கில கையெழுத்தை(Handwriting)  வைத்து அவருடைய குணநலன்களை கண்டிப்பாக கணக்கிட முடியும். இந்த துறைக்கு "Graphology" (க்ராபோலஜி) என்று பெயர். கையெழுத்தில் உள்ள எழுத்துக்களின் வடிவங்கள், ஏற்ற இறக்கங்கள், எழுத்தின் அளவு முதலியவற்றை அடிப்படையாக கொண்டு ஒருவரின் குணங்களை கணித்துவிட முடியும். இதைப்பற்றி ஏற்கனவே சில மாதங்கள் முன்னர் வாசித்த பொழுது, என் நண்பரிடம் சோதித்து பார்த்தேன். கிட்டத்தட்ட 70-80 சதவீதம் சரியாக இருந்தது. இந்த க்ராபோலஜியை அவ்வளவு எளிதாக எடைபோட்டு விட வேண்டாம். தடயவியல் துறையில் கூட இது பயன்படுகிறது குறிப்பாக பிளாக்மெயில் கடிதங்களிலிருந்து ஆதாரம் திரட்டும் பொழுது!  இப்போது சில காரணிகளை கொண்டு எடுத்துக்காட்டுகிறேன். #பேனாவின் அழுத்தம்(Pen pressure) அழுத்தம் ஆழமாக (hard pressure) இருந்தால் நீங்கள் அடிக்கடி பதற்றம் அடையும் நபர் மற்றும் கோவம் கொள்ளும் நபராக இருக்கலாம். லேசான அழுத்தம் (soft pressure) கொண்டு எழுதுபவர் என்றால் மிகவும் உணர்ச்சிவசப்படும் நபர்; மற்றும்  அடுத்தவர்களின் நலனை போற்றுவதில் மிகுந்து ஆர்வம் கொண்டவர். #எழுத்தின் அளவு: பெரிதான எழு...
Image
 மக்களே அவதானம் ! தடுப்பூசி ஒருபோதும் கொரோனா வைரஸை ஒழிக்காது (எம்.மனோசித்ரா) தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி  அதிகரிக்குமே தவிர நோய் முழுமையாக குணமடையாது. தடுப்பூசி மூலமான நன்மை 80 வீதம் மாத்திரமே என்பதால் ஆரம்பத்திலிருந்து பின்பற்றிய அடிப்படை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செய்பட முடியாது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , தற்போது உலகலாவிய ரீதியில் கொவிட் தடுப்பூசிக்கான கேள்வி அதிகரித்துள்ளது. எனவே இலவசமாக கிடைக்கும் தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கான தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் இப்போதிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லையெனில் அடுத்த தொகை தடுப்பூசிகளை பெறுவதற்கு ஓரிரு மாதங்கள் கால தாமதமாகுமாயின் அது பிரயோசனமற்றது. அத்தோடு அவ்வாறு கொள்வனவு செய்யும் தடுப்பூசிகளும் நம்பிக்கைக்குரியதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்ட...
Image
 இலங்கையில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பமானது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஆரம்ப கட்டமாக மூன்று இராணுவ அதிகாரிகள் சற்றுமுன் முதலில் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர்.
Image
 இன்று நாட்டின் பல இடங்களில் மழையுடன் கூடிய வானிலை.. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும்  அத்துடன் மாத்தளை மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் பொலநறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm வரை யிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 mm வரை யிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கடல் பிராந்தியங்களில் ***************************** காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை,மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை...
Image
 மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுகாதார அமைச்சர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா  வன்னியாராச்சி மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிக்கடுவை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த சுகாதார அமைச்சர் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு மருத்துவபீட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே இவ்வாறு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Image
 தடுப்பூசி ஏற்றியப் பின்னர், ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடி சிகிச்சை. கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றப்படும் மையங்களுக்கு அருகில், அவசர சிகிச்சைப் பிரிவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றியப் பின்னர், ஏதாவது, ஒவ்வாமை ஏற்பட்டால், அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான வைத்திய குழுவொன்று, அங்கு தயார் நிலையில் இருக்கும் என்று தெரிவித்துள்ள சுகதார பிரிவு, தடுப்பூசியை ஏற்றும் முன்னர், ஏற்றிக்கொள்பவரின் விருப்பத்தைக் கடிதம் மூலம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது, இந்நிலையில், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு சுகாதார அலுவலக சபையின் உறுப்பினர்கள் சிலர் அதிருப்தியைத் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள, அதிருப்தியை வெளியிட்டு உள்ளவர்களுக்குப் பலவந்தமாக ஊசி ஏற்றப்படாதென, சுகாதார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்தத் தடுப்பூசியானது இலங்கையின் பிரதான 6 வைத்தியசாலையின் பணியாளர்களுக்கு இன்று (29) வழங்கப்படவுள்ள நிலையில், முதலாவதாக கொரோனா வைரஸ் தொற்றாளர்களு...
Image
 கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்க வீடுவீடாக சென்று விழிப்பூட்டும் நிகழ்வு கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க  வேண்டி வீடுவீடாக சென்று விழிப்பூட்டும் நிகழ்வு நேற்று (27) இடம்பெற்றது. கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்நிகழ்வு இடம்பெற்றது. கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் த.யசோதரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான கே.எல்.அஸ்மி, எப்.நபீரா, இக்பால் சனசமூக நிலைய தலைவர் ஏ.எல்.லியாப்தீன், கிறிசலிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் கஜேந்திரன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இத் திட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வீடுவீடாக சென்று பொது மக்களிடம் கொரோனா வைரஸ் தொடர்பான துண்டுப்பிரசுரங்களை வழங்கியதுடன், சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. இவ் விழிப்பூட்டல் திட்டத்திற்கு கிறிசலிஸ் நிறுவனம், வாழைச்சேனை பிரதேச சபை, இக்பால் சனசமூக நிலையம், சிவன் தீவு வளர்பிறை சனசமூக நிலையம் ஆகியவை அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
Image
 கொரோனா தொற்று காரணமாக மேலும் 7 மரணங்கள் பதிவாகின. (உயிரிழந்தவர்கள் விபரம்) இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 5 மரணங்கள் பதிவாகின. இதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 297 ஆக அதிகரித்தது.  அதேவேளை இன்றைய தினம் நாடு முழுவதும் 892 கொரோனா தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். உயிரிழந்தவர்கள் விபரம். 1:கொழும்பு 6 -ஆண்   (86) 2: நிட்டாம்புவ ஆண் (73) 3:இரத்தினபுரி பெண் (76) 4: கொழும்பு 13 ஆண் ( 61) 5: கொழும்பு சிறைச்சாலை ஆண் (61) 6: கொழும்பு 6 பெண் (67) 7: எண்டெரமுல்ல ஆண் (62)
Image
 இலங்கையில் பலவந்த ஜனாஸா எரியூட்டல் சர்வதேசத்தின் கவனத்தை முன்னரை விடவும் வெகுவாக ஈர்த்துள்ளது ; SLMC அறிக்கை கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களுக்கு (ஜனாஸா) பலவந்தமாக எரியூட்டிவரும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாதெனவும், அவ்வாறு நடந்து கொள்வதை நிறுத்தி, நல்லடக்கம் செய்வதற்கான மாற்றுத் தீர்வை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் அறிக்கை விடுத்த உடனேயே , அதனை வரவேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இரண்டு ட்விட்டர் பதிவேற்றங்களை மேற்கொண்டிருந்தார். முதலாவது, ட்விட்டர் பதிவில், கொவிட் - 19 தொற்றாளர்களின் சடலங்களுக்கு (ஜனாஸா)பலவந்தமாக எரியூட்டுவதை கைவிட்டு நல்லடக்கம் செய்வதற்கான மாற்றுத் தீர்வை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் நால்வர் அடங்கிய ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை பற்றிக்  குறிப்பிட்டு, அந்த அறிக்கையையும் முழுமையாக இணைத்திருந்தார். அடுத்த ட்விட்டர் பதிவில் ஐ.நா. விசேட அறிக்கையாளர் அஹ்மட் ஷஹீட்க்கு நன்றி தெரிவி...
Image
 சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோக முயற்சி... தந்தை மட்டக்களப்பு பொலிஸ் பிரிவினரால் கைது மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிலுள்ள பிரதேசம் ஒன்றில் 13 வயதான தனது சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சந்தேகத்தில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் உத்தரவிட்டார். சம்பவதினமான புதன்கிழமை மதுபோதையில் காணப்பட்ட சந்தேன நபர் தனது 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார். இதனையடுத்து குறித்த சிறுமி தாயாரிடம் தெரிவித்ததையடுத்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
Image
 ஜனாஸா எரிப்பு விடயத்துக்காக இலங்கை மீது சர்வதேச தடைகளை ஏற்படுத்த முயற்சிக்க கூடாது. (எம்.ஆர்.எம்.வசீம்) கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யும் உரிமையை சர்வதேச மட்டத்தில் போராட்டங்களை மேற்கொண்டு அதனை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதில் தவறு இல்லை. ஆனால் இதனைக் காரணமாகக் கொண்டு இலங்கைக்கு சர்வதேச ரீதியில் தடைகளை ஏற்படுத்துவது முஸ்லிம்களின் நோக்கமாக இருக்கக்கூடாது என முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை தொடர்பில் இன்று (28)கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட்டில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதால் வேறு சுகாதார பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களில் எந்தவித விஞ்ஞான ரீதியிலான ஆதாரமும் இல்லை. இதனை உலக சுகாதார அமைப்பு உட்பட சர்வதேச ரீதியில் 190 க்கும் மேற்பட்ட நாடுகள் அனுமதித்துள்ளன. இலங்கை அரசாங்கம் அதனை அனுமதிக்காமல் சுகாதாரத் துறையின் மீ...
Image
 கடல் பாம்பை புதிய வகை மீன் இனம் என நினைத்து சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு சென்ற நபர்.  மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய கடல் பாம்பு ஒன்றை  புதிய இன மீன் என நினைத்து மீன் சந்தைக்கு ஒருவர் கொண்டு சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மீன் விற்பனை நிலையத்துக்கே அவர் இந்த கடல் பாம்பை சந்தைக்கு கொண்டு சென்றுள்ளார். தான் மீன் பிடிக்கும்போது தனது வலையில் சிக்கியது புதுவகை மீனாக இருக்குமோ எனும் சந்தேகத்தில் அதனை காண்பிப்பதற்காக குறித்த மீனவர் விற்பனை நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அதனை பார்வையிட்ட ஏனைய மீனவர்கள் அது கடலில் உள்ள அஞ்சாலை எனும் வகை பாம்பு என்று அடையாளப்படுத்தினர். குறித்த கடல் பாம்பு 7 அடி உயரமும் 8 கிலோ எடையும் கொண்டதாகும்.
Image
 ஜனாஸா எரிப்பு எதிராக கருப்பு பட்டி அணிந்து வருகை.. #கல்முனை நூருல் ஹுதா உமர் சபை அமர்வின்போது மாநகரசபை உறுப்பினர்  க.செல்வராசா அவர்களை அதிகாரத் தொனியில் சபையை விட்டு வெளியேற மேயர் அவர்கள் பணித்தமையானது கௌரவ மாநகர சபை உறுப்பினர் அவர்களின் சிறப்புரிமைக்கு களங்கத்தை ஏற்படுத்திய செயல் எனவும், இதற்கான தனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பிலான கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம். ஷிபான் தெரிவித்தார். கல்முனை மாநகர சபையின் 34வது மாதாந்த அமர்வு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப்பின் தலைமையில் நேற்று (27) நடைபெற்றது. அதன்போது நடைபெற்ற கூச்சல் குழப்பநிலை காரணமாக சபை அமர்வு இடைநடுவில் ஒத்திப்போடப்பட்டது. அந்த சபை அமர்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையிலே மிலேச்சத்தனமாக ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை கண்டித்தே தாம் இன்றைய அமர்வில் கறுப்பு பட்டி அணிந்து வருகை தந்திருந்ததாகவும், ஐக்கிய நாடுகள் சபை கட்டாய ஜனாஸா எரிப்பினை நிறுத்தக் கோரியும் இலங்கை அரசு கண...
Image
 இலங்கை சட்டமொழுங்கில்லாத நாடாக மாறியுள்ளது ; ஐக்கியதேசிய கட்சி. இலங்கை சட்டமொழுங்கில்லாத நாடாக மாறியுள்ளது என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கபண்டார இதனை தெரிவித்துள்ளார். சட்டத்தை அனைவருக்கும் பொதுவான விதத்தில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒருநாடு ஒரு சட்டம் என்பதை நடைமுறைப்படுத்தப்போவதாக தெரிவித்துக்கொண்டு ஆட்சிக்குவந்த அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்ட விதத்தில் சட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்றது அதிகாரம் மிக்கவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டமாஅதிபர் திணைக்களம் இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு போன்ற சுயாதீன அமைப்புகளின் சுதந்திரத்திற்கு அரசாங்கம் சவால் விடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ள பாலித ரங்க பண்டார அரசாங்கத்துடன் தொடர்புள்ளவர்களிற்கு எதிரான பல வழக்குகள் விலக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக மக்கள் சட்டநடவடிக்கைகளின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Image
 நாட்டுக்கு அன்புள்ள மக்களாக மலையக சமூகம் எப்போதும் இருந்து வருகின்றனர்.. 27.01.2021 இன்று(27) எதுல் கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை செயலகத்தில் இடம் பெற்ற விஷேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள். நான் தொழிற்சங்க தலைவர் என்ற அடிப்படையில் கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் வாக்களித்த பிரகாரம் 1000 ரூபா  அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்துகிறேன்.பல கட்ட வாக்குறுதிகளுக்கு பிறகு இறுதியாக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்திலும் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அடிப்படை சம்பளத்தில் இணைக்கப்பட்டு அதற்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை.  245000 மக்கள் தோட்டத்துறையில் வாழ்கின்றனர். இதில் 40 % சிங்கள மக்களாகும். கேகாலை மற்றும் இரத்தினபுர மாவட்டங்களிலுள்ள தோட்டங்களில் பெருன்பான்மையினர் சிங்களவர்கள், இதை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும்.நாங்கள் தொழிற் சங்கம் என்ற அடிப்படையில் சாதி,இனம்,மதம் பார்க்காமல் நீதியாக நடந்து கொள்கிறோம்.இதை விளங்காமல் பல பாராளுமன்ற உறுப்பினர்...
Image
 புதிய வகை கொரோனா பி.சி.ஆர் பரிசோதனையால் அடையாளம் காண முடியாது – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இலங்கையில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா பி.சி.ஆர் பரிசோதனையால் அடையாளம் காண முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த நாட்டில் வைரஸ் சமூகமயமாக்கப்பட்டுள்ளதா என்பதை உடனடியாக ஆராய்ந்து பார்க்க வேண்டியதன் அவசியத்தை ஹரித அளுத்கே வலியுறுத்தினார்.
Image
 கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை வைப்பதற்காக குளிரூட்டியொன்று காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஒப்படைப்பு கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை  வைப்பதற்காக குளிரூட்டியொன்று காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு இன்று ஒப்படைப்பு கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை வைப்பதற்காக குளிரூட்டியொன்று காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு இன்று (27.01.2021) புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. காத்தான்குடி மக்களின் நிதிப் பங்களிப்பில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் இந்த குளிரூட்டி கொள்வனவு செய்யப்பட்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டது. கொவிட் தொற்றினால் மரணிக்கும் காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் ஜனாசாக்களை வைப்பதற்காக இந்த குளிரூட்டி வாங்கப்பட்டுள்ளது. காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி நிதிகள் இதனை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக...
Image
 மசாஜ் கிளப் பெயரில் நீண்டகாலமாக இயங்கிவந்த விபச்சார விடுதி இன்று போலீசாரால் முற்றுகை. #திருகோணமலை #ஆண், பெண்கள் கைது. திருகோணமலை நகரில் தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மத்திய வீதியில் பாடசாலையின் எதிரே நீண்டகாலமாக மஸாஜ் கிளப் என்கின்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று இன்று (27) தலைமையகப் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. முற்றுகையின் போது மூன்று பெண்கள் உட்பட விடுதி நடத்திய ஆண் ஒருவரையும் தாம் கைது செய்ததாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விடுதி மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஐர் படுத்த தலைமையகப் பொலிஸார் நடவடிக்கைகள மேற்கொள்கின்றனர்.
Image
 புதிதாக இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பில் மக்களுக்கு அறிவிக்க சுகாதார பிரிவினர் மிகவும் தாமதித்து விட்டனர் நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸின் புதிய வகை தொடர்பில் மக்களுக்கு அறிவிக்க சுகாதார பிரிவினர் மிகவும் தாமதித்து விட்டதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய வைரஸ் தொடர்பில் ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் பரிசோதனை குழு சில நாட்களுக்கு முன்னர் சுகாதார பிரிவுக்கு அறித்திருந்த போதிலும் அவர்கள் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுப்பவில்லை என வைத்தியர் ஷரித அலுத்கே தெரிவித்துள்ளார். பின்னர் ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் பரிசோதனை குழுவினால் நேற்று (26) இதனை மக்களுக்கு அறிவித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு இனங்காணப்பட்ட வைரஸ் வேகமாக பரவக்கூடியதாக கண்டறிப்பட்டுள்ளதால் அதி தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Image
புதல்வி ஷுக்ராவை வாழ்த்த அவரது வீட்டிற்குச் சென்றபோது ...   புதல்வி ஷுக்ராவை வாழ்த்த அவரது வீட்டிற்குச் சென்றபோது ... "அன்புள்ள மகளே, நீங்கள் இப்போது ஆயிரக்கணக்கான மக்களின் இதயங்களில் அன்பின் மற்றும் அமைதியின் அடையாளமாக மாறிவிட்டீர்கள்.  நீங்கள் விரும்பும் சுதந்திர உலகத்திற்குத் திரும்புவதற்கும் இலங்கை சமுதாயத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவருவதற்கான பலமும் தைரியமும் உங்களுக்கு இருக்கட்டும்! காட்டில் மலர்ந்த ஒரு பூவின் நறுமணத்தை காட்டில் மட்டும் வீசாமல் உலகம் முழுவதையும் நறுமணமாக்கும் மலர் என்பதை உலகுக்கு அறிமுகப்படுத்திய சிரச லட்சபதி மற்றும் திரு சந்தான சூரியபந்தரா ஆகியோருக்கு மிக்க நன்றிகள்  இப்படிக்கு -              "தேவாலேஹிந்த அஜித்த தேரர் Shukra දුවට සුබ පතන්නට ඇයගේ නිවසට ගිය අවස්ථාව... "ආදරනීය දුවේ ඔයා මේ වන විට ලාකීය සුවහසක් ජනතාවගේ සිත් සතන් තුල ආදරයේ සහ සාමයේ සලකුණ බවට පත්වී හමාරය. ඔබට ඔබ පතන නිදහස් ලෝකයට පියනඟන්නට මෙන්ම ලාංකීය සමාජය තුල සාමය සංහිඳියාව ඇති කරලීමට ශක්තිය ධෛර්ය වාසනාව ලැබේවා !  " මෙවැනි කැලේ පිපුණ...
Image
 நாளை காலை 11.00 மணியளவில் இந்தியாவில் இருந்து 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கை வந்தடையும்... இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையும் என இந்திய விமான சேவையின் கட்டுநாயக்க விமான நிலைய முகாமையாளர் சாரநாத் பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி 5 இலட்சம் தடுப்பூசிகள் (டொஸ்கள்) நாளை காலை 11.00 மணியளவில் ஏயர் இந்தியா விமானம் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும். இதேவேளை நாளை முதல் கொவிட் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பித்ததன் பின்னர், முதல் கட்டத்தில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கக்கூடியதாகயிருக்கும் என்று சுகாதார அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன் உலக சுகாதார அமைப்பினால் கிடைக்கவிருக்கும் தடுப்பூசி கிடைத்த பின்னர் நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானோருக்கு மிக விரைவில் தடுப்பூசி வழங்க முடியும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த் ஹேரத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,ஒரு மணித்தியாலத்தில் 15 தொடக்கம் 20 பேருக்கு தடுப்பூசியை வழங்க முடியும் என்றும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட...
Image
 தினம் ஒரு ஹதீஸ் *தனது ஆயுள் அதிகமாக்கப்பட வேண்டும், தனக்குத் தேவையானவைகள் அதிகமாகக் கிடைக்க வேண்டும் என எவர் விரும்புகிறாரோ, அவர் தன் பெற்றோருடன் அழகிய முறையில் நடந்து, தன் சொந்த பந்தங்களின் உறவு முறையைப் பாதுகாக்கவும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.* *(முஸ்னத் அஹ்மத்)*  *عَنْ اَنَسِ بْنِ مَالِكٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ سَرَّهُ اَنْ يُمَدَّ لَهُ فِيْ عُمُرِهِ، وَيُزَادَ لَهُ فِيْ رِزْقِهِ، فَلْيَبُرَّ وَالِدَيْهِ وَلْيَصِلْ رَحِمَهُ.* *رواه احمد: ٣ /٢٦٦
Image
 மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்து என்னை சிறையில் அடைத்தார்கள் . எந்தவிதமான சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாமல் திட்டமிட்ட வகையிலே மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்தோம் என்ற நன்றிக் கடனுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்கள் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலை கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறியும் மக்கள் சந்திப்பு கும்புறுமூலை பிள்ளையார் ஆலய முன்றலில் நேற்று (26) இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண மக்கள் தங்களது தலைவிதியை மாற்றிக் கொள்வதற்கு தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அபிவிருத்தி, அதிகார விடயங்கள் எவை வந்தாலும் உங்களுடைய தலைவிதியை தீர்மானிக்கின்ற அளவிற்கு நீங்கள் மாற்றமடைய வேண்டும். இதனை கொழும்பிலோ அல்லது யாழ்ப்பாணத்தில் இருந்தோ வருகின்றவர்கள் தீர்மானிப்பதன் காரணமாக பல முறைப்பாடுகள் அழிவுகளை கடந...